கேள்வியிலேயே பதில் இருக்கிறது.

வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையி நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.


இதே போன்று தென் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையி நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருந்தால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதி வரை பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் அமைப்பைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து ஒரு வரை படத்தை தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே கண்டங்கள் நிலையாக இருப்பது நாசா தாயாரித்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் நிரூபணமாகிறது.

எனவே கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடரில் மட்டும் நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?