ஒரு பழைய புத்தகக் கடையில் ...
ஒரு நாள் நான் ஒரு பழைய புத்தகக் கடையில் விற்பனைக்காக அடுக்கி
வைக்கப் பட்டு இருந்த நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்டிய
பொழுது ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு புகைப் படம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் படத்தில் ஒரு மலையின் உச்சிப் பகுதியில் இருவர் நின்றபடியே
இருப்புக் கம்பியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.குறிப்பாக அவர்கள் ஐம்பது
கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை
படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில்
மூழ்கிக் கிடந்ததாகவும்,அதன் பிறகு அந்த நிலமானது மேல் நோக்கி உயர்ந்ததாகவும்
தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அதைப் படித்ததும் எனக்கு அந்த மலைப் பகுதியும் மலையைச் சுற்றி இருந்த
நிலப் பகுதியும் கூட அப்படியே நேராக மேல் நோக்கி உயர்ந்து இருப்பதாகத் தோன்றியது.
அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே
உணர்ந்தேன்.
அடுத்த பக்கத்திலேயே சீனாவின் உள்நாட்டு மலைப் பிரதேசத்திலும் பலர்
கடல் உயிரினங்களின் புதை படிவங்களைத் தோண்டிக் கொண்டு இருக்கும் புகைப் படமும்
வெளியாகி இருந்தது.
உடனே எனக்கு நிலப் பகுதிகள் பக்க வாட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக்
கூறப் படுவது ஏன் ? என்ற கேள்வி எழுந்தது.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவ்வாறு
கூறுகிறார்கள்.என்று இணைய தளங்களில் வெளியாகி இருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப்
படித்தேன்.
குறிப்பாக பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு
இருக்கும் தீவுகளிலும்,கண்டங்களிலும்,டைனோசர்கள் உள்பட டைனோசர்கள் காலத்தில்
வாழ்ந்த தரைவாழ் விலங்கினங்களின் புதைபடிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு
காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் பின்னர் பிளவு
பட்டுப் பிரிந்து தனித் தனிக் கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
விளக்கம் கூறப் படுகிறது.
அதிலும் குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலுக்கு அடியில்
நீண்டு வளைந்து உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதி நெடுகிலும், பூமிக்கு
அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப்
புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும்,இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக்
குழம்பு வருவதாகவும்,அவ்வாறு வரும் பொழுது ஏற்கனவே அந்த எரிமலைத் தொடரின் மத்தியப்
பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை பக்கவாட்டுப் பகுதிகளை நோக்கி
நகர்த்தி விட்டு, மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும், அதனால்
அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல்
தளங்களுடன், அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும்,
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல்
வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் புதிதாக உருவாகி நகரும் கடல் தளமும்
கண்டங்களும் ஒரு சேர கண்டத் தட்டு என்று அழைக்கப் படுகிறது.
இதே போன்று ஏழு கண்டங்களும் கடல் தளங்களுடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுப் பாறைகளுக்கு இடையில்
உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், புவியியல்
வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று கடலுக்கு அடியில் ,ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் அடுத்த
கண்டத்தின் கடல் தட்டு உரசியபடி நகர்ந்து செல்வதாகவும் அவ்வாறு செல்லும் பொழுது
மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்வதாகவும்
அப்பொழுது அப்பகுதியில் உள்ள கடல் நீரானது மேல் நோக்கி உந்தப் படுவதால் சுனாமி
உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இணைய தளத்தில் வெளியாகி இருந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் கடல்
தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்தது.
அத்துடன் பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமியும்
ஹைத்தி தீவு சுனாமியும் ஜப்பான் சுனாமியும் உருவாகி இருப்பதும் இணைய தளத்தில்
வெளியாகி இருந்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதற்கு முன்பு எதன் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் கண்டங்கள்
நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள
வேண்டியது அவசியம்.
ஐநூறு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய மாலுமிகள் , மசாலா வாசனைப் பொருட்களைப்
பெறுவதற்காக, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ஐரோப்பாவில்
இருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் பெருங் கடலில் மேற்கு நோக்கி பயணம் செய்து, உலகை
வலம் வந்து கிழக்கு முகமாக இந்தியாவை அடைவதற்காக பயணம் செய்த பொழுது தற்செயலாக
அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமெரிக்கக் கண்டங்கள் கண்டு பிடிக்கப்
பட்டது.
அதன் பிறகு அந்தக் கண்டங்களில் ஐரோப்பியர்கள் குடியேறினார்கள் அபொழுது
ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த பூர்வீக அமெரிக்கப் பழங்குடிகளான மாயன்கள் உள்பட குளோவிஸ் மற்றும் அஸ்டெக்
மக்களுடன் போரிட்டு வென்று அந்தப் பகுதிகளில் வாழ்ந்தனர்.
அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களில், ஐரோப்பாவில் காணப் படும் மான்,
காட்டெருமை, நரி, ஓநாய், பூனை, போன்ற விலங்கினங்கள் இருப்பதைக் கண்ட ஐரோப்பியர்கள்
எப்படி இந்த விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து
அமெரிக்காவுக்கு வந்தன என்று வியந்தார்கள்.
அதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும்
இணைக்கும் வண்ணம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு குறுக்கே ஒரு நிலப் பாலம் இருந்து
அதன் வழியாக விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவை அடைந்து இருக்கலாம்
என்றும் பின்னர் அந்த தற்காலிக நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கி விட்டிருக்கலாம்
என்றும் நம்பினார்கள்.
ஆனால் அமெரிக்கப் பூர்வீகப் பழங்குடிகள் ஆசியக் கண்டத்தில்
சைபீரியாவுக்கும் வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்காவுக்கும் இடையில் உள்ள சிறிய பெர்ரிங்
கடல் பகுதியில் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்த
பொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாக சென்று இருப்பதை தொல் பொருள்
ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட கற்கருவிகள் மூலம் கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.
எனவே ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களில் இருந்து விலங்கினங்களும்
பெர்ரிங் கடல் பகுதியில் தற்பொழுது மூழ்கி இருக்கும் தரைவழித் தொடர்பு வழியாகவே
சென்று இருப்பது புலனாகிறது.
எனவே தற்காலிக நிலப் பாலம் என்ற கருத்து என்பது ஒரு அடிப்படை ஆதாரமற்ற
கற்பனைக் கருத்து.
இந்த நிலையில் 1564 ஆம்
ஆண்டு ஆபிரகாம் ஆர்டெலியஸ் என்ற நிலவியல் வரை படத் தயாரிப்பாளர் ஓரளவு முழுமையான
உலக வரைபடத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
அப்பொழுது அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேற்குப் பகுதியில்
அமைந்திருக்கும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களின் கிழக்கு
கடற்கரையோரமும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில்
அமைந்து இருக்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் மேற்கு கடற்
கரையோரமும் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று ஒன்றுக் கொன்று இணையாக இருப்பது
பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
இதன் அடிப்படையில் ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் உள்பட
விஞ்ஞானியும் அமெரிக்க ஜனாதிபதியுமான பெஞ்சமின் பிராங்க்ளின் உள்பட பலரும் முன்
ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்று
கருத்து வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஜெர்மனியில் மார்பர்க் பல்கலைக் கழகத்தில்
விரிவுரையாளராகப் பனி புரிந்து கொண்டிருந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற
வானிலையாளர்,ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப்
படித்த்தார்.
அந்தக் கட்டுரையில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இரு புறமும் உள்ள
கண்டங்களில் ஒரே வகையான தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவது
குறித்தும் அதற்கு முன் ஒரு காலத்தில் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு தற்காலிக
நிலப் பாலம் இருந்து அதன் வழியாக தாவரங்களும் விலங்கினங்களும் ஒரு கண்டத்தில்
இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்றும் விளக்கம் கூறப் பட்டு
இருந்தது.
ஆனால் வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்தியளிக்க வில்லை.
அவர் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே
கண்டமாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம்
என்றும் நம்பினார்.
இதே போன்று ஆஸ்திரியாவில் வியன்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
எட்வர்ட் சூயஸ் என்ற புவியியல் பேராசிரியர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு
முன்பு வளர்ந்த குளோசோப் டெரிஸ் என்ற தாவரத்தின் புதை படிவங்கள்,தென்
அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தென் பகுதிக்
கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம்
ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும்
பின்னர் அந்த கண்டத்தின் சில பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும்
என்றும் கருதி அந்தக் கண்டத்திற்கு கோண்டுவானா என்று பெயர் சூட்டினார்.
ஆனால் வெக்னர் ஏழு கண்டங்களும் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு
முன்பு ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறி அந்தப்
பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.பின்னர் பதினெட்டு முதல்
பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிளவு
பட்டுப் பிரிந்ததாகவும், அதனால் பாஞ்சியாக் கண்டத்தின் வட பகுதியில் லாரேசியா என்ற
கண்டம் உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததாக்வும், பின்னர் லாரேசியாக்
கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியாக் கண்டத்தின் மேற்குப்
பகுதியில் வட அமெரிக்கக் கண்டமு உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும், அதே போன்று லாரேசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் ஐரோப்பா
மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த யூரேசியக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை
நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு லாரேசியக் கண்டம் பிரிந்ததால் வடக்கு
அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் ஒரு கருத்தைக் கூறினார்.
இதே போன்று லாரேசியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தெற்கு திசையை
நோக்கி நகர்ந்த கோண்டுவானாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும், அதனால்
கோண்டுவானாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி
வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதே போன்று
ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தென்பகுதிக் கண்டங்கள் உருவாகி
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு கோண்டுவானாக்
கண்டம் பிரிந்ததால் தெற்கு அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலோரப் பகுதியில்
வாழ்ந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீள முதலை போன்ற விலங்கின்
எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடளுக்கு மேற்குப் பகுதியில் உள்ள
தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதியிலும் அதே போன்று அட்லாண்டிக் பெருங்கடலுக்கு
கிழக்குப் பகுதியில் உள்ள ஆபிரிக்கக் கண்டத்தின் நமீபியாவிழும் கண்டு பிடிக்கப்
பட்டது.
இதன் அடிப்படையில் ஒரு தரைவாழ் விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக்
பெருங்கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.இதற்கு இந்த
இரண்டு கண்டங்களும் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே
காரணம் என்றும் வெக்னர் கூறினார்.
ஆனால் புவியியலாளர்கள் வெக்னரின் கருத்தை ஏற்கவில்லை.கண்டங்கள் ஏன்
நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது? என்று கேள்வி எழுப்பினர்.
அந்தக் கேள்விக்கு வெக்னரால் உறுதியாக ஒரு பதிலைக் கூற இயலவில்லை.
பூமியின் சுழற்சி காரணமாக இருக்கலாம் என்றும் சூரியன் மற்றும்
சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாமென்றும் யூகத்தின் அடிப்படையில்
கூறினார்.
ஆனால் புவியியலாளர்கள் விலங்கினங்கள் தற்செயலாக கடலில் மிதந்து
செல்லும் கடல் தாவரங்கள் மற்றும் மரக் கிளைகளின் மூலம் பல நாட்கள் கடலில் மிதந்து
ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.
ஆனால் புவியியலாளர்களால் நில அதிர்ச்சிகள் ஏன் ஏற்படுகின்றன?மலைத்
தொடர்கள் எப்படி உருவாகின்றன போன்ற கேள்விகளுக்கு சரியாக விளக்கம் கூறத்
தெரியவில்லை.
ஆனால் வெக்னர்,கண்டங்கள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில்
உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு கண்டத்துடன் அடுத்த கண்டம்
மோதும் பொழுது இடைப் பட்ட நிலப் பகுதியானது புடைத்துக் கொண்டு மலைத் தொடராக
உயர்ந்து உருவைறது என்றும் விளக்கம் கூறினார்.
இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் இருபத்தி ஐந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லிஸ்ட்ரோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை
படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்கள் இந்தியாவிளும்
ஆப்பிரிக்காவிலும் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனால் லிஸ்ட்ரோ சாராஸ் விலங்கானது தாவரங்களை உண்டு ஆமையைப் போன்று மெதுவாக
நகரக் கூடிய ஒரு மந்தமான விலங்கு என்பதும் நடக்கும் பொழுது இடுப்பை வளைத்து ஆட்டி
ஆட்டி நடக்கும் மெதுவாக நடக்கும் விலங்கு என்பதும் எலும்புப் புதை படிவங்கள் மூலம்
தெரிய வந்தது.
எனவே அந்த விலங்கால் பல நாட்கள் கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மூலம்
ஆர்ப்பரிக்கும் கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தை
அடைந்திருக்கும் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது.
எனவே வேறு வழியின்றி புவியியலாளர்கள் கண்டங்கள் நகர்வதற்கான
சாத்தியங்கள் குறித்து யோசிக்கலாயினர்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஹோம்ஸ் என்ற புவியியலாளர்
1919 ஆம் ஆண்டு ஒரு
கருத்தை முன்வைத்தார்.
அதாவது
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, கதிரியக்கத்தால் வெப்பமடைந்து இலேசாகி மேல் நோக்கி உயர்ந்த பிறகு,
குளிர்ந்து கணமாகி மறுபடியும்
பூமிக்கு அடியிலேயே செல்லலாம் என்றும், இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது
ஒரு சக்கரம் போல் சுழலுன்று மேற்பகுதியில் உள்ள கண்டங்களை நகர்த்தலாம் என்று
ஆர்தர் ஹோம்ஸ் ஒரு யோசனையைக் கூறினார்.
இந்த நிலையில் 1960 ஆண்டு இரண்டாம்
உலகப் போர் நடை பெற்ற பொழுது அமெரிக்கக்
கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் பணி புரிந்த பேராசிரியர் ஹாரி ஹாமண்ட் ஹெஸ் என்ற
புவியியலாளர் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்தி அவைகள் திரும்ப வரும் நேரத்தைக்
கணக்கிட்டு கடல் தரையின் மேடு பள்ளங்களை
அறிந்தார்.
அப்பொழுது
அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக நீண்ட கடலடி மலைத் தொடரும் அதில் எரிமலைகளும் பிளவுப்
பள்ளத் தாக்குகளும் உருவாகி இருப்பது தெரிந்தது.
உடன் ஹாரி ஹெஸ்சுக்கு ஆர்தர் ஹோம்ஸ் கூறிய விளக்கத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
போர் முடிந்த பிறகும் ஹெஸ் தனது ஆராசியைத் தொடர்ந்து மேற்கொண்டதில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் மலைத் தொடரின் கிளைகள் இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் பசிபிக் பெருங் கடலுக்கு அடியிலும் நீண்டு செல்வதை அறிந்தார்.
அத்துடன் அந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஹெஸ் ஆர்தர் ஹோம்ஸின் கருத்தை கொஞ்சம் மாற்றி ஒரு புதிய கருத்தைக் கூறினார்.
உடன் ஹாரி ஹெஸ்சுக்கு ஆர்தர் ஹோம்ஸ் கூறிய விளக்கத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
போர் முடிந்த பிறகும் ஹெஸ் தனது ஆராசியைத் தொடர்ந்து மேற்கொண்டதில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் மலைத் தொடரின் கிளைகள் இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் பசிபிக் பெருங் கடலுக்கு அடியிலும் நீண்டு செல்வதை அறிந்தார்.
அத்துடன் அந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஹெஸ் ஆர்தர் ஹோம்ஸின் கருத்தை கொஞ்சம் மாற்றி ஒரு புதிய கருத்தைக் கூறினார்.
அதாவது அந்தக்
கடலடி மலைத் தொடருக்கு அடியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது வெப்பத்தால் இலேசாகி
மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக அந்தக் கடலடி எரிமலைத்
தொடர் நெடுகிலும் உருவாகுவதாகவும், தொடர்ந்து அதே இடத்திற்கு வரும் பாறைக்
குழம்பானது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல் தரையை பக்க வாட்டுப் பகுதியை நோக்கி
நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில்
புதிய கடல் தரையாக உருவாகுவதாகவும் ஒரு கருத்தைக் கூறினார்.
இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதால் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஹெஸ் கூறினார்.
ஆனாலும் 1962 ஆம் ஆண்டு வரை
ஹெஸ் தனது விளக்கத்தின் மேல் நம்பிக்கையின்றி இருந்தார்.மேலும் பல ஆதாரங்கள்
வேண்டும் என்று கருதினார்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள பாறைகள் தொண்மை குறைவாக இருப்பதாகவும், ஆனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல அதாவது கண்டங்களுக்கு அருகில் உள்ள பாறைகள் அதிக தொன்மையானது அதிகமாக இருப்பதாகவும், இதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது புதிதாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள பாறைகள் தொண்மை குறைவாக இருப்பதாகவும், ஆனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல அதாவது கண்டங்களுக்கு அருகில் உள்ள பாறைகள் அதிக தொன்மையானது அதிகமாக இருப்பதாகவும், இதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது புதிதாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது.
குறிப்பாக கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாறைகளின்
தொன்மையானது நானூற்றி நாற்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப்
பட்டது.இதன் அடிப்படையில் பூமியானது நானூற்றி ஐம்பது முதல் நானூற்றி அறுபது கோடி
ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு
அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், அதாவது பூமிக்கு
அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய
கடல் தளமாக உருவாகிக் கொண்டு இருப்பதாகக் கூறப் படும் பகுதியில் அமைந்து இருக்கும்
செயின்ட் பால் மற்றும் செயின்ட் பீட்டர் என்று அழைக்கப் படும் பாறைத் தீவுகளின்
பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு
பிடிக்கப் பட்டுள்ளது.
அதாவது பூமி தோன்றியதாக மதிப்பிடம் படும் காலத்தில் உருவான தீவானது
புதிதாக கடல்தளம் உர்வாகிக் கொண்டு இருப்பதாக நம்பப் படும் பகுதியில் அமைந்து
இருக்கிறது.
இவ்வாறு புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மேற்றும் மேற்கு என
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்
அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் பூமி தோன்றியதாக மதிப்பிடப் பட்டுள்ள
காலத்தில் உருவான பாறைத் தீவுகள் இருப்பதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே
அட்லாண்டிக் கடல் தளமும் அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக
நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் உலகெங்கும் கடல் தளப் பாறைகளின் தொண்மையானது அதிக
பட்சம் பதினெட்டு கோடி ஆண்டுகளாக இருப்பதாகவும் ஆனால் கண்டங்களில் காணப் படும்
பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதாகவும்
இருப்பதற்கு,கண்டங்களுக்கு இடையில் புதிதாக கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து இறுதியாக மறுபடியும் பூமிக்குள் சென்று வெப்பத்தால் உருகிப்
பாறைக் குழம்பாக அழிந்து விடுவதே காரணம் என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத்
தொடர் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர்
திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் கடல் தளங்களுடன்
அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் அதனால் அட்லாண்டிக் கடல் பகுதியானது விரிவடைந்து கொண்டு
இருப்பதாகவும் அதே நேரத்தில் பசிபிக் கடல் பகுதியானது சுருங்கிக் கொண்டு
இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
மேலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில் புதிய கடல் தளம் உருவாகுவதாகக் கூறப் படுவதைப் போலவே, பசிபிக் கடலின்
தென் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் என்று
அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும்,தொடர்ந்து புதிய கடல் தளம்
உருவாகி முறையே வடமேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தளமானது
இறுதியாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அருகில் கீழ் நோக்கி வளைந்து
பூமிக்குள் சென்று வெப்பத்தால் உருகி மறுபடியும் பாறைக் குழம்பாக மாறி அழிந்து
விடுவதாகவும் அது மட்டுமல்லாது அவ்வாறு உருவான பாறைக் குழம்பானது மேல் நோக்கி
உயர்ந்து புவித் தரையைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்ந்து பிலிப்பைன்ஸ்
மற்றும் ஜப்பான் தீவுகளில் எரிமலைகளாக வரிசையாக உருவாகி இருப்பதாகவும் புவியியல்
வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
மேலும் ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் தீவுகளுக்கு அருகில் கடல்
தளத்தில் ஜப்பான் ட்ரென்ச் குரில் ட்ரென்ச் பிலிப்பைன்ஸ் ட்ரென்ச் என்று அழைக்கப்
படும் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்கள் காணப் படுகின்றன. இந்தக் கடல் தரைப்
பள்ளங்களானது பசிபிக் கடல் தளமானது கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு
இருப்பதால் ஆனது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதுமட்டுமலாது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு அருகில்
பசிபிக் கடல் தளமானது இவ்வாறு பூமிக்குள் பசிபிக் உரசியபடி நகர்ந்து சென்று கொண்டு
இருப்பதால்தான் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அடிக்கடி நில
அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.
ஆனால் ஜப்பான் தீவுகளுக்கு அருகில் இருக்கும் கடல் தரைப் பள்ளங்களானது
ஒரே தொடர்ச்சியாக உருவாகாமல் தனித் தனியாக உருவாகி இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல் தரையில் இடைவெளியுடன் கடல் தரைப் பள்ளங்கள்
உருவாகி இருப்பதற்கு இது வரை எந்த ஒரு புவியியல் வல்லுனரும் எந்த ஒரு
விளக்கத்தையும் கூற முன்வரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
ஆனால் அதே நேரத்தில் பசிபிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் ஹவாய்
எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி உருவாகி
இருப்பதற்கு புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தை முன்வைத்து இருக்கின்றனர்.
அதாவது பசிபிக் கடல் தளமானது தென் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு
கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலைப் பிழம்பில் இருந்து
பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து பசிபிக் கடல் தளத்தை பொத்துக் கொண்டு கடல்
தளத்தின் மேல் எரிமலையாக உருவான பிறகு,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை
நோக்கி நகர்வதாகவும், அதனால் கடல் தளத்தின் மேல் உருவான எரிமலையும் கடல் தளத்துடன்
வட மேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும், பிறகு அந்த எரிமலை மையத்தின் மேல்
துளைக்கப் படாத கடல் தளமானது வந்து சேர்ந்த பிறகு ,மறுபடியும் கடல் தளமானது
எரிமலைப் பிளம்புப் பாறைக் குழம்பால் துளைக்கப் படுவதாகவும், இது போன்று தொடர்ந்து
நடை பெற்றதால், பசிபிக் கடல் தளத்தின் மேல் ஹவாய் எரிமலைத் தொடர்களானது, தென்
கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி
இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
முக்கியமாக பசிபிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருப்பதால்தான்
பசிபிக் கடல் தளத்தின் மேலே, ஹவாய் எரிமலைத் தொடர்களானது தென் கிழக்கு திசையில்
இருந்து வடமேற்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.
குறிப்பாக கடல் தளமும் கண்டங்களும் பத்து முதல் நாற்பது கிலோ மீட்டர்
ஆழம் வரைக்கும் பாறைகளால் ஆனது.இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்
குழம்பானது கடல்தளதையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு கடல் தளத்தின் மேலும்
கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்களாக உருவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் புவியியல் வல்லுனர்கள் கூறுவதைப் போன்று பசிபிக் கடல்
தளமானது உண்மையில் நகர்ந்து கொண்டு இருந்தால்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்
குழம்பால் தொடர்ச்சியாகத் கடல் தளமானது துளைக்கப் பட்டு ஹவாய் எரிமலைத் தீவுகள்
உருவாகி இருந்தால், பசிபிக் கடல் பகுதியில் உள்ள மற்ற எரிமலைத் தீவுகளும் ஹவாய்
எரிமலைத் தீவுத் தொடருக்கு இணையாக அதே திசையில் உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும்
லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும்,ஹவாய் எரிமலைத் தீவுத்
தொடருக்கு இணையாக வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி
உருவாகாமல் அதிகமாக தென் திசையை நோக்கி வளைந்து உருவாகி இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல்தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில்
வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் பசிபிக் கடல்
தளமானது நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே பசிபிக் கடல் தளத்தின் மேல் ட்ரென்ச்செஸ் என்று அழைக்கப் படும்
அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கும்,ஜப்பான் மற்றும்
பிலிப்பைன்ஸ் உள்பட பசிபிக் கடல் பகுதியில் எரிமலைகள் உருவாகி இருப்பதற்கும்
அந்தப் பகுதியில் நில அதிர்ச்சிகள்
மற்றும் சுனாமிகள் உருவாகுவதற்கும் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது
தவறான விளக்கம் என்பதும் ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத்
தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு தொடர்சியாக வந்து
குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக தொடர்ந்து உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல்
தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் நிலையில்,அட்லாண்டிக்
கடல் தளத்தின் மேலும் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் மேலும்
உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு
திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமும், அட்லாண்டிக் கடல் தளமும் அட்லாண்டிக்
கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது..
குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத்
தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி,மேற்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக்
கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப்
படுகிறது.
உண்மையில் இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளமும் வட அமெரிக்கக் கண்டமும்
மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருந்தால்,வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும்
ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த எரிமலைத் தொடர்களான,
அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத்
தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும் .ஆனால்
அவ்வாறு இல்லாமல் இந்த மூன்று எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையாக ஒரே
திசையை நோக்கி உருவாகாமல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை
நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒன்றுக்
கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமும்
அட்லாண்டிக் கடல் தளமும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் மூழ்கிக் கிடக்கும்
கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி,வடகிழக்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அன் அந்தக் கடல் தளத்துடன்
ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் கினியா வளை குடாப்
பகுதியில் தென் மேற்கு திசையில் இருந்து
வடகிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரின் தென்
கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளானது அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலேயும்
அதே எரிமலைத் தொடரின் வடமேற்குப் பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி
வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.
ஆனால் அட்லாண்டிக் கடலின் வடபகுதியில் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல்
இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுப் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி
இருக்கும் கானரி எரிமலைத் தொடரானது கேமரூன் எரிமலைத் தொடருக்கு இணையாக தென் மேற்கு
திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி உருவாகாமல் கேமரூன் எரிமலைத் தொடருக்கு
இணையற்ற முறையில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி உருவாகி
இருக்கிறது.
எனவே எப்படி ஒரு கண்டம் ஒரே நேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு என
இருவேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியும்? என்ற கேள்வி
எழுகிறது.
நிச்சயம் ஒரு கண்டத்தால் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி
நகர்ந்து கொண்டு இருக்க இயலாது.
எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி
எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன்
அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பதும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக
இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தரைவாழ்
விலங்கினங்களின் புதை படிவங்களும் தாவரங்களின் புதை படிவங்களும் கடல் பகுதியால்
பிரிக்கப் பட்ட கண்டங்களில் காணப் படுவதற்கு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு
முன்பு கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் பின்னர்
அந்தப் பெருங்கண்டமானது பல பகுதிகளாகப் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து கொண்டு
இருப்பதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன் கண்டங்களில் காணப் படும் பாறைகளானது நானூற்றி ஐம்பது கோடி
ஆண்டுகளாகவும் அதே நேரத்தில் கடல் தளத்தின் பாறைகளின் தொன்மையானது அதிக பட்சம்
பதினெட்டு கோடி ஆண்டுகளாகவும் இருப்பதற்கு,கண்டங்களைப் போல் அல்லாது கடல் தளமானது கண்டங்களுக்கு
இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாக உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதுடன் இருபது கோடி ஆண்டுகளில் மறுபடியும் பூமிக்கு
அடியிலேயே சென்று அழிந்து விடுவதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.
அத்துடன் கண்டங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இருபத்தி ஐந்து கோடி
ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஞ்சியா போன்ற சூப்பர் கண்டங்கள் உருவாகுவதாகவும்
புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக பூமி தோன்றிய பிறகு நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளில்
சூப்பர் கண்டங்களானது ஐந்தாறு முறை உருவாகிப் பிரிந்ததாகவும் நம்பப்
படுகிறது.கண்டங்கள் சேர்ந்து பிரிவதற்கு கடல் தளமானது பூமிக்குள் இருக்கும் பாறைக்
குழம்பானது மேற்பகுதிக்கு வந்து கடல் தளமாக உருவாகுவதுடன் மறுபடியும் பூமிக்குள்
சென்று அழிவதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
உண்மையில் புவியியல் வல்லுனர்கள் கூறுவதைப் போன்று ஐந்தாறு முறை கடல்
தளமானது புதிதாக உருவாகி இருந்தால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்
நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள பாறைத் தீவுகள் எப்படி இருக்க
முடியும்?
குறிப்பாக அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் தொடர்ச்சியாக ஆர்க்டிக்
கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் இருப்பதாக
புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அந்தக் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும் அட்லாண்டிக் கடலடி
எரிமலைத் தொடர் பகுதியில் நடைபெறுவதாகக் கூறப் படுவதைப் போலவே தொடர்ந்து புதிய
கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் ஆனால் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஆண்டுக்கு ஐந்து சென்டி மீட்டர்
வீதம் புதிய கடல் தளம் உருவாவதாகவும் அதே நேரத்தில் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில் ஆண்டுக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் புதிய கடல் தளமானது உருவாகி
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள்
கூறுகின்றனர்.
ஆனால் கடந்த 2001 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் சேகரிக்கப்
பட்ட பாறைகளின் தொன்மையானது இருநூறு கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை கடல் தளமானது புதிதாக
உருவாகி மறுபடியும் பூமிக்குள் சென்று அழிந்து விடுவதாகவும் இவ்வாறு கடல் தளமானது கண்டங்களுக்கு
இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாக உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் கூறும்
விளக்கம் தவறான கருத்து.
இதே போன்று கண்டங்களானது கடல் தளத்துடன் நகர்ந்து அவற்றின் ஓரப்
பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்
புவியியல் வல்லுனர்கள் தெரிவித்த விளக்கமும் தவறு என்பது கண்டங்களுக்கு இடையில்
உள்ள கடல்தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில்
தெரிய வந்துள்ளது.
உதாரணமாக வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய
கடல் தளமானது உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்
அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதகவும் ,அதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்
உள்ள கதலி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதியகடல் தளமானது உருவாகி வடமேற்கு
திசையை நோக்கி நகர்ந்து கொன்னது இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளஹ்டுடன் தென்
அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று உண்மையில் வட அமெரிக்கக்
கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து
கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல்தளப் பகுதியில்
தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை நில அதிர்ச்சிகள்
ஏற்படவேண்டும்.
ஆனால்
கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35
ஆண்டு
கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை
படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்
வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அதே போன்று
அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்
கடல் தளத்துடன், வடமேற்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும், இடையில் உள்ள
கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், உலக
அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு
வட அட்லாண்டிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில்
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், அட்லாண்டிக் கடல் தளமானது
தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும்
கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில் இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே
அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர்
திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து
கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கமானது அடிப்படை
ஆதாரமற்ற விளக்கம் என்பது, உலக அளவில்லான நில
அதிர்ச்சி வரைபடம் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.
ஆய்வுச் சுருக்கம்.
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்
நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தன்மையுடைய பாறைத் தீவுகள் அமைந்து இருப்பதன்
மூலமும்,ஆர்க்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி மலைத் தொடர் பகுதியில் உள்ள
பாறைகளின் தொன்மையானது இருநூறு கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலமும்,பூமி தோன்றிய
காலத்தில் இருந்தே கண்டங்கள் நிலையாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.மற்ற படி
கடல் தளமனது ஐந்தாறு முறை புதிதாக உருவாகி நகர்ந்து மறுபடியும் பூமிக்குள் சென்று
அழிந்த பிறகு மறுபடியும் புதிதாக உருவானதாக கூறப் படும் விளக்கம் தவறு.
அதே போன்று கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக் கொன்று
இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள்
மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக
நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும் கடல் தளும் கண்டங்களுன்நிலையாக
இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபட ஆதாரம் மூலம் ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments