கேள்வியும் நானே பதிலும் நானே.


கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஏறுக்கு மாறாக உருவாகி இருக்கின்றன.
அவற்றின் தொன்மையும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன.
அவற்றின் வேதிச் சேர்மாணங்களும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கின்றன.
கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருந்தால்தான் இது சாத்தியம்.
இந்த நிலையில் வட அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயர்ந்து கொண்டு இருக்கும் ஒரு எரிமலை வெப்ப மையத்திற்கு மேலே, அந்த மையப் பகுதியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதே போன்று மவுண்ட் பெலிக் என்ற எரிமலையைச் சுற்றிலும், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலைகளைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் கூட, நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கேள்வி

இவ்வாறு எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும்  உருவாகி இருப்பது எதைக் குறிக்கிறது?
பதில்
முக்கியமாக கடந்த 2009 ஆண்டு இத்தாலியில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் எரிமலைகளில் இருந்து வெளிப்படும் ரேடான் வாயுவும் வெளிப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.முக்கியமாக நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதற்கு பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளே காரணம் என்பதும் இத்தாலி நில அதிர்ச்சி மூலம் நிரூபணமாகிறது.
எனவே ஹைத்தி மற்றும் ஹோண்சு தீவில் சுனாமி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகியதற்கு பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடிப்பே காரணம்.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?