என் தலையில் ஆப்பிள் விழுந்தது.

(வட
அமெரிக்காவில் உள்ள ராக்கி மலையில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை
எடுக்கும் தொல்லுயிரின வல்லுனர்கள் )(கடலுக்கு அடியில் இருந்த மலை)
கனடாவில்
உள்ள ராக்கி மலையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில்
ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களின் புதை
படிவங்களை தொல்லுயிரின வல்லுனர்கள் அகழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப்
படத்தைப் பார்த்ததும் மலைகளும் நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து
உயர்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன்.உடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பது குறித்து கூறப் படுவது பற்றிய விபரங்களை சேகரித்தேன்.
விரைவில் நகரும் கண்டத் தட்டுகள் கருத்தாக்கம் அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் என்பது புரிந்தது.

(சீனாவில் உள்ள செஞ்சியாங் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படும் இடம். )(கடலுக்கு அடியில் இருந்த நிலம்)
உண்மையில்
கண்டங்களும் கடல் தரையும் நகர்ந்து கொண்டு இருந்தால் ஒரே காலகட்டத்தை
சேர்ந்த எரிமலை வரிசைகள் ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் பசிபிக் கடல் தரையிலும் வட அமெரிக்கக் கண்டத்திலும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த எரிமலை வரிசைகள் இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருக்கின்றன.
.இதன் அடிப்படையில் கடல்தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமானது.

அதே போன்று கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் கண்டங்களுக்கு இடையில் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததின் அடிப்படையிலும் கண்டங்கள் நிலையாக இருப்பது நிரூபணமானது.
எனவே உண்மையில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை யை இணையத்தில் தேடினேன்.
அப்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கும் பொழுது எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதுடன், அதே போன்ற மேடு பள்ள வளையங்கள் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தேன்.
.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.


பசிபிக் கடல் தரையில் இணையற்ற முறையில் எரிமலை வரிசைகள்


( அலாஸ்கா பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்)

(ஜப்பானில்
நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச்
சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள்
உருவாகி இருப்பதைக் காட்டும் செயற்கைக் கோள் படம்.ஒவ்வொரு வளையமும் ஐம்பது
சென்டி மீட்டர் உயரத்தைக் குறிக்கிறது)
Comments