கேள்வியும் நானே பதிலும் நானே.
கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஏறுக்கு மாறாக உருவாகி இருக்கின்றன. அவற்றின் தொன்மையும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அவற்றின் வேதிச் சேர்மாணங்களும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கின்றன. கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருந்தால்தான் இது சாத்தியம். இந்த நிலையில் வட அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயர்ந்து கொண்டு இருக்கும் ஒரு எரிமலை வெப்ப மையத்திற்கு மேலே, அந்த மையப் பகுதியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே போன்று மவுண்ட் பெலிக் என்ற எரிமலையைச் சுற்றிலும், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலைகளைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி ...