சுனாமிக்குக் கூறப் படும் விளக்கங்களில் எது சரி ?
தெற்காசிய சுனாமியானது இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்றும், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்றும், நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together.http://earthobservatory.nasa.gov/Newsroom/view.php?id=25921
Forces from deep within the Earth continuously drag the subducting plate (Australia) underneath the overriding plate (Sunda). Most of the time the plates remain relatively stationary,
இதே போன்று ஹைத்தி தீவில் சுனாமி ஏற்பட்டதற்கு ஹைத்தி பாறைத் தட்டும் வட அமெரிக்கப் பாறைத் தட்டும் நகர்ந்ததால் ஏற்பட்டது என்று கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறும் அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள்,உண்மையில் ஹைத்தி பாறைத் தட்டு எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாததால் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
the Caribbean plate moving eastward with respect to the North America plate.http://earthquake.usgs.gov/earthquakes/eqarchives/poster/2010/20100112.php
இது குறித்த எனது ஆய்வறிக்கை
இதே போன்று ஜப்பான் சுனாமிக்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறிய புவியியல் வல்லுனர்கள், ஹோண்சு தீவானது எட்டு அடி நகர்ந்து விட்டது என்றும், வேறு சில புவியியல் வல்லுனர்கள் ஹோண்சு தீவானது ஐந்து அடி நகர்ந்து விட்டது என்றும், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் ஹோண்சு தீவானது எண்பத்தி எட்டு அடி வரை நகர்ந்து விட்டதாகவும் செயற்கைக் கோள் ஆய்வு மூலம் விளக்கம் தெரிவித்து இருப்பது உண்மையில் நிலத்தின் பக்கவாட்டு நகர்ச்சியை அறிவதற்கு செயற்கைக் கோள் அளவீட்டு முறையானது ஒரு துல்லியமான முறை அல்ல என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
இந்த நிலையில் நான் தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்களின் அடிப்படையில், தெற்காசியா , ஹைத்தி மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று இடங்களிலும், புவியடி எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டு இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments