Posts

பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து கொண்டிருக்கிறதா?

பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விளக்கத்தைக் கூறி வருகின்றனர். உதாரணமாக பசிபிக் பெருங் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து ஜப்பான் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படும்பொழுது, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிப் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் தரைப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் பசிபிக் கடல் தரை கண்டங்களுக்கு அடியில் வளைந்து சென்று பூமிக்குள் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு பூமிக்குள் வளைந்து செல்லும் பசிபிக் கடல் தட்டு கண்டங்களின் விளிம்புகளுடன் உரசும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் தருகின்றார்கள். ஆனால் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தகித்தி போன்ற எரிமலைத் தீவில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு நகரும் கண்டங்கள் ஆராய்ச்சியாளர்களால் எந்த ஒரு விளக்கத்தைக் கூற இயலவில்லை. குறிப்பாக தகித்தி என்ற எரிமலைத் தீ...

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆதாரம் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் காணப் படும் கற்காலப் பழங்குடிகள். -விஞ்ஞானி.க.பொன்முடி. பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய்த் தீவுகளை கேப்டன் ஜேம்ஸ் குக் என்று அழைக்கப் பட்ட ஆங்கிலேய மாலுமியால் தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டது. கேப்டன் குக்கின் பாய் மரக் கப்பலைக் கண்டதும் ஹவாய்த் தீவில் இருந்து தீவு வாசிகள் சிலர் சிறிய கட்டு மரங்களில் ஏறி துடுப்பின் உதவியால் குக்கின் கப்பலுக்கு அருகில் வந்தனர். அப்பொழுது அவர்கள் பேசிய மொழி,ஹவாய்த் தீவிற்குத் தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தகித்தி தீவு வாசிகள் பேசிய மொழியைப் போலவே இருப்பதை அறிந்து குக் மிகவும் ஆச்சரியப் பட்டர். காரணம் தகித்தி தீவில் இருந்து தனது பாய் மரக் கப்பலில் ஹவாய்த் தீவிற்கு வந்து சேர குக்கிற்கு ஒரு மாதம் ஆனது. பாய் மரக் கப்பல் என்று அழைக்கப் பட்டாலும் உண்மையில் குக்கின் கப்பலின் கோடி மரத்தில் கட்டப் பட்டிருந்தது கூடாரம் அடிக்கப் பயன் படுத்தும் உறுதியான துணி. ஆனால் ஹவாய்த் தீவில் ஒரு சிலர்...

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆதாரம் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் காணப் படும் கற்காலப் பழங்குடிகள். -விஞ்ஞானி.க.பொன்முடி.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந...

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல். பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன. அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது. அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன. அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது?

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாறைக் குழம்புக் கோளமாக இருந்த நம் பூமி படிப்படியாகக் குளிர்ந்து. இதனால் முதலில் புவி ஓடும் அதன் பிறகு உள் அடுக்குகளும் உருவானது. பாறைக் குழம்பு குளிர்ந்து இருகிய பொழுது அதில் இருந்து நீரும் மற்ற வாயுக்களும் பிரிந்து வெளியேறியது. பாறைக் குழம்பில் இருந்து சூடான நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவானது. அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.எனவே பூமிக்கு அடியில் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்தது. பூமிக்கு அடியில் உருவான புதிய பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் மலைகள் உருவாகின.உயராத பகுதிகள் பள்ளத் தாக்குகளாக உருவாகின. நிலப் பகுதிகள் உயர்ந்தன.ஆனால் நிலப் பகுதிகளைப் போன்று நீரால் உயர இயலாது.நீரின் பரவும் தன்மையால்,முதலில் நீர் பக்கவாட்டில் பரவிய பிறகு தான் மேல் நோக்கி உயர முடியும்.எனவேதான் நிலப் பகுதிகளை விட கடல் பகுதி அதிகமாக இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது. இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர்...