பொது நலன் கருதி வெளியிடப் படுகிறது.



விஞ்ஞானி கணபதி பொன்முடியின் சுனாமி ஆய்வறிக்கை.
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததாலேயே ஜப்பானிலும் ஹைத்தி தீவிலும் இந்தோனேசியாவிலும் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு நான் தற்செயலாக நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் வெளியிடப் பட்டு இருந்த ஒரு செய்திக் கட்டுரையை படித்தேன்.
அதில் ஒரு மலையின் மேல் இரண்டு தொல் விலங்கியல் வல்லுனர்கள் நின்று கொண்டு மண் தோண்டும் கருவியால் தரையை தோண்டிக் கொண்டு இருக்கும் படம் வெளியாகி இருந்தது.
அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது  ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடன் எனக்கு அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதியும் கடலுக்கு அடியில் இருந்து அப்படியே மேல் நோக்கி உயர்ந்திருப்பது தோன்றியது.
அதே கட்டுரையில் வெளியாகி இருந்த இன்னொரு படத்தில் சீனாவின் உள் நாட்டுப் பகுதியில் உள்ள ஒரு மலைப் பிரதேசத்திலும் பலர் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருக்கும் புகைப் படத்தைப் பார்த்ததும் எனக்கு நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பது தெரிந்தது.
அதன் பிறகு கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் எழு கண்டங்களிலும் காணப் படுவது பற்றியும் குறிப்பாக உள் நாட்டுப் பகுதி உள்பட  பரவாலாக கண்டங்களில் காணப் படுவது குறித்து இணைய தளத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.
எனவே கண்டங்கள் யாவும் கடலுக்கு அடியிலிருந்தே தற்பொழுது உள்ள உயரத்திற்கு உயர்ந்திருப்பது புரிந்தது.
ஆனால் அண்டார்க்டிக் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அதன் பிறகு பிரிந்து நகர்ந்திருப்பதாகவும் விளக்கம் கூறப் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
குறிப்பாக கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும், கண்டங்களை விடப் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும், ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டு திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது கடல் நீர் மேல் நோக்கி தள்ளப் படுவதால்தான் சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகாமல் இருப்பதன் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் நிலையாக இருப்பது தெரிய வந்தது.
இதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகாமல் இருப்பதன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரியவந்தது.
இதே போன்று பசிபிக் கடல் தரையானது தென் கிழக்குப் பகுதியில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஜப்பான் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் கடந்த 2011 ஆம் ஆண்டு ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக விளக்கம் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
குறிப்பாக பசிபிக் கடல் தரையின் மேல் வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலை தீவுகள் வரிசையாக உருவாகி இருக்கின்றன.
இதன் அடிப்படையில் பசிபிக் கடல் தரையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு பசிபிக் கடல் தரையானது நகரும் பொழுது  பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால்தான் பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவானதாக விளக்கம் கூறப் பட்டது.
ஆனால் அதே பசிபிக் கடல் தரையின் மேல் பத்துக்கும் மேற்பட்ட எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கிறது.இந்த நிலையில் பசிபிக் கடல் தரையானது உண்மையில் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் பசிபிக் கடல் தரையின் மேல் உள்ள எல்லா எரிமலைத் தீவு வரிசையுமே ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்
ஆனால் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள லைன் எரிமலை வரிசைத் தீவுகளோ ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகாமல் தென் திசையை நோக்கி அதிகமாக வளைந்து உருவாகி இருக்கிறது.
இதே போன்று பசிபிக் கடல் தரையின் மேல் உள்ள லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.
எனவே பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது பசிபிக் கடல் தரையின் மேல் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள் மூலம் தெரிய வந்தது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் மேலும் ஒரே கால கட்டத்தில் உருவான எரிமலைகள் பல்வேறு திசைகளை நோக்கி வரிசையாக உருவாகி இருப்பது குறித்தும் அறிந்தேன்.
எனவே வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலை வரிசைகள் மூலமும் தெரிய வந்தது.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டு மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததால்தான் வட அமெரிக்கக் கண்டத் தட்டிதிற்கும் ஹைத்தி தீவுப் பகுதி பாறைத் தட்டுக்கும் உரசல் ஏற்படததால்தான், கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறியிருக்கிறார்கள்.
இதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சுனாமி உருவானதற்கும் தற்பொழுது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்றும் அதே போன்று இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் தெற்காசிய சுனாமி உருவானது என்றும் இரண்டு விளக்கங்களை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் சுனாமிக்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து காணப் பட்டது
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டும் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்று ஒரு அடி உயர ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோளின் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இதே போன்ற மேடு பள்ள வளையங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஆரிகன் மாகாணத்தில், பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலை உயர்ந்து இறங்கிய பொழுதும் எரிமலையை சுற்றியும் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகி இருப்பதும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
முக்கியமாக ஹைத்தி தீவிலும் ஜப்பானின் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் எபட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருப்பதைக் காட்டும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
நல்லெண்ணங்களுடன்
விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
சென்னை.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?