கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மேட்டுப் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் எரிமலைகள் இருப்பதுடன் நில அதிர்ச்சிகளும் இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படுவது பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த எரிமலைப் பகுதியில் உள்ள கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும் அதே நேரத்தில் இந்தக் கடலடி மேட்டுப் பகுதிக்கு இரண்டு புறமும் தொலைவில் உள்ள கண்டங்களுக்கு அருகில் உள்ள கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருப்பதாகவும் இதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறைகள் உருவாகி அவைகள் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததே காரணம் என்றும் அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்த படி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக எரிமலைப் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றத்தால் பாறைக் குழம்பு வெளிவந்து பாறையாக உருவாகுவதால் அப்பகுதியில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவாகவே இருக்கும்.

அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் எரிமலைகள் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள கடல்தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவே இருக்கும்.

எனவே இதன் அடிப்படையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி அவைகள் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியல்ல.

உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி அவைகள் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவாகவும் அதே நேரத்தில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து இரு புறமும் தொலைவில் செல்லச் செல்ல கடல்தளப் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரித்து காணப் படவேண்டும்.

ஆனால் இது நாள்வரை அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிலும் அல்லது ஒவ்வொரு நூறு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள கடல் தளப் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தொண்மை மதிப்பிடப் பட்டு அறிவிக்கப் படவில்லை.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற விளக்கம்.

மேலும் அவ்வாறு ஆய்வு மேற்கொண்டாலும் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்கவும் சாத்தியம் இல்லை.ஏனென்றால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் இதுநாள்வரை பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் அறியப் படவில்லை.எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில் கடல் தரை உண்மையில் விரிவடைந்து கொண்டு இருந்தால் பூமியில் வேறு இடத்தில் கடல்தரையானது மறுபடியும் பூமிக்கு அடியில் சென்று அழிந்து கொண்டு இருக்கலாம் என்று கருதப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.

இந்த நிலையில் பசிபிக் பெருங் கடல் பகுதியில் வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு ஹவாய் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவாகி இருப்பது அறியப் பட்டது.

இதன் அடிப்படையில் பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் உள்ள கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு கடலடி மேட்டுப் பகுதியில் புதிதாக உருவாகி வடமேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் தென் கிழக்கு திசையை நோக்கி நகரும் கடல் தரையானது தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று அழிவதாகவும் அதே போன்று வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல்தரையானது ஜப்பான் தீவுகளுக்கு அடியில் சென்று அழிவதாகவும் கருதப் பட்டது.

இவ்வாறு பசிபிக் கடல் தளமானது தென் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி தென் கிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு வடமேற்கு திசையை நோக்கி கடல் தரை நகரும் பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசைகளை நோக்கி வரிசையாக உருவானதாக நம்பப் பட்டது.

ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகளைப் போலவே லைன் எரிமலைத் தீவுகளும் உருவாகி இருக்கும் நிலையில் இந்த இரண்டு எரிமலைத் தீவு வரிசைகளும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பது அறியப் பட்டது.

எனவே பசிபிக் கடல் தரை நிலையாக இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் உண்மையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டு ஹவாய் மற்றும் லைன் எரிமலைத் தீவு வரிசைகள் உருவாகி இருந்தால் அந்தத் தீவு வரிசையில் தென் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவான தொன்மையுடனும் வடமேற்கு திசையை நோக்கி செல்லச் செல்ல தீவுகளின் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரித்துக் காணப் பட வேண்டும்.

ஆனால் ஸ்கிரிப்ட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி கோப்பெர்ஸ் என்ற புவியியல் வல்லுநர் லைன் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தொண்மையை மதிப்பிட்டதில் அவற்றின் தொண்மை எதிர் பார்க்கப் பட்டது போன்று அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதே போன்று ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையும் படிப்படியாக அதிகரிக்காமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது பசிபிக் கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற திசையில் உருவாகி இருக்கும் ஹவாய் மற்றும் லைன் எரிமலைத் தீவு வரிசைகள் மூலமும் அந்தத் தீவு வரிசையில் உள்ள பாறைகளின் தொன்மையானது முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலமும் நிரூபணமாகிறது.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்த படி அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுவது அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து.

எனவே எரிமலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு எரிமலைச் செயல்பாடுகளே காரணம்.

அதே போன்று கண்டங்களுக்கு மத்தியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் பூமிக்கு அடியில் நடைபெறும் எரிமலைச் செயல் பாடுகளே காரணம்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?