பூமி சாய்ந்தது ஏன்?
( ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் காடுகள் இருந்திருக்கின்றன.தற்பொழுது பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து பகலும், ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது, இவ்வாறு தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் காடுகள் உருவாக சத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.பூமியின் அச்சில் ஏற்பட்ட மாற்றமும் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தையே புதைபடிவ ஆதாரங்கள் புலப் படுத்துகின்றன.)

அண்டார்க்டிக் கண்டத்தில் உள்ள கிரிக்பார்டிக் மலைப் பகுதியில்இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீலோபிசிஸ் (Coelophysis) என்று அழைக்கப் படுகிற டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான குளோசப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் புதை படிவங்கள் தென் துருவதிற்கு அருகில் கண்டு பிடிக்கப் பட்டது.

இவ்வாறு அண்டார்க்டிக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகள் தொன்மையான தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

( குளோசப் டெரிஸ் )
அதன் பின்னர் பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பாஞ்சியாப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் பாஞ்சியாக் கண்டத்தின் வடபகுதியில் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் அதே போன்று பாஞ்சியாக் கண்டத்தின் தென் பகுதியில் கோண்டுவாணா என்று அழைக்கப் படும் கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதன் பின்னர் லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் மேற்குப் பகுதியில் வட அமெரிக்கக் கண்டமு உருவாகி மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று லாரேசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த யூரேசியக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதன் படி கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாக வடபகுதிக் கண்டங்களின் வடபகுதிகள் வடதுருவப் பகுதியில் இருந்ததாக நம்பப் படுகிறது.
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் உருவாகி வடபகுதியை நோக்கி நகர்ந்த்தாகவும் நம்பப் படுகிறது.ஆனால் அண்டார்க்டிக் கண்டம் மட்டும் தென் துருவப் பகுதியில் இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
புவியியல் வல்லுனர்களின் விளக்கத்தின் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டமும் அலாஸ்கா பகுதியும் துருவப் பகுதியில் இருந்ததாக அமைகிறது.

ஆனால் இந்த விளக்கத்திற்கு முரணாக துருவப் பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் மற்றும் ஆக்சல் ஹை பெர்க் தீவுககளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்களும் செம்மரங்களின் புதை படிவங்களும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

தற்பொழுது பூமி இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து பகலும்ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இவ்வாறு நான்கு மாதம் தொடர்ந்து இரவு நீடித்தால் துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் உருவாகி இருக்க இயலாது.
காரணம் தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் தாவரங்களால் சூரிய ஒளின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது.
அதே போன்று ஊர்வன இனத்தைச் சேர்ந்த முதலைகள் வெப்ப மண்டலப் பகுதியில் வாழக் கூடிய விலங்கினம்.கடுங்குளிர்ப் பிரதேசத்தில் ஊர்வன இனத்தின் முட்டைகள் பொரியாது.

( நன்னீர் ஆமையின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் )
ஆனால் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் எல்லிஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் எலும்புப் புதை படிவங்களை விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் வளையப் பகுதியில் உள்ள அலாஸ்காவில் பத்துக்கும் மேற்பட்ட டைனோசர் இனங்கள் வாழ்ந்திருப்பது புதைபடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

( 52 million-year-old palm pollen grain from Antarctica.)
இதே போன்று ஐந்தரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில் பனை வகைகளுடன் காடுகள் இருந்திருப்பது சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே புதை படிவ ஆதாரங்களுக்கு பிளேட் டெக்டானிக் தியரியின் படி கூறப் படும் விளக்கம் பொருந்தவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

( பிளேட்டியோ சாராஸ்)
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தளத்தைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகள் தொன்மையான பிளேட்டியோ சாராஸ் என்ற வகை டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடி பீட பூமியில் துளையிட்டு சேகரிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் பகுதிகளில் மரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் டைனோசர்கள் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்திற்கு சென்று இருப்பது தெளிவாகிறது.
அத்துடன் கடல் மட்டம் உயர்ந்து அதன் காரணமாக கடலின் பரப்பளவு அதிகரித்ததால் பூமியின் வெப்ப நிலை குலிர்ந்து துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருப்பதும் புலனாகிறது.
அதே போன்று டைனோசர்கள் அழிந்த பிறகே பூமியானது தன் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருப்பதும் புதை படிவ ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.
வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்,டைனோசர்கள் காலத்தில் பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்க வில்லை என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு சூரிய மண்டலத்தில் நுழைந்த ஒரு குருங்கோள் ,பூமிக்கு மிக அருகே கடந்து சென்ற பொழுது ஏற்பட்ட குறுங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்.
அந்த குறுங் கோளானது புதன் அல்லது வெள்ளி கிரகமாகவும் அல்லது நிலவாகவும் கூட இருக்கலாம்.

Comments