அட்லாண்டிக் கடல் பகுதியை விலங்கினங்கள் எப்படிக் கடந்தன ?
A, தற்காலிக நிலப் பாலம் மூலம்.
B, கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்ததால்.
C, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் தாவரங்கள் மூலம்.
D, கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்.
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவைக் கடல் வழியாக அடைவதற்காக ஐரோப்பியர்கள் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்த பொழுது தற்செயலாக அமெரிக்கக் கண்டங்களைக் கண்டு பிடித்துக் குடியேறினார்கள்.அப்பொழுது அவர்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் கண்ட குதிரை,காட்டெருமை,ஒட்டகம் போன்ற விலங்கினங்கள் அமெரிக்காவில் இருப்பதைக் கண்டு குழம்பினார்கள்.
இந்த விலங்கினங்கள் எப்படி ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தன ? என்று சிந்தித்தார்கள்.உடன் முன்னொரு காலத்தில் அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் ஒரு நிலப் பாலம் இருந்து அதன் வழியாக இந்த விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம் என்றும் பின்னர் அந்த நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தந்திக் கம்பிகள் பதிக்கும் பணியின் பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ஒரு நீண்ட கடலடி மலைத் தொடர் வடக்கு தெற்கு திசையை நோக்கி அமைந்து இருப்பது தெரிய வந்தது.எனவே தற்காலிக நிலப் பாலம் கருத்து தகர்ந்தது.
இந்த நிலையில் கப்பல் போக்குவரதிற்கு பயன் படுத்துவதற்காக ஓரளவு முழுமையான உலக வரை படம் தயாரித்த பொழுதுதான் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று ஒன்றுக் கொன்று இணையாக அமைந்து இருப்பது தெரிய வந்தது.இதன் அடிப்படையில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்திருக்க வேண்டும் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் மார்பர்க் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்து கொண்டு இருந்த பொழுது தற்செயலாக ஒரு நாள் கல்லூரியின் நூலகத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.
அந்தக் கட்டுரையில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் இருப்பது குறித்து தெரிவிக்கப் பட்டு இருந்தது.அதன் அடிப்படையில் அட்லாண்டிக் கடலில் ஒரு காலத்தில் தற்காலிகமாக ஒரு நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது.ஆனால் வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்பதிகரமாகப் பட வில்லை.
முக்கியமாக அவருக்கு கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பது தற்செயலான ஒன்றாக இருக்க சாத்தியமில்லை என்று நம்பினார்.உடன் முன்னொரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார்.
ஆனால் அவரின் விளக்கத்தை புவியியல் வல்லுனர்கள் ஏற்க வில்லை.அப்படியென்றால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது?என்று கேள்வி கேட்டனர்.அந்தக் கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியாக ஒரு பதிலைக் கூற இயல வில்லை.ஆனாலும் அவர் பூமியின் சுழற்சி அல்லது சூரியன் சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
இந்த நிலையில் 1930 ஆண்டு கிரீன்லாந்து தீவிற்கு ஆராய்ச்சிப் பயணம் சென்ற பொழுது வெக்னர் பனிப் புயலில் சிக்கி உயிரிழந்தார்.அதே ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஹோம்ஸ் என்ற புவியியல் வல்லுநர் கண்டங்கள் நகர்வதற்கு ஒரு கருத்தை முன் மொழிந்தார்.
அதாவது ஒரு பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக்கும் பொழுது அடிப்பகுதியில் இருந்து வெப்பமான நீர் மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து மறுபடியும் பாத்திரத்திற்கு அடியில் செல்வதைப் போன்று, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் இலேசாகி மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகி கணம் அதிகரித்து மறுபடியும் பூமிக்கு அடியில் அடியிலேயே செல்லலாம் என்றும் இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு ஒரு சக்கரம் போன்று சுழலும் பொழுது அதன் மேல் உள்ள கண்டங்களை நகர்ந்தலாம் என்று விளக்கம் கூறினார்.
ஆனால் இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் ஆதாரங்கள் வேண்டும் என்றும் எச்சரிகை செய்தார்
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த ஒரு சரக்குக் கப்பல் ஒன்றில் பணி புரிந்த ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்தி அவைகள் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்ப வரும் நேரத்தைக் கணக்கிட்டு கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் இருப்பதும் அந்தப் பகுதியில் பல எரிமலைகள் இருப்பதையும் பிளவுப் பள்ளத தாக்குகள் இருப்பதையும் அறிந்தார்.அத்துடன் அந்தக் கடலடி மேட்டுப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரியவந்தது.உடன் அவருக்கு ஆர்தர் ஹோம்ஸ் கூறிய விளக்கத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் அவர் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல் தளப் பாறைகளைப் பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தளம் தொடர்ந்து உருவாகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறினார்.
அப்படியென்றால் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறதா ? என்ற கேள்வி எழுந்தது.ஆனால் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதாகக் கருதுவதற்கு ஆதாரம் எதுவும் அறியப் பட வில்லை.எனவே பூமியில் வேறு பகுதியில் கடல் தளமானது மறுபடியும் பூமிக்கு அடியில் சென்று அழிந்து கொண்டு இருக்கலாம் என்று கருதப் பட்டது.
இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவுகளானது வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.இதன் அடிப்படையில் ட்சூசோ வில்சன் என்ற புவியியல் வல்லுநர் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது அட்லாண்டிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் பசிபிக் கடல் தரையானது புதிதாக உருவாகி தென் கிழக்கு மற்றும் வட மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதில் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தரையானது இறுதியில் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று அழிவதாகவும், அதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் பசிபிக் கடல் தரையானது இறுதியில் ஜப்பான் தீவுகளுக்கு அடியில் சென்று அழிவதாகவும் விளக்கம் கூறினார்.
அத்துடன் பசிபிக் கடல் தரையானது வட மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவானதாகவும் விளக்கம் கூறினார்.
ஆனால் பசிபிக் கடல் தரையில் பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவு வரிசைகள் அமைந்து இருக்கின்றன.இந்த நிலையில் உணமையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல் தரையின் மேல் உள்ள மற்ற எரிமலைத் தீவு வரிசைகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடலில் லைன் எரிமலைத் தீவு வரிசையும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.எனவே பசிபிக் கடல் தரையில் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள் மூலம் பசிபிக் கடல் தரையும் அட்லாண்டிக் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
எனவே தற்காலிக நிலப் பாலம் மற்றும் கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்தன என்ற இரண்டு விளக்கங்களும் ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப் படுகின்றன.
இந்த நிலையில் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் மிதந்த படி பயணம் செய்து அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவில் இருந்து தென் அமெரிக்காவை அடைந்து இருக்கலாம் என்ற அசாதாரணமான விளக்கமும் ஆதாரம் இல்லை என்ற அடிப்படையிலும் முக்கியமாக நிருபிக்க முடியாத விளக்கம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கப் படுகிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலத் தொடர்பு வழியாக விலங்கினங்கள் அட்லாண்டிக் கடல் பகுதியைக் கடந்திருக்கின்றன என்பதே எனது ஆதார பூர்வமான விளக்கம்.
Comments