சுனாமிக்குக் முரண்பாடான விளக்கங்கள் கூறப் படுகின்றன.

gpsnasa.png
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாள் ஜப்பானின் ஹோண்சு தீவிற்கு கிழக்குப் பகுதியில் பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நில அதிர்ச்சி ஏற்பட்டது அதன் தொடர்ச்சியாக சுனாமி உருவானது.
அந்த நில அதிர்ச்சியின் பொழுதும் அதற்கு பிறகு ஏற்பட்ட பல தொடர் நில அதிர்ச்சிகளின் பொழுதும் ஜப்பானில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது.

kenneth.jpg ( DR.Kenneth Hudnut. usgs)
இந்த நிலையில் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்னத் ஹட் நட் என்ற புவியியல் வல்லுநர், ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதியில் நிறுவப் பட்டு இருந்த ஒரு செயற்கைக் கோள் நிலையம் எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இருந்தது என்று கூறி அதன் அடிப்படையில் ஹோண்சு தீவே எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து விட்டது என்று அறிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக ஜப்பானில் எண்ணூறு நில அதிர்ச்சி ஆய்வு மையங்கள் உள்ளன.அத்துடன் ஆயிரத்தி இருநூறு செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் நிறுவப் பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில்தான் டாக்டர் கென்னத் ஹட் நட் ஹோண்சு தீவின் வட மேற்கு பகுதியில் இருந்த ஒரு செயற்கைக் கோள் தொடர்பு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருந்ததாகக் கூறி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

rainer kind.jpg ( Rainer Kind, a seismologist with the Helmholtz Research Centre for Geosciences in Potsdam. )
உடன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரெய்னர் கைன்ட் என்ற நிலநடுக்கவியல் வல்லுநர் ஜப்பான் தீவில் உள்ள மற்ற செயற்கைக் கோள் நிலையங்கள் பற்றிய விபரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்காமல் ஒரே ஒரு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருப்பதன் அடிப்படையில் எப்படி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டது என்று கருத முடியும் என்று கேள்வி எழுப்பி டாக்டர் கென்னத் ஹட் நட் கூறிய விளக்கத்தை ஏற்கவில்லை.
மேலும் டாக்டர் ரெய்னர் கைன்ட் அவர்கள் டாக்டர் கென்னத் ஹட் நட் கூறியது ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் இன்று வரை ஹோண்சு தீவின் மற்ற செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரோன்ஜியாங் வாங் மற்றும் தாமஸ் வால்டர் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானில் உள்ள ஐநூறு செயற்கைக் கோள் நிலையங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ஜப்பான் தீவின் கிழக்குக் கடற் கரைப் பகுதியானது கிழக்கு திசையில் ஐந்து மீட்டர் நகர்ந்து விட்டது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இதே போன்று ஸ்டீபன் ஸ்டோபோலவ் என்ற புவியியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் கணிப் பொறி உதவியுடன் ஆய்வு செய்து ஜப்பான் எண்பத்தி எட்டு அடி வரை நகர்ந்து விட்டது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
முக்கியமாக ஜப்பானில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு நானூற்றுக்கும் அதிகமான முறை கடும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்படுகிறது.எனவே செயற்கைக் கோள் நிலையங்களின் வேறுபட்ட வீதத்திலான இடப் பெயர்ச்சிக்கு நிலச் சரிவே காரணம் என்பது நிரூபணமாகிறது.
Comments