எரிமலை வெடித்ததால் சுனாமி உருவானது.ஆதாரங்களை வெளியிடுதல்.
(ஜியுலியானி)tsu11.jpg http://www.theguardian.com/world/2010/apr/05/laquila-earthquake-prediction-giampaolo-giuliani நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள், தெற்காசிய சுனாமிக்கு, அடிப்படை ஆதாரம் இல்லாமல்,முன்னுக்குப் பின் முரணாக ,இரண்டு கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது, சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 26.12.2004,அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் உருவான சுனாமி அலைகள் தாக்கியதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்த சுனாமி குறித்து ,10.03.2005 அன்று அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த ப...