கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் எரிமலைத் தீவு வரிசைகள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் கானரி எரிமலைத் தீவுத் தொடரும் கேமரூன் எரிமலைத் தொடரும் உருவாகி இருக்கின்றன.

ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியபடி ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் கானரி எரிமலைத் தீவு வரிசையானது அட்லாண்டிக் கடலின் தரையில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத் திட்டிற்கு மேலும் தொடர்கிறது.
இதனடிப்படையில் அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால் துளைக்கப் பட்டதால் கானரி எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவானதாக நம்பப் படுகிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால் துளைக்கப் பட்டு எரிமலைத் தீவுகள் உருவாகும் பொழுது உண்மையில் அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இருந்தால், கானரி எரிமலைத் தீவு வரிசையில் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும் மேற்கு திசையை நோக்கி செல்லச் செல்ல தீவுகளில் உள்ள பாறைகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

ஆனால் கானரி எரிமலைத் தீவு வரிசையில் கிழக்குப் பகுதியில் உள்ள எல் ஹிரரோ தீவுப் பாறையின் தொன்மையானது 1.12 மிலியன் ஆண்டுகள் தொன்மையானதாகவும் அதற்கு அடுத்தபடியாக உள்ள லா கோமிரா தீவுப் பாறைகளின் தொண்மையானது 12.0 மிலியன் ஆண்டுகளாகவும் இருக்கும் நிலையில் லா கோமிரா தீவுக்கு அடுத்த படியாக மேற்கு திசையில் உள்ள டென்னறிபி என்ற தீவுப் பாறைகளின் தொண்மையானது 11.6 மிலியன் ஆண்டுகள் தொன்மையானதாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதே போன்று பூர்ட்டிவெண்சுரா தீவுப் பாறையானது ( Fuerteventura ) 20.6 மிலியன் ஆண்டுகள் தொண்மையாக இருப்பது தெரியவந்துள்ளது.ஆனால் பூர்ட்டிவெண்சுரா தீவிற்கு அடுத்தபடியாக மேற்கு திசையில் இருக்கும் லான்சோ ரொட்டி தீவுப் பாறையானது 15.5 மிலியன் ஆண்டுகள் தொன்மையானதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

(ஆப்பிரிக்கக் கண்டத்த்தின் கண்டத் திட்டின் மேல் அமைந்து இருக்கும் கானரித் தீவுகள்.)
இவ்வாறு கானரி தீவு வரிசையில் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு திசையை
நோக்கி தீவுகளின் தொண்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப்
பின் முரணாக இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக்
கண்டமும் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கினியா வளைகுடாப் பகுதியில் உள்ள கேமரூன் எரிமலைத் தொடரும் அட்லாண்டிக் கடல் தரையில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேல் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.

cameroon line3.jpg
ஆனால் கேமரூன் எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைப் பாறைகளின் தொன்மையும்
படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது
தெரியவந்துள்ளது.
எரிமலைத் தொடரில் முன்னுக்குப் பின் முரணாக எரிமலைச் செயல் பாடும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது ஏன்?
கானரி எரிமலைத் தொடரை உருவாக்கியதாகக் கூறப் படும் எரிமலை வெப்ப மையமானது தற்பொழுது எல் கிராரோ தீவிற்கு அடியில் இருப்பதாகக் கூறப் படுகிறது.

canary earthquake
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எல் கிராரோ
தீவுக்கு அடியில் நூற்றுக்கும் அதிக முறை நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதே
ஆண்டில் அக்டோபர் மாதம் பதினேழாம் நாள் எல் கிறாரோ தீவிற்கு மேற்குப்
பகுதியில் உள்ள டென்னேரிபி தீவிலும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
tenerife earthquake.gif
எனவே எரிமலைத் தொடருக்கு அடியில் எரிமலை வெப்ப மையம் ஒரு இடத்தில்
மட்டும் இருப்பதாகக் கருதுவது தவறு என்பதும் நிரூபணமாகிறது.எனவே கானரி
தீவு வரிசையானது ஒரு எரிமலை வெப்ப மையத்தால் உருவானது என்று கூறப் படும்
விளக்கம் தவறு என்பது நிரூபணமாகிறது.இதே போன்று கேமரூன் எரிமலைத் தீவுத் தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள கேமரூன் எரிமலையே தற்பொழுது செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Comments