எதிர்பாராத கண்டுபிடிப்பு
ஒரு நாள் அண்ணா சாலையில் L I C யில் பேருந்துக்கு காத்துக் கொண்டு இருந்த பொழுது தற்செயலாக அங்கு இருந்த பழைய புத்தகக் கடையில் நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிய பொழுது தற்செயலாக அந்தப் படம் கண்ணில் பட்டது.
ஒரு மலையின் மேல் இருவர் நின்று கொண்டு தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து கொண்டு இருப்பதாகவும் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடனே எனக்கு அந்த மலைப் பகுதியானது அப்படியே கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பது புரிந்தது.அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாக உணர்ந்தேன்.
உடனே எனக்கு அந்த மலைப் பகுதியானது அப்படியே கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பது புரிந்தது.அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாக உணர்ந்தேன்.
ஆம்.நிலப் பகுதிகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருக்கின்றன.அதனால்த ான் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகின்றன.
அதனைத் தொடர்ந்து நான் இணையத் தளத்தின் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வில் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரியவந்தது.குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரியவந்தது.
எனவே கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.இந்த நிலையில் இத்தாலி நாட்டில் எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள், அங்கு நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவாகி இருப்பது, செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
அத்துடன் இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் எரிமலையில் இருந்து வெளிவரும் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பதும் தெரியவந்தது.எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதே போன்று ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
இதே போன்று தெற்காசிய சுனாமியின் பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்த சிமிழு தீவிலும் நில அதிர்ச்சியின் பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலையைச் சுற்றி உருவாகும் வளையங்கள் உருவாகி இருந்ததும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
எனது கண்டு பிடிப்பு புவிஅறிவியல் உலகில் திருப்பத்தை ஏற்படுத்தும்.அன்புடன் விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
Comments