ஒன்பதாவது கிரகத்தைத் தேடி...



சூரியன் உள்பட அதன் கிரகங்கள் எல்லாம்,நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில்,சுழன்று கொண்டு இருந்த ஒரு தூசித் தட்டில் இருந்து உருவானதாக நம்பப் படுகிறது.
குறிப்பாக சுழன்று கொண்டு இருந்த,அந்த தூசித் தட்ட்டின் பருத்த மையப் பகுதியானது,சூரியனாக உருவானதாகவும்,தட்டையான ஓரப் பகுதிகள் ஆங்காங்கே திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இதன் அடிப்படையில்,சூரியனானது தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கும் அதே தளத்திலேயே,எல்லாக் கிரகங்களும் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்த நிலையில்,சூரியனானது,ஆறு டிகிரி சாய்வாக சுழன்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.


இந்த நிலையில், சூரியனானது ஆறு டிகிரி சாய்ந்து இருக்கவில்லை என்றும், மாறாக,கிரகங்களின் சுற்றுத் தளம்தான்,ஆறு டிகிரி சாய்ந்து இருக்கிறது என்று,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்களான டாக்டர் கான்ஸ்டான்டின் பேடிஜின்,டாக்டர் மைக் பிரவுன் மற்றும் அவர்களின் பட்டப் படிப்பு மாணவியான எலிசபெத் பெய்லி ஆகியோர் ஒரு புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனாலும் கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.
அத்துடன்,இவ்வாறு சூரியனைக் கிரகங்கள் எல்லாம் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,அதாவது புளுட்டோவுக்கும் அப்பால்,இருந்த படி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும், இன்னும் கண்டுபிடிக்கப் படாத, ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம், என்று டாக்டர் மைக் பிரவுன் கூறுகிறார்.
குறிப்பாக ஒன்பதாவது கிரகம் என்று அழைக்கப் படும் அந்தக் கிரகமானது, டாக்டர் மைக் குழுவினர், கணிப் பொறி மூலம் உருவாக்கிய மாதிரிகளின் படி,பூமியை விட நான்கு மடங்கு பெரிய அளவுடனும்,அதே நேரத்தில் பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுடன் இருக்கக் கூடும், என்று நம்பப் படுகிறது.
அத்துடன், அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்திள் இருந்து விலகி, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கும் என்றும் , டாக்டர் மைக் பிரவுன் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக தூசித் தட்டுக் கருத்தின் படி நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் ஒரு பெரிய கிரகம் உருவாக வாய்ப்பு இல்லை என்று கருதப் படுகிறது.
எனவே ஒன்பதாவது கிரகம் எப்படி சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் உருவானது என்ற கேள்விக்கு, டாக்டர் மைக் பிரவுன்,அந்த கிரகமானது,சூரிய மண்டலத்தின் உள் பகுதியில் உருவான பிறகு, வியாழன் கிரகத்தால் வெளித் தள்ளப் பட்டு இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
வியாழன் கிரகமானது,பூமியை விட முன்னூறு மடங்கு எடையுடனும்,சனி கிரகமானது பூமியை விட,தொண்ணூற்றி ஐந்து மடங்கு எடையுடனும் இருக்கும் நிலையில்,எப்படி பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகமானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கும் என்ற கேள்விக்கு டாக்டர்,மைக் பிரவுன்,அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,பெரிய அளவில் இருப்பதால் அந்தக் கிரகமானது மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கிறது, என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில்,நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால்,புளூட்டோவைப் போலவே ஆறு குறுங் கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அத்துடன் அந்தக் குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையும்,மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதும் கணிப் பொறி மாதிரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, அந்த ஆறு குறுங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதற்கு,அந்த ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும், என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று,வாசிங்டன்னில் இருக்கும் கார்னெகி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்காட் செப்பர்ட், நெப்டியூனுக்கு அப்பால் இருந்தபடி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு குறுங் கிரகத்தைக் கண்டு பிடித்தார்.
அந்தக் குறுங் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, வளைந்து இருப்பதற்கு,அந்தப் பகுதியில் இருக்கும் ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும் ஸ்காட் செப்பர்ட் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் செப்பர்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த,கனடாவில் உள்ள வானோக்கு ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜே ஜே காவேலார்ஸ்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பே இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
ஒன்பதாவது கிரகத்தைக் கண்டு பிடிப்பதற்காக, மைக் பிரவுன் குழுவினரும் செப்பர்ட் குழுவினரும்,நவீன தொலை நோக்கி மூலம்,அந்தக் கிரகம் இருப்பதாகக் கருதப் படும், திசையில் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
அந்தத் திசையில், பெரும் பரப்பில் தேடியும் இன்னும் அந்தக் கிரகம் தென்படவில்லை.
இருப்பினும் இன்னும் பத்து சதவீதம் வாய்ப்பு இருப்பதாக டாக்டர் மைக் பிரவுன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
குருங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, ஏன் மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்த்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது?
சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு, அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக இருப்பதற்கு, சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம், என்று ஏற்கனவே நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அத்துடன்,வானில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கும், ஒரு ராட்சச மஞ்சள் நிற பலூனை (சூரியனை), காகங்கள் (கிரகங்கள்) மேல் கீழாக வட்டமடிக்க ஆரம்பித்தால்,அந்தக் காகங்களின் (கிரகங்களின்) சுற்றுப் பாதையானது, அந்த பலூன் (சூரியன்) நகர்ந்து செல்லும் திசைக்குச் சாய்வாக இருக்கும், என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இந்த நிலையில்,அதே மஞ்சள் நிற பலூனை,மேலும் சில காகங்கள்,இன்னும் சற்று தொலைவில் இருந்தபடி,பெரிய வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது எப்படி இருக்கும்?
அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன், மற்ற உள் வட்டக் காகங்களின், சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கும்.
அதே போன்றுதான், சூரியனை அதிக தொலைவில் இருந்தபடி, வலம் வந்து கொண்டு இருக்கும், குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது.
https\://en.wikipedia.org/wiki/Planet_Nine
00000000000000000000
https\://en.wikipedia.org/wiki/Planets_beyond_Neptune
00000000000000000000
While today the astronomical community widely agrees that Planet X, as originally envisioned, does not exist, the concept of an as-yet-unobserved planet has been revived by a number of astronomers to explain other anomalies observed in the outer Solar System.[5] As of March 2014, observations with the WISE telescope have ruled out the possibility of a Saturn-sized object (95 Earth mass) out to 10,000 AU, and a Jupiter-sized (~318 Earth mass) or larger object out to 26,000 AU.[6]
https\://en.wikipedia.org/wiki/Planets_beyond_Neptune
சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,நெப்டியூன் கிரக அளவில் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்.
ஆனாலும்,கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்,நாசாவின் அகச் சிவப்புக் கதிர் தொலை நோக்கி மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அப்படி ஒரு கிரகம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறது.
குறிப்பாக,சூரியனில் இருந்து,பத்தாயிரம் வானியல் அலகு தொலைவில், (ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு ஆகும். அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர்) பூமியை விட தொண்ணூற்றி ஐந்து மடங்கு பெரிய அதாவது சனி கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது.
அதே போன்று, சூரியனில் இருந்து,இருபத்தியாறாயிரம் வானியல் அலகு தொலைவில், பூமியை விட முன்னூற்றி பதினெட்டு மடங்கு பெரிய அதாவது வியாழன் கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது.
http\://www.universetoday.com/128273/mysterious-pull-cassini-probe-may-help-find-planet-nine/
https\://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2016/10/20/the-mysterious-planet-nine-might-be-causing-the-whole-solar-system-to-wobble/?utm_term=.1bc4eb882bc1
http\://www.techtimes.com/articles/148410/20160410/whats-all-the-fuss-about-planet-nine-just-another-planet-or-something-scientists-are-worried-about.htm
http\://www.independent.co.uk/news/science/planet-9-claims-about-new-planets-that-turned-out-to-be-wrong-and-why-this-might-be-different-a6832621.html
http\://www.space.com/33480-planet-nine.html

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?