பவளப் பாறைப் புதை படிவம் வளைய வடிவத்தில் இருப்பது ஏன் ?
வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆழமற்ற கடல் பகுதியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. குறிப்பாக அந்தப் பாறைகளின் தொன்மையானது இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகள் தொன்மையானவை என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இவ்வாறு கடலுக்கு அடியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படுவதன் மூலம் இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது. ( டிலாவார் பேசினைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவம்-படத்தில் நீல வண்ணத்தில் காட்டப் பட்டுள்ளது.) அதிலும் குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவமானது டெலவர் பேசின் என்று அழைக்கப் படும் ஒரு பள்ளத் தாக்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு ராட்சத குதிரை லாட வடிவில் க...