பினாமி எச்சரிக்கை மையம்.விஞ்ஞானி.க.பொன்முடி.
சமீபத்தில் இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்படாது என்று விஞ்ஞானிகள் அறிவித்த ஒரு வாரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டதால் அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் பலியாகினர்.
இதையடுத்து நில அதிர்ச்சி வராது என்று கூறிய விஞ்ஞானிகளுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
அப்பொழுது அந்த விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள ஐயாயிரத்திற்கும் அதிகமான புவியியல் விஞ்ஞானிகள் ‘’ நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிய இயலாது ’’ எனவே விஞ்ஞானிகளை விடுவிக்குமாறு கடிதம் எழுதி கையொப்பமிட்டு இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
முக்கியமாக சுனாமியானது நில அதிர்ச்சியால் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிவதற்காக இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் ‘’ பாறைகளில் அழுத்தத்தை அறியக் கூடிய கருவிகளை ’’( pressure sensors ) பொருத்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருகின்றனர்.
அந்தக் கருவிகள் மூலம் பாறைகளில் அழுத்தம் ஏற்படுவதை அறிந்து நில அதிர்ச்சி ஏற்படப் போவதை முன் கூட்டியே அறிந்து சுனாமியை வரப் போவதை முன் கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த முறை அறிவியல் அடிப்படையில்லாத உண்மைக்கு மாறான உபயோகமில்லாத முறை.
எனவே இந்த அமைப்பினால் நில அதிர்ச்சியையோ சுனாமியையோ முன் கூட்டியே அறிய இயலாது.
எப்படியென்றால் தற்பொழுது பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு செல்லும் பொழுது உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று கருதப் படுகிறது.
இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டானது அழுத்திக் கொண்டு இருப்பதாகவும் கருதப் படுகிறது.
மேலும் பாறைத் தட்டுகள் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டாக உருவாகி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுதே அழுத்தம் அதிகரித்து அடுத்த பாறைத் தட்டுக்கு அடியில் திடீரென்று நழுவிச் செல்வதால் ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு செல்லும் பொழுது மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்வதால் கடல் நீர் மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் கருதப் படுகிறது.
இதன் அடிப்படையில் பாறைத் தட்டுகளில் அழுத்தம் ஏற்படுவதாகவும் அந்த அழுத்தத்தை முன் கூட்டியே அறிவதன் மூலம் நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதன் அடிப்படையில் பாறைகளில் ஏற்படும் அழுத்த அதிகரிப்பை ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு கண்டு பிடித்து அதன் மூலம் சுனாமி ஏற்படப் போவதை ஒரு நிமிடத்திற்கு முன்பு கண்டு பிடித்து அறிவிக்க இயலும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால்தால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதால் எரிமலைகள் வெடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன் எரிமலையில் இருந்து கதிரியக்கத் தன்மையுள்ள வாயுக்களும் வெளிப் படுவதால் அந்த இடத்திற்கு மேலே உள்ள வளி மண்டலத்திலும் கதிரியக்கத் தன்மையால் மாற்றங்கள் ஏற்படுகிறது.
வளி மண்டலத்தில் ஏற்படும் இந்த மாற்றத்தை செயற்கைக் கோள் மூலம் சில நாட்களுக்கு முன்பே அறிய இயலும்,
எனவே கடலுக்கு அடியில் அழுத்தத்தை அறியும் கருவிகளுக்குப் பதிலாக எரிமலைச் செயல் பாடுகளை கண்காணிக்கும் கருவிகளைப் பொருத்துவதன் மூலமும் , அதே போன்று வளி மண்டலத்தில் கதிரியக்கத்தால் ஏற்படும் மாற்றத்தை அறிய உதவும் செயற்கைக் கோள்களை நிறுவுவதன் மூலமே நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும்.
Comments