பவளப் பாறைப் புதை படிவம் வளைய வடிவத்தில் இருப்பது ஏன் ?
வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆழமற்ற கடல் பகுதியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
குறிப்பாக அந்தப் பாறைகளின் தொன்மையானது இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகள் தொன்மையானவை என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இவ்வாறு கடலுக்கு அடியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படுவதன் மூலம் இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது.
( டிலாவார் பேசினைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவம்-படத்தில் நீல வண்ணத்தில் காட்டப் பட்டுள்ளது.)
அதிலும் குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவமானது டெலவர் பேசின் என்று அழைக்கப் படும் ஒரு பள்ளத் தாக்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு ராட்சத குதிரை லாட வடிவில் காணப் படுகிறது.
கடலில் பல இடங்களில் வளைய வடிவில் பவளப் பாறைகள் காணப் படுவதற்கு விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஒரு விளக்கத்தை முன்வைத்தார்.அதாவது எரிமலைகளைச் சுற்றிலும் பவளப் பாறைகள் உருவாகின்றன. பிறகு அந்த எரிமலை கீழ் நோக்கி இறங்குகிறது.
அதனால் கடலின் ஆழம் அதிகரிக்கிறது.அப்பொழுது பவளப் பாறை உயிரினங்களும் மூழ்கி இறக்கின்றன.அதே நேரத்தில் பவளப் பாறை உயிரினங்களின் சுரப்புகளால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புப் படிவங்களின் மேல் புதிய பவளப் பாறை உயிரினங்கள் வளர்வதாகவும் அதனால் மூழ்கும் எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் பவளப் பாறைகள் உருவாகி இருப்பதாக டார்வின் நம்பினார்.
ஆனால் அவர் ஏன் எரிமலை கீழ் நோக்கி இறங்குகிறது? என்று விளக்க வில்லை.
தற்பொழுது கடல் மட்ட உயர்வு காரணமாகக் கூறப் படுகிறது.
டார்வினின் விளக்கத்தை புவியியல் வல்லுநர் ஒருவர் மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
(முக்கிய ஆதாரம்,கடலடி எரிமலையைச் சுற்றி பவளப் பாறைகள் உருவாகுவதை விளக்கும் படம்.)
Was Darwin Wrong About Coral Atolls?
http://
http://now.msn.com/
நான் மேற்கொண்ட ஆய்வில் கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவங்களும் தாவரங்களின் புதை படிவங்களும் இருப்பதன் அடிப்படையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறினேன்.
கடல் மட்டத்தின் உயர்வால் எரிமலைகள் மூழ்கி இருக்கின்றன.அதே நேரத்தில் நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது கண்டங்களின் மத்தியப் பகுதியில் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்த எரிமலையானது மேல் நோக்கி உயர்ந்த பொழுது அந்த எரிமலையைச் சுற்றிலும் ஆழமற்ற கடல் பகுதியில் அந்த பவளப் பாறைகள் வளைய வடிவில் வளர்ந்து இருப்பது புலனாகிறது.
பின்னர் அந்த எரிமலையானது தொடர்ந்து உயர்ந்திருப்பதுடன் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் மேல் நோக்கி உயர்ந்து இருப்பதும், தற்பொழுது அந்தப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காணப் படும் பவளப் பாறைப் புதை படிவங்கள் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் கடற்கரையை ஒட்டி அமைந்து இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள பாலாஸ் வெர்டிஸ் தீப கர்ப்ப முனைப் பகுதியில் ஆறு மைல் நீளத்திற்கு வடக்கு தெற்கு திசையை நோக்கி பவளப் பாறைத் திட்டு காணப் படுகிறது.
இதே போன்ற பவளப் பாறைத் திட்டுகள் கலிபோர்னியாக் கடல் பகுதியில் உள்ள சான் கிளமென்ட் தீவிலும்,சாண்டா கட்டாலினா தீவிலும்,காணப் படுகின்றன.
அத்துடன் பவளப் பாறைத் திட்டுகள் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா,மற்றும் சான் லூயிஸ் ஓபிஸ்போ காணப் படுகிறது.
முன்னூறு அடி தடிமன் உடைய அந்தப் பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையானது ஒன்றரை கோடி ஆண்டுகள் தொண்மை என மதிப்பிடப் பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பகுதியில் சுறா மீனின் பற்களும்,நத்தை,சிப்பிகள் உள்பட கடல் பாலூட்டிகளின் புதை படிவங்களும் மீனின் எலும்புகளும்,கடல் தாவரங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன.
எனவே இந்தத் தீவுகளும் கலிபோர்னியாவின் ஓரப் பகுதிகளும் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரிடாவிலும் நூறாயிரம் ஆண்டுகள் தொன்மையான பவளப் பாறைத் திட்டு காணப் படுகிறது.எனவே புளோரிடா பகுதியானது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருக்கிறது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கான்சாஸ் மாகாணத்தில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.குறிப்பாக பவள உயிரினங்களின் புதை படிவங்கள் மட்டுமின்றி,கடல் பஞ்சு,சிப்பிகள்,நத்தைகள்,ட
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் இருந்த கடலானது ஓரப் பகுதிக்கு வந்து சேர்ந்ததற்கு வட அமெரிக்கக் கண்டத்தின் நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.நிலம் உயர்ந்ததற்கு பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
(புளோரிடாவில் காணப் படும் பவளப் பாறைத் திட்டு)
Comments