நிலவின் சாய்வான சுற்றுப்பாதையை விளக்குவதற்கு புதிய கொள்கை .



நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,சூரியனைச் சுற்றிச் சுழன்ற ஒரு தூசித் தட்டு மேகமானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,சூரியனும் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கும் கிரகங்களும், உருவானதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,எல்லாக் கிரகங்களும் சூரியனை ஒரே தளத்தில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால்,நிலவானது,பூமி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி கோணத்தில் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இதற்கு முன்பு,பூமி உருவான சிறிது காலத்தில்,செவ்வாய் கிரகத்தைப் போன்ற ஒரு கிரகமானது பூமியின் மேல் மோதியதாகவும்,அதனால் பூமியில் இருந்து பிரிந்த பாகமும், மோதிய கோளின் பாகங்களும், உருண்டு திரண்டதால், நிலா உருவாகி இருக்கலாம், என்று நம்பப் பட்டது.
இந்தக் கருத்தானது ‘பிரமாண்ட மோதல்’ என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் நிலா மற்றும் பூமியில் காணப் படும் தனிமங்களின் விகிதாச் சாரமானது ஒரே மாதிரி இருப்பது,நிலவில் இருந்து எடுத்து வரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது.
எனவே,பூமியின் மேல் மோதிய கிரகமானது,பூமியைப் போன்றே தனிமங்களைக் கொண்டு இருந்திருக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது.
ஏனென்றால்,சூரிய மண்டலக் கிரகங்களின், தனிமங்களின் விகிதாச் சாரமானது, வெவ்வேறு விதமானது.
எனவே ‘பிரமாண்ட மோதல்’கருத்த்தின் அடிப்படையில், நிலவின் தோற்றம் குறித்து, முழுமையாக விளக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் சாரா ஸ்டீவர்ட் மற்றும் டாக்டர் குக் ஆகியோர் கணிப் பொறி மாதிரி ஆய்வுகள் மூலம் சில மாற்றங்களை,பிரமாண்ட மோதல் கருத்தில் செய்து,நிலவின் தோற்றம் குறித்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் படி,பூமியின் மேல் மோதிய கிரகமானது முன்பு கருதியதை விடப் பல மடங்கு வேகமாக மோதியதாகவும்,அதனால்,அந்தக் கிரகமும் பூமியும் சிதறுண்டதுடன்,அதன் பாகங்களானது,நன்றாகக் கலந்து உருகிய பிறகு,அதில் இருந்து,நிலவும் பூமியும் உருவானதாக, டாக்டர் சாரா கூறுகிறார்.
அதனால்தான் நிலவும் பூமியும் ஒரே விதமான தனிமச் சேர்க்கையுடன் இருப்பதாக, டாக்டர் சாரா கூறுகிறார்.
அத்துடன் பூமியின் மேல் மோதிய கிரகத்தின் தாக்கத்தால்,பூமியின் சுழற்சியும் அதிகரித்ததாகவும்,பூமியின் அச்சிலும் எண்பது டிகிரி வரை சாய்வு ஏற்பட்டதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார்.
அந்தக் காலத்தில் பூமியானது ஐந்து மணி நேரத்தில் தன் அச்சில் சுற்றிக் கொண்டு இருந்தாதாகவும்,பின்னர் நிலவின் ஈர்ப்பு விசை பாதிப்பால் காலப் போக்கில் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து தற்பொழுது இருப்பதைப் போன்று இருபத்தி நான்கு மணி நேரச் சுழற்சி முறைக்கு வந்ததாகவும், டாக்டர் சாரா கூறுகிறார்.

அதே போன்று,ஆரம்பத்தில் நிலவானது பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும், சுழற்சியின் பொழுது, பூமி பல முறை குலுங்கியதாகவும்,அதனால் நிலவானது மெதுவாக பூமியை விட்டு விலகிச் சென்றதாகவும்,அப்பொழுது,நிலவானது பூமியின் ஈர்ப்பு விசையில் ஆதிக்கத்தில் இருந்து விளாகி,சூரியனின் ஈர்ப்பு விசை ஆதிக்கம் அதிகம் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து சென்றதாகவும்,அதாவது நிலவானது தற்பொழுது இருக்கும்,இடத்திற்கு நகர்ந்து சென்றதாக, டாக்டர் சாரா கூறுகிறார்.
அதனால் நிலவானது,பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் இருந்து,ஐந்து டிகிரி கோணத்தில் வலம் வரத் தொடங்கியதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார்.
அதே நேரத்தில் பூமியின் அச்சுச் சாய்வும், எண்பது டிகிரியில் இருந்து தற்பொழுது இருப்பதைப் போன்று இருபத்தி மூன்றரை பாகை டிகிரிக்கு வந்து சேர்ந்ததாகவும், டாக்டர் சாரா கூறுகிறார்.
அத்துடன்,இந்தப் புதிய கருத்தானது,சூரிய மண்டலத்தின் முக்கிய அம்சங்களை விளக்குவதாக இருப்பதுடன்,நிலவின் சாய்வான சுற்றுத் தளத்தையும் விளக்குவதாக இருக்கிறது,என்று டாக்டர் சாரா கூறுகிறார்.

ஆனாலும், அதனாலேயே,இந்தக் கருத்தானது சரி என்பதற்கான நிரூபணம் அல்ல என்றும்,மாறாக... இது நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்றுதான் அர்த்தம் என்று டாக்டர் சாரா கூறுகிறார்.

(But the new theory does align with key features of our solar system, including the moon’s inclination. And Stewart says it fits with the data that we have — at least for now.

“That's not a proof that our model is correct,” she notes. “It means that we think we're going in the right direction, and we are looking for tests in the model.”

The next step? Testing the theory against the thermal history of the Earth and the moon.

“These events that change the whole orientation of the system deposit heat in the Earth and the moon,” Stewart says. “And that's something we can look for in the rock record.”)

https://www.pri.org/stories/2016-12-03/violent-collision-formed-our-moon-may-have-tilted-earth-too
அத்துடன்,மேற்கொண்டு,இந்தத் தியரியை பரிசோதனை செய்ய இருப்பதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார்.

குறிப்பாக,இந்த அதி பிரமாண்ட மோதல் நிகழ்வால்,பூமியிலும், நிலவிலும்,வெப்ப விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் என்பதால்,அது குறித்த தடயங்களை ஆய்வு செய்வதற்காக,நிலவு மற்றும் பூமியில் உள்ள பாறைகளில் ஆய்வு செய்ய இருப்பதாகவும், டாக்டர் சாரா தெரிவித்து இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?