நம் பூமி, ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உருவானது.

நம் பூமி, ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உருவானது. கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மலைகளின் மேலும், பாலை வனங்களிலும், கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,மலைகளும், நிலப் பகுதிகளும்,ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த பிறகு,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதை, ஒரு புத்தகத்தில் வெளியாகி இருந்த கட்டுரைப் படித்தபொழுது, தற்செயலாகக் கண்டு பிடித்தேன். ஆனால், கிரகங்கள் எப்படி தோன்றின? என்பதைக் கிரகங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, கண்டு பிடித்தேன். எனது கண்டு பிடிப்பு. நமது பூமியானது முன் ஒரு காலத்தில் நமது சூரியன் போன்று விண் வெளியில் பிரகாசித்துக் கொண்டு இருந்த பிறகு,சூரியனால் ஈர்க்கப் பட்டது. அப்பொழுது சூரியனை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் போன்று விரைந்து வந்தது.அப்பொழுது அதன் மேல் பகுதியில் இருந்த இலேசான வாயுக்கள் விண்வெளியில் இறைக்கப் பட்டது. இறுதியாக அதன் மையத்தில் உருவாகி இருந்த,ஆக்சிஜன்,கார்பன்,கந்தகம்,இரும்பு போன்ற கனமான வாயுக்கள் மட்டும்,திரண்டு ஒரு கிரகமாக மாறி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. கண்டு பிடித்தது எப்படி? பன்னெடுங் காலமாகவே நமது பூமி உள்பட மற்ற கிரகங்கள் எல்லாம் எப்படி தோன்றின என்பது ஒரு விடையளிக்கப் படாத கேள்வியாகவே இருந்தது. முதல் வேற்று கிரகமானது 1995 ஆம் ஆண்டுதான் கண்டு பிடிக்கப் பட்டது.அதற்கு முன்பு வரை நமது சூரியக் குடும்பமானது ஒரு விசேசமான ஒரு அமைப்பாகக் கருதப் பட்டது. அப்பொழுது விண்வெளியில் தூரத்தில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்த பொழுது,அந்த நட்சத்திரங்களைச் சுற்றி வாயுக்கள் மற்றும் தூசிகளால் ஆனா ஒரு தட்டு போன்ற அமைப்பு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில்,நட்சத்திரங்களைச் சுற்றிச் சுழலும் தூசித் தட்டில் இருக்கும்,தூசிகளானது,காலப் போக்கில்,திரண்டு பூமி போன்ற கிரகங்களாக உருவாகலாம் என்று கருதப் பட்டது. அதே போன்று அந்த நட்சத்திரங்களைச் சுற்றித் திரண்டு இருந்த வாயுக்களும் காலப் போக்கில் திரண்டு,வியாழன்,சனி போன்ற வாயுக் கோள கிரகங்களாக உருவாகலாம் என்று கருதப் பட்டது. இந்தக் கொள்கையானது, தூசித் தட்டுக் கொள்கை என்று அழைக்கப் படுகிறது. கணிப் பொறி மாதிரிகளைப் பயன் படுத்தியதில் இந்த முறையில் பத்து லட்சம் ஆண்டு காலத்தில் கிரகங்கள் உருவாகலாம் என்று தெரிய வந்தது. ஆனால் விண்வெளியில், சில நட்சத்திரங்களை ஆய்வு செய்த பொழுது, உருவாகிக் கொண்டு இருந்த சில நட்சத்திரங்களைச் சுற்றியும், கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது,தூசித் தட்டுக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. அத்துடன் தூசித் தட்டில் உள்ள தூசிகள் திரண்டு கிரகங்கள் உருவாகுவது என்பது ஒரு மெதுவான முறை என்பதால் வின் வெளியில் கிரகங்கள் மிகவும் குறைவாகவும்,அரிதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தற்பொழுது கண்டு பிடிக்கப் பட்ட அதி நவீனமான விண் நிலை தொலை நோக்கிகள்,மூலம் ஆய்வு செய்த பொழுது,பாதிக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. எனவே விண்வெளியில்,கிரகங்கள் மிகவும் வேகமாக உருவாகும் என்று கருதப் பட்டது.அத்துடன் மிகவும் எளிய முறையில்,விண்வெளியில் அடிக்கடி நிகழக் கூடிய செயல் பாட்டால் உருவாகும், என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த நிலையில்,ஆலன் போஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை முன் மொழிந்தார்.அதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி சுழலும் வாயுக்களானது,ஈர்ப்பு விசையால் திடீரென்று சுருங்கி வியாழன் போன்ற வாயுக் கோள கிரகங்களாக உருவாகலாம் என்று ஒரு கருத்தை முன் மொழிந்தார். இந்தக் கருத்துக்கு தட்டு நிலை குலைதல் அல்லது டிஸ்க் இன்ஸ்டெபிலிட்டி தியரி என்று அழைக்கப் படுகிறது. ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில், பூமி போன்ற பாறைக் கோள்கள் எப்படி உருவாகின என்பதற்கு விளக்கம் கூற இயல வில்லை. இந்த நிலையில் ,நான் இணையத்தில் வேற்று கிரகங்கள் குறித்த தகவல்களை மிகவும் கவனமாக ஆய்வு செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கட்டுரையைப் படித்தேன். அதாவது ஒரு நட்சத்திரத்தின் உள்ளேயே கிரகங்கள் உருவாக சாத்தியம் இருக்கிறது, ஆனால் நட்சத்திரத்தின் உள்ளே நிலவும் அதி பயங்கரமான சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, விண் இயற்பியலாளர்கள் அது பற்றி சிந்திப்பதில்லை, என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. அத்துடன் ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் ஒரு கிரகம் உருவானால்,அந்த நட்சத்திரத்தின் மையத்தில் இருந்து அந்த கிரகம் வெளி வர,ஒரு 'வெளித் தள்ளல்' தேவைப் படும், என்றும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில், நான் விண்வெளியில் ,பி பி எம் என்று அழைக்கப் படும் ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பது பற்றி படித்தேன். அத்துடன் ,விண்வெளியில் (PSR B1257+12 என்று பெயரிடப் பட்ட, அதீத வெப்பத்தைக் கதிர் வீச்சை, உமிழும் ஒரு பால்சார் வகை துடிப்பு நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக ,மூன்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அலெக்ஸ் சாண்டர் வோல்சன் என்ற போலந்து நாட்டு விஞ்ஞானி கண்டு பிடித்து இருப்பது பற்றி படித்தேன். அந்தக் கண்டு பிடிப்பை, மற்ற விஞ்ஞானிகள் ஏற்க வில்லை. ஏனென்றால் அதீத வெப்பத்தை உமிழும் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில்,தூசிகள் இருக்க முடியாது,அந்த தூசிகள் திரண்டு கிரகங்கள் உருவாக முடியாது என்று கருதப் பட்டது. ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில் அந்த நட்சத்திரத்தை கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்த நிலையில், அந்த அதீத வெப்பத்தை உமிழும் நட்சதிரத்தை,அந்தக் கிரகங்கள், எப்படி ஆவியாகாமல் வலம் வந்து கொண்டு இருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி,ஒரு விளக்கத்தை முன் மொழிந்தார்.அதாவது அதீத வெப்பத்தில் ஆவியாகாமல் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி வைரத்துக்கு இருக்கிறது. எனவே அந்த அதீத வெப்பத்தை உமிழும், துடிப்பு நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் மேற்பரப்பானது, பல கிலோ மீட்டர் ஆழத்திற்கு வைரத்தால் ஆகி இருக்கலாம், என்றும் அந்தக் கிரகங்களானது, வைரக் கிரகங்கள் என்றும் விளக்கம் தெரிவித்தார். இந்த நிலையில், எனக்கு, பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்ட ,பி பி எம் 37093 என்ற எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவாகி இருந்த, நிலா அளவு வைரக் கோளம் நினைவுக்கு வந்தது. எனவே அதீத வெப்பத்தை உமிழும் துடிப்பு நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் வைரக் கிரகங்களானது,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவாகி இருக்கலாம் என்று தோன்றியது. அதன் பிறகு, அந்த வைரக் கோளத்தை உருவாக்கிய நட்சத்திரங்களை ,அதீத வெப்பத்தை உமிழும் துடிப்பு நட்சத்திரம் ஈர்த்ததால்,வைரக் கோளத்தை உருவாக்கிய எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் வெளிப் பகுதியில் இருந்த மற்ற வாயுக்களானது விண்வெளியில் இறைக்கப் பட்டு இருக்கும் என்றும்,அதே போன்று,அந்த அதீத வெப்பத்தை உமிழும் நட்சத்திரத்தின் வெப்பத்தால், அவியாக்கப் பட்டு இருக்கும் என்றும் தோன்றியது, அதன் பிறகு,அந்த எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான வைரக் கோளங்கள் மட்டும்,அந்த அதீத வெப்பத்தை உமிழும் நட்சத்திரத்தை, வைரக் கிரகங்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று தோன்றியது. அதன் பிறகு பல நட்சத்திரங்களை, பல கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் போன்று, அதி வேகத்தில், மிக நெருக்கமாக, வலம் வந்து கொண்டு இருப்பதைப் பற்றியும் படித்தேன். அத்துடன் அது போன்ற வால் நட்சத்திரக் கிரகங்களில் இருந்து, பெரும் அளவு வாயுக்களும் வெளியேறிக் கொண்டு இருப்பது பற்றியும் படித்தேன். அதன் மூலம், கிரங்களின் தோற்றம் பற்றிய எனது விளக்கத்தை உறுதிப் படுத்திக் கொண்டேன். இதே போன்றுதான், நம் பூமி உள்பட சூரிய மண்டலத்தில் இருக்கும்மற்ற கிரகங்கள் மற்றும் துணைக் கிரகங்கள் எல்லாம், ஒரு காலத்தில் விண்வெளியில் நம் சூரியனைப் போன்றே பிரகாசித்துக் கொண்டு இருந்த நட்சத்திரங்களாக இருந்தன. அதன் பிறகு,அந்த நட்சத்திரங்களை, நம் சூரியன் ஈர்த்தது. அதனால் ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் மேற்பகுதியில் இருந்த வாயுக்கள், விண் வெளியில் இறைக்கப் பட்டதுடன்,சூரியனாலும் ஆவியக்கப் பட்டது. இவ்வாறு வாயுக்களை இழந்த பிறகு,அந்த நட்சத்திரத்தின் மையத்தின் உருவாகி இருந்த திடக் கோளங்கள் மட்டும், இன்று சூரியனை, கிரகங்களாகவும், துணைக் கிரகங்களாகவும், வலம் வந்து கொண்டு இருக்கின்றன. 0000 மண்ணிலிருந்து விண்ணுக்கு... இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை. எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை. அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது. அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது. அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது. மத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது. இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார். பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்கும் பொழுது,பொருள்கள் சிறிது நகர்ந்து சென்ற பிறகு, மறுபடியும் ஓய்வு நிலையை, அதாவது இயல்பு நிலையை அடைகிறது.என்றும் அரிஸ்டாட்டில் யோசித்தார். இதே போன்று,ஒரு காலத்தில் சூரியனும் நிலாவும் கூட அசைவின்றி இருந்த பிறகு, கடவுள் அதனை முடுக்கிய பிறகு, எல்லாம் கடவுளின் சித்தப் படி, முன் கூட்டியே திட்டமிட்ட படி,கட்சிதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது. பூமியையும் அதில் மனிதனையும் கடவுள் படைத்ததாக நம்பப் பட்டதால், பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப் பட்டது. காலப் போக்கில், விவசாயத்தில் நல்ல விளைச்சல் ஏற்படுவதற்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பு அறியப் பட்டது.பருவ காலங்கள் சீராக மாறிவருவது அறியப் பட்டது. இதன் தொடர்ச்சியாக, மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுக்கும், கிரகங்களின் இடமாற்றதுக்கும், தொடர்பு இருப்பதாக நம்பப் பட்டது. எனவே, கிரகங்களின் இயக்கத்தைக் கணிப்பதில் அதிக ஆர்வம் எழுந்தது.குறிப்பாக இரவில் பின் புல நட்சத்திரங்களுக்கு இடையில் கிரகங்கள் நகர்ந்து கொண்டு இருப்பது கவனிக்கப் பட்டது. ஆனாலும் பூமியை மையமாகக் கொண்டு சூரியன் ,சந்திரன் மற்றும் கிரகங்கள் சுற்றி வரும் கொள்கையின் அடிப்படையில், கிரகங்களின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் இருந்தது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய கோப்பர் நிகஸ் என்ற விஞ்ஞானி ,பூமி உள்பட் எல்லாக் கிரகங்களும்,சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார். ஆனால் இந்தக் கருத்தானது மதக் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததால்,வெளியிட அஞ்சினார்.ஆனாலும் தனது விளக்கத்தை புத்தகமாக வெளியிட்டார். ஆனாலும், அந்தக் காலத்தில் அவ்வளவு பரவலாகப் பேசப் படாத இலத்தீன் மொழியில் அந்த நூல் இருந்ததால்,அவரின் விளக்கமானது பொது மக்களிடையே அவ்வளவாகப் பரவவில்லை. இருந்தாலும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகோ பிராகே என்பவர்,கோப்பர் நிகசின் கருத்தை பொய்யென நிரூபிப்பதற்காக ,அரசரிடம் உதவி பெற்று,ஒரு தேவாலயத்தின் கோபுரத்தின் மேல் இருந்தபடி தினமும் இரவில்,பின்புல நட்சத்திரங்களுக்கு இடையில் நகர்ந்து செல்லும் கிரகங்களின் இடங்களைக் குறித்துப் பதிவேடுகள் தயார் செய்தார். அப்பொழுது,அவர், செவ்வாய் கிரகமானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதன் வேகம் சிறிது குறைவதும்,பின்னர் நிலையாக நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த பிறகு, மறுபடியும் மேற்கு திசையை நோக்கி நகர்வதை அறிந்தார். இவ்வாறு, செவ்வாய்க் கிரகமானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது, சிறிது தயங்கி நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையில் நகர்ந்த பின்னர், பழையபடி மேற்கு திசையை நோக்கி நகர்வதற்கு காரணம் என்ன என்று டைகோ பிராகே யோசித்தார். ஆனால் அந்த நிகழ்வுக்கு அவரால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவரிடம் ,ஜோகன்னஸ் கெப்ளர் என்ற இளைஞர் உதவியாளர் பணிக்கு சேர்ந்தார். கெப்ளர்,கோப்பர் நிகசின் சூரிய மையக் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்டவர். டைகோ பிராகே திடீரென்று இறந்ததும் அவர் தயாரித்த ஆவணங்கள் எல்லாம் கெப்ளரின் கைக்கு வந்தது. அதனை ஆய்வு செய்த கெப்ளர்,கோள்கள் எல்லாம் சூரியனை,ஒரு முனையில் குவியமாகக் கொண்டு , நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார். அதற்கு முன்பு எல்லோரும், கோள்கள் எல்லாம், வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பினார்கள். அவ்வாறு கிரகங்கள் சூரியனை ,வெவ்வேறு நீள் வட்டப் பாதையில், வலம் வரும் பொழுது,குறிப்பாக நீள் வட்டப் பாதையில், வளையும் இடத்தில்,பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று முந்துவதால்,பூமியில் இருந்து பார்ப்பதற்கு, செவ்வாய் கிரகமானது முதலில் முந்துவதைப் போன்று சென்ற பிறகு, பின்தங்குவதை அறிந்து கொண்டார். அத்துடன், கிரகங்கள் எல்லாம்,சூரியனை நெருங்கும் பொழுது வேகமாகவும்,சூரியனை விட்டு விலகி தொலைவுக்கு சென்ற பிறகு மெதுவாகவும் செல்வதையும்,கெப்ளர் அறிந்தார். ஆனால் ஏன் அவ்வாறு கிரகங்கள் சூரியனைச் சுற்றுகிறது, என்று கெப்ளர் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், கலிலியோ தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்தார்.அப்பொழுது அவர் நிலவைப் போலவே,வெள்ளி கிரகத்திற்கும் பிறைகள் தோன்றி வளர்வதை அறிந்தார். இதன் அடிப்படையில், வெள்ளிக் கிரகமானது,சூரியனை மையமாகக் கொண்டு வலம் வந்து கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டார்.அதே போன்று எல்லாக் கிரகங்களும், சூரியனையே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டார். இந்தக் கருத்தைக் கூறியதற்காக, அவர் மதக் கோட்பாட்டாளர்களால் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டு,இறுதிக் காலத்தில் மருத்துவ உதவிகள் கூட மறுக்கப் பட்ட நிலையில், பார்வையிழந்த நிலையில் உயிரிழந்தார். கலிலியோ மேலும் பல சோதனைகளைச் செய்து அரிஸ்டாடிலின் கருத்தைத் தகர்த்தார். குறிப்பாக,அரிஸ்டாட்டில்,அதிக எடையுள்ள பொருள் வேகமாகவும்,குறைந்த எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும் என்று கூறியிருந்தார். ஆனால் கலிலியோ ஒரு சாய்வான மரப் பலகையில்,வெவ்வேறு திடமுள்ள கோளங்களை உருளச் செய்து, அந்தக் கோளங்கள் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை எடுத்துக் காட்டினார். அதன் அடிப்படையில், எல்லாப் பொருள்களும் ஒரே வேகத்தில்தான், பூமியை வந்தடையும் என்பதை எடுத்துக் காட்டினார். ஆனால் ஏன் அவ்வாறு பொருள்கள் பூமியை நோக்கி நகர்கின்றன என்று அவர் யோசிக்க வில்லை. இந்த நிலையில், நியூட்டன், பொருளின் இயல்பு நிலை பற்றி,அரிஸ்டாட்டில் கூறியதற்கு முற்றிலும் முரணாக விளக்கத்தைக் கூறினார். உதாரணமாக, ஒரு இடத்தில் இருக்கும் பந்தை ஒருவர் தள்ளி விட்டால் அந்தப் பந்தானது நகர்ந்து சென்ற பிறகு இறுதியில் ஒரு இடத்தில் நின்று விடும்.அதாவது இயல்பு நிலையை அடையும்.என்று அரிஸ்டாட்டில் கருதினார். ஆனால் நியூட்டன் அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக,இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பொருளின் மேல் புற விசை ஒன்று செயல்படாத வரையில் அந்தப் பொருளானது தொடர்ந்து அதே வேகத்தில்,அதே திசையில் சென்று கொண்டு இருக்கும் என்று கூறினார். மற்றபடி ஓடும் பந்தை நிறுத்துவது, உராய்வு போன்ற தடைதான் காரணம் என்பது நியூ ட்டனின் விளக்கம். இந்த நிலையில்,ஐசக் நியூட்டன் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் மறைந்த பிறகு மறபடியும் வானில் எழுந்து நகர்ந்ததைக் கண்டார். அதன் அடிப்படையில் சூரியனுக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதைப் புரிந்து கொண்டார். அதே போன்று பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதையும் நியூட்டன் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில், கிரகங்கள் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும், ஈர்ப்பு சக்தியே காரணம் என்பதை நியூட்டன் அறிந்து கொண்டார். எனவே, ஏன் நிலா பூமியின் மேல் விழ வில்லை என்று நியூட்டன் யோசித்தார். அப்பொழுது,ஒரு மலையின் மேல் இருக்கும் ஒரு பீரங்கியில் இருந்து வேகமாகச் செல்லும் குண்டானது அருகில் விழும்,ஆனால் அந்தக் குண்டின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் குண்டானது அதிக தொலைவுக்கு பயணம் செய்து விழும். இந்த நிலையில்,மலையின் உயரமும், குண்டின் வேகமும் மென்மேலும் அதிகரிக்கும் பொழுது,ஒரு கட்டத்தில் அந்தக் குண்டானது,பூமியில் விழாமல்,பூமியை சுற்ற ஆரம்பித்து விடும்,என்றும் அதே போலதான் நிலவும் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலாவை, பூமியின் ஈர்ப்பு வியையானது, தொடர்ந்து இழுப்பதால்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று விளக்கம் கூறினார். இந்த நிலையில், கிரகங்களின் இடங்களை, ஓரளவு துல்லியமாகக் கணிக்க முடிந்தது,குறிப்பாக ஒரு கிரகம் எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது. எனவே கிரகங்கள் ஏன் சூரியனை வட்டப் பாதையில் சுற்றாமல், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாகக் கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறினார். ஆனாலும் புதன் கிரகத்தின் இயக்கத்தை கணிப்பதில் சிரமம் இருந்தது.அதாவது புதன் கிரகமானது எப்பொழுது எங்கே இருக்கும் என்று கணித்துச் சொல்ல முடியாமல் இருந்தது. அத்துடன் புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும்,சூரியனைச் சுற்றி வந்த பிறகு,புறப்பட்ட இடத்திற்கு வராமல் சிறிது இடம் மாறியது. அதாவது,புதன் கிரகமானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் மாறியது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், புதன் கிரகமானது சூரியனை ஒரு பூவின் இதழைப் போன்று சுற்றிக் கொண்டு இருந்தது. அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருந்தது. அத்துடன் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையும், எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இவ்வாறு,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீளமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை. அதே போன்று,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் சூரியனைச் சுற்றுகிறது, என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை. இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தை கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக,ஈர்ப்பு என்பது விண்வெளியில் சூரியன் போன்ற பொருள்களின் நிறையால்,விண்வெளியானது வளைக்கப் படுகிறது.அதனால்,சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகிறது. ------------------------------------ ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ------------------------------------ அந்தப் பள்ளத்தைக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்க படுவதால்,சூரியனைக் கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன,என்று ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தை கூறினார். உதாரணமாக ஒரு பெரிய ரப்பர் மெத்தையின் மேல் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அந்த ரப்பர் மெத்தையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகும். இந்த நிலையில் அந்த பள்ளத்தில், சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்தக் கோலிக் குண்டுகளானது,அந்தப் பெரிய இரும்புக் குண்டை வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வராமல், சிறிது இடம் மாறி வருவதைப் போன்று, கிரகங்களும் இயங்குகின்றன, என்று ஐன்ஸ்டீனின் கருத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது. ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று உண்மையில்,சூரியனுக்கு அருகில் விண்வெளியானது வளைக்கப் பட்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் பட்டு,சூரியனைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருந்தால்,சூரியனுக்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியானது,அந்தப் பள்ளத்தைக் கடந்து வரும் பொழுது வளைந்து வரும்,எனவே சூரியனுக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்று விளக்கம் கூறப் பட்டது. பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது. உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன? என்ற கேள்விக்கு, நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார். எனது விளக்கம். பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையானது காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு மாற வேண்டும். ஏனென்றால் கிரகங்களின் நிலையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறுகிறது. ஆனால் அவ்வாறில்லாமல், பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. எனவே,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. மாறாக, சூரியனின் முன் நோக்கிய நகர்வே,கிரகங்களின் நீள்வட்டப் பாதைக்குக் காரணம். எப்படி என்றால், ஒரு கிரகமானது சூரியனை சுற்றிவிட்டுத் திரும்பும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது. எனவே,சூரியனைச் சுற்றி விட்டு நகர்ந்த கிரகமானது,மறுபடியும் சூரியனை நெருங்க வேண்டும் என்றால்,அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. இதன் காரணமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது, நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது. இந்த நிலையில், சூரியனானது விண்வெளியின் நேர்கோட்டுப் பாதையில் பயணம் செய்யாமல்,பால்வீதி நட்சத்திர மண்டலத்தைச் சுற்றி சற்று வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு, சூரியன் விண்வெளியின் வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரங்களானது.சூரியனை நெருங்கும் புள்ளியும் ஒவ்வொரு சுற்றுக்கும் இடம் மாறுகிறது. 0000 கிரகங்களின் இயக்கம்- அரிஸ்டாட்டில் முதல் பொன்முடி வரை. பால் வீதி நட்சத்திர மண்டலம் என்று அழைக்கப் படும்,நட்சத்திரங்களால் ஆன சுழல் தட்டின் ஓரப் பகுதியில் இருந்தவாறு,சூரியன்,அந்த நட்சத்திரத் தட்டின் விளிம்புப் பகுதிக்கு இணையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசையை நோக்கி,சூரியனின் வட துருவப் பகுதி இருக்கிறது. இந்த நிலையில்,கிரகங்கள் எல்லாம்,சூரியனின் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் இடைப் பட்ட பகுதியில்,இருக்கும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாகக் கிரகங்கள் எல்லாம்,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வான தளத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்தத் தளமானது கிரகணத் தளம் என்று அழைக்கப் படுகிறது. ஏனென்றால்,இவ்வாறு கிரகங்கள் ஒரே தளத்தில் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதால்,சூரியனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் இடையில்,உள் வட்டக் கிரகங்கள் வரும் பொழுது,கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஆனாலும், பொதுத் தளமாக இருக்கும் இந்தக் கிரகணத் தளத்தில் இருந்து ஓரிரு டிகிரி விலகியே, கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஏழு டிகிரி சாய்வான தளத்தில்,புதன் கிரகமானது,சூரியனை,நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருக்கிறது. அத்துடன்,புதன் கிரகமானது,சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது.இதே போன்று எல்லாக் கிரகங்களும்,சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது. இந்த நிலையில்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,இருந்தபடி,அதாவது,சூரியனில் இருந்து,பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,முப்பது மடங்கு தொலைவில் இருந்த படி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,புளூட்டோவின்,சுற்றுப் பாதையானது,சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வரும் தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில்,இருப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு,எனது விரிவான பதிலை இந்தக் கட்டுரையில்,தெரிவித்து இருக்கிறேன். -------------------------- அரிஸ்ட்டாட்டில் காலத்தில் கிரகங்கள் எல்லாம் பூமியை வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. அதன் பின்னர், போலந்து நாட்டைச் சேர்ந்த, வானியலாளர் நிகோலஸ் கோபர் நிகஸ் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். அதன் பின்னர்,ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, சேர்ந்த வானியலாளர், ஜோகனஸ் கெப்ளர் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று கூறினார். அதன் பின்னர்,இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன்,கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என்று கூறினார். இந்த நிலையில்,புதன் கிரகமானது ஒவ்வொரு சுற்றுக்கும் சூரியனை நெருங்கும் புள்ளியானது இடம் மாறியது. புதன் கிரகத்தின் இந்த வினோத இயக்கத்துக்கு நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை. நியூட்டனுக்குப் பிறகு,இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன், புதன் கிரகத்தின் இயக்கத்துக்கு ஒரு விளக்கத்தைக் கூறினார்.அதாவது ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல ,மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு,அதாவது சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுகிறது,அதனால் சூரியனைச் சுற்றி ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்லும் கிரகங்களின் பாதை வளைக்கப் படுவதால்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறினார். ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மேலும், ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இந்த நிலையில்,தற்பொழுது, நிலவானது,ஏன் ,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதே போன்று,புளூட்டோவானது,ஏன்,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. எனது விளக்கம். விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் இடுப்புப் பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,நீள் வட்டமாக மாறுகிறது. இதே போன்று,விண்வெளியில், சூரியனை சாய்வான தளத்தில்,நீள் வட்டப் பாதையில்,பாதையில் வலம் வந்து கொண்டே ,கிடை மட்டமாகவும், நகர்ந்து கொண்டு இருக்கும் பூமியை,நிலவும்,வலம் வரும் பொழுது,சூரியனுடனான பூமியின் நகர்ச்சியால்,பூமியைச் சுற்றும்,நிலவின் பாதையும்,நீள் வட்டமாகவும்,சாய்வான தளத்திலும் அமைகிறது. இதே போன்று,புளூட்டோவும்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,இருந்த படி,வலம் வந்து கொண்டு இருப்பதால்,அதன் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன்,அதன் சுற்றுத் தளமும் ,மற்ற கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து அதிகம் விலகி இருக்கிறது. இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும். அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும். இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும். இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது. 000 ஐன்ஸ்டீனின் விளக்கத்திற்கு முரணாக ஒரு கிரகக் குடும்பம். சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனாலும் சூரியனை மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது எதிர்பார்க்கப் பட்டதை விட மிக அதிகமாக நீண்டு இருக்கிறது. எனவே சூரியனுக்கு அருகில் வல்கன் என்ற ஒரு கிரகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.ஆனால் பின்னர் அப்படி ஒரு கிரகம் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் , புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, காலப் போக்கில் மெதுவாக இடம் பெயர்வதும் தெரிய வந்தது. இதற்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது சூரியனுக்கு அருகில் சூரியனின் ஈர்ப்பு விசையானது அதிகமாக இருப்பதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியானது, வளைக்கப் படுவதாகவும்,அதனால் ,சூரியனுக்கு அருகில் ,ஒரு பள்ளம் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பள்ளத்துக்குள் புதன் கிரகம் விழுந்து எழுவதால் ,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது ,கெப்ளரின் விதிக்கு முரணாக இயங்குவதாகவும்,ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். இந்த நிலையில்,அப்சிலான் அன்றோமெடா, என்று அழைக்கப் படும்,கிரகக் குடும்பத்தில் உள்ள ,b மற்றும் c கிரகங்களானது, அதன் நட்சத்திரத்தை,மிக நெருக்கமாகவும், ஓரளவு வட்டப் பாதையிலுமே வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதே நட்சத்திரத்தை,தொலைவில் இருந்து வலம் வந்து கொண்டு இருக்கும், d கிரகமானது ,மிகவும் நீண்ட ,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஐன்ஸ்டீன் கூறுவது போன்று நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையானது,வெளியை வளைத்து இருந்தால்,நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் கிரகங்களின் சுற்றுப் பாதையானது மிகவும் நீண்ட , நீள் வட்டப் பாதையாக இருக்க வேண்டும். ஆனால், ஐன்ஸ்டீனின் விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக ,அப்சிலான் அன்றோமெடா கிரகக் குடும்பத்தில் ,அந்த ,நட்சத்திரத்தில் இருந்து, தொலைவில் இருக்கும் கிரகமானது, நீண்ட நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் அப்சிலான் அன்றோமெடா நட்சத்திரமானது,ஐன்ஸ்டீன் கூறுவதைப் போன்று , வெளியை வளைத்து இருக்க வில்லை, என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. புதன் கிரகத்தின் பாதை மாற்றத்துக்குக் காரணம் என்ன? கிரகங்கள் எல்லாம் சூரியனை ,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே போன்று புதன் கிரகமும் சூரியனை நீள் வட்டப் பாதையிலே வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சூரியனைச் சுற்றி இருக்கும்,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, நூறாண்டு காலத்தில், சிறிது இடம் மாறுகிறது. இதனால் சூரியனைச் சுற்றி இருக்கும் புதன் கிரகத்தின்,நீள்வட்டப் பாதையானது,ஒரு டெய்சி மலரின் இதழைப் போன்று இருக்கிறது. (but the ellipse doesn't stay in precisely the same place all the time. It precesses, which is to say that as Mercury orbits the sun, the entire ellipse rotates about the focal point (i.e. the sun) as shown in the Figure below. This precession is very small; only 570 seconds of arc per century. A second of arc is 1/360 of a degree. Most of this precession could be understood in the context of Newton's theory of gravity by taking into account perturbations of the orbit due to the presence of other planets. However, once this was done, there still remained a discrepancy of about 40 seconds of arc per century between the prediction, and the observed value. This discrepancy was a complete mystery to scientists at the turn of the century.) http://theory.uwinnipeg.ca/mod_tech/node60.html இவ்வாறு புதன் கிரகத்தின் நீள்வட்டப் பாதையானது, நூறாண்டு கால கட்டத்தில்,சிறிது இடம் மாறுவதற்கு,என்ன காரணம்?என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாகச் சூரியனானது, விண் வெளியில், நேர் கோட்டுப் பாதையில் பயணம் செய்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக விண்வெளியில் சூரியனானது,பால் வீதி , நட்சத்திரக் கூட்டத்தை,ஒரு வளைவான பாதையிலேயே வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு,விண்வெளியில்,சூரியனானது,ஒரு வளைவான பாதையில் சென்றுகொண்டு இருப்பது,புதன் கிரகத்தின் ,நீள் வட்டப்பாதையின் இட மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். The reason for the change of mercury orbit around the sun is due to the curved path of the sun around the Milky Way. பெரு வெடிப்புக் கொள்கையே ஐயத்துக்குரியது. விண்வெளித் துறையிலும் புவியியல் துறையிலும் ஈடுபாடு மிக்க க.பொன்முடி.அவ்வப்பொழுது ஆய்வுக் கட்டுரைகளை நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் இணைய தளத்திலும் எழுதி வருபவர். இந்த பூமியின் நிலமட்டம்தான் உயர்ந்து வருகிறதே தவிர ,கடல் மட்டம் உயரவில்லை என்கிற ஒரு புதிய சிந்தனையை முன்வைத்து ''பூமிப் பந்தின் புதிர்கள் '' என்னும் ஆய்வு நூலைப் படைத்துள்ள இளம் விஞ்ஞானி பொன்முடியுடன் ஒரு நேர்காணல் ... அண்டப் பெரு வெடிப்புக் கொள்கை குறித்து உங்கள் கருத்து என்ன? விண்வெளியில் நட்சத்திரங்கள் நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டு இருப்பதன் அடிப்படையில் எட்வின் ஹப்பிள் என்பவர்''ஒரு காலத்தில் பொருள்கள் எல்லாம் ஒரு மையத்தில் இருந்திருக்க வேண்டும் அதன் பிறகு ஏற்பட்ட வெடிப்பில் பொருள்கள் ( நட்சத்திரங்கள்)ஒன்றில் இருந்து ஒன்று விலகிச் சென்று கொண்டு இருக்கிறது ''என்று கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்தும் உண்டு. சில நட்சத்திரங்கள் நம்மை நோக்கி நெருங்கிக் கொண்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் பிரபஞ்சம் சுருங்கிக் கொண்டு இருக்கிறது (Big crunch theory ) என்ற கருத்தும் உண்டு. இது பெரு வெடிப்புக் கொள்கைக்கு எதிரானது! உண்மை இன்னமும் அறியப் பட வில்லை. பிரபஞ்சத்தின்,பூமியின் தோற்றம் குறித்து? விண்வெளியில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள் திரண்டு உருவாகும் விண் கோளங்களில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் பெரிய வாயுக் கோளங்களாக நட்சத்திரங்கள் உருவாகின்றன. அதன் பிறகு நட்சத்திரங்களில் இருக்கும் வாயுக்களின் அழுத்தத்தால் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடொன்று அணுக்கரு வினையில் ஈடுபடுவதால் கால்சியம் ,ஆக்சிஜன்,சோடியம் கார்பன்,போன்ற திட அணுக்கள் உற்பத்தியாகின்றன. இதே போல நட்சத்திரத்தின் மையத்தில் இரும்பும் உருவாகிறது. அணுக்கரு விசையால் ஆற்றல் வெளியிடப் படுவதால் நட்சத்திரங்களின் எடை காலப் போக்கில் குறைகிறது. இதனால் நட்சத்திரத்தின் மையத்தில் அணுக்கரு வினை நடை பெறுவதற்கான அழுத்தம் குறைவதால் ,அணுக்கரு வினை நின்று ,நட்சத்திரத்தில் வெப்ப உற்பத்தியும் குறைகிறது. அதுவரை உற்பத்தியான உலோக அணுக்கள் ஒன்று சேர்ந்து பாறைக் குழம்புக் கோளமாக உருவாகின்றன. இது போன்று எரிந்து முடிந்த நட்சத்திரமாக இருந்த நம் பூமியை சூரியன் ஈர்த்ததால்,லேசான வாயுக்கள் ஆவியான பிறகு,எஞ்சிய பாறைக் குழம்புக் கோளமாக உருவான பூமி இப்பொழுது சூரியனை ,ஒரு கிரகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.-வித்தகன். நன்றி.முத்தாரம்.02-10-2008 ஈர்ப்பு விசை...நீயா? நானா ? ஈர்ப்பு.... விசையா... ? வெளியின் வளைவா...? ஐன்ஸ்டீன் கூறிய தவறான விளக்கம். சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் வெளி வளைந்து பள்ளம் உருவாகுகிறது.அதில் கிரகங்கள் விழுந்து எழுவதால் ,கிரகங்களின் பாதை நீள்வட்டப் பாதையாகிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார். General relativity, in short, tells us that gravity is not quite the force Isaac Newton envisioned; gravity is actually the bending of space and time by mass and energy. http://edition.cnn.com/2015/11/11/opinions/lincoln-einstein-dark-energy/ நியூட்டனின் சரியான விளக்கம். ஈர்ப்பு விசை என்பது ‘இரண்டு பொருட்களுக்கு இடையில் செயல்படும் விசை’ என்று விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கூறினார். அதாவது மரத்தின் மேல் இருந்த ஆப்பிள் கீழே விழுந்ததற்கு, ஆப்பிளின் செயல் பட்ட, பூமியின் ஈர்ப்பு விசை மட்டும் காரணமல்ல, மாறாக பூமியின் மேல் செயல் பட்ட, ஆப்பிளின் ஈர்ப்பு விசையும் காரணம், என்பதே நியூட்டனின் விளக்கம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்....பூமியும் ஆப்பிளை ஈர்க்கிறது, ஆப்பிளும் பூமியை ஈர்க்கிறது. நியூட்டனின் விளக்கத்தின் படி, சூரியன் மட்டும் கிரகங்களை ஈர்க்க வில்லை.மாறாக,கிரகங்களும் சூரியனை ஈர்க்கிறது. உதாரணமாக,பூமியில் இருந்து 51 ஒளியாண்டு தொலைவில்,இருக்கும்,டா பூட்டிஸ் நட்சத்திரத்தை 40 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில்,வியாழன் கிரகத்தை விட,4.41 மடங்கு அதிக எடையுள்ள வாயுக் கோள கிரகம் ஒன்று,அசுர வேகத்தில்,ஒரு ராட்சச வால் நட்சத்திரத்தைப் போல,மூன்றரை நாளுக்கு ஒரு முறை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கிரகமானது அதிக எடையுடன் இருப்பதுடன் அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால்,அதன் நட்சத்திரத்தின் போக்கையே கட்டுப் படுத்துகிறது. அதனால் அந்த கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள்,''நாயை ஆட்டும் வால்'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றனர். http://www.space.com/1108-role-reversal-planet-controls-star.html இந்த கிரக அமைப்பானது நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக் காடாக இருக்கிறது. இதே போன்று விண்வெளியில் ஓரளவு ஒத்த எடையுள்ள இரண்டு ( அல்லது மூன்று ) நட்சத்திரங்களானது, ’ஒரு பொது மையத்தை’ மையமாகக் கொண்டு (barycenter) ஒன்றை யொன்று வலம் வந்து கொண்டு இருப்பதும் கூட, நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்திற்கே சிறந்த ஆதாரமாக இருக்கின்றன. அதாவது ஈர்ப்பு விசையானது பொருள்களின் மேல் நேரிடையாகச் செயல் படுகிறது. உதாரணமாகச் சூரிய மண்டலத்தில், புதன் மற்றும் அதன் நிலவான, சரணும் கூட, இவ்வாறு ஒரு 'பொது மையத்தை' மையமாகக் கொண்டு,ஒன்றை ஒன்று வலம் வந்து கொண்டு இருக்கின்றன. விண்வெளியில் பல நட்சத்திரங்கள் அசைவதை வைத்தே, அந்த நட்சத்திரத்திற்கு அருகில் ஒரு பெரிய கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இந்த முறையானது ‘ரேடியல் வெலாசிட்டி’ முறை என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு மைய நட்சத்திரமானது வட்டவடிவில் அசைவதற்கு, அதனைச் சுற்றி வரும் கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம். இந்த இயக்கம் கூட, நியூட்டனின் விளக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஈர்ப்பு என்பது விசையா? அல்லது நிறையால் ஏற்படும் பள்ளத்தின விளைவா? ஈர்ப்பு என்பது விசையா? அல்லது பொருளின் நிறையால் விண்வெளியில் ஏற்படும் பள்ளத்தின விளைவா? சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம் என்று,விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கூறினார். அதன் பிறகு,கிரகங்களின் இயக்கம் சரிவரப் புரிந்து கொள்ளப் பட்டது. அத்துடன் யூரேனஸ் கிரகத்தின் இயக்கத்தில் சிறிது தடுமாற்றங்கள் ஏற்பட்டது. அதற்கு வேறு ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கருதப் பட்டது. அதனைத் தொடர்ந்து நெப்டியூன் கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது. முக்கியமாக கிரகங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஒரு கிரகத்தின் மேல் செயல் படும் அடுத்த கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணம் என்று கருதப் பட்டது. இந்த நிலையில்,சூரியனை மிகவும் நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும்,புதன் கிரகத்தின் பாதையானது எதிர் பார்த்ததை விட மிகவும் நீண்டு இருந்தது. அத்துடன் புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் இடமானது ஒவ்வொரு முறையும் இருபது மைல் தள்ளிப் போனது. இந்த நிகழ்வுக்கு நியூட்டனால் விளக்கம் கூற இயவில்லை. இருநூறு ஆண்டுக்கும் மேலாக, புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, மிகவும் நீண்டு இருப்பதற்கும்,அதன் சுற்றுப் பாதையே, சூரியனைச் சுற்றி வருவதற்கும் சரியான விளக்கம் கூறப் படாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் நான்,கிரகங்கள் எவ்வாறு உருவாகின? என்பதை அறிவதற்காக இணையத்தில் வேற்று கிரகங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து கொண்டு இருந்தேன். எனது ஆய்வில் ,கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்திற்கு உள்ளேயே உருவாகின்றன என்பதை அறிந்தேன். அத்துடன் சில நட்சத்திரங்களை, அதன் கிரகங்கள்,வால் நட்சத்திரங்களைப் போன்று, மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தேன். அதன் அடிப்படையில்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,அந்த கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள் விண்வெளியில் நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்பதை அறிந்தேன். அதனை கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ,விகடன் பிரசுரம் வெளியிட்ட எனது ‘’பூமிப் பந்தின் புதிர்கள் ‘’புத்தகத்திலும் தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்பு,சூரியனைச் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும்,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீண்டு இருப்பதற்கும்,அதன் நீள் வட்டப் பாதையானது ஒவ்வொரு முறை சூரியனுக்கு அருகில் வரும் இடமானது, சிறிது தள்ளிப் போவதது குறித்தும் படித்தேன். உடனே எனக்கு விண்வெளியில் சூரியன் சற்று வளைவான பாதையில்,பால் வீதி நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருப்பதே,புதன் கிரகமானது ஒவ்வொரு முறையும் சூரியனுக்கு அருகில் வரும் இடம் சிறிது தள்ளிப் போவதற்குக் காரணம் என்பது புரிந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்கு, ஐன்ஸ்டீன் அவர்கள்,சூரியனின் நிறையானது,வெளியை வளைப்பதகவும்,அதனால் சூரியனுக்கு அருகில், பெரிய பள்ளம் ஏற்படுவதாகவும்,அதற்கு உள்ளே புதன் கிரகமானது விழுந்து எழுவதே ,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறை சூரியனுக்கு அருகில் வரும் இடமானது சிறிது தள்ளிப் போவதற்கும் காரணம் என்று விளக்கம் தெரிவித்து இருப்பதைப் படித்தேன். உடனே எனக்கு அந்த விளக்கம் தவறான விளக்கம் என்பதை அறிந்தேன். அதாவது ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல் படும் ‘விசை’ அல்ல ,மாறாக ஈர்ப்பு என்பது,ஒரு பொருளின் நிறையால் விண்வெளியில் ஏற்படும் பள்ளத்தால் ஏற்படும் ‘’விளைவு’’என்று ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். எனவே ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியபடி ,இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல் படும் ‘விசையா’ அல்லது ஐன்ஸ்டீன் கூறியபடி , ஒரு பொருளின் நிறையால், விண்வெளியில் ஏற்படும் பள்ளத்தால் ஏற்படும் ‘விளைவா’? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை விளங்கிக் கொள்ள சில ஆதாரங்களைக் குறிப்பிடுகிறேன். ஈர்ப்பு என்பது விசையா? வெளியில் ஏற்படும் வளைவா? உதாரணமாக வியாழன் கிரகத்தை இயோ என்று அழைக்கப் படும் ஒரு துணைக் கோள் சற்று நீள் வட்டப் பாதையில் மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அந்தத் துணைக் கோளானது வியாழன் கிரகத்தை மிகவும் நெருக்கமாக ,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதால்,சில சமயம்,அந்த துணைக் கோளானது,வியாழன் கிரகத்திற்கு மிக அருகில் வருகிறது. குறிப்பாக அந்தத் துணைக் கோளானது,ஏராளமான எரிமலைகளுடன் கொதி நிலையில் இருப்பதாலும் பாகு போன்று சற்று இளகிய நிலையில் இருப்பதாலும்,அந்தத் துணைக் கோளானது வியாழன் கிரகத்திற்கு அருகில் வரும் பொழுது,அந்தத் துணைக் கோளின் வடிவமே நீள் முட்டை வடிவமாக மாறுகிறது. இதன் மூலம் ,ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று,இரண்டு பொருள்களுக்கு இடையில் ஏற்படும் விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று இன்னொரு நிகழ்வும் நியூட்டனின் விளக்கத்தை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது. குறிப்பாக பூமியானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமியை,நிலவும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சில சமயம் நிலவானது,பூமிக்கு மிக அருகில் வருகிறது.அவ்வாறு நிலவானது,பூமிக்கு அருகில் வரும் பொழுது,புவியில் உள்ள கடல் அலைகளானது அதிக உயரத்திற்கு எழுகிறது. இதன் மூலம் ,ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று,இரண்டு பொருள்களுக்கு இடையில் ஏற்படும் விசையே என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. எனவே ஈர்ப்பு விசை என்பது,பொருளின் நிறையால் விண்வெளியில் ஏற்படும் , வளைவின் விளைவு என்று, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது ,முற்றிலும் தவறான விளக்கம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் இடமானது சற்று தள்ளிப் போவதற்கு,விண்வெளியில் சூரியனானது,பால் வீதி நட்சத்திர மண்டலத்தை சற்று வளைவான பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதே காரணம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 0000 ஐன்ஸ்டீனின் விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் மறந்தது ஏனோ? முதல் வேற்று கிரகம் ,கடந்த 1995 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து,நமது சூரியனைப் போலவே விண்வெளியில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் மூவாயிரத்துக்கும் அதிகமான கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவற்றுள் பல கிரகங்கள் நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கிரகத்தைப் போல பல மடங்கு அதிக எடையுடனும்,அதிக வெப்பத்துடனும் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்த ராட்சத வாயுக் கோளங்களானது,அதன் நட்சத்திரங்களை,வால் நட்சத்திரங்களைப் போன்று,மிக நீண்ட நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதுடன்,அதன் நட்சத்திரத்துக்கு மிக அருகேயும் சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த ராட்சத வாயுக் கோளங்களானது அதிக வெப்பத்துடனும் இருக்கின்றன.எனவே அந்த ராட்சத வாயுக் கோளங்களானது வெப்ப வியாழன்கள் என்றும் அழைக்கப் படுகின்றன. வெப்ப வியாழன்கள் என்று அழைக்கப் படும் அந்தக் கிரகங்களானது ஏன் அவ்வாறு,அதன் நட்சத்திரங்களை,வால் நட்சத்திரங்களைப் போன்று மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில்.வலம் வருகின்றன? என்று ஆராய்ச்சியாளர்கள் விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். உதாரணமாகப் பூமியில் இருந்து 190 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள,HD 80606 என்று பெயரிடப் பட்ட நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்ற,ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம்,ஒரு ராட்சத வால் நட்சத்திரத்தைப் போன்று மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் எல்லாம் ,முன் ஒரு காலத்தில் சூரியனை சுற்றி சுழன்று கொண்டு இருந்ததாக நம்பப் படும் ,ராட்சத தூசி மற்றும் வாயு மண்டலங்களில் இருந்த,தூசி மற்றும் வாயுக்கள் திரண்டதால் கிரகங்களாக உருவாகிய பிறகு,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிலும் கிரகங்கள் உருவான பிறகு,அந்த கிரகக் குடும்பத்தில் இருந்த கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட, ஈர்ப்பு விசைகளின் தாக்கத்தால்,சில கிரகங்கள் அந்த கிரகக் குடும்பத்தை விட்டு வெளித் தள்ளப் பட்ட,பிறகு,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது,அதன் நட்சத்திரங்களை மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில்,வால் நட்சத்திரங்களைப் போன்று வலம் வந்து கொண்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது மைக்ரேசன் தியரி என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலையில்,கணிப் பொறி தூண்டல் மாதிரிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், HD 80606 நட்சத்திரத்தை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் ராட்சத வாயுக் கோளமானது, கடந்த பத்து பில்லியன் ஆண்டு காலாகவே,அதன் நட்சத்திரத்தை அதே போன்ற நீள் வட்டப் பாதையிலேயே வலம் வந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே மற்ற நட்சத்திரங்களை,ராட்சத வால் நட்சத்திரங்களைப் போன்று, மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும்,வெப்ப வியாழன்கள் என்று அழைக்கப் படும் ராட்சத வாயுக் கோளங்கள் எவ்வாறு உருவாகி,எப்படி நீள் வட்டப் பாதைக்கு மாறியது என்பது குறித்த கருத்துக்களை மறு பரீசீலனை செய்ய வேண்டும் என்று ,மாசாசூட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த,ஜூலியன் டே வுட் தெரிவித்து இருக்கிறார். இது விபரம் நாசாவின் இணைய தளத்திலும் வெளியாகி இருப்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. Investigating the Mystery of Migrating 'Hot Jupiters' http://www.nasa.gov/feature/jpl/investigating-the-mystery-of-migrating-hot-jupiters இந்த நிலையில், நான் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ,வெளியிட்ட ,எனது பூமிப் பந்தின் புதிர்கள் என்ற புத்தகத்தில்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் தனிமங்களானது திரண்டு கிரகங்களாக உருவாகுகின்றன, என்று ஆதாரங்களுடன் விளக்கி இருந்தேன். அவ்வாறு எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளே கிரகங்கள் உருவான நிலையில்,அந்த நட்சத்திரங்களை அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் ஈர்க்கும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் வெளிப் பகுதியில் இருக்கும் வாயுக்கள் ஆவியாக்கப் பட்ட பிறகு, அதன் உள்ளே உருவான கிரகங்களானது, எஞ்சிய வாயுக்களுடன்,ராட்சத வாயுக் கோள கிரகங்களாக,ஈர்க்கப் பட்ட நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கி இருந்தேன். இந்த நிகழ்வில், எரிந்து முடிந்த நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட வாயுக்களே, ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தைச் சுற்றிலும், வாயு மற்றும் தூசி மண்டலங்களாக காட்சி அளிக்கின்றன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,புதன் கிரகமானது,சூரியனை நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார். அதாவது,சூரியனின் நிறையானது, சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியை வளைபபதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் பள்ளம் உருவாகுவதகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே புதன் கிரகமானது விழுந்து எழுவதால்,புதன் கிரகத்தின் பாதையானது,மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையாக மாறி விடுவதாகவும்,ஐன்ஸ்டீன் தனது சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார். என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது. ஆனால் அவரின் தத்துவ விளக்கத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புறந்தள்ளி விட்டனர் என்பதும் இங்கே மிகவும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது. இதே போன்று, பூமியில் இருந்து 117 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,பெருங் கரடி நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும்,HD 20782 என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகம் போன்ற ஒரு ராட்சத வாயுக் கோள கிரகமானது,வால் நட்சத்திரத்தைப் போன்றே மிகவும் நீண்ட நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அந்த ராட்சத வாயுக் கோள கிரகமானது,அதன் நட்சத்திரத்தில் இருந்து தொலைவில் இருக்கும் பொழுது,சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,இரண்டரை மடங்கு அதிக தொலைவில் இருக்கிறது. அதே போன்று, அந்த ராட்சத வாயுக் கோள கிரகமானது,அதன் நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் பொழுது,சூரியனில் இருந்து புதன் கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,குறைவான தொலைவில் இருக்கிறது. இந்த கிரகத்தை ஆய்வு செய்து கொண்டு இருக்கும்,பேராசிரியர் ஸ்டீபன் கேன்,இது போன்று நீள் வட்டப் பாதையில் இருக்கும் கிரகங்களைக் காணும் பொழுது,எப்படி இந்தக் கிரகங்கள்,இவ்வாறு நீள் வட்டப் பாதைக்கு வந்தன?என்பதை விளக்குவதற்கு உண்மையிலே மிகவும் கடினமாக இருக்கிறது.என்று தெரிவித்து இருக்கிறார். இங்கு எதோ கிரைம் சீனை பார்ப்பது போன்று இருக்கிறது.சுவற்றில் இரத்தப் படலங்கள் காணப் படுகின்றன. எதோ விபரீதம் நிகழந்து இருக்கிறது. குறிப்பாக HD 20782,விஷயத்தில் சில சாத்தியமான சந்தேகங்கள் இருக்கின்றன. ஒன்று ,இந்த கிரக அமைப்பில் இன்னும் ஒரு கிரகம் இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு விசைகளின் தாக்கத்தால்,அந்த கிரகமானது,இந்தக் கிரகக் குடும்பத்தை விட்டு வெளியேற்றப் பட்டு இருக்க வேண்டும்,அந்த நிகழ்வின் பொழுது,இரண்டாவது கிரகத்தின் பாதையானது ,நீள் வட்டப் பாதையாக மாறி இருக்க வேண்டும். இரண்டாவதாக, HD 20782, நட்சத்திரமானது ஒரு இரட்டை நட்சத்திரம்,தொலைவில் இருக்கும் அந்த இரண்டாவது நட்சத்திரத்தின் ஈர்ப்பின் காரணமாக,இந்த கிரகத்தின் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி இருக்க வேண்டும் என்று,ஸ்டீபன் கேன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஐன்ஸ்டீனின் விளக்கத்தை, ஆராய்ச்சியாளர்கள் மறந்தது ஏனோ? 0000 சனி கிரகத்தின் வளையத்தில் இருந்து, தூசிகளை ஈர்க்கும் துணைக் கோள். கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு,சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என்று சர் ஐசக் நியூட்டன் விளக்கம் கூறினார். அத்துடன் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம், என்றும் சர் ஐசக் நியூட்டன் விளக்கம் கூறினார். இந்த நிலையில், சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,எதிர் பார்த்ததை விட மிகவும் நீளமாக இருந்தது. அத்துடன்,புதன் கிரகமானது, ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் இடமும் ,சிறிது விலகிச் சென்றது. இவ்வாறு புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது எதிர் பார்த்ததை விட மிகவும் நீளமாக இருந்ததற்கும்,அந்த நீள் வட்டப் பாதையே சூரியனை மெதுவாக சுற்றுவதற்கும்,என்ன காரணம் என்ற கேள்விக்கு,சர் ஐசக் நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கம் கூறப் படாத நிலையில்,இந்தக் கேள்விக்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது ,ஈர்ப்பு விசை என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று,இரண்டு பொருள்களுக்கு இடையிலான விசை அல்ல,மாறாக சூரியன் மற்றும் கிரகங்களின் நிறையால்,விண் வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியன் மற்றும் கிரகங்களுக்கு அருகில் விண் வெளியில் பள்ளம் உருவாகுவதாகவும்,அவ்வாறு சூரியனுக்கு அருகில் உருவான பள்ளத்தில் புதன் போன்ற கிரகங்களானது விழுந்து எழுவதால்,அதன் சுற்றுப் பாதையானது, மாற்றமடைகிறது என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். இந்த நிலையில்,ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களின் சுற்றுப் பாதை குறித்து ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. உதாரணமாக,சூரிய மண்டலத்தில் இருக்கும் சனி கிரகத்தைச் சுற்றிலும் பல அடுக்களில்,தூசிகள் மற்றும் பனிக் கட்டிகளால் ஆன வளையங்கள் இருப்பதுடன்,சனி கிரகத்தை பல துணைக் கோள்கள் வலம் வந்து கொண்டு இருப்பதும் ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,கடந்த 2004 ஆம் ஆண்டு,சனி கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப் பட்ட,காசினி செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட ,படங்களை, ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதாவது,சனி கிரகத்தைப் பதினான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை, என நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும், உருளைக் கிழங்கு வடிவில் இருக்கும், புரோமிதியஸ் என்று அழைக்கப் படும் துணைக் கோளானது,சனிக் கிரகத்தின் F வளையத்திற்கு அருகில் வரும் பொழுது,அந்த வளையத்தில் இருக்கும் தூசிகளையும் பனிக் கட்டிகளையும் இழுத்துக் கொள்வதை,லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, மைக் இவான் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார். http://space.gizmodo.com/prometheus-teases-the-f-ring-of-saturn-1588416684 இதன் மூலம் கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு என்பது விசை இருக்கிறது என்று கூறிய சர் ஐசக் நியூடனின் விளக்கமே சரியான விளக்கம் என்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 0000 நட்சத்திரங்களும், கிரகங்களும் எப்படி உருவாகின? விண்வெளியில் கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பதற்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வித விளக்கங்களை நம்புகின்றனர். முதலாவதாக, நட்சத்திரங்களைச் சுற்றி சுழலும் தூசித் தட்டில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசிகளானது, ஈர்ப்பு விசையால் உருண்டு திரண்டு ,ஒன்றுடன் ஒன்று மோதி கிரகங்களாக உருவாகலாம் என்று நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ‘’தூசித் தட்டு கொள்கை’’ என்று அழைக்கப் படுகிறது. இதே போன்று,நட்சத்திரங்களைச் சுற்றி சுழலும் தூசித் தட்டில் உள்ள வாயு மேகமானது,ஈர்ப்பு விசையால் திடீரென்று,சுருங்கி பெரிய வாயுக் கோளங்களாக உருவாகி,வியாழன் மற்றும் சனி போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களாக உருவாகலாம் என்றும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது, ‘’தட்டு நிலை குலைதல் கொள்கை’’ என்று அழைக்கப் படுகிறது. http://www.space.com/19175-how-was-earth-formed.html இந்த நிலையில் நான் எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கி இருக்கிறேன். ஆனால்,நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகுகின்றன/ என்பதற்கு ஒரே ஒரு கருத்துதான் இருக்கிறது. அதாவது,விண்வெளியில் இருக்கும் ஹைட்ரஜன் போன்ற இலேசான வாயுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்று திரண்டு ராட்சத மேகங்களாக உருவாகுகின்றன. அதன் பிறகு,அந்த விண் மேகங்களில் சில பகுதிகளானது ஈர்ப்பு விசையால் சுருங்கி ராட்சத வாயுக் கோளங்களாக உருவாகுகின்றன. இவ்வாறு உருவான ராட்சத வாயுக் கோளத்தின் மையத்தில் அதிக அழுத்தம் ஏற்படுவதால்,அங்கே இருக்கும் அணுக்களானது அணுகரு வினையில் ஈடுபட்டு ஆற்றலை வெளிப் படுத்துகிறது. இதனால் அந்த ராட்சத வாயுக் கோலத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.அதனால் அதன் வாயு மண்டலமானது விரிவடைகிறது.ஆனாலும் பிரமாண்டமான ஈர்ப்பு விசையின் காரணமாக,அந்த வாயுக்களால்,அந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறது. இதனால் அந்த நட்சத்திரத்தின் அழுத்தமானது அப்படியே இருக்கிறது.இதனால் அந்த நட்சத்திரத்தின் உள்ளே தொடங்கிய அணுக்கரு வினையானது தொடர்ந்து நடை பெறுகிறது.இதனால் அந்த நட்சத்திரத்தின் உள்ளே காலப் போக்கில்,ஹீலியம்,ஆக்சிஜன்,கார்பன்,கந்தகம்,போன்ற கனமான தனிமங்கள் உருவாகுகின்றன.இந்த நிலையில் இரும்பு உருவாகும் பொழுது,இரும்பானது பெரும்பகுதி வெப்பத்தை ஈர்த்துக் கொள்வதால்,அந்த நட்சத்திரமானது அணைந்து விடுகிறது. ஆக மொத்தம் விண்வெளியில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் உருவாக ஈர்ப்பு விசை அவசியம்.ஈர்ப்பு விசைஇல்லையென்றால் ,விண்வெளியில் நட்சத்திரங்களோ அல்லது கிரகங்களோ உருவாக இயலாது. எனவே ‘’ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல’’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறி இருப்பது,ஏற்கக் கூடிய விளக்கம் அல்ல. ஏனென்றால் விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் இருப்பதே ஈர்ப்பு விசைக்கு சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன. 000 கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறை சூரியனி நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் மாறுவதற்கும்,சூரியனின் நிறையால் ,விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் விண்வெளியில் உருவாகும் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் விழுந்து எழுவதே காரணம் என்று,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். இந்த விளக்கம் உண்மையான விளக்கம் என்றல்,சூரியனைச் சுற்றி வரும் எல்லாக் கிரகங்களின் சுற்றுப் பாதையும் ஒரே தளத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல்,சூரியனைச் சுற்றும் புளுட்டோ கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,மற்ற கிரகங்கள் இயங்கும் தளத்தில் இருந்து பதினேழு டிகிரி சாய்ந்து இருக்கிறது. இவ்வாறு வெவ்வேறு கிரகங்கள் வெவ்வேறு தளங்களின் சூரியனை சுற்றி வருவது சாத்தியம் அல்ல. இந்த இடத்தில் ஒருவர் விவாதம் புரியலாம். அதாவது ,சூரியனின் நிறையானது வெளியில் உருவாக்கும் பள்ளத்திற்கு உள்ளேயே கிரகங்கள் வெவ்வேறு கோணத்தில் சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறலாம். அதனால் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது வெவ்வேறு தளங்களில் இருக்கிறது என்று விளக்கம் கூறலாம். அனாலும் விண்வெளியில் சூரியனானது நிலையாக ஒரு இடத்தில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஒரு கிரகமானது சூரியனைச் சுற்றிய பிறகு ,விலகிச் சென்ற பிறகு, சூரியனானது இடம் பெயர்ந்து விடுவதால்,சூரியனுடன் அந்தப் பள்ளமும் இடம் பெயர்ந்து விடுகிறது.(அதாவது அவர்களின் விளக்கத்தின் படி ) எனவே ஒரு கிரகமானது ஒரு முறை சூரியனை சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் பொழுது,விண்வெளியில் சூரியனின் நிறையால் உருவக்கப் பட்ட ,பள்ளமானது இடம் பெயரும் பொழுது,சூரியனைச் சுற்றி விட்டுச் சென்ற கிரகமானது,மறுபடியும் திரும்ப வரும் பொழுது,விண்வெளியில் சூரியனால் உருவாக்கப் பட்ட பள்ளத்தின் இடம் பெயர்ந்து விடுவதால்,மறுபடியும் சூரியனை நோக்கி வரும் கிரகமானது ,தற்பொழுது வேறு ஒரு கோணத்தில் சுற்றும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடும். இதனால் கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையானது ஒவ்வொரு சுற்றுக்கும் கோணம் மாறிவிடும். ஆனால் ஐன்ஸ்டீனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்,கிரகங்கள் எல்லாம் அந்தப் பள்ளத்துக்கு உள்ளேயே எப்பொழுதும் இருக்கின்றன என்றும்,கிரகங்கள் எல்லாம் அந்தப் பள்ளத்தை விட்டு எப்பொழுதும் வெளியேறுவதில்லை என்றும் விளக்கம் கூறுவார்கள். ஆனாலும் ட்ரான்ஸ் நெப்டியூன் ஆப்ஜெக்ட் என்று அழைக்கப் படும் சில விண் பாறைகள் குறிப்பாக 2008 KV42 என்றும், டிராகுலா என்றும், அழைக்கப் படும், விண் பாறையானது, சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வரும் தளத்திற்குக் கிடை மட்டமாக சுற்றி வருகிறது. https://en.wikipedia.org/wiki/2008_KV42 இதன் மூலம்,சூரியனைச் சுற்றும் கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு,ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 பூமியை குதிரை லாட வடிவில் சுற்றும் இரண்டாவது நிலவு சுரிதின் (3753 Cruithne ) என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு விண் பாறையானது ,பூமியைக் குதிரை லாட வடிவில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. https://en.wikipedia.org/wiki/3753_Cruithne இவ்வாறு சுருதின் பாறையானது (3753 Cruithne ) ,பூமியை ஒழுங்கற்ற முறையில்,குறிப்பாக ஒரு குதிரை லாட வடிவில் சுற்றி வருவதற்கு,பூமியின் ஈர்ப்பு விசையே காரணம் என்பது எடுத்துக் காட்டப் படுகிறது. இதன் மூலம்,பூமி போன்ற கிரகங்களானது ,சூரியனைச் சுற்றுவதற்கு ,ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று ,சூரியனின் நிறையால்,விண்வெளி வளைக்கப் படுவதால் உருவாகும் பள்ளத்துக்கு உள்ளே , கோள்களானது விழுந்து எழுவதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ,அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 ஐன்ஸ்டீனின் விளக்கம் தவறு. கிரகங்கள் எல்லாம் சூரியனை ஏன் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற கேள்விக்கு ,ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில்,ஒரு பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக இருக்கிறது என்று,ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். ஆனால் ஐன்ஸ்டீனின் விளக்கமானது ஒரு தவறான விளக்கம். உதாரணமாக நிலவானது ,பூமியை நீள் வட்டப் பாதையிலேயே வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பூமிக்கு அருகில் விண் வெளியானது வளைக்கப் படவில்லை. உதாரணமாக ,பூமிக்கு அருகில், செயற்கைக் கோள்களை, எந்தத் திசையில் வேண்டுமானாலும்,எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் இயக்க முடியும். இதன் மூலம் ,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு ,ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 0000 கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குச் சூரியனின் நகர்வே காரணம். பத்திரிகை செய்தி வெளியீடு. வணக்கம்! நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ,கிரகங்களின் தோற்றம் குறித்து,இணையதளத்தின் வெளியாகி இருக்கும் தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன். எனது ஆய்வில்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மையத்தில் உருவாகி இருக்கும் தனிமங்கள் ஒன்று சேர்ந்து கிரகங்களாக உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்தேன். குறிப்பாக நான் ,புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகக் குடும்பங்களின் அமைப்பைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது பல கிரகங்கள் அதன் மைய நட்சத்திரங்களை மிகவும் நீண்ட வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு அந்த கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்களானது விண்வெளியில் விரைந்து சென்று கொண்டு இருப்பதே காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து கிரகங்கள் குறித்த தகவல்களை இணையத்தில் ஆர்வத்துடன் படித்துக் கொண்டு இருந்தேன். இந்த நிலையில்,இரண்டு வாரங்களுக்கு முன்பு,இணையத்தில் ஒரு கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையில்,கிரகங்களானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று நியூட்டன் விளக்கம் தெரிவித்து இருந்தது பற்றி தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, மிகவும் நீண்டு இருந்தது,பற்றி தெரிவிக்கப் பட்டு இருந்தது. இவ்வாறு புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மற்ற கிரகங்களின் நீள் வட்டப் பாதையைக் கட்டிலும் ஏன் மிகவும் நீண்டு இருக்கிறது? என்ற கேள்விக்குநியூட்டனால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. குறிப்பாக,புதன் கிரகமானது ஒவ்வொரு முறையும் சூரியனை நெருங்கும் புள்ளியானது சிறிது தள்ளிப் போவது தெரிய வந்தது. இவ்வாறு புதன் கிரகமானது,ஒவ்வொரு முறையும் சூரியனை நெருங்கும் புள்ளியானது சிறிது தள்ளிப் போவதற்கு காரணம் என்ன?என்ற கேள்விக்கு நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை.என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. உடனே எனக்கு,விண்வெளியில் சூரியன்,பால் வீதி நட்சத்திர மண்டலத்தை வளைவான பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதைப் பற்றி படித்து நினைவுக்கு வந்தது. எனவே,புதன் கிரகமானது ஒவ்வொரு முறையும் சூரியனை நெருங்கும் புள்ளியானது.சிறிது தள்ளிப் போவதற்கு,அதாவது புதன் கிரகத்தின், நீள் வட்டப் பாதையே, சூரியனை சுற்றுவதற்கு,விண்வெளியில் சூரியன் வளைவான பாதையில் சென்று கொண்டு இருப்பதே காரணம் என்பது புரிந்தது. ஆனால், புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மற்ற கிரகங்களின் நீள் வட்டப் பாதையைக் காட்டிலும் மிகவும் நீண்டு இருப்பதற்கும்,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது சூரியனை சுற்றுவதற்கும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஐன்ஸ்டீன் வேறு ஒரு விளக்கத்தைக்கூறி இருப்பது பற்றியும்அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதாவது,ஈர்ப்பு என்பது,சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல்படும் விசை அல்ல,என்றும் மாறாக,பொருள்களின் நிறையானது,விண்வெளியை வளைப்பதாகவும்,அதனால் பொருள்களுக்கு அருகில்,இருக்கும் விண்வெளியில் பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்கப் படுவதாகவும்,ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருந்தார். குறிப்பாகச் சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில்ஒரு பள்ளம் உருவாகுவதகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே புதன் உள்பட மற்ற கிரகங்களும் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுவதாக ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருந்தார். அதில் குறிப்பாகச் சூரியனுக்கு அருகில் புதன் கிரகம் இருப்பதால்,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, மற்ற கிரகங்களின் நீள் வட்டப் பாதைகளைக் காட்டிலும்,மிகவும் நீண்டு இருப்பதாகவும்,ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருந்தார். ஆனால் எனக்கு ஐன்ஸ்டீனின் விளக்கம் தவறு என்பது தெரிந்தது. ஏனென்றால்,பூமியில் இருந்து நாற்பது ஒளியாண்டு தொலைவில் இருக்கும் அப்சிலான் அன்றோமெடா என்று அழைக்கப் படும் ,நமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை,நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் வியாழனைப் போன்று,மூன்று ராட்சத வாயுக் கோளக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. (இந்த கிரகக் குடும்பமானது, கடந்த 1995 ஆம் ஆண்டு,அதாவது ஐன்ஸ்டீன் இறந்த பிறகு, கண்டு பிடிக்கப் பட்டது.) அதில் குறிப்பாக,அந்த அப்சிலான் அன்றோமெடா நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது,வட்டப் பாதையிலும்,அதே நட்சத்திரத்தை தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கும்,இரண்டு கிரகங்களும்,நீள் வட்டப் பாதையிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் சரியான விளக்கம் என்றால்,அப்சிலான் அன்றோமெடா நட்சத்திரத்திற்கு அருகில்,அதன் நிறையால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருந்து இருக்க வேண்டும். அதனால்,அந்த நட்சத்திரத்தை நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகத்தின் பாதையானது,நீள் வட்டப் பாதையாகவும்,அதே நேரத்தில் அந்த நட்சத்திரத்தை தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கும், கிரகங்களின் பாதையானது,வட்டப் பாதையாகவும் இருக்க வேண்டும். ஆனால் ஐன்ஸ்டீனின் விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக,அப்சிலான் அன்றோமெடா நட்சத்திரத்தை நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகமானது வட்டப் பாதையிலும்,அதே நட்சத்திரத்தை தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கும், இரண்டு கிரகங்களின் சுற்றுப் பாதையானது,நீள் வட்டப் பாதையாகவும் இருக்கிறது. எனவே ஈர்ப்பு விசைக்கும், கிரகங்களின் இயக்கத்திற்கும், ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று, இன்னொரு முக்கியமான ஆதாரம் மூலமாகவும், ஐன்ஸ்டீனின் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,பூமியும் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அத்துடன் பூமியானது, சூரியனை ஓவ்வொரு முறையும் நெருங்கும் புள்ளியானது, சிறிது தள்ளிப் போகிறது. இதே போன்று,நிலவும் பூமியை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அத்துடன்,நிலவானது, ஒவ்வொரு முறையும், பூமியை நெருங்கும் புள்ளியானது, சிறிது தள்ளிப் போகிறது. அதாவது, நிலவின் நீள் வட்டப் பாதையானது, பூமியை மெதுவாக சுற்றி வருகிறது. இவ்வாறு நிலவானது பூமியை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கும்,நிலவானது ஒவ்வொரு சுற்றுக்கும் பூமியை நெருங்கும் புள்ளியானது சிறிது தள்ளிப் போவதற்கும், ஐன்ஸ்டீனின் விளக்கத்தின் படி,பூமியின் நிறையால்,பூமிக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் பட்டு,பூமிக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்க வேண்டும். ஆனால்,இன்று மூவாயிரத்துக்கும் அதிகமான செயற்கைக் கோள்கள் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் குறிப்பாகப் பல செயற்கைக் கோள்கள் பூமியை நீள் வட்டப் பாதைகளில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில், பல செயற்கைக் கோள்கள், பூமியை வட்டப் பாதைகளிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு நாடுகள் தங்களின் செயற்கைக் கோள்களை,தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பூமியைச் சுற்றிலும், பல்வேறு உயரத்திலும்,பல்வேறு திசைகளிலும்,,செயற்கைக் கோள்களை இயக்குகின்றன. இதன் மூலம்,பூமியின் நிறையால்,பூமிக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் பட வில்லை, என்பது ஆதரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே ஈர்ப்பு விசைக்கும்,கிரகங்களின் இயக்கத்திற்கும் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது, தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,நிலவானது,பூமியை, நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,பூமியானது, சூரியனை, நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருப்பதே காரணம், என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அதே போன்று, நிலவானது, பூமியை, ஒவ்வொரு சுற்றுக்கும், நெருங்கும் புள்ளியானது, சிறிது தள்ளிப் போவதற்கும்,பூமியானது,சூரியனை, நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதே காரணம், என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குச் சூரியனின் நகர்ச்சியே காரணம் என்பதுடன்,புதன் உள்பட ஏனைய கிரகங்களானது,ஒவ்வொரு சுற்றுக்கும்,சூரியனை நெருங்கும் புள்ளியானது,சிறிது தள்ளிப் போவதற்கு,விண்வெளியில் சூரியன்,பால் வீதி நட்சத்திர மண்டலத்தை, வளைவான பாதையில் சுற்றிக் கொண்டு இருப்பதே காரணம், என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 0000 துணைக் கோள்களின் சுற்றுப் பாதைகள். வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் துணைக் கோள்களின், ஒழுங்கற்ற சுற்றுப் பாதைகள் மூலம் ஈர்ப்பு விசைக்கும், கிரகங்களின் இயக்கத்திற்கும் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்மானது, ஒரு தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக ஈர்ப்பு என்பது,சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று, இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல்படும் விசை அல்ல,என்றும் மாறாக,பொருள்களின் நிறையானது,விண்வெளியை வளைப்பதாகவும்,அதனால் பொருள்களுக்கு அருகில்,இருக்கும் விண்வெளியில் பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்கப் படுவதாகவும்,ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருந்தார். குறிப்பாகச் சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில்ஒரு பள்ளம் உருவாகுவதாகவும்,அதனால் சூரியனை ஏறக் குறைய ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது, அந்தப் பள்ளத்துக்கு உள்ளே பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது, நீள் வட்டப் பாதையாக மாறி விடுவதாக, ஐன்ஸ்டீன் விளக்கம் தெரிவித்து இருந்தார். ஆனால், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் துணைக் கோள்களானது, அதன் கிரகங்களை எல்லாப் பக்கங்களில் இருந்தும் சுற்றி வந்து கொண்டு இருப்பதன் மூலம், ஈர்ப்பு விசைக்கும், கிரகங்களின் இயக்கத்திற்கும் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்மானது, ஒரு தவறான விளக்கம் என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 வேற்று கிரகங்களால் நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன? ஈர்ப்பு விசைக்கு ஐன்ஸ்டீன் கூறிய விளக்கத்தைப் பொய்யாக்கிய நட்சத்திரங்களின் அசைவு. ஈர்ப்பு விசை என்பது ஒரு விசை அல்ல என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,விண்வெளியில் வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்களில்,அந்த வேற்று கிரகங்களின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் நட்சத்திரங்களின் அசைவு மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,நீண்ட வட்டப் பாதையாக இருப்பதற்கும்,அந்த நீண்ட வட்டப் பாதையும் மெதுவாக சூரியனை சுற்றுவதற்கும் காரணம் என்ன? என்ற கேள்விக்கு ,சர் ஐசக் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக ஈர்ப்பு என்பது பொருள்களின் நிறையால் விண்வெளியானது வளைக்கப் படுவதால்,உருவாகும் ஒரு விளைவு என்று விளக்கம் கூறினார். குறிப்பாக,சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுவதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே,புதன் கிரகமானது பயணம் செய்வதால்,புதன் கிரகத்தின் பாதையானது வளைக்கப் பட்டு நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது,சூரியன் உள்பட,மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களால் ஏற்படும் அசைவு மூலம், ஈர்ப்பு என்பது ஒரு விசை என்பதும்,ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல் படும் விசை என்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக,சூரியனானது,வியாழன் கிரகத்தை ஈர்ப்பது போலவே,வியாழன் கிரகமும் சூரியனை ஈர்க்கிறது. அதாவது, நியூட்டன் கூறியதைப் போன்று ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையிலான விசை என்பதற்கு ஆதாரமாக ,சூரியனும் வியாழனும் செயல் படுகிறது. இதானால் சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையம் ஏற்படுகிறது. இந்தப் பொது ஈர்ப்பு மையமானது, பாரி சென்டர் என்றும் அழைக்கப் படுகிறது. ஆனால்,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையமானது ,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் நடுவே ஏற்படாமல்,சூரியனுக்கு மிக அருகில் ஏற்படுகிறது. ஏனென்றால் சூரியனின் எடையானது, வியாழன் கிரகத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம். உதாரணமாக,ஒரு பூங்காவில்,இரண்டு சம எடையுள்ள சிறுவர்கள் சீசா பலகையில் விளையாடும் பொழுது,அவர்களுக்கு இடையில் உருவாகும் பொது ஈர்ப்பு மையமானது,அவர்களுக்கு இடையில் சம தூரத்தில் ஏற்படும். ஆனால் அந்த இருவரில் ஒருவன், அதிக எடையுடன் இருந்தால்,அப்பொழுது அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது,அதிக எடையுள்ள சிறுவனின் அருகில் ஏற்படும். இதே போன்று, சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஏற்படும், பொது ஈர்ப்பு மையமானது, (barycenter )சூரியனுக்கு அருகில் ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை, வியாழன் கிரகம் வலம் வரும் பொழுது ,அதன் சுற்றுப் பாதையானது பெரிதாக இருக்கிறது. ஆனால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பொது மையத்தை, சூரியன் வலம் வருவதால் சூரியன் சிறிய அசைவையே ஏற்படுத்துகிறது. இவ்வாறு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பால், சூரியன் ஏற்படுத்தும் அசைவானது, நடுக்கம் என்றும் வாப்ளிங் (wobbling) என்றும் அழைக்கப் படுகிறது. இதே போன்று விண்வெளியில் மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களும்,அதன் நட்சத்திரங்களில் அசைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு வேற்று கிரகங்களால் நட்சத்திரங்களில் ஏற்படும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை ஒரு வேற்று கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பது அறியப் படுகிறது. இவ்வாறு ஒரு வேற்று கிரகமானது அதன் நட்சத்திரத்தில் ஏற்படுத்தும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களைக் கண்டு பிடிக்கும் முறைக்கு வாப்ளிங் டெக்னிக் என்றும்,டாப்ளர் முறை என்றும், ரேடியல் வெலாசிட்டி முறை ( radial velocity )என்றும் அழைக்கப் படுகிறது. டாப்ளர் முறையில் நட்சத்திரங்களின் அசைவை அறிதல். சைரனை ஒலித்தபடி, நம்மை ஒரு ஆம்புலன்ஸ் நெருங்கும் பொழுது,ஒலி அலைகளின் நெருக்கத்தால், ஒலியின் அதிர்வெண் அதிகரிப்பதால், ஒலியின் சுருதி அதிகமாகிறது. அதன் பிறகு ,அந்த ஆம்புலன்சானது, நம்மை விட்டு விலகும் பொழுது, அந்த ஆம்புலன்சில் இருந்து வெளிப் படும் ஒலி அலைகளின் நெருக்கமானது, மறுபடியும் விரிவடைகிறது. அதனால் , ஒலியின் அதிர்வெண் குறைகிறது.அதனால் ஒலியின் சுருதியும் குறைகிறது. இதே போன்று, ஒரு நட்சத்திரமானது நம்மை நோக்கி நகரும் பொழுது,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளும் நம்மை நோக்கி நகரும் பொழுது, அதன் அலை நீளம் சுருங்குவதால், குறைவான அலை நீளமுள்ள நீல நிறமாக மாறுகிறது. இதே போன்று,அந்த நட்சத்திரமானது நம்மை விட்டு விலகிச் செல்லும் பொழுது,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளின் நெருக்கம் குறைகிறது. அதனால் ஒளி அலைகளின் நீளமும் அதிகரிக்கிறது. அதனால்,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியானது, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறமாக மாறுகிறது. குறிப்பாக,ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை,ஒரு நிறமாலைக் கருவியில் பார்க்கும் பொழுது,தோன்றும் நிற மாலையில்,தோன்றும் கோடுகளானது,நீல நிறத்தை நோக்கி நகர்வதன் மூலம் ,அந்த நட்சத்திரமானது ,நம்மை நெருங்குவதை,அறிந்து கொள்ள முடியும். அதே போன்று ,அந்த நிற மாலையில் தோன்றும் கோடுகளானது,சிவப்பு நிறத்தை நோக்கி நகர்வதன் மூலம்,அந்த நட்சத்திரமானது,நம்மை விட்டு விலகிச் செல்வதையும் அறிந்து கொள்ள முடியும். வேற்று கிரகங்களால் நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன? உதாரணமாக,தொலை தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒரு கிரகமானது வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அந்த நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் வரும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணாமாக, அந்த நட்சத்திரமானது,பூமியை நோக்கி சில கிலோ மீட்டர் நகரும். அப்பொழுது, அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை நிறமாலைக் கருவியில் பார்க்கும் பொழுது,அதன் அலை நீளம் குறைந்து,நிறமாலைக் கருவியில் நீல நிறத்தை நோக்கி நகரும். இதே போன்று, அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது,பூமியை விட்டு விலகி மறுபடியும் அந்த நட்சத்திரத்துக்கு பின் புறம் செல்லும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணமாக,அந்த நட்சத்திரமும் சில கிலோ மீட்டர்,பூமியை விட்டு விலகிச் செல்லும். இதனால், அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியின் அலை நீளமானது, அதிகமாவதால்,நிறமாலைக் கருவியில்,அந்த நட்சத்திரத்தின் ஒளியானது, சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. டாப்ளர் முறை என்றும் ரேடியல் வெலாசிடி என்றும் அழைக்கப் படும் , இந்த முறையில், பல நூறு வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு,நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,ஈர்ப்பின் காரணமாக அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவு மூலம்,ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் ஈர்ப்பு என்பது ஒரு விசை அல்ல என்று டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 0000 வேற்று கிரகங்களால் நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன? விண்வெளியில் இருக்கும் பல நட்சத்திரங்களை,வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.குறிப்பாக அந்த வேற்று கிரகங்களானது,அந்த நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவுகள் மூலம் அறியப் படுகின்றன. இவ்வாறு வேற்று கிரகங்களானது ,அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவுகள் மூலம்,ஈர்ப்பு என்பது ,சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று, ஒரு விசை என்பது ,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மற்ற படி,ஈர்ப்பு என்பது, சூரியனின் நிறையால் விண்வெளியானது,வளைக்கப் படுவதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில் ,ஒரு பள்ளம் உருவாகுவதாகவும், அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதாகவும்,அதனால் கிரகங்களின் பாதையானது,வளைக்கப் படுவதாகவும்,ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது,ஒரு தவறான விளக்கம்,என்பதும் ,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 விண்வெளிக்கு எல்லையே இல்லை! விண்வெளி விரிவடைந்து கொண்டு இருப்பதாக சிலர் கருதும் நிலையில் வேறு சிலர், விண்வெளியானது சுருங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இன்னும் சிலர் விண்வெளியானது விரிவடையவும் இல்லை சுருங்கவும் இல்லை இது எப்பொழுதுமே இப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறது என்றும் விண்வெளிக்கு எல்லையே இல்லை என்றும் விண்வெளிக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது நிலை இருப்புக் கொள்கை என்று அழைக்கப் படுகிறது. ஆனால் உண்மை இதுதான் என்று யாராலும் உறுதியுடன் கூற இயலாது. எட்வின் ஹப்பிள் என்பவர் பல நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிச் செல்வதைக் கூறிப்பிட்டு இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் அருகருகே இருந்திருக்க வேண்டும்,அதாவது ஒரு காலத்தில் எல்லாப் பொருட்களும் ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறினார். இந்தக் கருத்தானது பெரு வெடிப்பு என்று அழைக்கப் படுகிறது. உண்மை என்னவென்றால் பல நட்சத்திரங்கள் நம்மை நோக்கியும் வந்து கொண்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் , மகாசுருக்கம், என்று ஒரு கருத்தும் உண்டு. ஆனால் மற்ற கருத்துக்களை விட இந்தப் பெரு வெடிப்புக் கொள்கைக்கு மட்டும் ஓவரா டமாரம் அடிப்பதற்கு,இந்தக் கருத்தானது மறைமுகமாகக் கடவுள் கருத்துக்கு வழி வகுப்பதே காரணம் எனக் கூறப் படுகிறது. அதாவது ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து,அனைத்து இயக்கத்தையும் , தொடங்கி வைப்பதற்கு, ஒருவர் தேவை என்று விளக்கம் கூற வழி வகுப்பதால்,பெரு வெடிப்புக் கொள்கையை பலர் ஆதாரிக்கின்றனர் என்று கூறப் படுகிறது. விண்வெளிக்கு ஒரு உருவம் கொடுக்கும் முயற்சி கூட கடவுள் கருத்தை வலுப் படுத்துவதற்கே. மற்ற படி நிலை இருப்புக் கொள்கைப் படி விண்வெளிக்கு எல்லையே இல்லை என்பதாலும்,தொடக்கப் புள்ளி இல்லை என்பதாலும் அதனைப் படைக்க ஒருவர் தேவை இல்லை என்பதால் இந்தக் கருத்தானது பரவலாக்கப் படாமல் இருக்கிறது. 000 சனிக் கிரகத்தின் துணைக் கோள்கள் ஏன் பாதைகளை மாற்றிக் கொள்கிறது? சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம் என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக,சூரியனின் நிறையால் விண்வெளி வளைக்கப் படுவதால்,உருவாகும் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால் கிரகங்களின் பாதையானது, வளைக்கப் படுவதாகவும்,மற்ற படி ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல என்றும், ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். ஆனால் ஈர்ப்பு என்பது ஒரு விசையே என்பதை நிரூப்பிக்கும் வண்ணம்,சனி கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களின் இயக்கம் இருக்கின்றன. குறிப்பாக சனி கிரகத்தை,அந்த கிரகத்தில் இருந்து, 1,51,000 கிலோ மீட்டர் தொலைவில்,ஜானஸ் மற்றும் எபிமிதியஸ் என்று அழைக்கப் படும் இரண்டு துணைக் கோள்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இந்த இரண்டு துணைக்கோள்களின் சுற்று வட்டப் பாதைகளும் அருகருகே அமைந்து இருக்கிறது.அதாவது இந்த இரண்டு துணைக் கோள்களின் சுற்றுப் பாதைகளும் ஐம்பது கிலோ மீட்டர் இடை வெளியில் அமைந்து இருக்கிறது. இதனால் இந்த இரண்டு துணைக் கோள்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகருகே வருகின்றன. அப்பொழுது இந்த இரண்டு துணைக் கோள்களுக்கு இடையில் ஏற்படும், ஈர்ப்பு விசையின் காரணமாக,இந்த இரண்டு துணைக் கோள்களும் தங்களின் பாதைகளை மாற்றிக் கொள்கின்றன. இதே போன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அருகருகே வரும் பொழுது,மறுபடியும் தங்களின் பாதைகளை மாற்றிக் கொள்கின்றன. இவ்வாறு சனிக் கிரகத்தின் துணைக் கோள்களானது தங்களின் பாதைகளை மாற்றிக் கொள்வதன் மூலம்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 ஐன்ஸ்டீனே!சூரியன் ஏன் அசைகிறது? சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,பொருள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை செயல் படுவதால்,பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன,என்று விளக்கம் கூறினார். உண்மை என்னவென்றால், இன்று சூரியனும் கிரகங்களும் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால்,சூரியனும்,கிரகங்களும், ஒரு பொது மையத்தை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. குறிப்பாக ' பாரி செனட்டர் ' என்று அழைக்கப் படும் அந்தப் பொது மையத்தை, மையமாகக் கொண்டு, கிரகங்களைப் போலவே, சூரியனும் வலம் வருவதால்,சூரியனானது சிறிது அசைகிறது. ஆனால், இந்த உண்மைக்கு முற்றிலும் மாறாக,ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல!என்றும்,சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால், கிரகங்களின் பாதையானது,வளைக்கப் படுகிறது , என்றும் திருவாளர் ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு விளக்கத்தைக் கூறினார். நான் கேட்கிறேன். திருவாளர் ஐன்ஸ்டீன் அவர்களே! சூரியனும் கிரகங்களும் ஏன் ஒரு பொது மையத்தை சுற்றுகிறது ?என்பதற்கு, உங்களின் ‘ ஈர்ப்புக் கோட்பாட்டின் படி ‘ விளக்கம் கூற இயலுமா? 000 நியூட்டனின் விளக்கம் சரி அல்ல. நியூட்டனின் காலத்தில்,சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன?என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார். ஆனால் அந்த விளக்கமானது அவ்வளவு பொருத்தமான விளக்கமாக இருப்பதற்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ,மற்ற கிரகங்களின் ஈர்ப்பின் காரணமாக பாதிக்கப் படக் கூடியதென்றால்,மற்ற கிரகங்களின் இடப் பெயர்ச்சி காரணமாக, ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதையின் நீட்ச்சியானது, அடிக்கடி மாற வேண்டும். ,ஆனால் அவ்வாறிலாமல்,கிரகங்களானது, சூரியனை ஒரே மாதிரியான , நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று , நியூட்டன் கூறிய விளக்கமானது, சரியான விளக்கம் அல்ல. 000 நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச் சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது. The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 76 years from 1986. The gravitational pull of the major planets alters the orbital period from revolution to revolution. http://nineplanets.org/halley.html ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 கிரகங்கள் ஏன் சூரியனை, நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன? பன்னெடுங்காலமாகவே பூமியானது, தட்டை என்றே பலரும் நம்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அரிஸ்டாட்டில் பூமி ஒரு கோளம் என்று கூறினார்.ஆனாலும் அரிஸ்டாட்டில் காலத்தில்,பூமியை மையமாகக் கொண்டு சூரியன் உள்பட மற்ற கிரகங்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று நம்பப் பட்டது. ஆனால் நிகோலஸ் கோபர்நிக்கஸ் என்ற வானியல் அறிஞர்,சூரியனை மையமாகக் கொண்டே பூமி முதலான கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். ஆனால் அவரின் கருத்தை யாரும் நம்ப வில்லை.என்றாலும் அவருக்குப் பின்னால் வானத்தை ஆராய்ந்த கலிலியோ கோபர்நிகஸின் கருத்தை ஆதரித்தார். அப்பொழுது கோபர்நிகசின் கருத்தை பொய்யாக்க வேண்டும் என்று,டைகோபிராகோ என்ற ஆராய்ச்சியாளர் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக ஒவ்வொரு இரவிலும், பின்புல நட்சத்திரங்களுடன், கிரகங்கள் இருக்கும் இடங்களைக் குறித்துக் கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார். டைகோபிராகோ இறந்ததும்,அந்தக் குறிப்புகளை ஆய்வு செய்த ஜோகனாஸ் கெப்ளர்,கிரகங்கள் எல்லாம் சூரியனையே வலம் வந்து கொண்டு இருப்பதை உறுதி செய்தார். அத்துடன் கிரகங்கள் எல்லாம்,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதையும் கெப்ளர் அறிந்தார். அத்துடன் அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதையும் கெப்ளர் அறிந்தார். மேலும் சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் வேகமானது குறைவாக இருப்பதுடன்,கிரகங்களானது சூரியனை நெருங்க நெருங்க கிரகங்களின் வேகம் அதிகரிப்பதையும் அறிந்தார். ஆனாலும், கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை கெப்ளர் அறிந்திருக்க வில்லை. இந்த நிலையில், கலிலியோ ஒரு சோதனை மூலம்,அரிஸ்டாட்டிலின் விளக்கத்தை பொய்யென நிரூபித்தார். அதாவது,அதிக கனமுள்ள பொருள்கள் வேகமாகவும், குறைவான எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும், என்று, அரிஸ்டாட்டில் கூறி இருந்தார். இந்த நிலையில்,கலிலியோ,ஒரு சாய்வான மரப் பலகையின் மேல்,திண்மையான மற்றும் இலேசான மரங்களால் ஆன இரண்டு உருளைகளை உருளச் செய்தார். அந்த இரண்டு உருளைகளும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன. அதன் அடிப்டையில், வெவ்வேறு எடையுள்ள பொருட்களானது ஒரே வேகத்திலேயே விழும் ,என்று நிரூபித்து, அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய்யென நிரூபித்தார். ஆனால், பொருள்கள் ஏன் விழுகின்றன? என்று அவர் விளக்கம் கூற வில்லை. இந்த நிலையில் கிரகங்களின் இயக்கத்திற்கு கணித சமன்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த, சர் ஐசக் நியூட்டன் அவர்கள் சூரியனைக் கிரகங்கள் வலம் வருவதற்கு, ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார். இந்த நிலையில், கிரகங்கள் ஏன் சூரியனை, வட்டப் பாதையில் வலம் வராமல்,நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன?என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு,நியூட்டன், கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம், என்று விளக்கம் கூறினார். ஆனாலும் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது எதிர்பார்க்கப் பட்டதை விட மிகவும் நீண்டு இருந்தது. அத்துடன்,புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும், சூரியனை நெருங்கும் புள்ளியும், சிறிது இடம் பெயர்ந்தது. அதாவது, புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே, சூரியனை ஒரு கடிகார முள் போன்று மெதுவாகச் சுற்றியது. இவ்வாறு, புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் பெயர்வதற்கும், நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை. நியூட்டனுக்குப் பிறகு,இருநூறு ஆண்டு காலாமாக, இந்தக் கேள்விக்கு யாரும் விளக்கம் கூறாத நிலையில்,ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது, ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல,என்று ஐன்ஸ்டீன் கூறினார். அத்துடன் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதாகவும்,ஐன்ஸ்டீன் கூறினார். அந்தப் பள்ளத்துக்கு உள்ளே,கிரகங்கள் எல்லாம் வெவ்வேறு கோணத்தில் பயணம் செய்வதாகாவும்,அதனால் கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக வளைக்கப் படுகிறது என்றும் ஐன்ஸ்டீன் கூறினார். ஆனால் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. ஈர்ப்பு என்பது விசை என்று நியூட்டன் கூறிய விளக்கமே சரியான விளக்கம். குறிப்பாக, நியூட்டன் அவர்கள் ஈர்ப்பு என்பது ஒரு விசை என்றும்,பொருள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை செயல்படுவதால்,பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன, என்று கூறினார். இவ்வாறு, விண்வெளியில் பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால், அவைகள் தங்களுக்கு இடையில் இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை, மையமாகக் கொண்டு ஒன்றை ஒன்று வலம் வருகின்றன. நியூட்டனின் கூற்றுப் படி,சூரியனானது கிரகங்களை ஈர்ப்பதைப் போன்றே,கிரகங்களும் சூரியனை ஈர்க்கின்றன. இவ்வாறு சூரியனும், கிரகங்களும், ஒன்றை ஒன்று ஈர்ப்பதால்,சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையில்,பாரி செனட்டர் என்று அழைக்கப் படும்,ஒரு பொது ஈர்ப்பு மையம் உருவாகிறது. அந்தப் பொது ஈர்ப்பு மையத்தைச் சூரியனும், கிரகங்களும் வலம் வருகின்றன. ஆனால், அந்தப் பொது ஈர்ப்பு மையமானது,அதிக நிறையுள்ள சூரியனுக்கு அருகிலும்.குறைவான நிறையுள்ள கிரகங்களுக்கு தொலைவிலும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு சீசா பலகையில்,இரு புறமும்,ஒரே எடையுள்ள இரண்டு சிறுவர்கள் அமர்ந்து இருந்தால்,அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது,அந்த இரண்டு சிறுவர்களுக்கும் நடுவில் ஏற்படும். அதே நேரத்தில், அந்த இரண்டு சிறுவர்களில்,ஒருவர் அதிக எடையுடன் இருந்தால்,அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது.அதிக எடையுள்ள சிறுவனுக்கு அருகில் உருவாகும். இதே போன்று, ஒரு அளவு கோலின் பொது ஈர்ப்பு மையமானது, அந்த அளவு கோலின் மையத்தில் இருக்கும். ஆனால் ஒரு சுத்தியலின், பொது ஈர்ப்பு மையமானது, அந்த சுத்தியலில் இருக்கும், இரும்புக்கு அருகில் இருக்கும். இதே போன்று, சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது, அதிக நிறை உடைய சூரியனுக்கு அருகில் ஏற்படுவதால்,சூரியனானது அதற்கு அருகில் உள்ள மையத்தை வலம் வருவதால்,சூரியனானது சிறிய அளவிலேயே அசைகிறது. அதே நேரத்தில், சூரியனுக்கு அருகில் இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை,தொலைவில் இருக்கும் கிரகங்கள் வலம் வருவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது, பெரிதாக இருக்கிறது.அதனால் கிரகங்களானது, சூரியனையும் சேர்ந்து வலம் வருகிறது. இவ்வாறு, கிரகங்களின் ஈர்ப்பின் காரணமாகச் சூரியனில் அசைவு ஏற்படுவதன் மூலம்,ஈர்ப்பு என்பது, சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று, ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று, விண்வெளியில் இருக்கும் பல நட்சத்திரங்களை,வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு, அந்த நட்சத்திரங்களை வேற்று கிரகங்கள் வலம் வரும் பொழுது,அந்த வேற்று கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாக,அந்த நட்சத்திரங்கள் முன்னும் பின்னும் அசைகின்றன.,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அந்த அசைவுகளை, நுட்பமான கருவிகள் மூலம் அறிந்து,ஆயிரத்துக்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருகின்றனர். எனவே,ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல என்று ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான கருத்து, என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாகக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, சர்ஐசக் நியூட்டன் கூறிய விளக்கமும் தவறு. குறிப்பாகக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று விளக்கம் கூறி இருந்தார். ஆனால், கிரகங்களின் நிலையானது, ஒவ்வொரு நாளும் மாறக் கூடியது. எனவே உண்மையில் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது,நாளுக்கு நாள் மாற வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல்,கிரகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான நீள் வட்டப் பாதையில், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் , என்ற நியூட்டனின் விளக்கமும் தவறு. எனவே, உண்மையில் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன்,புதன் உள்பட எல்லா கிரகங்களும், ஒவ்வொரு முறையும், சூரியனை நெருங்கும் புள்ளியானது, சிறிது இடம் பெயர்வதற்கும் என்ன காரணம் ?என்ற கேள்வியும் எழுகிறது. எனது விளக்கம். விண்வெளியில் சூரியன் நிலையாக ஓரிடத்தில் இல்லை. குறிப்பாகச் சூரியனானது, வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில்,பால் வீதி நட்சத்திர மண்டலத்தைச சுற்றியபடி வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு, விண்வெளியில் சூரியனானது வேகமாகப் பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக மாறுகிறது. அத்துடன், விண்வெளியில் சூரியனானது, வளைவான பாதையில் சென்று கொண்டு இருப்பதால், கிரகங்களானது,ஒவ்வொரு முறையும் சூரியனை நெருங்கும் புள்ளியும்,சிறிது இடம் பெயர்கிறது. 000 நியூட்டன் பூமியின் நகர்ச்சி பற்றி குறிப்பிட வில்லை. வட்டப் பாதைக்கும் நீள் வட்டப் பாதைக்கும் ஒரே விளக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலாது.குறிப்பாக நிலவானது,ஒவ்வொரு சுற்றுக்கும்,பூமியை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் மாறுவதற்கு,பூமியின் வளைவான நகர்ச்சி முக்கிய காரணம் ஆகும்.அதே போன்று சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,பூமியின் வேகமும் மாறுகிறது.குறிப்பாக,பூமியானது சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது அதன் வேகம் அதிகரிக்கிறது,அதே போன்று ,பூமியானது ,சூரியனில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல,பூமியின் வேகமானது குறைகிறது.இந்த மாற்றங்களும் கூட நிலவின் இயக்கத்தை பாதிக்கிறது. ஆனால் நியூட்டன் பூமியின் வளைவான நகர்ச்சி பற்றி குறிப்பிட வில்லை. 000 சூரியனைக் கிரகங்கள் சுற்றி வரும் தளமானது ஏன் சாய்வாக இருக்கிறது ? அரிஸ்ட்டாடில் காலத்தில் சூரியன் உள்பட எல்லாக் கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. ஆனால் நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற ஆராய்ச்சியாளர்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். இந்த நிலையில்,கோபர் நிகசின் கூற்றை பொய்யென நிரூபிப்பதற்காக,டென் மார்க் நாட்டைச் சேர்ந்த,டைகோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர்,ஒவ்வொரு நாள் இரவிலும்,பின் புல நட்சதிரங்காளின் அடிப்படையில்,கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார். ஆனால் அந்த ஆராய்ச்சி முடியும் முன்பே அவர் இறந்து விடவே,அவரிடம் உதவியாளராகப் பணி புரிந்த ஜோகனஸ் கெப்ளர் அந்தப் பதிவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். குறிப்பாக அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். அத்துடன் சூரியனில் இருந்து கிரகங்கள் தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் நகர்சியானது மெதுவாக இருப்பதையும் கெப்ளர் அறிந்தார். அதே போன்று சூரியனை நெருங்க நெருங்க கிரகங்களின் வேகமானது அதிகரிப்பதையும் கெப்ளர் அறிந்தார். ஆனால் கிரகங்கள் எல்லாம் ஏன் அவ்வாறு சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்று கெப்ளர் அறிய வில்லை. குறிப்பாக அரிஸ்ட்டாட்டில் ,கனமான பொருட்கள் வேகமாகவும்,இலேசான பொருட்கள் மெதுவாகவும் விழும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில்,கலிலியோ,ஒரு சாய்வான மரத் தளத்தில்,இலேசான மற்றும் கனமான மரங்களால் ஆன இரண்டு உருளைகளை உருளச் செய்து,அந்த இரண்டு உருளைகளும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை சுட்டிக் காட்டி,எல்லாப் பொருட்களும் ஒரே வேகத்தில்தான் விழும் என்று நிரூபித்தார். ஆனால் பொருள்கள் ஏன் விழுகின்றன?என்று அவர் யோசிக்க வில்லை. இந்த நிலையில் சர் ஐசக் நியூட்டன்,வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்தார்.அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் செல்வதை அறிந்தார், பிறகு அந்த வால் நட்சத்திரமானது சூரியனுக்குப் பின்னால் இருந்து எழுவதையும் அறிந்தார். அதன் அடிப்படையில்,சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதை அறிந்தார். அத்துடன் கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் பாதையை சூரியனின் ஈர்ப்பு விசையானது வளைப்பதால்,அவைகள் சூரியனை சுற்றுவதை அறிந்தார். இந்த நிலையில், புதன் கிரகம், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்கள்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் பொதுத் தளத்தில் இருந்து அதிகமாக விலகி இருப்பது தெரிய வந்தது. எனவே, புதன் கிரகம், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்கள்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் பொதுத் தளத்தில் இருந்து ஏன் அதிகமாக விலகி இருக்கிறது? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பினார்கள். எனது விளக்கம். ஆனால், கிரகங்களின் நிலையானது நாளுக்கு நாள் மாறுகிறது. எனவே மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறினால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது அடிக்கடி மாற வேண்டும். ஆனால் கிரகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான நீள் வட்டப் பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு, காரணமாக இருக்க முடியாது. அத்துடன் ,புதன் கிரகமானது, சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது தள்ளிப் போனது. அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே,சூரியனைப் பூவின் இதழ்கள் போன்று, மெதுவாக சுற்றி வருகிறது. இவ்வாறு புதன் கிரகமானது, சூரியனை நெருங்கும் புள்ளியானது, ஏன் ஒவ்வொரு சுற்றுக்கும், சிறிது தள்ளிப் போகிறது?என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை. ஐன்ஸ்டீனின் தவறான விளக்கம். இந்த நிலையில்,இந்தப் புதிருக்கு ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். முக்கியமாக ஐன்ஸ்டீன் அவர்கள்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியபடி,ஒரு விசையே அல்ல என்று கூறினார். அத்துடன்,சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே, கிரகங்கள் எல்லாம் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக வளைக்கப் படுகிறது, என்று ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் தற்பொழுது,கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். எனவே ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே கிரகங்களின் இயக்கத்திற்கு ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன?என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாகச் சூரியனானது,விண்வெளியில்,வினாடிக்கு 230 கிலோ மீட்டர் (828,000 km/h) வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு விண்வெளியில் சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் தளமானது, நட்சத்திர மண்டலத் தளம் (galactic plane) என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு நட்சத்திர மண்டலத் தளத்தில்,வேகமாகப் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை,அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்களானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கோணமானது,பொதுவான கிரகங்களின் சுற்றுத் தளம் (ecliptic plane )என்று அழைக்கப் படுகிறது. ஆனால் கிரகங்கள் எல்லாம், சூரியனை, ஒரே கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாகக் கிரகங்கள் எல்லாம் சூரியனை, வெவ்வேறு கோணங்களின் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுத் தளமானது ,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில் சாய்ந்து இருக்கிறது. அதே போன்று,சூரியனை அதிகத் தொலைவில் இருந்தபடி மிகவும் பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும்,குருங்கிரகமான புளூட்டோ,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து பதினேழு டிகிரி சாய்ந்து இருக்கிறது. இதே போன்று எல்லாக் கிரகங்களின் சுற்றுத் தளங்களும், இந்தப் பொதுத் தளத்தில் இருந்து விலகி இருக்கிறது. அத்துடன் புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு முறையும் சிறிது விலகிச் செல்வதைப் போன்றே,எல்லாக் கிரகங்களும் சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம்பெயர்கிறது. அதாவது எல்லாக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைகளும்,பூவின் இதழ்களைப் போன்று சூரியனை மெதுவாக சுற்றுகிறது. இவ்வாறு கிரகங்களின் சுற்றுத் தளமானது ஏன் சூரியன் பயணம் செய்யும் தளத்துக்கு சாய்வாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று,கிரகங்களானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஏன் ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது?என்ற கேள்வியும் எழுகிறது. எனது விளக்கம். நட்சத்திர மண்டலத் தளத்தில் சூரியனானது வினாடிக்கு இருநூற்றி முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால்,கிரகங்களின் சுற்றுத் தளத்தில் சாய்வு ஏற்படுகிறது. அதாவது சூரியனை நெருங்கிய ஒரு கிரகமானது, சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது,சூரியனானது, முன்பு இருந்த இடத்தில் இருந்து, வெகு தூரம் நகர்ந்து விடுகிறது. அதனால், சூரியனை விட்டு விலகிச் சென்ற கிரகமானது, தற்பொழுது, சூரியன் புதிதாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து செல்வதால், கிரகங்களின் பாதையானது, சாய்வாக மாறுகிறது. இவ்வாறு கிரகங்களானது புதிதாக சூரியன் இருக்கும் இடத்தை நோக்கி நகர்வதால்,கிரகங்களானது சூரியனை நெருங்கும் புள்ளியும் சிறிது இடம் பெயர்கிறது. 000 நிலவின் சாய்வான சுற்றுப்பாதையை விளக்குவதற்கு புதிய கொள்கை . நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,சூரியனைச் சுற்றிச் சுழன்ற ஒரு தூசித் தட்டு மேகமானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,சூரியனும் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கும் கிரகங்களும், உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,எல்லாக் கிரகங்களும் சூரியனை ஒரே தளத்தில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால்,நிலவானது,பூமி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி கோணத்தில் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு,பூமி உருவான சிறிது காலத்தில்,செவ்வாய் கிரகத்தைப் போன்ற ஒரு கிரகமானது பூமியின் மேல் மோதியதாகவும்,அதனால் பூமியில் இருந்து பிரிந்த பாகமும், மோதிய கோளின் பாகங்களும், உருண்டு திரண்டதால், நிலா உருவாகி இருக்கலாம், என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது ‘பிரமாண்ட மோதல்’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் நிலா மற்றும் பூமியில் காணப் படும் தனிமங்களின் விகிதாச் சாரமானது ஒரே மாதிரி இருப்பது,நிலவில் இருந்து எடுத்து வரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. எனவே,பூமியின் மேல் மோதிய கிரகமானது,பூமியைப் போன்றே தனிமங்களைக் கொண்டு இருந்திருக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது. ஏனென்றால்,சூரிய மண்டலக் கிரகங்களின், தனிமங்களின் விகிதாச் சாரமானது, வெவ்வேறு விதமானது. எனவே ‘பிரமாண்ட மோதல்’கருத்த்தின் அடிப்படையில், நிலவின் தோற்றம் குறித்து, முழுமையாக விளக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் சாரா ஸ்டீவர்ட் மற்றும் டாக்டர் குக் ஆகியோர் கணிப் பொறி மாதிரி ஆய்வுகள் மூலம் சில மாற்றங்களை,பிரமாண்ட மோதல் கருத்தில் செய்து,நிலவின் தோற்றம் குறித்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதன் படி,பூமியின் மேல் மோதிய கிரகமானது முன்பு கருதியதை விடப் பல மடங்கு வேகமாக மோதியதாகவும்,அதனால்,அந்தக் கிரகமும் பூமியும் சிதறுண்டதுடன்,அதன் பாகங்களானது,நன்றாகக் கலந்து உருகிய பிறகு,அதில் இருந்து,நிலவும் பூமியும் உருவானதாக, டாக்டர் சாரா கூறுகிறார். அதனால்தான் நிலவும் பூமியும் ஒரே விதமான தனிமச் சேர்க்கையுடன் இருப்பதாக, டாக்டர் சாரா கூறுகிறார். அத்துடன் பூமியின் மேல் மோதிய கிரகத்தின் தாக்கத்தால்,பூமியின் சுழற்சியும் அதிகரித்ததாகவும்,பூமியின் அச்சிலும் எண்பது டிகிரி வரை சாய்வு ஏற்பட்டதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார். அந்தக் காலத்தில் பூமியானது ஐந்து மணி நேரத்தில் தன் அச்சில் சுற்றிக் கொண்டு இருந்தாதாகவும்,பின்னர் நிலவின் ஈர்ப்பு விசை பாதிப்பால் காலப் போக்கில் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து தற்பொழுது இருப்பதைப் போன்று இருபத்தி நான்கு மணி நேரச் சுழற்சி முறைக்கு வந்ததாகவும், டாக்டர் சாரா கூறுகிறார். அதே போன்று,ஆரம்பத்தில் நிலவானது பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும், சுழற்சியின் பொழுது, பூமி பல முறை குலுங்கியதாகவும்,அதனால் நிலவானது மெதுவாக பூமியை விட்டு விலகிச் சென்றதாகவும்,அப்பொழுது,நிலவானது பூமியின் ஈர்ப்பு விசையில் ஆதிக்கத்தில் இருந்து விலகி,சூரியனின் ஈர்ப்பு விசை ஆதிக்கம் அதிகம் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து சென்றதாகவும்,அதாவது நிலவானது தற்பொழுது இருக்கும்,இடத்திற்கு நகர்ந்து சென்றதாக, டாக்டர் சாரா கூறுகிறார். அதனால் நிலவானது,பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் இருந்து,ஐந்து டிகிரி கோணத்தில் வலம் வரத் தொடங்கியதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார். அதே நேரத்தில் பூமியின் அச்சுச் சாய்வும், எண்பது டிகிரியில் இருந்து தற்பொழுது இருப்பதைப் போன்று இருபத்தி மூன்றரை பாகை டிகிரிக்கு வந்து சேர்ந்ததாகவும், டாக்டர் சாரா கூறுகிறார். அத்துடன்,இந்தப் புதிய கருத்தானது,சூரிய மண்டலத்தின் முக்கிய அம்சங்களை விளக்குவதாக இருப்பதுடன்,நிலவின் சாய்வான சுற்றுத் தளத்தையும் விளக்குவதாக இருக்கிறது,என்று டாக்டர் சாரா கூறுகிறார். ஆனாலும், அதனாலேயே,இந்தக் கருத்தானது சரி என்பதற்கான நிரூபணம் அல்ல என்றும்,மாறாக... இது நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்றுதான் அர்த்தம் என்று டாக்டர் சாரா கூறுகிறார். (But the new theory does align with key features of our solar system, including the moon’s inclination. And Stewart says it fits with the data that we have — at least for now. “That's not a proof that our model is correct,” she notes. “It means that we think we're going in the right direction, and we are looking for tests in the model.” The next step? Testing the theory against the thermal history of the Earth and the moon. “These events that change the whole orientation of the system deposit heat in the Earth and the moon,” Stewart says. “And that's something we can look for in the rock record.”) https://www.pri.org/stories/2016-12-03/violent-collision-formed-our-moon-may-have-tilted-earth-too அத்துடன்,மேற்கொண்டு,இந்தத் தியரியை பரிசோதனை செய்ய இருப்பதாகவும், டாக்டர் சாரா கூறுகிறார். குறிப்பாக,இந்த அதி பிரமாண்ட மோதல் நிகழ்வால்,பூமியிலும், நிலவிலும்,வெப்ப விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் என்பதால்,அது குறித்த தடயங்களை ஆய்வு செய்வதற்காக,நிலவு மற்றும் பூமியில் உள்ள பாறைகளில் ஆய்வு செய்ய இருப்பதாகவும், டாக்டர் சாரா தெரிவித்து இருக்கிறார். 0000 நாசாவுக்கு ஒரு கேள்வி. பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் பூமியின் மேல் தியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நாசாவின் இணைய தளத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. https://spaceplace.nasa.gov/seasons/en/ ஆனால் பூமியைப் போலவே,புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன் ஆகிய கிரகங்களும்,அதனதன் அச்சில் சாய்ந்த நிலையிலேயே ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அப்படியென்றால் எல்லாக் கிரகங்களின் மேலும்,ஒரு கிரகம் மோதியதா? 000 நிலவானது பூமியை நீள் வட்டப்பாதையில் வலம் வருவதற்கு காரணம் என்ன? நிலவானது, பூமியை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்குக் காரணம் என்ன? எனது விளக்கம்-சூரியனை மையமாகக் கொண்ட பூமியின் நகர்ச்சி. நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வருவதற்குக் காரணம் என்ன?எனது விளக்கம்-விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் நகர்ச்சி. கிரகங்கள், சூரியனை சாய்வான தளத்தில் வலம் வருவதற்குக் காரணம் என்ன?எனது விளக்கம்-விண்வெளியில் சூரியனின் நகர்ச்சி. 000 நிலவானது, பூமியை நெருங்கும் புள்ளியானது, ஒவ்வொரு சுற்றுக்கும், இடம் மாறுவது ஏன் ? 0000 ஒன்பதாவது கிரகம் எங்கே ? சூரியனைக் கிரகங்கள் சாய்வான தளத்தில் வலம் வருவது ஏன் ? சூரியனானது தன் அச்சில் இருபத்தி நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொள்கிறது. ஆனால் சூரியனின் சுழல் அச்சானது,சூரியனை கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு, ஆறு டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கான்ஸ்டாடின் பாடிஜின்,என்ற ஆராய்ச்சியாளர்,உண்மையில் கிரகங்களின் சுற்றுத் தளத்தில் இருந்து சூரியனின் அச்சு சாய்ந்து இருக்க வில்லை,மாறாக,சூரியனின் சுழல் அச்சில் இருந்து,கிரகங்களின் சுற்றுத் தளம்தான் ஆறு டிகிரி சாய்ந்து இருக்கிறது.என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு சூரியனைக் கிரகங்கள் ஆறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருந்தபடி,சூரியனை முப்பது டிகிரி கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருக்கும் இன்னும் கண்டு பிடிக்கப் படாத ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கான்ஸ்டாடின் பேடிஜின்,கணிப் பொறி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,நெப்டியூன் கிரக அளவில் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனாலும்,கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்,நாசாவின் அகச் சிவப்புக் கதிர் தொலை நோக்கி மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அப்படி ஒரு கிரகம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக,சூரியனில் இருந்து,பத்தாயிரம் வானியல் அலகு தொலைவில், (ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு ஆகும்,அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர்)பூமியை விட தொண்ணூற்றி ஐந்து மடங்கு பெரிய அதாவது சனி கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது. அதே போன்று, சூரியனில் இருந்து,இருபத்தியாறாயிரம் வானியல் அலகு தொலைவில், பூமியை விட முன்னூற்றி பதினெட்டு மடங்கு பெரிய அதாவது வியாழன் கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,கடந்த 2005 ஆம் ஆண்டு,மைக் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர்,புளூட்டோவுக்கு அப்பால்,புளூட்டோவை விடப் பெரிய அளவில் இருந்த, ஏரிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு குறுங்கிரகத்தைக் கண்டு பிடித்தனர்.என மேலும் ஐந்து றுங்கிரகங்கள் அதே போன்று, புளூட்டோவுக்கு அப்பால்,மேக் மேக் ,ஹாவுமியா,செட்னா, 2012 VP113, என மேலும் ஐந்து குறுங்கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன் அந்த ஐந்து குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையும்,மற்ற கிரகங்களின் சுற்றுப் பாதையில் இருந்து,முப்பது டிகிரி அளவில் விலகி இருந்தது. இதற்கு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருந்தபடி சூரியனை,மிகவும் நீண்ட சுற்றுப் பாதையில்,பூமியை விடப் நான்கு மடங்கு பெரிய அளவுள்ள,அதே நேரத்தில் பூமியை விடப் பத்து மடங்கு அதிக கனமுடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்று,பேட்டிஜின் குழுவினர் காரணம் கூறுகின்றனர். ஒன்பதாவது கிரகம் என்று அழைக்கப் படும் அந்தக் கிரகத்தைக் கண்டு பிடிப்பதற்காக பேட்டிஜின் குழுவினர்,ஹவாய்த் தீவில் அமைக்கப் பட்டு இருக்கும்,சுரபு தொலை நோக்கியை சில மாதங்களாவது பயன் படுத்திக் கொள்ள அனுமதி கேட்கின்றனர். 000 ஒன்பதாவது கிரகத்தைத் தேடி... சூரியன் உள்பட அதன் கிரகங்கள் எல்லாம்,நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில்,சுழன்று கொண்டு இருந்த ஒரு தூசித் தட்டில் இருந்து உருவானதாக நம்பப் படுகிறது. குறிப்பாக சுழன்று கொண்டு இருந்த,அந்த தூசித் தட்ட்டின் பருத்த மையப் பகுதியானது,சூரியனாக உருவானதாகவும்,தட்டையான ஓரப் பகுதிகள் ஆங்காங்கே திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதன் அடிப்படையில்,சூரியனானது தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கும் அதே தளத்திலேயே,எல்லாக் கிரகங்களும் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த நிலையில்,சூரியனானது,ஆறு டிகிரி சாய்வாக சுழன்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், சூரியனானது ஆறு டிகிரி சாய்ந்து இருக்கவில்லை என்றும், மாறாக,கிரகங்களின் சுற்றுத் தளம்தான்,ஆறு டிகிரி சாய்ந்து இருக்கிறது என்று,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்களான டாக்டர் கான்ஸ்டான்டின் பேடிஜின்,டாக்டர் மைக் பிரவுன் மற்றும் அவர்களின் பட்டப் படிப்பு மாணவியான எலிசபெத் பெய்லி ஆகியோர் ஒரு புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும் கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. அத்துடன்,இவ்வாறு சூரியனைக் கிரகங்கள் எல்லாம் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,அதாவது புளுட்டோவுக்கும் அப்பால்,இருந்த படி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும், இன்னும் கண்டுபிடிக்கப் படாத, ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம், என்று டாக்டர் மைக் பிரவுன் கூறுகிறார். குறிப்பாக ஒன்பதாவது கிரகம் என்று அழைக்கப் படும் அந்தக் கிரகமானது, டாக்டர் மைக் குழுவினர், கணிப் பொறி மூலம் உருவாக்கிய மாதிரிகளின் படி,பூமியை விட நான்கு மடங்கு பெரிய அளவுடனும்,அதே நேரத்தில் பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுடன் இருக்கக் கூடும், என்று நம்பப் படுகிறது. அத்துடன், அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்திள் இருந்து விலகி, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கும் என்றும் , டாக்டர் மைக் பிரவுன் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக தூசித் தட்டுக் கருத்தின் படி நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் ஒரு பெரிய கிரகம் உருவாக வாய்ப்பு இல்லை என்று கருதப் படுகிறது. எனவே ஒன்பதாவது கிரகம் எப்படி சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் உருவானது என்ற கேள்விக்கு, டாக்டர் மைக் பிரவுன்,அந்த கிரகமானது,சூரிய மண்டலத்தின் உள் பகுதியில் உருவான பிறகு, வியாழன் கிரகத்தால் வெளித் தள்ளப் பட்டு இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். வியாழன் கிரகமானது,பூமியை விட முன்னூறு மடங்கு எடையுடனும்,சனி கிரகமானது பூமியை விட,தொண்ணூற்றி ஐந்து மடங்கு எடையுடனும் இருக்கும் நிலையில்,எப்படி பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகமானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கும் என்ற கேள்விக்கு டாக்டர்,மைக் பிரவுன்,அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,பெரிய அளவில் இருப்பதால் அந்தக் கிரகமானது மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கிறது, என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்,நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால்,புளூட்டோவைப் போலவே ஆறு குறுங் கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன் அந்தக் குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையும்,மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதும் கணிப் பொறி மாதிரிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அந்த ஆறு குறுங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதற்கு,அந்த ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும், என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று,வாசிங்டன்னில் இருக்கும் கார்னெகி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்காட் செப்பர்ட், நெப்டியூனுக்கு அப்பால் இருந்தபடி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு குறுங் கிரகத்தைக் கண்டு பிடித்தார். அந்தக் குறுங் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, வளைந்து இருப்பதற்கு,அந்தப் பகுதியில் இருக்கும் ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும் ஸ்காட் செப்பர்ட் தெரிவித்து இருக்கிறார். அதன் அடிப்படையில்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் செப்பர்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த,கனடாவில் உள்ள வானோக்கு ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜே ஜே காவேலார்ஸ்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பே இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஒன்பதாவது கிரகத்தைக் கண்டு பிடிப்பதற்காக, மைக் பிரவுன் குழுவினரும் செப்பர்ட் குழுவினரும்,நவீன தொலை நோக்கி மூலம்,அந்தக் கிரகம் இருப்பதாகக் கருதப் படும், திசையில் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அந்தத் திசையில், பெரும் பரப்பில் தேடியும் இன்னும் அந்தக் கிரகம் தென்படவில்லை. இருப்பினும் இன்னும் பத்து சதவீதம் வாய்ப்பு இருப்பதாக டாக்டர் மைக் பிரவுன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். குருங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, ஏன் மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்த்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது? சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு, அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக இருப்பதற்கு, சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம், என்று ஏற்கனவே நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன். அத்துடன்,வானில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கும், ஒரு ராட்சச மஞ்சள் நிற பலூனை (சூரியனை), காகங்கள் (கிரகங்கள்) மேல் கீழாக வட்டமடிக்க ஆரம்பித்தால்,அந்தக் காகங்களின் (கிரகங்களின்) சுற்றுப் பாதையானது, அந்த பலூன் (சூரியன்) நகர்ந்து செல்லும் திசைக்குச் சாய்வாக இருக்கும், என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில்,அதே மஞ்சள் நிற பலூனை,மேலும் சில காகங்கள்,இன்னும் சற்று தொலைவில் இருந்தபடி,பெரிய வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது எப்படி இருக்கும்? அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன், மற்ற உள் வட்டக் காகங்களின், சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கும். அதே போன்றுதான், சூரியனை அதிக தொலைவில் இருந்தபடி, வலம் வந்து கொண்டு இருக்கும், குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது. But there is a possibility that Planet Nine doesn't exist and that some other explanation accounts for the motion of objects that astronomers observe in the Kuiper Belt. Whatever the outcome, Green said, the general public will have "a front row seat" for the show.-Jim Green , Director of Planetary Science, NASA http://www.space.com/31746-planet-nine-prediction-nasa-caution.html https\://en.wikipedia.org/wiki/Planet_Nine 00000000000000000000 https\://en.wikipedia.org/wiki/Planets_beyond_Neptune 00000000000000000000 While today the astronomical community widely agrees that Planet X, as originally envisioned, does not exist, the concept of an as-yet-unobserved planet has been revived by a number of astronomers to explain other anomalies observed in the outer Solar System.[5] As of March 2014, observations with the WISE telescope have ruled out the possibility of a Saturn-sized object (95 Earth mass) out to 10,000 AU, and a Jupiter-sized (~318 Earth mass) or larger object out to 26,000 AU.[6] https\://en.wikipedia.org/wiki/Planets_beyond_Neptune சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,நெப்டியூன் கிரக அளவில் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனாலும்,கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்,நாசாவின் அகச் சிவப்புக் கதிர் தொலை நோக்கி மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அப்படி ஒரு கிரகம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக,சூரியனில் இருந்து,பத்தாயிரம் வானியல் அலகு தொலைவில், (ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு ஆகும். அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர்) பூமியை விட தொண்ணூற்றி ஐந்து மடங்கு பெரிய அதாவது சனி கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது. அதே போன்று, சூரியனில் இருந்து,இருபத்தியாறாயிரம் வானியல் அலகு தொலைவில், பூமியை விட முன்னூற்றி பதினெட்டு மடங்கு பெரிய அதாவது வியாழன் கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது. 0000 கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ஒன்பதாவது கிரகம் காரணமா? கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ,ஒன்பதாவது கிரகம் காரணமா? கிரகங்கள் எல்லாம் சூரியனைச் சற்று சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம் என்று நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில்,கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ,சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில்,இருப்பதாக நம்பப் படும் ஒன்பதாவது கிரகமே காரணம் என்று ,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.பல ஆராய்ச்சியாளர்கள் ,அதைத் தேடும் பணியிலும் ஈடு பட்டு இருக்கின்றனர். Planet Nine may have tilted the other planets over the lifetime of the solar system," said study lead author Elizabeth Bailey, an astrophysicist and planetary scientist at the California Institute of Technology in Pasadena. https://www.space.com/34448-planet-nine-solar-system-tilt.html ஆனாலும் அந்த ஆராய்ச்சியாளர்கள், 'கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு வேறு சில முக்கியமான காரணங்களும் இருக்கலாம்' என்றும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. Bailey did note that there are other potential explanations for the tilt of the solar system. 0000 தூசித் தட்டுக் கொள்கைக்கு முரணாக இருக்கும் வேற்றுக் கிரகங்கள். கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன? ஒரு நட்சத்திரத்தின் வாயுமண்டலமானது இன்னொரு நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின் மையக் கோளம் மட்டும் எஞ்சிய நிலையில் கிரகமாக உருவாகிறது. -------------- புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுற்றுப் பாதைகளானது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நமது சூரிய மண்டலம் போன்று விண்வெளியில் வேற்று கிரகங்கள் இருக்கக் கூடும் என்று நம்பப் பட்டு தேடப் பட்டது. அத்துடன்,கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில்,நமது சூரியக் குடும்பத்தை மாதிரியாக வைத்து,ஒரு கருத்து உருவாக்கப் பட்டது. அதன் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் சாண்டர் வோல்சான் என்பவர்,ஒரு வேற்று கிரகத்தைக் கண்டு பிடித்தார். ஆனால் அவரின் கண்டு பிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஏனென்றால் வோல்சான் கண்டு பிடித்த கிரகமானது நமது சூரியனை விட பல மடங்கு வெப்பமான கதிர் வீச்சை வெளியிடக் கூடிய நட்சத்திரமாக இருந்தது. அத்துடன் அந்தக் கிரகமானது,அந்த அதிவெப்ப நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாகவும் வலம் வந்து கொண்டு இருந்தது. எனவே எப்படி ஒரு கிரகம் ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு மிக அருகில் உருவானது?முக்கியமாக எப்படி அந்த கிரகமானது அதிவெப்பச் சூழலில் ஆவியாகாமல், அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தன. இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி.அந்த அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு வைரப் படிகங்களால் ஆனா வைரக் கிரகங்களாக இருக்கும் என்று விளக்கம் கூறி இருந்தார். ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் எப்படி வைரம் உருவாக முடியும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்,விண்வெளியில் பல நட்சத்திரங்கள், அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் வாயு மண்டலத்தை, ஆவியாக்கிக் கொண்டு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அத்துடன்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய அளவில் ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் நான்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தேன். குறிப்பாக எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களை அதி வெப்ப நட்சத்திரங்கள் கவர்ந்து இழுத்து அதன் வெளிப் பகுதி வாயு மண்டலத்தை ஆவியாக்கி விடும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகங்களானது,வைரக் கிரகங்களாக அதி வெப்ப நட்சத்திரங்களை வலம் வருகின்றன என்று விளக்கம் கூறி இருந்தேன். அதன் அடிப்படையில்,நமது பூமி உள்பட,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் மற்றும் அந்தக் கிரகங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் துணைக் கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான பிறகு,சூரியனின் ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப் பட்ட பொழுது,அதன் வெளிப் பகுதியில் இருந்த வாயுக்களானது விண்வெளியில் விசிறியடிக்கப் பட்ட பிறகு தற்பொழுது கிரகங்களாகவும் துணைக் கிரகங்களாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில்,புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்கள் எல்லாம்,ஆராய்ச்சியாளர்களின் எதிர் பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. ஏனென்றால்,ஆராய்ச்சியாளர்கள் தூசித் தட்டுக் கருத்தை நம்புகின்றனர். குறிப்பாக அந்தக் கருத்தின் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதன் படி,சூரியன் அதாவது மைய நட்சத்திரமானது சுழன்று கொண்டு இருக்கும் அட்சிற்கு இணையாக, கிரகங்கள் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுடன் அதே திசையில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாகப் பல வேற்று கிரகங்கள் இருக்கின்றன, அந்த வேற்று கிரகங்களின் சுழற்சிக்கு உரிய விளக்கத்தைக் கூற இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். உதாரணமாக,நமது சூரிய மண்டலத்திலேயே,வெள்ளி கிரகமானது,சூரியன் சுற்றிக் கொண்டு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருக்கிறது. அதாவது வெள்ளி கிரகமானது,பூமி உள்பட மற்ற கிரகங்களைப் போல் அல்லாது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி சுழன்று கொண்டு இருக்கிறது. இவ்வாறு வெள்ளி கிரகமானது,சூரியனின் சுழற்சி திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் வெள்ளி கிரகத்தின் மேல் ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நம்பப் படுகிறது. ஆனால் எனது கருத்தின் படி வெள்ளிக் கிரகமானது சூரியனால் ஈர்க்கப் பட்ட ஒரு கிரகம்,எனவே வெள்ளிக் கிரகமானது எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழன்று கொண்டு இருக்கலாம். உதாரணமாகக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை ஒரு கயிற்றின் உதவியுடன் மேலே இழுக்கும் பொழுது,அவன் வலப் புறமாகவோ அல்லது இடப் புறமாகவோ சுழன்றபடி மேலே வரலாம். அதே போன்று,சூரியனால் ஈர்க்கப் பட்ட கிரகமும்,எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழன்றபடி சூரியனைத் தொடரலாம். குறிப்பாகத் தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,ஒரே அமைப்பாக உருவாகி,ஆரம்பத்தில் இருந்தே சூரியனுடன் இருப்பதாக நம்பப் படுவதால் சூரிய மண்டலத்தை சூரியக் குடும்பம் (solar family) என்றும் , சூரிய அமைப்பு (solar system )என்றும் அழைக்கப் படுகிறது. ஆனால் எனது கருத்தின் படி சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,அவ்வப் பொழுது,சூரியனால் ஈர்க்கப் பட்டதால் சூரியனுடன் சேர்ந்து கொண்டது. எனவே எனது கருத்தை ,இணைக்கப் பட்ட (solar assembly )அல்லது திரட்டப் பட்ட, கிரக மண்டலம் என்று அழைக்கலாம். குறிப்பாக சூரியனின் பயணத்தின் பொழுது,சூரியனுக்கு அருகில் வந்ததால் சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்,எனவே எல்லாக் கிரகங்களும் சூரியனின் சுழல் திசைக்கு இணையாக சுழல வேண்டும்,வலம் வர வேண்டும், என்ற அவசியம் இல்லை. அதே போன்று,தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரியனின் மையப் பகுதிக்கு இணையான தளத்திலேயே (equator),எல்லாக் கிரகங்களும் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக,சூரியனால் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் ஒவ்வொன்றும்,சூரியனின் மையப் பகுதிக்கு (equator),முரணான கோணத்தில் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகமானது,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,ஏழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதே போன்று,சூரியனுக்கு தொலைவில் இருக்கும் புளூட்டோவானது, சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு சூரிய மண்டலக் கிரகங்களானது,சூரியனைச் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனாலும் இன்று அந்தக் கிரகமானது கண்டுபிடிக்கப் படவில்லை. இந்த நிலையில்,புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுழற்சியும்,சுற்றுப் பாதையும் கூட,ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. உதாரணமாகக் கடந்த 1995 ஆம் ஆண்டு,முதன் முதலாக நமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருந்த வேற்று கிரகத்தைத் தொலை நோக்கியில் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்,51 –b பெகாசிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாக அதாவது,சூரியனை புதன் கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் தொலைவைக் காட்டிலும்,எட்டு மடங்கு குறைவான தொலைவில்,அதன் நட்சத்திரத்தை,நான்கு நாட்களுக்கு ஒரு முறை என தலை தெறிக்கும் வேகத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. குறிப்பாக அந்தக் கிரகமானது நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் வியாழன் போன்ற கிரகத்தின் அளவுடனும்,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்ததால் அதிக வெப்பத்துடனும் இருந்தது. எனவே அந்தக் கிரகமானது வெப்ப வியாழன் என்று அழைக்கப் பட்டது. பின்னர் இதே போன்று பல நட்சத்திரங்களை வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. தூசித் தட்டுக் கருத்தின் படி,அந்த அளவுக்கு, ஒரு நட்சத்திரத்திற்கு அருகில்,தூசிகள் மற்றும் வாயுக்கள் இருக்கவோ அவைகள் திரண்டு ஒரு கிரகமாக உருவாகவோ சாத்தியமில்லை. எனவே,வெப்ப வியாழன்கள் அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவில் உருவாகிய பிறகு,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று கருதப் பட்டது. இந்தக் கருத்தானது இடப் பெயர்ச்சி கொள்கை (migration theory ) என்றும் அழைக்கப் படுகிறது. ஏன் இவ்வாறு கிரகங்கள் இடம் பெயர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம்,ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் சுழன்று கிரகமான உருவான பொழுது,அந்தத் தூசித் தட்டின் சுழற்சி வேகத்தில்,சுருங்கிய பொழுது, வெப்ப வியாழன்களானது,அதன் நட்சத்திரத்தை நோக்கி இடம் பெயர்ந்தது என்று,நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,வெப்ப வியாழன்களானது,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு இணையாக,அதன் நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும். இந்த நிலையில்,பூமியில் இருந்து 568 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று பத்து மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,மூன்றரை நாளுக்கு ஒரு முறை,சுற்றி வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. xo-3 b என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 37 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை வெப்ப வியாழன்களின் இடப் பெயர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் தெரிவிக்க இயலவில்லை. இதே போன்று, பூமியில் இருந்து ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று ஒன்றரை மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,இரண்டு நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. HAT-P-7, என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 180 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு ஆய்வில்,இதே கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 86 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது, HAT-P-7, கிரகமானது,தூசித் தட்டுக் கருத்திற்கு முற்றிலும் முரணாக, அதன் நட்சத்திரத்தின், துருவத்திற்கு இணையாக,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,அந்தக் கிரகங்களை வேறு ஒரு கிரகமானது மோதித் தள்ளி முரணான சுற்றுப் பாதைக்குத் தள்ளி இருக்கலாம் என்று கருதப் பட்டது. இந்த நிலையில் பல வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை,அந்த நட்சத்திரங்களின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்திருப்பது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுநாள் வரை நமது சூரியமண்டலமானது பொதுவான மாதிரியாகவும்,மற்ற வேற்றுக் கிரகக் குடும்பங்கள் எல்லாம்,வித்தியாசமான அமைப்பாகவும் கருதப் பட்டது. இந்த நிலையில், தற்பொழுது,கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களில் பல வேற்றுக் கிரகங்களானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்து இருக்கிறது. எனவே ,தற்பொழுது மற்ற வேற்று கிரகங்களானது பொதுவான அமைப்பாகவும், நமது சூரியக் குடும்பமானது, வித்தியாசமான அமைப்பாகவும் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். Highly inclined planets To date, astronomers have measured the orbital inclinations of 91 exoplanets and more than a third (36) move on orbits that are significantly misaligned, tilted by more than 20 degrees. Nine of them move on retrograde orbits. http://theconversation.com/stars-with-planets-on-strange-orbits-whats-going-on-56511 However, about one in three exoplanets' orbits are "misaligned." Some orbit in the opposite directions as their stars' rotations, and others are tilted out of the ecliptic, like weather satellites crossing over Earth's Poles rather than the Equator. http://news.nationalgeographic.com/news/2011/02/110222-planets-formation-theory-busted-earth-science-space/ A research team led by astronomers from the University of Tokyo and the National Astronomical Observatory of Japan (NAOJ) has discovered that inclined orbits may be typical rather than rare for exoplanetary systems. http://astronomy.com/~/link.aspx?_id=ac94da25-993c-47f2-85cd-05a496696e99 “We had thought our solar system was typical in the universe, but from day one everything has looked weird in the extrasolar planetary systems. That makes us the oddball really. Learning about these other systems provides a context for how special our system is. We certainly seem to live in a special place.” – Frederic A. Rasio http://www.universetoday.com/85585/the-flip-side-of-exoplanet-orbits/ ஆனால் எனது ஈர்க்கப் பட்ட கிரகங்களின் கருத்தின் படி,மைய நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமாக வியாழன் போன்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பததும்,அதே போன்று,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சில் இருந்து,வேறு கோணத்தில் வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பதும்,நிகழக் கூடிய ஒன்றே. ஏனென்றால் எனது கருத்தின் படி, சூரிய மண்டலத்தின் கிரகங்கள் எல்லாமே சூரியனால் ஈர்க்கப் பட்டவைகளே. அதாவது சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் வழியில்,அக்கம் பக்கமாகச் சென்று கொண்டு இருந்த எரிந்து முடிந்த நிலையில் இருந்த நட்சத்திரங்களையே சூரியன் ஈர்த்து இருக்கிறது. எனவே எந்தத் திசையில் இருந்தும் கிரகங்களானது ஈர்க்கப் பட சாத்தியம் இருக்கிறது. 000 நட்சத்திரக் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் ! நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,அதிக எண்ணிக்கையில், கிரகங்கள் காணப் படுவது, அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பூமியில் இருந்து மூவாயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்கும், என் ஜி சி 6811 என்று அழைக்கப் படும் நட்சத்திரக் கூட்டத்துக்கு மத்தியில்,நெப்டியூன் கிரகத்தின் அளவில் இருக்கும், இரண்டு கிரகங்களை,ஹார்வர்ட் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் சோரென் மெய்பாம் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும்,கெப்ளர் 66 என்று பெயரிடப் பட்ட நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகத்துக்கு, கெப்ளர் 66 - பி என்றும், அதே போன்று, கெப்ளர் 67 என்று பெயரிடப் பட்ட நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகத்துக்கு, கெப்ளர் 67 –பி,என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த இரண்டு நட்சத்திரங்களும், அதனதன் நட்சத்திரங்களை,முறையே, பதினேழு,மற்றும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு கிரகங்களும், அதன் நட்சத்திரங்களுக்கும், பூமிக்கும் இடையில் வந்ததன் காரணமாக,குறிப்பிட்ட கால இடைவெளியில்,ஏற்பட்ட, ஒளிக் குறைவை, நுட்பமாக அளந்ததன் அடிப்படையில், (Transit method) கண்டு பிடிக்கப் பட்டன. இதே போன்று,பூமியில் இருந்து,இரண்டாயிரத்தி ஐநூறு ஒளியாண்டு தொலைவில்,இருக்கும்,மெஸ்சியர்-67,என்று அழைக்கப் படும்,நட்சத்திரக் கூட்டத்திலும்,மூன்று நட்சத்திரங்களை,வியாழன் கிரகம் போன்ற மூன்று கிரகங்கள்,வலம் வந்து கொண்டு இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்த மூன்று கிரகங்களும், ஈர்ப்பு விசையின் காரணமாக, அதன் நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில்,ஏற்படுத்திய, சிறிய அளவிலான அசைவை நுட்பமாக அளந்ததன் அடிப்படியில்,(wobble method) கண்டு பிடிக்கப் பட்டன. இந்த ஆய்வானது, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரோபெர்டோ சாகிலா தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. குறிப்பாக, மெஸ்சியர் நட்சத்திரக் கூட்டத்தில்,ஐநூறுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில், டாக்டர் சாகிலா குழுவினர்,நமது சூரியன் போன்று இருக்கும் அறுபத்தி ஆறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில், இந்த மூன்று கிரகங்களும் கண்டு பிடிக்கப் பட்டன. இதன் அடிப்படையில்,நட்சத்திரக் கூட்டத்தில்,ஐந்து சதவீத நட்சத்திரங்களைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக, டாக்டர் சாகிலா தெரிவித்து இருக்கிறார். ஆனால் கூட்டமாக இல்லாமல், தனியாக இருக்கும் நட்சத்திரங்களில்,ஒரு சதவீத நட்சத்திரங்களையே,வியாழன் போன்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நட்சத்திரக் கூட்டங்களில் கிரகங்கள்,அதிக எண்ணிக்கையில் இருப்பது, ஏன் ஆச்சரியமாகப் பார்க்கப் படுகிறது? தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது. அதே போன்று, சூரியனில் இருந்து அதிக தொலைவில் வெப்பம் குறைவாக இருப்பதால்,அந்தப் பகுதியில், அதிக அளவில் தூசிகளும் வாயுக்களும்,இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும் பெரும் அளவில் திரண்டதால், வியாழன்,சனி போன்ற, பெரிய அளவிலான வாயுக் கோள கிரகங்கள், உருவானதாக நம்பப் படுகிறது. இந்த முறையில், கிரகங்கள் உருவாக நீண்ட காலம் ஆகும் என நம்பப் படுகிறது.எனவே இந்த முறையானது, ஆமை முறை என்று அழைக்கப் படுகிறது. இந்த முறையில், கிரகங்கள் உருவாக குறைந்த பட்சம், ஒரு கோடி முதல் பத்து கோடி ஆண்டுகள் ஆகலாம், என்று நம்பப் படுகிறது. ஆனால், கடந்த அறுபது ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில்,நமது பால் வீதி நட்சத்திர மண்டலத்தில் மட்டும் பில்லியன் கணக்கில் கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கிரகங்களானது விண் வெளியில்,அடிக்கடி நிகழக் கூடிய, மிக இயல்பான,செயல் முறை மூலம் உருவாகலாம், என்று தற்பொழுது நம்பப் படுகிறது. எனவே,வியாழன் ,சனி போன்ற பெரிய அளவிலான வாயுக் கோளங்களானது ,காலப் போக்கில் உருண்டு திரண்டு உருவாகுவதற்குப் பதிலாக,தூசி மேகங்களில் ,ஈர்ப்பு விசையில், திடீரென்று சம நிலைக் குலைவு ஏற்பட்டு, குறைந்த கால கட்டத்தில்,உருவாகலாம் என்றும் நம்பப் படுகிறது. ஆனால், இந்த இரண்டு முறையிலும், கிரகங்கள் உருவாக, அமைதியான சூழல் தேவை, என நம்பப் படுகிறது. உதாரணமாக, நமது சூரியனானது மற்ற நட்சத்திரங்களில் இருந்து மிக தொலைவில் இருக்கிறது.குறிப்பாக நமது சூரியனுக்கு அருகில் இருக்கும்,நட்சத்திரமானது,நான்கு ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. இந்த நிலையில், விண்வெளியில்,நட்சத்திரங்கள் அருகருகே இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,இருக்கும் நட்சத்திரங்களை,வியாழன் போன்ற அளவில் இருக்கும் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது,ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது,விண்வெளியில்,நமது சூரியன் போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் பகுதியை விட,நூறு மடங்கு குறைவான இடப் பகுதியில்,நட்சத்திரக் கூட்டங்களில் இருக்கும்,நட்சத்திரங்கள் இருக்கின்றன. எனவே,இது போன்ற நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், அதிக அளவில் வெப்பம் நிலவும்.அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டு காலத்தில்,நட்சத்திரங்களானது வயது முதிர்ந்து வெடிக்கும் சூழலும் ஏற்படும். அத்துடன், ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் மற்ற நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையும் அதிகமாக இருக்கும். எனவே, இது போன்ற இட நெருக்கடி நிலவக் கூடிய,இடங்களில் எப்படி தூசிகளும் வாயுக்களும் திரண்டு கிரகங்களாக உருவாகின? என்பது விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது. ஆனால் இந்தக் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், கிரகங்கள் எல்லாம்,நட்சத்திரங்களுக்கு உள்ளே நடைபெறும் அணுக் கரு வினையால் உருவாகும்,ஆக்சிஜன்,கார்பன்,சோடியம், சிலிக்கன்,பொட்டாசியம்,குளோரின் போன்ற கனமான வாயுக்களின் சேர்க்கையால் உருவாகுகின்றன. இந்த நிலையில் இருக்கும் நட்சத்திரத்தின், வெளிப் பகுதியில் இருக்கும் வாயுக்களானது,அருகில் இருக்கும்,நட்சத்திரத்தின் வெப்பத்தால்,ஆவியாகும் பொழுது,ஆவியாக்கப் படும் நட்சத்திரத்திற்கு உள்ளே உருவான கிரகங்களானது, அருகில் இருக்கும் நட்சத்திரத்தை வலம் வரத் தொடங்குகின்றன. எனவேதான், அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,இருக்கும் நட்சத்திரங்களுக்கு அருகில், அதிக எண்ணிக்கையில், கிரகங்கள் உருவாகி இருக்கின்றன. 000 எனது பூமிப் பந்தின் புதிர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள். எழுபது பூமி எடையுள்ள கிரகம். பூமியில் இருந்து 250 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 149026 என்ற நட்சத்திரத்தின் ஒளி 2.87 நாளுக்கு ஒரு முறை பூமிக்கு வருவதில் இருந்து 0.3 % மறைக்கப் படுகிறது. இந்த ஒளி மறைவின் மூலமாக ஒரு வால் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தை வலம் வருகிறது என்று தெரிகிறது. அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில்,எழுபது பூமி எடையுள்ள திட மையம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தூசித் தட்டில் உள்ள தூசிகள் ஒன்று திரண்டு உருவாகும் முறையின் மூலமாக பத்து பூமி எடையுள்ள கிரகம் மட்டுமே உருவாக வாய்ப்புகள் இருப்பதாகக் கணினி மாதிரிகள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க எழுபது பூமி எடையுள்ள திட மையத்தைக் கொண்ட வால் நட்சத்திரக் கிரகம் எப்படி உருவாக முடியும்? எனவே நிச்சயமாக இந்த வால் நட்சத்திரக் கிரகம் மற்றொரு நட்சத்திரத்தால் கவர்ந்திழுக்கப் பட்டு வாயுக்கள் ஆவியாகிக் கொண்டு இருக்கும் ஒரு நட்சதிரமேயாகும். நம்முடைய வியாழன் கிரகத்தின் மத்தியில் மூன்று பூமி எடையுள்ள திட மையம் இருப்பதாக காசினி செயற்கைக் கோள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வியாழன் கிரகத்தைச் சுற்றியுள்ள அதிக அளவுள்ள வாயுக்களை அது கவர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பத்து பூமி எடையுள்ள திட கோளம் அதற்குள் இருக்க வேண்டும். எனவே வியாழன் கிரகமும் எரிந்து முடிந்த நட்சதிரமே ஆகும். ஹெச் டி 149026 என்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள். இந்தக் கிரகம் சூரியனை பூமி சுற்றி வரும் தூரத்தைக் காட்டிலும் இருபத்தி ஐந்து மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வருகிறது.இது போன்ற கிரகங்கள் உருவாகும் என்பதற்கு எங்களிடம் மாதிரிகள் இல்லை. -கிரெக் லாகின்,கலிபோர்னியா பல்கலைக் கழகம்,நியூ சயின்டிஸ்ட் வலை தளம். ஈர்ப்பு விசை சம நிலை சீர் குலைவு எழுபது பூமி எடையுள்ள கிரகம் பெரிய வாயு மேகங்களுடைய ஈர்ப்பு விசையின் சம நிலை திடீரென்று சீர் குலைந்து கிரகங்கள் உருவாகும் கொள்கையின் படி உருவாகி இருக்க முடியாது. -கிரெக் ஹென்றி,ஆராய்ச்சியாளர்,சயின்ஸ் டெய்லி. இவ்வாறு ஒரு கிரகம் உருவாகக் கூடும் என்று எந்தக் கொள்கையும் கூற வில்லை. -புனி சாட்டோ,டாக்டரேட் ஆராய்ச்சியாளர்,ஒக்கேயாமா பல்கலைக் கழகம் ஜப்பான்,ஸ்பேஸ் டெய்லி வலைத் தளம். தூசித் தாத்தில் சமநிலை சீர் குலைவு ஏற்படுவது ஒன்றும் பிரச்சினை இல்லை,ஆனால் போதுமான அளவுக்கு சமநிலைச் சி குலைவு ஏற்படுவது கடினம்,மிகவும் நிலையற்ற தூசித் தட்டு கிரகங்களை உருவாக்கும், ஆனால் அதற்கு தூசித் தட்டு அசாதாரணமான அளவில் இருப்பதுடன் திடீரென்று குளிர்ச்சி அடையாவும் வேண்டும்.தூசித் தட்டில் சமநிலை சீர் குலைவு சரியா என்று தெரிய வில்லை. -ஜாக் லிசாயர்,நாசா ஆராய்ச்சியாளர், ஸ்பேஸ் டாட் காம் வலைத் தளம். ஆலன் பாஸ் மற்றும் ஜாக் லிசாயர் இருவரும் தூசித் தட்டு சமநிலையில் சீர் குலைவு மற்றும் தூசித் தட்டில் தூசிகள் திரளுதல் ஆகிய இரண்டு முறைகளையும் இணைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.இந்த முறை பல பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று கருதுகிறார்கள். ஆனால் ஒரு கார் அளவுப் பாறை எப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும்? ஆகவே இது கிரகங்களை வேகமாக உருவாக்கும் என்று அவர்கள் கருதவில்லை. முக்கியமாக வியாழன் சனி போன்ற கிரகங்களின் மத்தியில் இருக்கும் சிறிய மையக் கோளம் எப்படி வேகமாக அதிக அளவு வாயுக்களுடன் உருவானது என்ற சிக்கலை அவர்கள் தீர்க்க வில்லை. நமது நட்சத்திர மண்டலத்தில் இருபதாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன.கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம். -ஜியா பிரி மார்சி. ஒரு வானம் இரண்டு சூரியன்கள். பெரிய நட்சத்திரங்களின் வெப்பக் கதிர் வீச்சால் ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓர் அதிசய கிரக அமைப்பு விளங்குகிறது. பூமியில் இருந்து 45 ஒளி வருட தொலைவில் நமுடைய சூரியனைப் போன்ற இரட்டை நட்சத்திரங்கள் நெருக்கமாக இருக்கின்றன.அவை காமா செபி என்று குறிப்பிடப் படுகின்றன. வியாழன் கிரகத்தை விட 1.76 மடங்கு பெரிய வாயுக் கோள கிரகம் ஒன்று இந்த இரண்டு நட்சத்திரங்களையும் சூரியனையுரேனஸ் வலம் வந்து கொண்டு இருக்கும் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இரண்டு நட்சத்திரங்கள் நெருக்கமாக இருக்கும் அதி வெப்ப சூழ்நிலையில் இக்கிரகம் அமைந்து இருக்கிறது. அதி வெப்ப இந்த கிரகம் இருக்கிறது எனவே கவர்ந்திழுக்கப்பட்டு ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்கள்தான் கிரகமாகி வலம் வருகிறது என்பகாற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இந்த கிரக அமைப்பும் இருக்கிறது. ஒரு வானம் மூன்று சூரியன்கள் பூமியில் இருந்து 149 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 188753 என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் மிகவும் நெருக்கமாக மூன்றரை நாளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த கிரகம் சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் வேறொரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொண்டு இருக்கின்றன.இந்த இரட்டை நட்சாதிரங்கள் சூரியனை சனி-யுரேனஸ் கிரகங்கள் சுற்றி வரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 வருடத்துக்கு ஒரு முறை சுற்றுகிறது. இந்த கிரக மைப்பை ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி சர்க்கஸ் என்று அழைக்கின்றனர். மேலும் இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன.பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன. எனவே இந்த வாயுக் கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும். மேலும் மூண்று சூரியன்களும் மஞ்சள்,சிவப்பு மற்றும் ஆராஞ்சு என்று வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சியளிக்கும். தினமும் மூன்று முறை சூரிய உதயங்களும் அஸ்தமனங்களும் நிகழும்.அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மூன்று நட்சத்திரங்களின் வெப்பக் கதிர்வீச்சு இருக்கும் இந்த சூழ் நிலையில் எந்த தூசி மண்டலமும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் பிரதான நட்சத்திரத்தை வாயுக் கோள கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதோடு சற்று தொலைவில் கிரகங்களைப் போல் நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருப்பதால் நட்சத்திரங்கள்தான் இறுதியில் கிரகங்கள் ஆகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகிறது. மைய நட்சத்திரத்துக்கும் அதை வலம் வந்து கொண்டு இருக்கும் இரட்டை நட்சத்திரத்துக்கும் இடையில் உள்ள தூரம்,சூரியனுக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் உள்ள தூரமே என்பதே இந்தக் கிரக அமைப்பில் இருக்கும் வினோதம் ஆகும். இதைப் போன்ற நட்சத்திர அமைப்புகள் பல இருந்தாலும் மூன்று நட்சத்திரங்களின் நடுவில் ஒரு கிரகமும் மாடிக் கொண்டு இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ஆனால் இந்தக் கிரக அமைப்பில் மைய நட்சத்திரத்திலிருந்து தொலைவில் இரட்டை நட்சத்திரங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதால்,அந்த இடத்திலும் ஒரு வாயுக் கோள கிரகம் உருவாக சாத்தியம் இல்லை. எனவே நட்சத்திரத்திலிருந்து வெகு தூரத்தில் வாயுக் கோள கிரகங்கள் உருவாகி நட்சத்திரத்தை நெருங்குகிறது என்ற கருத்தும் அடிபட்டுப் போகிறது. ஹெச் டி 188753 கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள். மூன்று நட்சத்திரங்கள் உள்ள அமைப்பில் ஒரு வாயுக் கோள கிரகம் உருவாகி இருப்பது புதிராக இருக்கிறது. காரணம் மற்ற இரண்டு நட்சாதிரங்காளின் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் மைய நட்சத்திரத்தின் அருகே ஒரு கிரகம் உருவாகுவதைத் தடுக்கும். மேலும் கிரகத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் தற்போதைய கொள்கை இதைப் போன்ற பல நட்சத்திர அமைப்பில் கிரகங்கள் உருவாக இயலாது என்று கூறுகிறது. இதைப் போன்ற ஒரு வெப்ப வியாழன் கிரகம் ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தற்போது இதைப் போல இருபது ராட்சத வாயுக் கோள கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதைப் போன்ற கிரகங்கள் நட்சத்திரத்தின் அருகே அதாவது சூரியனை பூமி வலம் வரும் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு தொலைவில் உருவாகலாம் என்று கருதப் படுகின்றன. அங்குதான் வெப்ப நிலை குறைவாக இருப்பதால் பனிக் கட்டிகள் தூசிகள் திரண்டு பூமி போன்ற கிரகங்கள் உருவாகி பிறகு இக்கிரகம் அங்கிருக்கும் வாயுக்களைக் கவர்ந்து வியாழன் போன்ற கிரகங்களாக உருவாகும். -மாசெய்ஜ் கொனக்சி, டாக்டரேட் ஆராய்ச்சியாளர்,கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலாஜி,பிளானெட்டரி ஆர்க் இணையதளம். ராட்சத வாயுக் கோள கிரகங்களின் தோற்றத்தைப் பற்றி நாம் புரிந்து கொண்டவைகளைப் பரிசோதித்துப் பார்க்க இது மற்றொரு வித்தியாசமான அமைப்பு. மைய நட்சத்திரத்தை வலம் வரும் இரட்டை நட்சதிரங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன. இந்த இரட்டை நட்சத்திரங்கள் மைய நட்சத்திரத்தை, சூரியனை பூமி சுற்றி வரும் தொலைவைக் காட்டிலும்,ஆறு மடங்கு அந்த நட்சத்திரத்தை நெருங்கிப் பிறகு விலகிச் செல்கிறது. இதனால் மைய நட்சத்திரத்துக்கு அருகே அதாவது சூரியனை பூமி சுற்றி வரும் தூரம் வரை தூசி மண்டலம் நிலையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்த இடத்தில் தூசி மண்டலமும் அதிக அடர்த்தியாக இல்லை.அதிக வெப்ப நிலையும் நிலவுகிறது. -ஆலன் பாஸ்,கிரகங்களின் தோற்றத்தை ஆராய்பவர் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய தலைவர். ராட்சத கிரகமா? இடை நிலை நட்சத்திரமா? ஹெச் டி 168443 என்ற ஒரு நட்சத்திரத்தை ஹெச் டி 168443 -பி என்ற பெரிய ராட்சத வாயுக் கோள கிரகம் ஒன்று மிகவும் குறுகிய சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஒப்பிட்டுப் பார்த்தால்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகம் சூரியனை ஆறு கோடி கி மீ தொலைவில் எண்பத்தி எட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது. ஆனால் அந்தக் கிரகம் அதன் நட்சத்திரத்தை நான்கு கோடியே நாற்பது லட்சம் கி மீ தூரத்திலேயே ஐம்பத்தி எட்டு நாளுக்கு ஒரு முறை சுற்றுகிறது. பூமியை விட, 317 மடங்கு பெரிய கிரகமான வியாழன் கிரகமே சூரிய மண்டலத்தில் தூசிகள் திரண்டு உருவாகும் முறை மூலம் உருவாக வாய்ப்பிலாத நிலையில்,அதை விடக் குறைந்த தூரத்தில்,அதன் நட்சத்திரத்தின் வெப்பக் கதிர் வீச்சு அதிகம் இருக்கும் இடத்தில்,வியாழன் கிரகத்தை விட 7.7 பெரிய கிரகம் எப்படி உருவாக முடியும். இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அதே நட்சத்திரத்தை 43 கோடி கி மீ தொலைவில் வியாழன் கிரகத்தை விட பதினேழு மடங்கு பெரிய ராட்சத வாயுக் கோளம் 4.8 வருடத்துக்கு ஒரு முறை சுற்றுகிறது. வியாழன் கிரகத்தை விட பதின் மூன்று மடங்கு பெரிய அளவில் ஒரு வாயுக் கோளம் இருந்தாலே அதில் இருக்கும் டியூட்ரியம் போன்ற ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து அணுகரு வினையில் ஈடுபடுவதால் வாயுக் கோளம் நட்சத்திர நிலையை அடைந்து விடுகிறது. இந்த ராட்சத வாயுக் கோளங்கள் கிரகங்களை விட மிகவும் பெரியதாக இருப்பதாலும் அதே சமயத்தில் நட்சத்திரங்களை விட மிகவும் சிறியதாக இருப்பதாலும்,இவை இடை நிலை நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. எனவே ஹெ ச் டி 168443 என்ற நட்சத்திரத்தை வெகு அருகில் ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் சுற்றி வருவதும்,அதே நட்சத்திரத்தை கிரகங்கள் வலம் வரும் தொலைவில் ஓர் இடை நிலை நட்சத்திரம் வலம் வந்து கொண்டு இருப்பதும்,நட்சத்திரங்கள்தான் பின்பு கிரகங்கள் ஆகின்றன என்பதையே நிரூபிக்கின்றன. இந்தக் கிரகம்,கிரகம் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக இருக்கிறது.ஆனால் நட்சத்திரம் என்று சொல்ல இயலாத அளவுக்குச் சிறியதாக இருக்கிறது. இக்கிரகம் எங்களது எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கிறது.இது இடை நிலை நட்சத்திரமா அல்லது புது கலப்பினமா? -ஜியோப்ரி மார்சி,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வேற்று கிரகங்களைக் கண்டுபிடித்தவர்.பி பி சி செய்தி வலைத் தளம். கிரகம் வலம் வரும் நட்சத்திரத்தை,தொலைவில் வலம் வரும் இடை நிலை நட்சத்திரங்கள். பூமியில் இருந்து முப்பத்தி ஆறு ஒளி வருட தூரத்தில்,மீனா ராசி நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ஹெச் டி 3651 என்று அழைக்கப் படும் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த நட்சத்திரத்தை சனி கிரகம் போன்ற ஒரு வாயுக் கோளம்,சூரியனை புதன் கிரகம் சுற்றி வரும் தொலைவில் 62 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது. இரண்டாவதாக வியாழன் கிரகத்தை விட 20 முதல் 60 மடங்கு பெரிய ஹெச் டி 3651 -பி ,என்ற துணை நிலை நட்சத்திரம்,சூரியனை நெப்டியூன் சுற்றி வரும் தொலைவக் காட்டிலும் 16 மடங்கு அதிகத் தொலைவில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தத் துணை நிலை நட்சத்திரத்தின் வெப்ப நிலை 500 முதல் 600 செல்சியஸ்.இந்தத் துணை நிலை நட்சத்திரம் நேரடியாகப் படம் பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கிரக அமைப்பைக் கண்டு பிடித்த ஆராய்ச்சில் குழுவினர் வேறு இரண்டு நட்சத்திரங்களை எரிந்து முடிந்த நட்சத்திரங்கள் இரண்டு வலம் வந்து கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்து இருக்கின்றனர். கிரகங்கள் வலம் வரும் நட்சத்திரத்தைத் துணை நிலை நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருப்பதால்,நட்சத்திரங்கள்தான் கிரகங்களாக உருவாகுகின்றன என்று தெரிகிறது. ஹெச் டி 3651 கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிரகங்களும் இடை நிலை நட்சத்திரங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகக் கூடும் என்பதை ஹெச் டி 3651 நிரூபிக்கிறது. -மார்க் மக்ராயர்,இக்கிரகதைக் கண்டு பிடித்தவர். சி ஹெச் ஆர் எக்ஸ் -73 என்ற நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு ராட்சத வாயுக் கோள கிரகம் வியாழன் கிரகத்தை விட 12 மடங்கு பெரியதாக இருக்கிறது. வியாழன் கிரகத்தை விட இவ்வளவு மடங்கு பெரியதாக இருப்பதால் இந்தக் கிரகம் இடை நிலை நட்சத்திரம் என்றே கருதப் படுகிறது. எனவே இந்தப் புதிய கிரகத்தை கிரகம் என்று அழைப்பதா அல்லது நட்சத்திரம் என்று அழைப்பதா என்று சர்ச்சை நீடிக்கிறது. மேலும் இது வரை கண்டு பிடிக்கப் பட்ட ராட்சத வாயுக் கோள கிரகங்கள் எல்லாம் உண்மையிலேயே கிரகங்கள்தானா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது. நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பதை நிரூபிக்க மிகச் சிறந்த ஆதாரமாக ஏ பி பிக்டோரிஸ் என்ற கிரகம் விளங்குகிறது. பூமியில் இருந்து 150 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஏ பி பிக்டோரிஸ் என்ற நட்சத்திரத்தை சூரியன் பூமி சுற்றி வரும் தொலைவைக் காட்டிலும் 270 மடங்கு தொலைவில் வியாழன் கிரகத்தை விட 13 முதல் 14 மடங்கு வரை அதிக எடை உள்ள வாயுக் கோளம் ஒன்று வலம் வந்து கொண்டு இருக்கிறது. வியாழன் கிரகத்தை விட 13.6 மடங்கு அதிக எடையுடன் ஒரு வாயுக் கோளம் இருந்தால் அதில் அணுக்கரு வினை நடை பெறுவதால் நட்சத்திர நிலையை அடைந்து விடுகிறது. ஏ பி பிக்டோரிஸ் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் வாயுக் கோளம் இடை நிலை நட்சத்திர நிலைக்கும் கிரக நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதால் நட்சத்திரங்கள்தான் கிரகங்கள் ஆகின்றன என்பது நிரூபணமாகிறது. நட்சத்திரத்தை வலம் வரும் இடை நிலை நட்சத்திரம். மைகேல் லியூ என்ற ஆராய்ச்சியாளர் 15 சாஜிடேரியன் நட்சத்திரத்தின் அருகில் ஓர் ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டு பிடித்தார். பூமியில் இருந்து 58 ஒளி வருடத் தூரத்தில் இருக்கும் 15 சாஜிடே என்ற நட்சத்திரத்தை வியாழன் கிரகத்தை விட 55 - 78 மடங்கு அதிக எடையுள்ள ராட்சத வாயுக் கோளம் ஒன்று சூரியனை சனி கிரகம் சுற்றி வரும் தூரத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. நட்சத்திரங்களைப் போல இந்த இடை நிலை நட்சத்திரமும் வெப்பத்தை உற்பத்தி செய்வதால் இந்தக் கிரகம் இடை நிலை நட்சத்திரம் என்றே அழைக்கப் படுகிறது.இந்தக் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்று தற்பொழுது உள்ள எந்த கொள்கையாளரும் விளக்கம் தர இயலவில்லை. மேலும் 70 வர்ஜினிஸ், 16 சைக்னஸ், ஹெச் டி-114762 ஆகிய நட்சத்திரங்கள் வலம் வரும் கிரகங்கள் வால் நட்சத்திரங்களைப் போல நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன. இவ்வாறு கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு தாய் நட்சத்திரத்தின் முன் நோக்கிய பயணமே பிரதான காரணமாகும்.விலகிச் செல்லும் கிரகம் திரும்பவும் ஈர்க்கப் பட்டு நட்சத்திரத்துக்கு அருகில் வருவதற்குள் நட்சத்திரம் வெகு தூரத்துக்கு சென்று விடுவதால் கிரகங்கள் நீள் வட்டப் பாதைக்குத் தள்ளப் படுகின்றன. 15 சாஜிடே கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்தக் கண்டு பிடிப்பு நம் சூரியன் போன்ற சராசரி நட்சத்திரங்களை,வெளி வட்டக் கிரகங்கள் வலம் வரும் தொலைவில் இடை நிலை நட்சத்திரங்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதைக் குறிக்கிறது. ஆனால் இந்தத் துணைக் கோள்கள் தூசித் தட்டில் இருந்து கிரகங்கள் உருவாகுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்க்கிறது. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களைத் தேடுகிறார்கள்.ஆனாலவர்கள் தேடலில் அதிகத் தொலைவில் அதிக எடை உள்ள இடை நிலை நட்சத்திரங்கள் மாட்டுகின்றனவே தவிர கிரகங்கள் மாட்டவில்லை. மைகேல் லியூ,ஹவாய் பல்கலைக் கழகம்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்,பி பி சி செய்தி வலைத் தளம். இப்போது நாங்கள் ராட்சத கிரகங்கள் உருவாகும் இடத்தில் இடை நிலை நட்சத்திரங்கள் இருப்பதை அறிகிறோம். விண்வெளியில் இந்த வினோத ஜோடிகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.அது சூரியன் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி கிரகங்களின் தோற்றத்தையும் சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் பற்றியும் வேறு புதிய முறைகளைத் தெரிவிக்கும். - மைகேல் லியூ, ஸ்பேஸ் டாட் காம் வலைத் தளம். 000 சூரிய மண்டலத்தின் தோற்றத்தை விளக்கும் தூசித் தட்டுக் கொள்கை தவறு சூரிய மண்டலத்தின் தோற்றத்தை விளக்கும் தூசித் தட்டுக் கொள்கை ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. முன் ஒரு காலத்தில்,விண் வெளியில் இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று சுருங்கிச் சுழன்றதாகவும்,அப்பொழுது மத்தியப் பகுதியில்,இருந்த பருத்த பகுதியானது,சூரியனாக உருவானதாக நம்பப் படுகிறது. அதன் பிறகு பல லட்சம் ஆண்டு காலத்தில்,சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தூசிகளும் வாயுக்களும்,ஆங்காங்கே ஒன்று திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது,தூசித் தட்டுக் கொள்கை, என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளியான வெப்பத்தின் காரணமாக, சூரியனுக்கு அருகில் இருந்த,நீர் மூலக் கூறுகள் உள்பட,எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு சென்றதாகக் கருதப் படுகிறது. அதனால், சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவில் இருந்த,இரும்பு போன்ற உலோகங்களும் மற்ற தாதுப் பொருட்கள் மட்டும் குளிர்ந்ததால், புதன்,வெள்ளி,பூமி மற்றும் செவ்வாய் போன்ற சிறிய அளவிலான,பாறைக் கிரகங்களானது,மிக அதிக கால கட்டத்தில், உருவானதாகவும் நம்பப் படுகிறது. ஆனால், சூரியனில் இருந்து அதிக தொலைவில்,குளிர்ச்சியாக இருந்த பகுதியில், அதிக அளவில் இருந்த பொருட்கள்,எளிதில் திரண்டதால்,பெரிய அளவிலான கிரகங்கள்,குறைந்த கால கட்டத்தில்,உருவானதாக நம்பப் படுகிறது. அதன் பிறகு,அந்தப் பெரியக் கிரகங்களானது,அந்தப் பகுதிகளில் இருந்த அதிக அளவிலான வாயுக்களைக் கவர்ந்ததால்,வியாழன்,சனி,யுரேனஸ்,மற்றும் நெப்டியூன் போன்ற வாயுக் கோள கிரகங்கள் உருவானதாகவும்,நம்பப் படுகிறது. ஆனால், அண்மைக் காலங்களில்,மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம்,தூசித் தட்டுக் கருத்து தவறு, என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர் வீச்சின் காரணமாக,சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களில் இருந்து, ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்கள் வெளியேற்றப் படுவது,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது. முக்கியமாக, சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியின் வளி மண்டலத்தில்தான் அதிக அளவில் அதாவது,எழுபத்தி எட்டு சதவீதம்,நைட்ரஜன் வாயு இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,அதாவது,சூரியனில் இருந்து, பூமி இருக்கும் தொலைவை விட,நாற்பது மடங்கு தொலைவில் இருக்கும்,புளூட்டோவில் இருந்து, சூரியக் கதிர் வீச்சின் காரணமாக,நைட்ரஜன் வாயு வெளியேற்றப் படுவது,சமீபத்தில் செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே,சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகமான, பூமி எப்படி அதிக அளவில் நைட்ரஜன் வாயுவுடன் உருவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போன்று, சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, நிலவில் இருந்து, சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகமான,புதன் கிரகத்தில் இருந்தும்,நிலவில் இருந்தும்,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே,புதன் கிரகமானது எப்படி சூரியனுக்கு அருகில்,சோடியம் வாயுவுடன் உருவானது,என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போன்று, சூரியனை நோக்கி வரும் வால் நட்சத்திரங்களில்,குறிப்பாக அந்த வால் நட்சத்திரங்களானது,செவ்வாய் கிரகம் இருக்கும் தொலைவை நெருங்கும் பொழுதே,அந்த வால் நட்சத்திரங்களில் இருந்து, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களானது.சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக,வெளியேற்றப் படுவதும்,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன்,சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் கிரகங்களில் இருந்து,சூரியனின் கதிர் வீச்சு காரணமாக, வெளியேற்றப் படும் வாயுக்களுடன்,சூரியனுக்கு அருகில் ஒரு கிரகம் உருவாக இயலாது. எனவே,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி ஒரு தூசிகளும வாயுக்களும் சுழன்று கொண்டு இருந்ததாகவும,அந்தத் தூசிகளும் வாயுக்களும் ஆங்கங்கே திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. 0000 வால் நட்சத்திரங்களின் தோற்றம் குறித்த தவறான கருத்து. சூரிய மண்டலம் உள்பட, வால் நட்சத்திரங்களின் தோற்றத்தை விளக்கும், தூசித் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான விளக்கம், என்பது வால் நட்சத்திரங்களில் காணப் படும் பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது. முன் ஒரு காலத்தில்,விண்வெளியில் இருந்த, ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று சுருங்கிச் சுழன்றதாகவும்,அப்பொழுது மத்தியப் பகுதியில்,இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது,அங்காங்கே திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. குறிப்பாக, புளுட்டோவுக்கும் அப்பால், வால் நட்சத்திரங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது. எனவே வால் நட்சத்திரங்களில், கார்பன் டை ஆக்சைடு,நீர்,சோடியம் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய பொருட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில்,வைல்ட்-2 , என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து,ஸ்டார் டஸ்ட் என்ற செயற்கைக் கோள் மூலம், சேகரிக்கப் பட்ட துகள்களை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப் பட்டனர். ஏனென்றால், அந்த வால் நட்சத்திரத்தில்,சிலிகேட் படிகப் பாறையான, ஆலிவியன்,அனோர்டைட்,மற்றும் டையாப் சைட் ஆகிய பாறைத் துகள்கள் இருந்தன. ஆனால்,இவ்வகைப் பாறைப் பொருட்களானது,சூரியனுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு அருகில்,அதிக வெப்ப நிலையில் உருவாகக் கூடியது. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அந்த வால் நட்சத்திரத் துகள்களில்,நீரின் உதவியுடன் உருவாகும்,இரும்பு மற்றும் காப்பர் சல்பைட் ,இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். எனவே,கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றிய, தூசித் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான கருத்து, என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. 000 தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டு கிரகங்கள் உருவாக வில்லை. சூரியக் கதிர்வீச்சின் காரணமாக, புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் மற்றும் புளூட்டோ ஆகிய கிரகங்களில் இருந்து வாயுப் பொருட்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது செயற்கைக் கோள் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, சூரியனைச் சுற்றி,லட்சக் கணக்கான ஆண்டு காலமாக, தூசி மற்றும் வாயுக்களால் ஆன தட்டு இருந்திருக்கவோ, அதில் இருந்து கிரகங்கள் உருவாகி இருக்கவோ, சாத்தியம் இல்லை. 00 தூசித் தட்டுக் கொள்கைக்கு சவால் விடும் கண்டு பிடிப்பு. சூரிய மண்டலத்தின் கடைசி கிரகமாகவும், எட்டாவது கிரகமாகவும் இருக்கும், நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் இருந்து,மீத்தேன் வாயு வெளியேறிக் கொண்டு இருப்பதை, நாசா விஞ்ஞானி கிளென் ஆர்டன் கண்டு பிடித்து இருக்கிறார். தென் அமெரிக்க நாடான,சிலி நாட்டில் உள்ள,தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த பொழுது, இது தெரிய வந்துள்ளதாக, கிளென் ஆர்டன் தெரிவித்து இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து, அவர் விளக்கமும் தெரிவித்து இருக்கிறார். நெப்டியூன் கிரகமானது,சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,முப்பது மடங்கு தொலைவில் இருக்கிறது. எனவே,சூரியனில் இருந்து,பூமி பெரும் சூரிய ஒளியைக் காட்டிலும்,தொள்ளாயிரத்தில் ஒரு பகுதி ஒளியையே நெப்டியூன் கிரகமானது,சூரியனில் இருந்து பெறுகிறது. இதனால்,நெப்டியூன் கிரகத்தின் சராசரி வெப்ப நிலையானது,மைனஸ் இருநூறு டிகிரியாக இருக்கிறது. இருப்பினும்,நெப்டியூன் கிரகமானது,பூமியைப் போலவே தன் அச்சில் சாய்ந்த நிலையில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக பூமியானது முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களுக்கு ஒரு முறை,சூரியனை,சாய்ந்த நிலையில் வலம் வருகிறது. எனவே, சில மாதங்கள் மட்டுமே பூமியின் தென் துருவப் பகுதிகளானது,சூரியனை நோக்கி இருக்கிறது.அப்பொழுது,பூமியின் வட கோளப் பகுதியில்,கோடை காலம் நிலவும்.அதன் பிறகு, பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை நோக்கி இருக்கும். ஆனால்,நெப்டியூன் கிரகமானது,ஒரு முறை சூரியனை சுற்றி முடிக்க, நூற்றி அறுபத்தி ஐந்து ஆண்டு காலமாகிறது. இந்த நிலையில் ,தற்பொழுது நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியானது,சூரியனை நோக்கி இருக்கிறது. அத்துடன்,இதே போன்று இனிவரும் நாற்பது ஆண்டு காலமும், நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியானது,தொடர்ந்து சூரியனை நோக்கி இருக்கும்.அதன் பிறகு நெப்டியூன் கிரகத்தின் வட துருவப் பகுதியானது,தொடர்ந்து, நாற்பது ஆண்டு காலம் சூரியனை நோக்கி இருக்கும் இவ்வாறு,பல ஆண்டு காலமாக நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியானது தொடர்ந்து,சூரியனை நோக்கி இருப்பதால்,நெப்டியூன் கிரகத்தின்,மற்ற பகுதிகளைக் காட்டிலும்,நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியில்,வெப்ப நிலையானது, பத்து டிகிரி அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் வளி மண்டலத்தில்,உறை நிலையில் இருக்கும், மீத்தேன் வாயுவாக மாறி, நெப்டியூன் வளி மண்டலத்தில் இருந்து வெளியேறி, விண்வெளியில் கலக்கிறது,என்று கிளென் ஆர்டன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கண்டு பிடிப்பானது,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி,தூசி மற்றும் வாயுக்களால் ஆன மண்டலமானது, லட்சக் கணக்கான ஆண்டு காலமாக,சுற்றிக் கொண்டு இருந்ததாகவும்,பின்னர் அதில் இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,நெப்டியூன் உள்பட,வியாழன்,சனி,யுரேனஸ் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவானதாகவும்,கூறப் படும் விளக்கத்திற்கு சவால் விடுவதாக இருக்கிறது. எப்படிஎன்றால்,மீத்தேன் வாயுவானது, நெப்டியூன் கிரகத்திற்கு முன்பாக இருக்கும்,யுரேனஸ் கிரகத்திலும் இருக்கிறது. இதே போன்று சனி கிரகத்தின்,துணைக் கோளான டைட்டனிலும்,மீத்தேன் வாயு இருக்கிறது. https://en.wikipedia.org/wiki/Atmosphere_of_Titan எனவே மீத்தேன் வாயுவானது பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாக சூரியனை சுற்றி இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. முக்கியமாக, பூமி எப்படி சூரியனுக்கு மிக அருகில்,மீத்தேன் வாயுவுடன் உருவானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 000 செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்... சூரியனின் கதிர் வீச்சு காரணமாகச் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தில் இருந்து,சோடியம்,கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களின் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது, செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. இதைப் போலவே,வெள்ளி கிரகத்தில் இருந்தும் வாயுப் பொருட்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. இதே போன்று,நிலவில் இருந்தும், சோடியம் வாயு வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன்,பூமியில் இருந்து ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. இந்த நிலையில்,பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்,வாயுக்களானது, வெளியேறிக் கொண்டு இருப்பது,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக,அமெரிக்கா ,மாவென் என்ற செயற்கைக் கோளை ஏவியது. அந்த செயற்கைக் கோளானது செவ்வாயை அடைந்த நேரம்,சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால் நட்சத்திரமானது,செவ்வாய்க் கிரகத்தை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது. அதனால், அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் இருந்த தூசிப் பொருட்களானது, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பை, செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்த பொழுது,அந்த வால் நட்சத்திரத்தில்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் இருப்பதும் தெரிய வந்தது. Amid the routine, background emissions, scientists suddenly saw “this booming signal" of ionized magnesium in the atmosphere of Mars. They also detected iron, sodium, potassium, chromium, manganese, nickel and zinc -- the unambiguous signatures of a comet, Schneider said. http://www.latimes.com/science/sciencenow/la-sci-sn-comet-siding-spring-nasa-science-20141107-story.html அதே போன்று,செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும்,கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கண்டு பிடிப்பானது,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி,தூசி மற்றும் வாயுக்களால் ஆன மண்டலமானது, லட்சக் கணக்கான ஆண்டு காலமாக,சுற்றிக் கொண்டு இருந்ததாகவும்,பின்னர் அதில் இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,சூரியனுக்கு அருகில்,புதன்,வெள்ளி,மற்றும் பூமி போன்ற கிரகங்கள் உருவானதாகக் ,கூறப் படும் விளக்கத்திற்கு, சவால் விடுவதாக இருக்கிறது. எப்படியென்றால்,செவ்வாய்க் கிரகத்திற்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தில் இருந்த சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்கள்,பூமியிலும் காணப் படுகின்றன. எனவே,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கு அருகிலேயே,மேலே குறிப்பிட்ட உலோகங்களானது,சூரிய ஒளியால் ஆவியாகி இருக்கும் நிலையில்,அதே உலோகங்களுடன்,தூசிமண்டலம் சூரியனுக்கு அருகில்,எப்படி ஆவியாகாமல் இருந்திருக்கும்,அதிலிருந்து எப்படி பூமி உருவாகி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. NASA said at a press conference late Friday (November 7) that dust from Comet Siding Spring vaporized high up in the Martian atmosphere, producing what was likely “an impressive meteor shower.” An observer on Mars surface might have seen thousands of shooting stars per hour. NASA said in a press release: http://earthsky.org/space/spectacular-meteor-shower-on-mars-from-comet-siding-spring சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு அருகில்,சென்ற வால் நட்சத்திரத்தில் இருந்த உலோக வாயுக்களானது,சூரியக் கதிரால் ஆவியாகி இருக்கும் நிலையில்,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனில் இருந்து, குறைந்த தொலைவில்,இருக்கும் இடத்தில், அந்த வாயுக்களானது,ஆவியாகாமல் இருந்திருக்க சாத்தியம் இல்லை. எனவே அந்த வாயுக்களுடன், பூமியானது,சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்கவும் இயலாது. 000 பூமிக்கு நீர், நைட்ரஜன் மற்றும் அம்மோனியா எப்படி வந்தது? தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது. அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது. பாறைக் கிரகங்களுக்கும் வாயுக் கோள கிரகங்களுக்கும் இடையில் இருக்கும் பகுதியானது,உறை நிலைப் பகுதி,(snow line ) என்று வரையறை செய்யப் படுகிறது. ஏனென்றால், இந்தப் பகுதியில்தான், நீராவி போன்ற எளிதில் ஆவியாகும் வாயுக்களானது, வெப்பக் குறைபாட்டால் உறை நிலையை அடைகிறது. அத்துடன், புளுட்டோவுக்கும் அப்பால், இருக்கும் பகுதியானது மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது உறையும் பகுதி என்று வரையறுக்கப் படுகிறது. இந்தப் பகுதியில்தான், வால் நட்சத்திரங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் கருத்தானது, ஒரு தவாறான கருத்து, என்பது, கிரகங்களில் காணப் படும், எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள்,மற்றும் வேதிப் பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக ,செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப் படும் விண்பாறைகள் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து, பல்வேறு விளக்கங்கள் கூறப் படுகின்றன. சிலர்,அந்த விண்பாறைகளானது,உருவாகாமல் போன ஒரு கிரகத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.அந்த கிரகம் உருவகாமல் போனதற்கு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்றும் நம்பப் படுகிறது. வேறு சிலர்,அந்த விண்பாறைகளானது, கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர். இந்த நிலையில்,அந்த விண்பாறைகளுக்கு இடையில், 950 கிலோ மீட்டர் விட்டத்துடன் ஒரு குறுங் கிரகமும் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த குறுங் கிரகத்துக்கு, செரெஸ் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. பூமியில் இருந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,கடந்த 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்,அந்தக் குறுங் கிரகத்தில்,நீராவி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில்,சில சமயம் வளி மண்டலம் இருப்பது தெரிய வந்தது.சில சமயம் அந்த வளி மண்டலம் காணப் பட வில்லை. அதன் அடிப்படையில்,அந்தக் குறுங் கிரகத்தில்,அவ்வப் பொழுது மட்டும் உருவாகி மறையும், தற்காலிக வளி மண்டலம் இருக்கலாம் என்று நம்பப் பட்டது. குறிப்பாக, வால் நட்சத்திரங்களானது, சூரியனை நெருங்கும் பொழுது,அதில் இருக்கும் எளிதில் ஆவியாகும் பொருட்கள் ஆவியாகுவதால்,அந்த தலைப் பகுதியானது பெரிதாகும். பின்னர் அந்த வால் நட்சத்திரமானது,சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது,பழைய நிலைக்குத் திரும்பி விடும். அதே போன்று,செரெஸ் குறுங் கிரகதிலும் நடக்கும் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில்,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, மைக்கேலா வில்லாரியல்,அந்தக் குறுங் கோளில், வளி மண்டலம் உருவான காலங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது,அந்தக் குறுங் கோளில்,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும், அந்தக் குறுங் கோளானது, சூரியனுக்கு அருகில் இருந்த காலங்களுக்கும், தொடர்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. அத்துடன்,அந்தக் குறுங் கோளில் ,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும்,சூரியனில் அதிக அளவு கதிர் வீச்சு ஏற்பட்ட காலங்களுக்கும், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,சூரியனில் இருந்து செல்லும், அதிக மின்னூட்டம் பெற்ற துகள்களானது,அந்தக் குறுங் கோளின் மேற்பரப்பில் இருக்கும் பனிப் படலங்களின் மேல் படும் பொழுது,அந்தப் பனிப் படலங்களானது,ஆற்றலைப் பெற்று, நீராவியாக உருவாகுவதால்,அந்தக் குறுங் கிரகத்தில் தற்காலிக வளி மண்டலம் உருவாகுவது தெரிய வந்தது. Solar Activity Is Responsible For Ceres’ Temporary Atmosphere http://www.iflscience.com/space/solar-activity-is-responsible-for-ceres-temporary-atmosphere-/ http://www.skyandtelescope.com/astronomy-news/sun-triggers-ceres-fleeting-atmosphere-1104201723/ அதன் பின்னர்,அந்த நீராவியானது,விண் வெளியில் கலந்து விடுவதால்,அந்த வளி மண்டலமானது, ஓரிரு வாரங்களே நிலைத்து இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக, மைக்கேலா வில்லாரியல், விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், செரெஸ் குறுங் கிரகத்தில்,இருந்த,ஒரு பெரிய வட்ட வடிவப் பள்ளத்தில், வெண்நிற படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.முதலில் அந்தப் படிவங்களானது, பனிப் படலங்கள் என்று கருதப் பட்டது. Scientists believe impacting bodies may have delivered ice to Mercury and the moon. The origins of Ceres' ice in cold traps are more mysterious, however. "We are interested in how this ice got there and how it managed to last so long," said co-author Norbert Schorghofer of the University of Hawaii. "It could have come from Ceres' ice-rich crust, or it could have been delivered from space." https://www.jpl.nasa.gov/news/news.php?feature=6703 இந்த நிலையில்,நாசா ஒரு செயற்கை கோளை,அந்தக் குறுங் கிரகத்துக்கே செலுத்தி,அகச் சிவப்புக் கதிர் நிறமாலைக் கருவி மற்றும் நிறமாலைக் கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டது.அந்த ஆய்வில்,அந்த வெண்ணிறப் படிவங்களானது, உப்புப் படிவங்கள் என்பது தெரிய வந்தது. This new information would seem to bolster the argument of people who think Ceres' bright spots are composed of ice, rather than some sort of salt. (Those are the two leading possible explanations at the moment.) http://www.space.com/30054-dwarf-planet-ceres-bright-spots-atmosphere.html குறிப்பாக அந்தப் படிவங்கள் குறித்த நிற மாலையை ஆய்வு செய்த,ரோம் நாட்டின் விண் இயற்பியலாளார்,மரியா கிறிஸ்டினா சான்டிஸ்,அந்தப் படிவங்களானது, பூமியில் சுடு நீர் ஊற்றுப் பகுதிகளில் காணப் படும், சோடியம் கார்பனேட் உப்புகள் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்தக் குறுங் கிரகத்தின் அடியில், வெப்பமான சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.அத்துடன்,அம்மோனியம் கலந்த களி மண்ணும் இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மீத்தேன் மற்றும் அம்மோனியம் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம்,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,குறிப்பாக நெப்டியூன் கிரகம் இருக்கும், அதிகக் குளிர்ச்சியான,பகுதிகளிலேயே இருக்க சாத்தியம் என்று தூசித் தட்டுக் கொள்கையின் படி நம்பப் படுகிறது. எனவே,செரெஸ் குறுங் கிரகமானது,நெப்டியூன் கிரகம் இருக்கும் பகுதியில் உருவாகிய பின்னர்,கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களால், தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று,அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மிகாயில் சாலோடோவ் மற்றும்,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ் ரஸ்ஸல் ஆகியோர் நம்புகின்றனர். அல்லது,செரெஸ் குறுங் கிரகமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவான பிறகு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருந்து, செரெஸ் குறுங் கிரகத்தின் மேல் மோதிய, வால் நட்சத்திரங்கள் மூலம்,செரெஸ் குறுங் கிரகத்திற்கு அம்மோனியா வந்திருக்கலாம் என்றும்,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், அந்த உப்புப் படிவங்களானது, அந்த உப்புப் படிவங்கள் இருக்கும் வட்ட வடிவப் பள்ளத்துடன் தொடர்பு உடையது என்றும்,வால்நட்சத்திர மோதலால் உருவானது என்றும்,அதே போன்று சுடு நீர் ஊற்று தொடர்பானது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில்,கார்ஸ்ருக்கி தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த,டாக்டர்,மைக்கேல் ஹாப்னேர்,பூமியின் வளி மண்டலத்தின் அகச் சிவப்பு நிறமாலையை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,ட்ரோபோஸ்பியர் அடுக்கில்,இருக்கும் காற்றில்,ட்ரில்லியனில் முப்பத்தி மூன்று பகுதி என்ற அளவில், அம்மோனியா வாயு இருப்பதைக் கண்டு பிடித்ததாக அறிவித்தார். Ammonia Detected in Earth’s Upper Troposphere http://www.sci-news.com/othersciences/climatology/ammonia-earths-upper-troposphere-04424.html தூசித் தட்டுக் கொள்கையின் அடிப்படையில், பூமியில் அம்மோனியா வாயு இருப்பதற்கு சாத்தியம் இல்லை.எனவே பூமிக்கு எப்படி அம்மோனியா வாயு வந்தது, என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம் வந்து விட்டது. Where Did Earth's Water and Ammonia Come From? http://discovermagazine.com/2015/sept/9-ask-discover ஏனென்றால், பூமி உருவான காலத்தில் பூமியானது உருகிய பாறைக் குழம்புக் கோளமாக இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே அந்த அதீத வெப்ப நிலையில்,அம்மோனியா, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம், ஆவியாகி, பூமியை விட்டு வெளியேறி விடும். எனவே , பூமிக்கு எப்படி அம்மோனியா வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். A: Most scientists believe that stable molecules like water and ammonia weren’t originally produced on Earth. Instead, they arrived from space within the first 700 million years of Earth’s existence. But how and when this happened still isn’t clear. http://discovermagazine.com/2015/sept/9-ask-discover ஆனால்,சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமின்றி,செவ்வாய்,வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன்,மற்றும் புளூட்டோ என ஒன்பது கிரகங்களிலும்,அம்மோனியா காணப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. Ammonia is also found throughout the Solar System on Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, and Pluto, among other places: on smaller, icy worlds like Pluto, ammonia can act as a geologically important antifreeze, as a mixture of water and ammonia can potentially have a melting point of as low as 173 kelvins if the ammonia concentration is high enough and thus allow such worlds to retain internal oceans and active geology far longer than would be possible with water alone. https://en.wikipedia.org/wiki/Ammonia அத்துடன் , பூமியின் வளி மண்டலத்தில், முக்கால் பாகம் நைட்ரஜன் வாயுவால் ஆனது,கால் பாகம் ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களால் ஆனது. இந்த நிலையில்,நைட்ரஜன் வாயுவும், பூமிக்கு வால் நட்சத்திரங்கள் மூலம் வந்திருக்கலாம், என்று அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான சாண்ட்ரா பிசாரெல்லோ,விளக்கம் தெரிவித்து இருக்கிறார். Meteorites 'could have carried nitrogen to Earth' Professor Sandra Pizzarello, who led the research, says the study "shows that there are asteroids out there that when fragmented and become meteorites, could have showered the Earth with an attractive mix of components, including a large amount of ammonia". Meteorites like this could have supplied the early Earth with enough nitrogen in the right form for primitive life forms to emerge, she says. http://www.bbc.com/news/science-environment-12597564 நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்றவைகள் உயிர் மூலக் கூறுகள் என்பதால், பூமியில் உயிர் தோன்றக் காரணமாக இருந்திருக்கின்றன. உயிர் தோன்றிய பிறகு,இறந்த உயிர்கள் மூலம்,பூமியில் மீத்தேன் உருவாகியது, என்று கருதப் படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில்,மீத்தேன் வாயு இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே, செவ்வாய்க் கிரகத்துக்கு, மீத்தேன் எப்படி வந்தது,உயிரினங்கள் மூலம் வந்ததா என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். THE ENIGMA OF METHANE ON MARS http://exploration.esa.int/mars/46038-methane-on-mars/ 000 எனது கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக ஒரு கிரகம். 00000000000000 முன்னுரை தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில் நான் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் ஈர்க்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுக்களானது,ஈர்த்த நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின், மையத்தில்,அணுக் கரு வினையால் உருவாகி இருந்த, கனமான அணுக்களானது,கோளமாக உருவாகி, ஈர்த்த நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 00000000000000 கடந்த 2014 ஆம் ஆண்டு,அமெரிக்கா,நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு தொலைவில்,இருக்கும், ஹெச் டி- 106906 , என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை, ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இந்த நிலையில் கடந்த 2016, ஆண்டுதான் ,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில், தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன, தூசித் தட்டு இருப்பதை ,அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்தனர். குறிப்பாக ,அந்த நட்சத்திரத்தின்,தூசி மற்றும் வாயு மண்டலத்தில் இருந்து,சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவைக் காட்டிலும், அறுநூற்று ஐம்பது மடங்கு தொலைவில், அந்த கிரகம் இருந்தது. அத்துடன், அந்த கிரகமானது,வியாழன் கிரகத்தை விட பதினோரு மடங்கு பெரிய அளவில் இருப்பதுடன்,அதன் நட்சத்திரத்தை, ஆயிரத்தி ஐநூறு ஆண்டுக்கு ஒரு முறை,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு, அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் தூசித் தட்டில் இருந்து, அதிக தொலைவில் இருப்பதற்கு, கிரகங்களின் தோற்றம் குறித்த,நமது தற்போதைய கொள்கையில் விளக்கம் இல்லை என்று,அந்தக் கிரகத்தை ஆய்வு செய்த,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான, ஸ்மேதார் நாவோஸ் தெரிவித்து இருக்கிறார். பொதுவாக, இது போன்று ஒரு நட்சத்திரத்தில் இருந்து, அதிக தொலைவில் இருந்தபடி,ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் உருவாகிய பிறகு,வேறு ஒரு கிரகத்தால் அல்லது, தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால்,நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கிரகமானது,அதிக தொலைவுக்கு தள்ளப் பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுவார்கள். ஆனால்,அந்த கிரகத்தின் சுற்றுப் பாதை குறித்து,கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்ததன் அடிப்படையில்,அந்தக் கிரகமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருப்பதாகவும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அந்த கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் நீள்வட்ட வடிவிலான, தூசித் தட்டின் அமைப்பை, விளக்குவதாக இருக்கிறது என்றும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். The research, published online in the Astrophysical Journal Letters, suggests that the planet formed outside the disk, where it's visible it today, as opposed to having been formed inside the debris disk and then having been thrust far beyond it. Naoz said that conclusion helps explain the shape of the debris disk. "It works perfectly," she said. https://www.sciencedaily.com/releases/2017/03/170316093038.htm அதாவது, அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, நீள் வட்டமாக இருக்கிறது. அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருங்கிய பிறகு,அதிக தொலைவுக்கு செல்கிறது. அதனால், அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையால்,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் தூசித் தட்டும், நீள் வட்ட வடிவில் இருக்கிறது. அதனால், அந்தத் தூசித் தட்டின் ஒரு பகுதியானது, அந்த நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருக்கிறது. மற்ற பகுதியானது அதிக தொலைவில் இருக்கிறது. அதனால், அந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும், தூசித் தட்டின் பகுதியானது, அதிக வெப்பமாகவும்,பிரகாசமாகவும் ஒளிர்கிறது. இவ்வாறு, அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில் தூசி மண்டலம் இருப்பதற்கு, அந்தத் தூசித் தட்டில் வேறு ஏதாவது கிரகம் இருக்க வேண்டுமா என்பதைக் கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்பொழுது,வேறு ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை இன்றியே, அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி,நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் உருவாகும் என்பது தெரிய வந்தது. ஆனாலும், வேறு சில ஆராய்ச்சியாளர்கள்,அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் இருப்பதற்கு,அந்தத் தூசித் தட்டில், வேறு ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்தக் கிரக அமைப்பானது, எனது கண்டு பிடிப்புக்கு, சிறந்த ஆதாரமாக இருப்பதாக, நான் நம்புகிறேன். 000 விஞ்ஞானிகளைக் குழப்பும் தூசித் தட்டு. The system is located about 2,450 light-years away in the star-forming cloud IC 1396 http\://www.spitzer.caltech.edu/images/2223-sig06-023-A-Star-s-Close-Encounter பிளேனட்டரி நெபுலா பன்னெடுங் காலமாகவே, நம் பூமி உள்பட ஏனைய கிரகங்கள் எப்படித் தோன்றின, என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களை ரொம்பவே குழப்பிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,யுரேனஸ் கிரகத்தைக் கண்டு பிடித்த, வில்லியம் ஹெர்சல் என்ற ஆராய்ச்சியாளர்,வானத்தை ஆராய்ந்து கொண்டு இருந்த பொழுது,சிறிய புகை மண்டலத்துக்கு நடுவில்,ஒரு சிறிய ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டார். அந்தப் பொருளானது யுரேனஸ் போலவே, நீல நிறத்தில் இருந்ததால் அதனை ஒரு கிரகமாகக் கருதினார்.அதன் அடிப்படையில்,அதற்கு கிரக மேகம் என்ற பொருளைத் தரும் பதமான, பிளேனட்டரி நெபுலா என்ற பெயரைச் சூட்டினார். அதன் பிறகு, இது போன்று, ஆயிரத்தி ஐநூறு பிளேனட்டரி நெபுலாக்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பெயரானது ஒரு தவறான பெயர் ( misnomer ) என்று கருதப் பட்டது.ஏனென்றால் உண்மையில் அது போன்ற அமைப்புக்கும், கிரகத்துடன் தொடர்பு இல்லை என்று கருதப் பட்டது. குறிப்பாக அது போன்ற மேகங்கலானது,ஒரு நட்சத்திரத்தின் கடைசி கால கட்டத்தில்,அதாவது ஒரு நட்சத்திரத்தில் அணுக் கரு வினைகள் முடிந்த நிலையில், நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் வாயு மண்டல அடுக்குகளானது,விரிவடைவதால் உருவாகும் அமைப்பு, என்று புரிந்து கொண்டார்கள். குறிப்பாக இது போன்ற வாயு மண்டலங்களானது, சில ஆயிரம் ஆண்டு காலமாகவே நிலைத்து இருப்பதும் தெரிய வந்தது.ஆனாலும் விண்வெளியைப் பொறுத்த மட்டில் இந்தக் காலமானது கண் சிமிட்டும் நேரமே ஆகும். இந்த நிலையில் தற்பொழுது,மிரா என்று அழைக்கப் படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிலும், இதே போன்ற அமைப்பு இருப்பது,நவீன தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. பூமியில் இருந்து நானூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும் மிரா நட்சத்திரமானது ,வெறுங் கண்ணால் காணக் கூடிய நட்சத்திரம் என்பதால் பல நூறு ஆண்டு காலமாகவே இந்த நட்சத்திரத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். அணுக்கரு வினை முடியும்,இறுதிக் கால கட்டத்தில் இருக்கும், இந்த நட்சத்திரத்தின் பிரகாசமானது,எண்பது முதல் ஆயிரம் நாளுக்கு ஒரு முறை அதிகரிக்கிறது. இவ்வகை நட்சத்திரங்களானது ‘ஒளி வேறுபாடு அடையும்’ நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப் படுகிறது. இதே போன்று, பிரகாசம் மாறக் கூடிய, முப்பதாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2007 , ஆம் ஆண்டு, மிரா நட்சத்திரத்தை, புற ஊதா தொலைக் காட்சியில் பார்த்த பொழுது,அந்த நட்சத்திரத்துக்கு பதின் மூன்று ஒளியாண்டு நீளமுள்ள வால் இருப்பது தெரிய வந்துள்ளது.அதாவது சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,இருபதாயிரம் மடங்கு தொலைவு ஆகும்.அத்துடன் அந்த நட்சத்திரமானது,தலை தெறிக்கும் வேகத்தில் அதாவது,வினாடிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்,( வினாடிக்கு எண்பது மைல் ) பயணம் செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு அந்த நட்சத்திரமானது அசுர வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து கொண்டு இருப்பதால் அந்த நட்சத்திரத்தின் தலைப் பகுதிக்கு முன்னே,தொப்பி போன்ற அமைப்பு உருவாகி இருக்கிறது.அதாவது நீரைக் கிளிதவாறு செல்லும் படகுக்கு முன்பு உருவாகும் வில் போன்ற வளைவு உருவாகுவதைப் போன்று,மிரா நட்சத்திரத்துக்கு முன்பும் ஒரு வில் போன்ற வளைவு உருவாகி இருக்கிறது.அந்த வில் வளைவானது போ ஷாக் என்று அழைக்கப் படுகிறது. மிரா நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் இருந்து,ஒவ்வொரு ஆண்டும்,பூமியின் அளவுள்ள சூடான வாயுக்களும் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக,மிரா நட்சத்திரத்தின் வாலானது, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பதாகக் கணிக்கப் பட்டு இருக்கிறது. மிரா நட்சத்திரத்துக்கு, ஒரு துணை நட்சத்திரமும் இருக்கிறது.மிரா-பி,என்று அழைக்கப் படும் அந்த நட்சத்திரமானது,ஒரு நட்சத்திரத்தின் இறப்பில் உருவாகக் கூடிய வெண்குறு நட்சத்திரம் என்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அந்த துணை நட்சத்திரமானது,மிரா நட்சத்திரத்தில் இருந்து,நூறு விண்வெளி அலகு தொலைவில் இருக்கிறது.ஒரு விண்வெளி அலகு என்பது சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவு ஆகும்,அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர் ஆகும். மிரா நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களில் ஒரு சதவீதம்,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தின் ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து கொள்ளப் படுகிறது. அத்துடன் அந்த வாயு மற்றும் தூசிப் பொருட்களானது,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களைப் போன்று சுற்றி இருக்கிறது. குறிப்பாக அந்த வளையத்தில் இருக்கும் தூசி மற்றும் வாயுக்களானது பூமியின் அளவில் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி தூசி மற்றும் வாயுக்களால் ஆன வளையமானது ‘புரோட்டோ பிளேனட்டரி டிஸ்க்’அதாவது கிரகங்களை உருவாக்கும் தட்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஏனென்றால், இது போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களில் இருக்கும் தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டுதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. http\://www.rochester.edu/news/show.php?id=3123 000 ஆராய்ச்சியாளர்களைக் குழப்பும் தூசித் தட்டு வளையங்கள். நட்சத்திரங்கள் எப்படி உருவாகுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால், கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. குறிப்பாக ,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ‘நெபுலா கொள்கை’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார். குறிப்பாக நட்சத்திரங்களானது, கூட்டமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. அதன் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்களானது, நீண்ட கால கட்டத்தில் , உருவானதாக நம்பப் படுகிறது. இந்த முறையானது,திரளுதல் ( accretion method) என்று அழைக்கப் படுகிறது.இந்த முறையில், கிரகங்கள் உருவாக நீண்ட காலம் தேவைப் படுவதால்,இந்த முறையானது ஆமை முறை என்றும் அழைக்கப் படுகிறது. அதாவது,தூசிகள் திரண்டு கூழாங் கற்களாகவும், கூழாங் கற்கள் திரண்டு பாறைகளாகவும்,பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறிய பிறகு, மறுபடியும் திரண்டு பெரிய மலைகளாகவும்,அதே போன்று மலைகள் சேர்ந்து, சிறிய கிரகங்களாகவும்,பின்னர் சிறிய கிரகங்கள் சேர்ந்து, பூமி போன்ற பாறைக் கிரகங்களாகவும், உருவானதாக நம்பப் படுகிறது. அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின், மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது. குறிப்பாக திரளுதல் முறையில் உருவான பாறைக் கிரகங்களானது,அந்தப் பகுதியில் இருந்த வாயுக்களைக் கவர்ந்ததால், வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது. மேலும், ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவான பொழுது,அந்தக் கிரகங்களைச் சுற்றிச் சுழன்ற, தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,அந்தக் கிரகங்களைச் சுற்றி,நிலாக்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்த முறையில், கிரகங்களானது, ஒரு கோடி முதல், பத்து கோடி ஆண்டு காலத்தில், உருவாகுவதாக நம்பப் படுகிறது. ஆனால், அவ்வளவு காலம், நட்சத்திரங்களைச் சுற்றி, தூசிகள் மற்றும் வாயுக்கள், இருப்பதற்கு சாத்தியம் இல்லை, என்பது தெரிய வந்தது. அத்துடன்,இந்தக் கருத்தானது, நமது சூரிய மண்டலத்தை, மாதிரியாக வைத்து உருவாக்கப் பட்டது. இந்தக் கருத்து உருவாக்கப் பட்ட பொழுது,விண்வெளியில் வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட வில்லை. கடந்த 1992,ஆம் ஆண்டுதான், முதல் வேற்று கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் பிறகு,மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,நட்சத்திரங்களை விட அதிக அளவில் கிரகங்கள் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக, வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோளங்கள், விண்வெளியில் அதிக அளவில் இருப்பதும் தெரிய வந்தது. எனவே,விண்வெளியில் கிரகங்களானது, அடிக்கடி நடை பெறக் கூடிய செயல் மூலம், மிகவும் வேகமான முறையில் உருவாக வேண்டும் என்றும் கருதப் பட்டது. அதன் அடிப்படையில்,வியாழன் போன்ற, ராட்சத வாயுக் கோளங்களானது,நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மேகங்களில்,ஆங்காங்கே ஈர்ப்பு விசை சம நிலை குலைந்து,திடீரென்று சுருங்குவதால் உருவாகலாம், என்று கருதப் பட்டது. இந்த முறையானது,’தூசித் தட்டு சீர் குலைவு’ (disk instability )என்று, இந்த முறையில், சில லட்சம் ஆண்டுகளில் கிரகங்கள் உருவாகலாம், என்று நம்பப் படுகிறது.எனவே இந்த முறையானது, முயல் முறை என்றும் அழைக்கப் படுகிறது. இந்த நிலையில், நான் மேற்கொண்ட ஆய்வில்,நட்சத்திரங்களுக்கு உள்ளேயே கிரகங்கள் உருவாகுவது தெரிய வந்தது. குறிப்பாக, நட்சத்திரங்களுக்கு உள்ளே கிரகங்கள் உருவான பிறகு,அந்த நட்சத்திரத்தின் வாயுப் பகுதிகள் ஆவியாக்கப் படும் பொழுது, எஞ்சிய மையக் கோளமானது, கிரகமாக வெளிவந்து, அருகில் இருக்கும் நட்சத்திரங்களை வலம் வரத் தொடங்குகிறது. அதாவது,ஒரு நட்சத்திரத்தை, அருகில் இருக்கும் நட்சத்திரம் இழுக்கும் பொழுது,இழுக்கப் பட்ட நட்சத்திரமானது,இழுத்த நட்சத்திரத்தை வலம் வரத் தொடங்குகிறது. அதனால், இழுக்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுப் பொருட்களானது,ஆவியாக்கப் படுவதுடன்,இழுக்கப் பட்ட நட்சத்திரத்தை சுற்றிலும், தூசி மற்றும் வாயு மண்டலமாக சுற்றத் தொடங்குகிறது. இவ்வாறு,விண்வெளியில், வாயு மற்றும் தூசி மண்டலத்தால் சூழப் பட்டு இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி, தற்பொழுது தவறான கருத்து நிலவுகிறது. அதாவது,விண்மேகமானது தட்டையாகச் சுருங்கிச் சுழன்ற பொழுது, மத்தியில் இருந்த பருத்த பகுதியானது நட்சத்திரமாகவும்,அதனைத் சுற்றி இருந்த தோசை போன்ற வடிவில் இருந்த , தூசி மற்றும் வாயுக்களானது, ஆங்காங்கே திரளுவதால்தான்,நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில், அந்த தூசித் தட்டு வளையங்களானது,கிரகங்கள் திரளும் தட்டு ( accretion disk ) என்றும் அழைக்கப் படுகிறது. ஆனால், உண்மையில் அந்தத் தூசித் தட்டு வளையங்களானது, ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால், உருவாக்கப் படுவது ஆகும். எனது கருத்துக்கு, சில ஆதாரங்கள். உதாரணமாக, தூசித் தட்டுக் கருத்தின் படி ,புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கும், இளவயது நட்சத்திரங்களைச் சுற்றியே,தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன தூசித் தட்டு வளையம் இருக்க வேண்டும். ஆனால்,விண்வெளியில்,இள வயது மற்றும் நமது சூரியன் போன்ற நடுத் தர வயது நட்சத்திரங்களைச் சுற்றி மட்டுமின்றி, இறுதிக் காலத்தில் இருக்கும் நட்சத்திரங்களைச் சுற்றியும், தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன,தூசித் தட்டு வளையங்கள் காணப் படுகின்றன. உதாரணமாக,பூமியில் இருந்து, நாலாயிரம் ஒளியாண்டு தொலைவில், IRAS 08544-4431 என்று அழைக்கப் படும், இரட்டை நட்சத்திரம் இருக்கிறது.அதில், ஒரு நட்சத்திரமானது 'சிவப்பு ராட்சதன்' என்று அழைக்கப் படும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்து வாயுக்கள் வெளித் தள்ளப் பட்டுக் கொண்டு இருக்கிறது. அதன் அருகில் புதிதாக உருவான, நட்சத்திரம் ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில்,சிவப்பு நட்சத்திரத்தால் வெளித் தள்ளப் பட்ட வாயு நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் தூசித் தட்டு வளையத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்,அந்தத் தூசித் தட்டானது, இளவயது நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும்,தூசித் தட்டைப் போலவே இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது, நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களில் அணுக் கரு வினையானது நின்று விடும் பொழுது,விரிவடைந்து சிவப்பு நிறமாக உருவாகும்.பின்னர் அதில் இருந்து வாயுக்கள் வெளியேறும். சில சமயம், ஒரு சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களானது, அதன் அருகில் இருக்கும் துணை நட்சதிரத்தாலும் ஈர்க்கப் பட்டு,அந்த துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களாக உருவாகும். இது போன்ற வளையங்களில் இருந்துதான் கிரகங்கள் உருவாகுவதாக நம்புவதால், இந்த வளையங்களை,கிரகங்கள் திரளும் தட்டு ( accretion disk ) என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். உண்மையில்,நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன தட்டு வளையங்களானது, ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால் உருவாகுகின்றன. இதே போன்று, என்சிலாடஸ் என்று அழைக்கப் படும்,சனி கிரகத்தின் துணைக் கோளில் இருந்து, வெளியேற்றப் படும் நீராவியானது,சனிக் கிரகத்தைச் சுற்றி இருக்கும், வளையங்களால் சேகரிக்கப் படுவதும்,காசினி செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பிளேனட்டரி நெபுலா (planetary nebula) பன்னெடுங் காலமாகவே, நம் பூமி உள்பட ஏனைய கிரகங்கள் எப்படித் தோன்றின, என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களை ரொம்பவே குழப்பிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,யுரேனஸ் கிரகத்தைக் கண்டு பிடித்த, வில்லியம் ஹெர்சல் என்ற ஆராய்ச்சியாளர்,வானத்தை ஆராய்ந்து கொண்டு இருந்த பொழுது,சிறிய புகை மண்டலத்துக்கு நடுவில்,ஒரு சிறிய ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டார். அந்தப் பொருளானது, யுரேனஸ் போலவே, நீல நிறத்தில் இருந்ததால் அதனை ஒரு கிரகமாகக் கருதினார். அதன் அடிப்படையில்,அதற்கு 'கிரக மேகம்' என்ற பொருளைத் தரும் பதமான, 'பிளேனட்டரி நெபுலா' என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அந்தப் பெயரானது ஒரு தவறான பெயர் ( misnomer ) என்று கருதப் பட்டது.ஏனென்றால் உண்மையில் அது போன்ற அமைப்புக்கும், கிரகத்துக்கும், தொடர்பு இல்லை என்று கருதப் பட்டது. குறிப்பாக, அது போன்ற மேகங்களானது,ஒரு நட்சத்திரத்தின் கடைசி கால கட்டத்தில்,அதாவது ஒரு நட்சத்திரத்தில் அணுக் கரு வினைகள் முடிந்த நிலையில், நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் வாயு மண்டல அடுக்குகளானது,விரிவடைவதால் உருவாகும் அமைப்பு, என்று புரிந்து கொண்டார்கள். குறிப்பாக, இது போன்ற வாயு மண்டலங்களானது, சில ஆயிரம் ஆண்டு காலமாகவே நிலைத்து இருப்பதும் தெரிய வந்தது. அதன் காரணமாக இது போன்ற கிரக நெபுலாக்களானது,மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப் படுகின்றன.குறிப்பாக நமது பால் வீதி நட்சத்திர மண்டலத்தில்,1500 கிரக நெபுலாக்களே காணப் படுகின்றன. இந்த நிலையில், தற்பொழுது,மிரா என்று அழைக்கப் படும், ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரத்தைச் சுற்றிலும், இதே போன்ற அமைப்பு இருப்பது,நவீன தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. குறிப்பாக, பூமியில் இருந்து நானூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும், மிரா நட்சத்திரமானது ,வெறுங் கண்ணால் காணக் கூடிய நட்சத்திரம் என்பதால், பல நூறு ஆண்டு காலமாகவே, இந்த நட்சத்திரத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி செய்தனர். அணுக்கரு வினை முடியும்,இறுதிக் கால கட்டத்தில் இருக்கும், இந்த நட்சத்திரத்தின் பிரகாசமானது,எண்பது முதல் ஆயிரம் நாளுக்கு ஒரு முறை அதிகரித்த பிறகு மங்குகிறது.பிறகு மறுபடியும் பிரகாசமடைகிறது. எனவே, இவ்வகை நட்சத்திரங்களானது ‘ஒளி வேறுபாடு அடையும்’ நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப் படுகிறது. இதே போன்று, பிரகாசம் மாறக் கூடிய, முப்பதாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2007 , ஆம் ஆண்டு, மிரா நட்சத்திரத்தை, புற ஊதா தொலைக் காட்சியில் பார்த்த பொழுது,அந்த நட்சத்திரத்துக்கு பதின் மூன்று ஒளியாண்டு நீளமுள்ள வால் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,இருபதாயிரம் மடங்கு தொலைவு ஆகும். அத்துடன், அந்த நட்சத்திரமானது,தலை தெறிக்கும் வேகத்தில் அதாவது,வினாடிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்,( வினாடிக்கு எண்பது மைல் ) பயணம் செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு, அந்த நட்சத்திரமானது, அசுர வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து கொண்டு இருப்பதால், அந்த நட்சத்திரத்தின் தலைப் பகுதிக்கு முன்னே,தொப்பி போன்ற அமைப்பு உருவாகி இருக்கிறது. அதாவது, நீரைக் கிழித்தவாறு செல்லும் படகுக்கு முன்பு, வில் போன்ற வளைவு உருவாகுவதைப் போன்று,மிரா நட்சத்திரத்துக்கு முன்பும் ஒரு வில் போன்ற வளைவு, உருவாகி இருக்கிறது. அந்த வில் வளைவானது 'போ ஷாக் 'என்று அழைக்கப் படுகிறது. மிரா நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் இருந்து,ஒவ்வொரு ஆண்டும்,பூமியின் அளவுள்ள சூடான வாயுக்களும் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக,மிரா நட்சத்திரத்தின் வாலானது, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பதாகக் கணிக்கப் பட்டு இருக்கிறது. மிரா நட்சத்திரத்துக்கு,அருகில் ஒரு துணை நட்சத்திரமும் இருக்கிறது. மிரா-பி,என்று அழைக்கப் படும் அந்த நட்சத்திரமானது,ஒரு நட்சத்திரம் வெடித்த பிறகு, உருவாகக் கூடிய, வெண்குறு நட்சத்திரம் என்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், அந்த துணை நட்சத்திரமானது,மிரா நட்சத்திரத்தில் இருந்து,நூறு விண்வெளி அலகு தொலைவில் இருக்கிறது. ஒரு விண்வெளி அலகு என்பது, சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவு ஆகும்,அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர் ஆகும். மிரா நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களில் ஒரு சதவீதம்,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தின் ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து கொள்ளப் படுகிறது. அத்துடன், அந்த வாயு மற்றும் தூசிப் பொருட்களானது,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களைப் போன்று சுற்றி இருக்கிறது. குறிப்பாக, அந்த வளையத்தில் இருக்கும் தூசி மற்றும் வாயுக்களானது, பூமியின் அளவில் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி தூசி மற்றும் வாயுக்களால் ஆன வளையமானது ‘புரோட்டோ பிளேனட்டரி டிஸ்க்’அதாவது கிரகங்களை உருவாக்கும் தட்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஏனென்றால், இது போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களில் இருக்கும் தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டுதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அதன் அடிப்படியில் அந்த வளையங்களானது திரளும் தட்டு ( accretion disk ) என்று அழைக்கப் படுகிறது. உண்மையில்,நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன,தூசித் தட்டு வளையங்களானது,ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால் உருவாகுகின்றன.என்பது IRAS 08544-4431 என்று அழைக்கப் படும் இரட்டை நட்சத்திர அமைப்பு மூலம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தூசித் தட்டுக் கருத்தின் படி,ஒரு நட்சத்திரம் அல்லது கிரகத்தைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கும் தூசித் தட்டானது,அந்த நட்சத்திரம் அல்லது கிரகம் சுழன்று கொண்டு இருக்கும் திசைக்கு இணையாக இருக்க வேண்டும். இந்த நிலையில்,பூமியில் இருந்து 434 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,J 1407,என்று அழைக்கப் படும் கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களானது,அந்தக் கிரகம் சுற்றிக் கொண்டு இருக்கும் திசைக்கு, எதிர் திசையில் சுற்றிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 000 புளூட்டோவின் சுற்றுப் பாதைக்கு ஆராய்ச்சியாளர்களின் விளக்கம் என்ன? விளக்கம் ஒன்று-புளூட்டோ வேறு முறையில் உருவாகி இருக்கலாம். விளக்கம் இரண்டு-கடந்த காலத்தில்,நெப்டியூனுக்கு அருகில் இருந்த புளூட்டோ வெளிப் பக்கத்துக்கு தள்ளப் பட்டு இருக்கலாம். ------ CfA astronomer Scott Kenyon and his colleague Ben Bromley from the University of Utah performed numerical simulations (using codes they developed) to test these possibilities. They find that the most reasonable scenario is that Pluto and Charon formed from particles that coalesced together in the disk around the Sun – the same process that formed the Earth. Subsequently there was an impact that left them with their current sizes as a gravitationally bound, binary pair. The collision left debris behind that accumulated in a circumbinary disk. Eventually the four smaller satellites, along with probably even more as-yet undetected siblings, formed from the coalescence of particles in the circumbinary disk. It remains unclear whether the satellites drift outward to their current orbits after they have formed or while they are forming, but future simulations should resolve this uncertainty. Conclusions from this new work are soon to be tested: The NASA “New Horizons” probe mission will fly by the system in July 2015. 000 கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு காரணம் என்ன ? புளூட்டோவின் நீள் வட்டப் பாதைக்கு,புளூட்டோவானது,நெப்டியூனுக்கு அருகில் உருவான பிறகு,வெளித் தள்ளப் பட்டு இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்த நிலையில்,தற்பொழுது வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களின் நீள் வட்டப் பாதைக்கு,அந்த துணைக் கோள்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணம் என்று கொலராடோ பல்கலைக் கழகத்தின் வலைத் தளத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. அப்படியென்றால்,சூரியனை நீள் வட்டப் பாதையில் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பா? என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று,நிலவின் நீள் வட்டப் பாதைக்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. 000 சூரியனைக் கிரகங்கள்,ஏன் வெவ்வேறு கோணத்தில் வலம் வருகின்றன? சூரியனைக் கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதே போன்று,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. சூரியனானது,விண்வெளியில்,வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.இதே போன்று,விண்வெளியில் பல எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களும்,மிதந்து சென்று கொண்டு இருக்கின்றன. அது போன்ற எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைச் சூரியனானது,தனது ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து இழுக்கிறது. அப்பொழுது,சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மேற்பகுதியில் இருக்கும்,ஹைட்ரஜன்,ஹீலியம் போன்ற இலேசான வாயுக்கள்,ஆவியாகி விடுகிறது.இதனால் அந்த நட்சத்திரத்திற்கு உள்ளே,இருக்கும், ஆக்சிஜன்,சோடியம், கால்சியம்,மெக்னீசியம்,கார்பன்,சிலிக்கன்,போன்ற கனமான வாயுக்கள்,குளிர்ந்து திரண்டு கிரகமாக உருவாகுகின்றன. முக்கியமாகச் சூரியனின் துருவப் பகுதியை விட நடுப் பகுதியே, அதிகம் பருத்து இருப்பதால்,அந்தப் பகுதியிலேயே,அதிக நிறை இருக்கிறது. எனவே,சூரியனால், கவர்ந்து இழுக்கப் பட்டு, கிரகமாக மாறிய எரிந்து முடிந்த நட்சத்திரமும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வரத் தொடங்கு கிறது. அதே நேரத்தில்,சூரியனின் வட துருவப் பகுதியானது,சூரியன் செல்லும் திசையை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியன் நகந்து கொண்டு இருப்பதால்,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகத்தின் சுற்றுப் பாதையானது சாய்ந்து விடுகிறது. அதாவது,சூரியனின் நடுப் பகுதியை கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியன் முன் நோக்கி நகர்ந்து விடுவதால்,இப்பொழுது,சூரியனின் நடுப் பகுதியை மையமாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது,தற்பொழுது,புதிய இடத்தில் இருக்கும் சூரியனை துரத்திச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. எனவே,ஒரே நேரத்தில்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வருவதற்கு ஒரு கிரகமானது மேலும் கீழுமாகவும் சுற்ற வேண்டும்,அதே நேரத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் சூரியனைக் கிடை மட்டமாகவும் துரத்திச் செல்லவதால்,சூரியனைச் சுற்றும் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு சாய்வாக அமைகிறது. 000 புளூட்டோவின் சாய்வான சுற்றுப் பாதைக்கு நாசாவின் விளக்கம் என்ன? சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும்,தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில்,புளூட்டோ வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, நெப்டியூன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பாதிப்பே காரணம், என்று நாசாவின் இணைய தளத்தில்,தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. https://www.nasa.gov/mission_pages/hubble/science/outofwack.html The outermost dwarf planets like Pluto are in inclined orbits, but these have been modified by Neptune's gravity and are not embedded deep inside the Sun's gravitational field. 0000 கோள்களின் சுற்றுப் பாதைக்கு எனது விளக்கங்கள். சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும்,சுற்றுப் பாதையானது,சூரியன் செல்லும் திசைக்கு அறுபது டிகிரி சாய்வாக இருப்பதற்குக் காரணம் என்ன? பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் சுற்றுப் பாதையானது,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு, ஐந்து டிகிரி சாய்வாக இருப்பதற்குக் காரணம் என்ன? சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும்,சுற்றுப் பாதையானது,சூரியன் செல்லும் திசைக்கு அறுபது டிகிரி சாய்வாக இருப்பதற்கும்,சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில்.வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், சூரியனின் நகர்ச்சியே காரணம். பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் சுற்றுப் பாதையானது,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு, ஐந்து டிகிரி சாய்வாக இருப்பதற்கு,சூரியனுடனான,பூமியின் நகர்ச்சியே காரணம். 0000 நீள் வட்டப் பாதையின் மர்மம் சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளமானது,பால் வீதி நட்சத்திர மண்டலத் தட்டின் விளிம்புப் பகுதிக்கு,அறுபது டிகிரி கோணத்தில் இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு இது வரை யாரும் விளக்கம் கூற வில்லை. https://usm.maine.edu/planet/are-all-planets-orbits-such-they-are-same-plane-earths-orbit-or-are-we-missing-many-planets https://www.space.com/18561-how-was-pluto-formed.html வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால்,விண்வெளியில் சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு,அறுபது டிகிரி கோணத்தில்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு இது வரை யாரும் விளக்கம் கூற வில்லை. அதே போன்று,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு ,பதினேழு டிகிரி கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு இது வரை யாரும் விளக்கம் கூற வில்லை. 000 சூரிய மண்டலத்தின் புதிர்கள். தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்ட,பல்வேறு ஆய்வுத் தகவல்களை ஆய்வு செய்ததன் மூலம்,கிரகங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கள் கேள்விக் குறியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கம் கேள்விக் குறியாகி இருக்கிறது. அதே போன்று,நிலவானது,பூமியைச் சூரியன் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது. அதே போன்று,கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில்,சாய்வான கோணத்தில்,சூரியனை வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது. குறிப்பாக,புதன் கிரகமானது,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 000000000000000000000000000000 அதிக வெப்பத்தில் உருவாகக் கூடிய பாறைகள்,வால் நட்சத்திரங்களில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பது தெரிய வந்துள்ளது. தற்பொழுது,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ‘நெபுலா கொள்கை’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார். இந்தக் கருத்தின் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிகழ்வின் பொழுது, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,ஒரு கோடி ஆண்டு காலகட்டத்தில், பூமி செவ்வாய் போன்ற, சிறிய அளவிலான பாறைக் கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது. அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின், மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர்,சூரியனுக்குத் தொலைவில் இருந்த தூசிகள் திரண்டதால், முதலில் பாறைக் கிரகங்களாக உருவான பிறகு,அந்தப் பாறைக் கிரகங்களானது,அந்தப் பகுதியில் இருந்த வாயுக்களைக் கவர்ந்ததால், வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது. பாறைக் கிரகங்களுக்கும்,ராட்சத வாயுக் கோளக் கிரகங்களுக்கும் இடையில் இருந்தபடி,குறிப்பாக செவ்வாய்க் கிரகத்துக்கும்,வியாழன் கிரகத்துக்கும், இடையில் இருக்கும் பகுதியில்,அதாவது விண்பாறைகள் இருக்கும் பகுதியானது,நீர் பனியாக உறையும் பகுதி என்று கருதப் படுகிறது. அதே போன்று,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால், மிகவும் குறைந்த வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால், மீத்தேன், அம்மோனியா, நைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய,வாயுக்கள் உறையும் பகுதி எனக் கருதப் படுகிறது குறிப்பாக, நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால்,பனி திரண்டு வால் நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் பட்டது. எனவே வால் நட்சத்திரங்களில்,எளிதில் ஆவியாகக் கூடிய, கார்பன் டை ஆக்சைடு,நீர்,சோடியம் போன்ற பொருட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 2004,ஆம் ஆண்டு, நாசாவைச் சேர்ந்த, ஆராய்ச்சியாளர்கள், வைல்ட்-2 , என்ற வால் நட்சத்திரத்தில் இருந்த பொருட்களை,ஸ்டார் டஸ்ட் என்ற செயற்கைக் கோள் மூலம், சேகரித்துப் பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்தனர். அப்பொழுது, அந்த வால் நட்சத்திரத்தில்,சிலிகேட் படிகப் பாறையான, ஆலிவியன்,அனோர்டைட்,மற்றும் டையாப் சைட் ஆகிய பாறைத் துகள்கள் இருப்பதைக் கண்டனர். ஆனால்,இவ்வகைப் பாறைப் பொருட்களானது,சூரியனுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு அருகில்,இருக்கும் அதிக வெப்பமான சூழ் நிலையில் உருவாகக் கூடியது. ஆனால்,தூசித் தட்டுக் கருத்தின் படி,வால் நட்சத்திரங்கள் எல்லாம்,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் குளிர்ந்த பகுதியில் உருவாகக் கூடியது என்று நம்பப் பட்டதற்கு முற்றிலும் முரணாக,வைல்ட் வால் நட்சத்திரத்தில்,சூரியனுக்கு அருகில்,இருக்கும் அதீத வெப்ப நிலையில் உருவாகக் கூடிய பாறைப் பொருட்கள் இருப்பது,சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்த தூசித் தட்டுக் கருத்தை கேள்விக் குறியாகி விட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அந்த வால் நட்சத்திரத் துகள்களில்,நீரின் உதவியுடன் உருவாகும்,இரும்பு மற்றும் காப்பர் சல்பேட் ,இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். எனவே,கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றிய, தூசித் தட்டுக் கருத்தானது, ஒரு தவறான கருத்து என்பது,வால் நட்சத்திரங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பொருட்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று,எளிதில் ஆவியாகக் கூடிய, மீத்தேன்,நைட்ரஜன்,குளோரின் போன்ற வாயுக்கள் மற்றும் நீரானது,சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களில்,காணப் படுவதன் அடிப்படையில்,சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரியன் உருவான காலத்தில், சூரியனுக்கு அருகில் இருந்த அதீத வெப்பத்தால்,எளிதில் ஆவியாகக் கூடிய,மீத்தேன்,நைட்ரஜன்,குளோரின் போன்ற வாயுக்கள் எல்லாம்,செவ்வாய் கிரகத்துக்கும் அப்பால் இருந்த படி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் இருக்கும் பகுதிக்குக் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு,அமெரிக்க நாட்டின் நியூ ஹாரிசன் விண்வெளிக் கலனானது,புளூட்டோவைக் கடந்து சென்ற பொழுது,சூரியனின் கதிர் வீச்சின் காரணமாகப் புளூட்டோவில் இருந்து,நைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. புளூட்டோவானது,சூரியனில் இருந்து, பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,முப்பது மடங்கு தொலைவில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் புளூட்டோவில் இருந்து, சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, நைட்ரஜன் வாயு வெளியேறிக் கொண்டு இருக்கும் நிலையில், சூரியன் உருவாகிய காலத்தில்,சூரியனுக்கு அருகில் நைட்ரஜன் இருந்திருக்க சாத்தியம் இல்லை. எனவே, பூமி உள்பட, சூரியனுக்கு அருகில் இருக்கும்,கிரகங்களில்,எளிதில் ஆவியாகக் கூடிய நைட்ரஜன் வாயுவுடன் ஒரு கிரகம் உருவாக சாத்தியம் இல்லை. ஆனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியின் வளி மண்டலத்தில், எழுபத்தி எட்டு சதவீதம்,அதாவது முக்கால் பங்குக்கும் அதிக அளவில்,, நைட்ரஜன் இருக்கிறது. இவ்வாறு, பூமியில் நைட்ரஜன் வாயு இருப்பதற்கு,ஒரு வேளை,பூமிக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நைட்ரஜன் வாயு வந்து இருக்கலாம் என்றும் கூட, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று,பூமியில் இருக்கும் குளோரின்,மீத்தேன் போன்ற வாயுக்களும் கூட, வால் நட்சத்திரங்கள் மூலம், வந்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், பூமியை விட,அதிக தொலைவில் இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,செவ்வாய் கிரகத்துக்கு அருகில் வந்த, சைடிங் ஸ்ப்ரிங் ,வால் நட்சத்திரத்தில் இருந்து,எளிதில் ஆவியாகக் கூடிய சோடியம்,உள்பட, மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும், துத்தநாகம் போன்ற தனிமங்கள், வெளியேறி இருப்பதும் செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக,அமெரிக்கா ,மாவென் என்ற செயற்கைக் கோளை ஏவியது. அந்த செயற்கைக் கோளானது, செவ்வாய் கிரகத்தை அடைந்த நேரம்,சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால் நட்சத்திரமானது,செவ்வாய்க் கிரகத்தை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது. அதனால், அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் இருந்த தூசிப் பொருட்களானது, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பை, செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்த பொழுது, ,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று,செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும்,கண்டு பிடிக்கப் பட்டது. சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு அருகில்,சென்ற வால் நட்சத்திரத்தில் இருந்த உலோக வாயுக்களானது,சூரியக் கதிரால் ஆவியாகி இருக்கும் நிலையில்,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனில் இருந்து, குறைந்த தொலைவில்,இருக்கும் இடத்தில், அந்த வாயுக்களானது,ஆவியாகாமல் இருந்திருக்க சாத்தியம் இல்லை. எனவே,சூரியன் உருவாகும் பொழுது,சூரியனுக்கு அருகில் இருந்த அதிகப் படியான வெப்பத்தால்,சூரியனுக்கு அருகில்,இருந்த தூசி மற்றும் வாயு மண்டலத்தில்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல், குரோமியம்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன், போன்ற வாயுக்கள் நீண்ட காலமாக இருந்திருக்க சாத்தியம் இல்லை. ஆனால்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல், குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்கள்,பூமியில் ஏராளமாகக் காணப் படுகின்றன. இவ்வாறு,பூமிக்கு அடுத்தபடியாக இருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தில் இருந்து,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, ஆவியாகக் கூடிய, சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல், குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்களானது,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியில் காணப் படுவதன் மூலமாகவும், சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்த விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதே போன்று, நிலவில் இருந்தும், சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில், கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகமான,புதன் கிரகத்தில் இருந்தும்,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, சோடியம் வாயு, வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே,புதன் கிரகமானது, எப்படி சூரியனுக்கு அருகில்,சோடியம் வாயுவுடன் உருவானது,என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர் வீச்சின் காரணமாக, சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களில் இருந்து, ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்கள் வெளிப்பட்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதே போன்று, சூரியனை நோக்கி வரும் வால் நட்சத்திரங்களில்,குறிப்பாக அந்த வால் நட்சத்திரங்களானது,செவ்வாய் கிரகம் இருக்கும் தொலைவை நெருங்கும் பொழுதே,அந்த வால் நட்சத்திரங்களில் இருந்து, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களானது.சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, வெளியேற்றப் படுவதும்,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன்,சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் கிரகங்களில் இருந்து,சூரியனின் கதிர் வீச்சு காரணமாக, வெளியேற்றப் படும் வாயுக்களுடன்,சூரியனுக்கு அருகில் ஒரு கிரகம் உருவாக இயலாது. எனவே,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி தூசிமண்டம்,சுழன்று கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அதில் இருந்த,தூசிகளும்,வாயுக்களும் ஆங்கங்கே உருண்டு திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம், என்பது சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களில்,சூரியக் கதிர்வீச்சால் எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் மற்றும் உலோகங்கள் காணப் படுவதன் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மூலம்,நிலவின் அடிப் பகுதியில், பூமியில் இருக்கும் அளவுக்கு, நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால்,தூசித் தட்டுக் கருத்தின் படி,நிலவிலோ,பூமியிலோ,எளிதில் ஆவியாகக் கூடிய நீர் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால், முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி தூசிமண்டம்,சுழன்று கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அதில் இருந்த,தூசிகளும்,வாயுக்களும் ஆங்கங்கே உருண்டு திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் இந்த நிகழ்வின் பொழுது, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால் சூரியனுக்கு அருகில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன் போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. ஆனால்,நீர் மூலக் கூறானது,ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களால் ஆனது, எனவே,பூமி மட்டுமின்றி நிலவுக்கும் கூட,நீரானது,சூரியனில் இருந்து அதிக தொலைவில் உருவாகுவதாக நம்பப் படும், வால் நட்சத்திரங்கள் மூலம், வந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது. இந்த நிலையில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். அதே போன்று,நிலவில்,எரிமலைச் செயல் பாட்டினால்,நிலவின் அடிப்பகுதியில் இருந்து,நிலவின் மேற்பரப்புக்கு வந்த,பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே,அதிக அளவில் நீரின் மூலக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,அந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளானது,நிலவின் அடிப் பகுதியில் உருவானவைகள் என்பதால்,அதனுள் இருக்கும் நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீராகும். அது மட்டுமின்றி இது போன்ற எரிமலைச் செயல் பாட்டின் பொழுது தொண்ணூற்றி ஐந்து சதவீத நீரானது ஆவியாகி விடும். எனவே,நிலவின் மேற்பரப்பில் இருந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே இருந்த நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீரின் ஒரு சிறிய பகுதியையே குறிக்கிறது. இதன் அடிப்படையில்,நிலவில்,தற்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவில், நீர் இருந்து இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே,நிலவிலும்,பூமியிலும்,நீர் பெருமளவில் காணப் படுவதன் அடிப்படையிலும்,சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்துக் கூறப் படும்,தூசித் தட்டுக் கருத்தானது ஒரு தவறான கருத்து என்பது,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கிரகங்கள் எல்லாம்,சூரியனை ஏன் வெவ்வேறு கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருக்கிறது? முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சுழன்றதாகவும், அப்பொழுது,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், ஓரப் பகுதியில் இருந்த, தூசி மற்றும் வாயுக்கள், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி, எல்லாக் கிரகங்களும், சூரியனை ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு, நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும், அப்பொழுது ஏற்பட்ட, அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது. அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படுகிறது. இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது. இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல் கருத்த்தின் மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில்,பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படும் ஒரு நிகழ்வு,நடைபெற வில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. கிரகங்கள் எல்லாம் ஏன் தன் அச்சில் சாய்ந்த நிலையில்,சுழன்று கொண்டு இருக்கின்றன? அதே போன்று,பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி, சாய்ந்து இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் பூமியின் மேல் தியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நாசாவின் இணைய தளத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. எனவே,பூமி ஏன் தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி,சாய்ந்த நிலையில், சுழன்று கொண்டு இருக்கிறது என்ற கேள்வியும், விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே போன்று,யுரேனஸ் கிரகமானது,தன் அச்சில் தொண்ணூறு டிகிரி சாய்வான நிலையில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், முன் ஒரு காலத்தில் யுரேனஸ் கிரகத்தின் மேல் ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,சூரிய மண்டலத்தில், பூமி மற்றும் யுரேனஸ் மட்டுமின்றி, புதன்,வெள்ளி,செவ்வாய், வியாழன்,சனி, நெப்டியூன் ஆகிய அணைத்து கிரகங்களுமே,அதனதன் அச்சில் சாய்ந்த நிலையிலேயே ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அப்படியென்றால் எல்லாக் கிரகங்களின் மேலும்,ஒரு கிரகம் மோதியதா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன்,கிரகங்கள் தன் அச்சில் சாய்ந்த நிலையில் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் படும் விளக்கத்தின் மேலும் சந்தேகம் எழுகிறது. புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குக் காரணம் என்ன? இதே போன்று,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும், தளத்தில் இருந்து,புதன் கிரகமானது ஏழு டிகிரி கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருப்பது புதிராக இருந்தது. அத்துடன்,புதன் கிரகமானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கு திரும்ப வராமல்,ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் மாறி, புதிய இடத்துக்கு வந்ததும் புதிராக இருந்தது. சர் ஐசக் நியூட்டனால், இந்தப் புதிருக்கு விளக்கம் கூற இயலவில்லை. நூற்றி தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்விக்கு யாராலும் விளக்கம் கூற இயலவில்லை. அப்பொழுது ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல, மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு. அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்குச் சூரியனின் ஈர்ப்பு விசையானது, நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. மாறாகச் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். ஆனால், ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது. பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது. உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால், சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இதே போன்று,புளூட்டோவின் ஈர்ப்பு விசையால்,அதன் நிலவான சரண்,புளூட்டோவை வலம் வரும் பொழுது,சரணின் ஈர்ப்பு விசையால்,புளூட்டோவும்,சிறிய அளவில்,வட்டமடிக்கிறது. அத்துடன், தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று,முழு நிலவு அன்று,கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று,ஸ்ருதினி 3753 என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையானது,பூமியைச் சுற்றிலும் குதிரை லாடம் போன்ற சுற்றுப் பாதையில், சுற்றிக் கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இரண்டாவது நிலா என்று அழைக்கப் படும் அந்த விண் பாறையானது,குதிரை லாட வடிவில் ,பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதற்கு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். எனவே, ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே,புதன் கிரகமானது,ஏன் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியானது விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே போன்று, மற்ற கிரகங்களும்,ஏன் சூரியனைச் சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியும் விடை கூறப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. அத்துடன்,தூசித் தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் எல்லாம்,அதனதன் அச்சில் சாயாமல் சுழன்று கொண்டு இருக்க வேண்டும் என்றும், எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால்,புதன் கிரகம் உள்பட,அனைத்துக் கிரகங்களும், சூரியனை சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக,புதன் கிரகமானது, தன் அச்சில், 0.03, டிகிரியும், வெள்ளி கிரகமானது, தன் அச்சில், 2.64 ,டிகிரியும்,செவ்வாய் கிரகமானது, 25.19,தன் அச்சில்,டிகிரியும்,வியாழன் தன் அச்சில், 3.13 ,டிகிரியும், சனி தன் அச்சில், 26.73 ,டிகிரியும், யுரேனஸ் தன் அச்சில், 82.23 ,டிகிரியும், நெப்டியூன் தன் அச்சில், 28.32 ,டிகிரியும்,சாய்ந்த படி சுழன்று கொண்டு இருக்கின்றன. எனவே,கிரகங்கள் ஏன் வெவ்வேறு கோணத்தில்,சாய்ந்த நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக,சூரியன் கூட,தன் அச்சில், 7.25 , டிகிரி சாய்ந்த நிலையில்தான் தன் அச்சில் ,சுழன்று கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. 000 கிரகங்களின் சுற்றுப் பாதை ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து ... உண்மையில் நான் சூரிய மண்டலக் கிரகங்களின் சுற்றுப் பாதை குறித்து ஆராய்ச்சி செய்ய வில்லை. எனது ஆராய்ச்சியின் மையப் புள்ளியே,கிரகங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதே. அதற்காக நான் இணையத்தில் வெளியிடப் பட்டு இருந்த,பல வேற்று கிரக அமைப்புகள் குறித்த தகவல்களைப் படித்த பொழுது,பல வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரத்தை,வால் நட்சத்திரங்களைப் போன்று,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து படித்தேன்.ஆனால், அதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் ஏதும் தெரிவிக்காதது ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது,எனக்கு அந்த வேற்று கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,அதன் தாய் நட்சத்திரங்களின் முன் நோக்கிய நகர்வே காரணம் என்பது புரிந்தது. எனவே,எனது விளக்கத்தை எனது ’’பூமிப் பந்தின் புதிர்கள்’’ புத்தகத்தில் எழுதினேன். குறிப்பாக,சூரிய மண்டலக் கிரகங்கள் ஓரளவு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்ததால்,அது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.எனவே எனது விளக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல்,ஒரு பக்கத்தில்,மூலையில்,ஓரிரு வாக்கியத்தில் மட்டும் மிகச் சுருக்கமாகத் தெரிவித்து இருந்தேன். ஏனென்றால் இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டும் என்று கருதினேன். தொடர்ந்து இணையத்தில் அது தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்தேன். இந்த நிலையில்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நியூட்டன் தெரிவித்த விளக்கத்தை நாசாவின் இணைய தளத்தில் படித்தேன். https://earthobservatory.nasa.gov/Features/OrbitsHistory/page2.php குறிப்பாக,நியூட்டன் அவர்கள்,பூமியை நிலா வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நேராகச் செல்லும் நிலவை,சூரியனின் ஈர்ப்பு விசையானது தொடர்ந்து இழுப்பதால்,நிலவின் பாதையானது,தொடர்ந்து வளைக்கப் படுவதாகவும்,அதனால் நிலவின் பாதையானது,வட்டமாக மாறுவதாகவும்,தெரிவித்து இருந்தார். அதே போன்று,சூரியனைக் கிரகங்களும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாகவும்,நாசாவின் இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் ,சூரியனைக் கிரகங்களும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, நியூட்டனின் விளக்கத்தைப் பற்றி தெரிவித்த நாசாவின் இணைய தளத்தில், அடைப்புக் குறிக்குள் ,ஏறக் குறைய வட்டப் பாதை என்று தெரிவித்து இருந்தது. எனவே,உண்மையில் நியூட்டன் கூறிய விளக்கமானது நீள் வட்டப் பாதைக்கா அல்லது வட்டப் பாதைக்கா என்று தெளிவு படுத்தப் படாத நிலை இருந்தது. இந்த நிலையில்,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு,ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறையும் சூரியனை வலம் வரும் பொழுது,புறப் பட்ட இடத்திற்கு வராமல்,சிறிது விலகிச் சென்றதற்கும்,நியூட்டனால் விளக்கம் அளிக்க இயல வில்லை என்பது குறித்தும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு,இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசை அல்ல என்றும்,மாறாக ஈர்ப்பு என்பது,விண்வெளியில்,பொருளின் நிறையால்,விண் வெளி வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். ஆனால், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். எனவே,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. எனவே,புதன் கிரகத்தின் சாய்வான சுற்றுப் பாதைக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று,மற்ற கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதிக்கும் காரணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் பொதுத் தளத்துக்கு பதினேழு டிகிரி கோணத்தில்,சூரியனைப் புளூட்டோ வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது குறித்தும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். அத்துடன், இன்று வரை புளூடோவின் சுற்றுப் பாதைக்கான காரணம் உறுதி செய்யப் பட வில்லை என்பதையும், இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். முக்கியமாகச் சூரியனும் ,அதன் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில், விண்வெளியில்,இருந்த ஒரு ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது. எனவே,தூசித் தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாம், சூரியனை ஒரே தளத்தில்,வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால், அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு, நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும், அப்பொழுது ஏற்பட்ட, அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது. அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படுகிறது. இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது. இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல் கருத்த்தின் மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில்,பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படும் ஒரு நிகழ்வு,நடைபெற வில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,கிரகங்களின் சுற்றுப் பாதைக்கான காரணம் குறித்து இன்று வரை சரியான விளக்கம் கூறப் படவில்லை. அதற்குக் காரணம் ஆராய்ச்சியாளர்கள் தூசித் தட்டுக் கருத்தை நம்புவதே ஆகும். 000 ஏனென்றால்.... உண்மையில் நான் சூரிய மண்டலக் கிரகங்களின் சுற்றுப் பாதை குறித்து ஆராய்ச்சி செய்ய வில்லை. எனது ஆராய்ச்சியின் மையப் புள்ளியே,கிரகங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதே. அதற்காக நான் இணையத்தில் வெளியிடப் பட்டு இருந்த,பல வேற்று கிரக அமைப்புகள் குறித்த தகவல்களைப் படித்த பொழுது,பல வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரத்தை,வால் நட்சத்திரங்களைப் போன்று,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து படித்தேன்.ஆனால், அதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் ஏதும் தெரிவிக்காதது ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது,எனக்கு அந்த வேற்று கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,அதன் தாய் நட்சத்திரங்களின் முன் நோக்கிய நகர்வே காரணம் என்பது புரிந்தது. எனவே,எனது விளக்கத்தை எனது ’’பூமிப் பந்தின் புதிர்கள்’’ புத்தகத்தில் எழுதினேன். குறிப்பாக,சூரிய மண்டலக் கிரகங்கள் ஓரளவு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்ததால்,அது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.எனவே எனது விளக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல்,ஒரு பக்கத்தில்,மூலையில்,ஓரிரு வாக்கியத்தில் தெரிவித்து இருந்தேன். ஏனென்றால் இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டும் என்று கருதினேன். 0000 விண்வெளி அறிவியலில் சில முக்கிய மைல் கற்கள். தாலமி-சூரியன் சந்திரன் உள்பட அனைத்து கிரகங்களும் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. கோபர் நிக்கஸ்-பூமி உள்பட அனைத்து கிரகங்களும்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஜோகனஸ் கெப்ளர்-சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சர் ஐசக் நியூட்டன்-சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,ஈர்ப்பு விசையே காரணம். க.பொன்முடி- சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில்(inclined orbit ) வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் நகர்ச்சியே காரணம். சூரியனைக் கிரகங்கள்,நீள் வட்டப் பாதையில் (elongated orbit ) வலம் வந்து கொண்டு இருப்பதற்கும்,சூரியனின் நகர்ச்சியே காரணம். 000 ஐன்ஸ்டீனின் தவறான விளக்கத்திற்கு மாற்றாக எனது விளக்கம். கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு ஐன்ஸ்டீன் கூறிய தவறான விளக்கத்திற்கு மாற்றாக எனது விளக்கம். உண்மையில் சூரியனைக் கிரகங்கள் வலம் வரும் பொழுது ,புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வருவதில்லை.உதாரணமாகச் சூரியனை எண்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வலம் வரும், புதன் கிரகமானது,ஒவ்வாரு சுற்றுக்கும் இருபது மைல் விலக்கம் அடைகிறது. கிரகங்களின் சுற்றுப் பாதையே ,சூரியனைச் சுற்றுவதற்கு,ஐன்ஸ்டீனின் விளக்கம் ,அதாவது தற்பொழுது நம்பப் படும் விளக்கம். என்னவென்றால்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக விண்வெளியில் ஏற்படும் ஒரு விளைவு.அதாவது சூரியனின் நிறையால் ,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுகிறது. அதனால் ,சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகுகிறது.அந்தப் பள்ளத்த்தின் வழியாகக் கிரகங்கள் செல்லும் பொழுது,கிரகங்களின் பாதையானது வளைக்கப் படுகிறது. ஆனால் ஐன்ஸ்டீனின் விளக்கம் தவறு. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ எனது விளக்கம்- கிரகங்களின் சுற்றுப் பாதையே ,சூரியனைச் சுற்றுவதைப் போலவே,நிலவின் சுற்றுப் பாதையும்,பூமியைச் சுற்றுகிறது.இதன் மூலம்,பூமியைப் போலவே,சூரியனும்,விண்வெளியில்,வளைவான பாதையில்,பயணம் செய்து கொண்டு இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ தற்பொழுது நிலவின் சுற்றுப் பாதையானது,பூமியை சுற்றுவதற்குக் கூறப் படும் காரணம்-இணையத்தில் படித்தது- https://en.wikipedia.org/wiki/Orbit_of_the_Moon நிலா வலம் வந்து கொண்டு இருக்கும்,பூமியானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,அதன் வேகமானது மாறுபடுகிறது. குறிப்பாக,நிலவானது சூரியனை வலம் வரும் பொழுது,பூமியானது சூரியனுக்கு அருகில் வரும் பொழுது,வேகமாகவும்,அதே போன்று,சூரியனில் இருந்து தொலைவில் செல்லும் பொழுது,மெதுவாகவும் நகர்கிறது. இந்த வேக மாறுபாடானது,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 000 சூரிய மண்டலத்தின் புதிர்களை விடுவித்தல். சூரியனும் ,அதன் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில், விண்வெளியில்,இருந்த ஒரு ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது. எனவே,தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் எல்லாம் ஒரே தளத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால்,பூமியானது தன் அச்சில்,இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில்,சுழன்று கொண்டு இருக்கிறது, ஆனால்,சூரியனைக் கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே போன்று,பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. உண்மையில்,இந்தக் கிரகங்கள் எல்லாம்,ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்றதால் உருவாக வில்லை. மாறாக, விண்வெளியில் சூரியன் பயணம் செய்து கொண்டு இருந்த பொழுது,வெவ்வேறு காலத்தில்,சூரியனால் ஈர்க்கப் பட்டு, ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்களின் மையக் கோளங்கள் ஆகும். அதனாலேயே,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒவ்வொரு கிரகங்களும்,வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே,போன்று, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒவ்வொரு கிரகங்களும், வெவ்வேறு கோணத்தில்,அதன் அச்சில் சாய்ந்த நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆதாரங்கள். எரிந்து முடிந்த நட்சத்திரத்துக்கு உள்ளே உருவாகி இருந்த, நிலா அளவு வைரக் கோளப் படிகம். பி பி எம் 370 93 என்று அழைக்கப் படும் ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் நிலாவை விடப் பெரிய ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருக்கிறது. நிலவின் குறுக்களவு 3,475 கிலோ மீட்டர்தான் ,ஆனால் எரிந்து முடிந்த நட்சத்திரமான பி எம் 370 93 க்குள் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகத்தின் குறுக்களவு 4,020 கிலோ மீட்டர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான வைரக் கோளத்தைச் சுற்றிலும் வாயுக்கள் சூழ்ந்து இருக்கிறது. பூமியில் இருந்து ஐம்பது ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் ,இந்த எரிந்து முடிந்த நட்சத்திரத்தை, ஹார்வர்ட் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,நில நடுக்கத்தை உணரும் கருவிகள் மூலம் கண்டு பிடித்தனர். பி பி எம் 370 93 நட்சத்திரம் எரிந்து முடிந்த நிலையில் அதன் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கார்பன் அணுக்களானது, அதனைச் சுற்றி இருந்த பிரமாண்ட வாயுக்களின் அழுத்தத்தால் வைரக் கோளமாக உருவாகி இருக்கிறது. விண்வெளியில் வைரக் கிரகங்கள். இந்த நிலையில்,அதிவெப்பக் கதிர் வீச்சு நட்சத்திரத்தை மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும் சிறிய கிரகங்களானது, வைரக் கிரகங்களாக இருக்கக் கூடும்.என்று விஞ்ஞானிகள் விளக்கம். கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில்,நமது சூரியக் குடும்பத்தை மாதிரியாக வைத்து,ஒரு கருத்து உருவாக்கப் பட்டது. அதன் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் சாண்டர் வோல்சான் என்பவர்,ஒரு வேற்று கிரகத்தைக் கண்டு பிடித்தார். ஆனால் அவரின் கண்டு பிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஏனென்றால் வோல்சான் கண்டு பிடித்த கிரகமானது நமது சூரியனை விட பல மடங்கு வெப்பமான கதிர் வீச்சை வெளியிடக் கூடிய நட்சத்திரமாக இருந்தது. அத்துடன் அந்தக் கிரகமானது,அந்த அதிவெப்ப நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாகவும் வலம் வந்து கொண்டு இருந்தது. எனவே எப்படி ஒரு கிரகம் ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு மிக அருகில் உருவானது?முக்கியமாக எப்படி அந்த கிரகமானது அதிவெப்பச் சூழலில் ஆவியாகாமல், அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தன. இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி.அந்த அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு வைரப் படிகங்களால் ஆனா வைரக் கிரகங்களாக இருக்கும் என்று விளக்கம் கூறி இருந்தார். ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் எப்படி வைரம் உருவாக முடியும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்,விண்வெளியில் பல நட்சத்திரங்கள், அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் வாயு மண்டலத்தை, ஆவியாக்கிக் கொண்டு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அத்துடன்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய அளவில் ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் நான்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தேன். குறிப்பாக எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களை அதி வெப்ப நட்சத்திரங்கள் கவர்ந்து இழுத்து அதன் வெளிப் பகுதி வாயு மண்டலத்தை ஆவியாக்கி விடும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகங்களானது,வைரக் கிரகங்களாக அதி வெப்ப நட்சத்திரங்களை வலம் வருகின்றன என்று விளக்கம் கூறி இருந்தேன். அதன் அடிப்படையில்,நமது பூமி உள்பட,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் மற்றும் அந்தக் கிரகங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் துணைக் கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான பிறகு,சூரியனின் ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப் பட்ட பொழுது,அதன் வெளிப் பகுதியில் இருந்த வாயுக்களானது விண்வெளியில் விசிறியடிக்கப் பட்ட பிறகு தற்பொழுது கிரகங்களாகவும் துணைக் கிரகங்களாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று தெரிவித்து இருந்தேன். சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில்,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்பு,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கத்தைக் குறிப்பிட வேண்டியது அவசியம். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்ளர்தான்,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறினார். ஆனாலும் அவர், கிரகங்கள்,சூரியனை வலம் வருவதற்கான காரணம் குறித்து சிந்திக்க வில்லை. இந்த நிலையில்,ஒரு வால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றிச் செல்வதை அறிந்த,சர் ஐசக் நியூட்டன்,சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதை அறிந்தார். அதே போன்று,நிலவானது,பூமியை சுற்றிவருவதற்கும்,ஈர்ப்பு விசையே காரணம் என்று,நியூட்டன் புரிந்து கொண்டார். அப்படியென்றால் நிலா ஏன் பூமியின் மேல் விழாமல்,பூமியை சுற்றுகிறது என்று நியூட்டன் சிந்தித்தார். பூமிக்கு அருகில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதாகவும்,தொலைவில் செல்லச் செல்ல பூமியின் ஈர்ப்பு விசையானது குறையும் என்றும் நியூட்டன் கருதினார். அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலவை,பூமி தொடர்ந்து இழுப்பதால்,நிலவின் பாதையானது,தொடர்ந்து வளைக்கப் படுவதால், நிலவானது,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது,என்று நியூட்டன், விளக்கம் கூறினார். ஆனால் நிலவானது, ஏன் நீள் வட்டப் பாதையில்,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு நியூட்டன் விளக்கம் கூற வில்லை. அதே போன்று, சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், நியூட்டன் விளக்கம் கூற வில்லை. இந்த நிலையில்,சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில்,வலம் வருவதற்கும்,கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், எனது விளக்கத்தை முன் வைக்கிறேன். கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும் காரணம் என்ன ? சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் அனைத்துமே எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் உள்ளே உருவாகி,சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள். சூரியனை நோக்கி வந்த சிறிய கிரகங்களை,மற்ற கிரகங்கள் ஈர்த்து இருக்கின்றன. குறிப்பாக கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியானது,பருத்து இருப்பதால்,அதன் துணைக் கிரகங்களானது,நிறை ஈர்ப்பு விசையின் படி,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்,அந்தக் கிரகங்களானது.சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்ற அதே வேளையில்,விண் வெளியில்,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது. எனவே,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது.சூரியனை நோக்கி நகர்கிறது. இதனால்,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர வேண்டிய கிரகங்களானது,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்குச் சாய்வான கோணத்தில் வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. அதே போன்று,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வர வேண்டிய,துணைக் கிரகங்களும்,சூரியனை நோக்கி நகரும்,கிரகங்களை நோக்கி நகர்வதால்,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர இயலாமல்,அந்தக் கிரகங்களின் நில நடுக் கோட்டுக்கு சாய்வான தளத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சூரியனைக் கிரகங்கள், ஏன் வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன? பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதே போன்று,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. சூரியனானது,விண்வெளியில்,வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.இதே போன்று,விண்வெளியில் பல எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களும்,மிதந்து சென்று கொண்டு இருக்கின்றன. அது போன்ற எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைச் சூரியனானது,தனது ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து இழுக்கிறது. அப்பொழுது,சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மேற்பகுதியில் இருக்கும்,ஹைட்ரஜன்,ஹீலியம் போன்ற இலேசான வாயுக்கள்,ஆவியாகி விடுகிறது.இதனால் அந்த நட்சத்திரத்திற்கு உள்ளே,இருக்கும், ஆக்சிஜன்,சோடியம், கால்சியம்,மெக்னீசியம், கார்பன்,சிலிக்கன்,போன்ற கனமான வாயுக்கள்,குளிர்ந்து திரண்டு கிரகமாக உருவாகுகின்றன. முக்கியமாகச் சூரியனின் துருவப் பகுதியை விட நடுப் பகுதியே, அதிகம் பருத்து இருப்பதால்,அந்தப் பகுதியிலேயே,அதிக நிறை இருக்கிறது. எனவே,சூரியனால், கவர்ந்து இழுக்கப் பட்டு, கிரகமாக மாறிய எரிந்து முடிந்த நட்சத்திரமும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வரத் தொடங்குகிறது. குறிப்பாக ,சூரியனின் வட துருவப் பகுதியானது,சூரியன் செல்லும் திசையை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியன் நகர்ந்து கொண்டு இருப்பதால்,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகத்தின் சுற்றுப் பாதையானது சாய்ந்து விடுகிறது. அதாவது,சூரியனின் நடுப் பகுதியை கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியன் முன் நோக்கி நகர்ந்து விடுவதால்,இப்பொழுது,சூரியனின் நடுப் பகுதியை மையமாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது, தற்பொழுது,புதிய இடத்தில் இருக்கும் சூரியனை துரத்திச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. எனவே,ஒரே நேரத்தில்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வருவதற்கு,ஒரு கிரகமானது,சூரியனைப் மேலும் கீழுமாகவும் சுற்ற வேண்டும்,அதே நேரத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் சூரியனைக் பக்க வாட்டிலும், துரத்திச் செல்ல வேண்டும். அதாவது,விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் இடுப்புப் பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,சாய்வான கோணத்தில்,நீள் வட்டமாக மாறுகிறது. இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும். அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும். இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும். இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,பருத்து இருக்கும் சூரியனின் நடுப் பகுதியைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில்,சூரியனானது, நகர்ந்து கொண்டு இருப்பதே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும் காரணம். கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்குக் காரணம் ஆகும். கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்கு, கிரகங்கள் எல்லாம்,சூரியனை வெவ்வேறு தொலைவில் இருந்தபடிவலம் வந்து கொண்டு இருப்பதே காரணம் ஆகும். நிலவானது,சூரியனைப் பூமி ,வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு,ஐந்து டிகிரி சாய்வாக வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ? சூரியனின் வட துருவப் பகுதியானது,வேகா நட்சத்திரம் இருக்கும்,திசையை நோக்கி இருப்பதுடன்,அதே திசையை நோக்கி,வினாடிக்கு,இருபது கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வர வேண்டும் என்றால்,பூமியானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வர வேண்டும். அவ்வாறு,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வரும் பொழுது, சூரியனானது,முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.எனவே, பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்கு,சூரியனுடன்,சற்று முன் நோக்கியும் நகர வேண்டியதாகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே,சூரியனுடன் முன் நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதால்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,சாய்வான கோணத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. அதே போன்று,நிலவானது,பூமியின்,நில நடுக் கோட்டுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்காக, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே,நிலவும்,பூமியின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வருவதற்காக,பூமியுடன்,முன் நோக்கி நகரும் பொழுது,நிலவின் சுற்றுப் பாதையானது,சாய்வான கோணத்தில் அமைவதுடன்,நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. 000 கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன ? பொதுவாக வேற்று கிரகங்கள்,அதன் நட்சத்திரங்களை, நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை அல்லது அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்த நிலையில்,ஹெச் டி – 961678 என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு நட்சத்திரத்தை, ஹெச் டி – 961678 –பி, என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கிரகம், நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். https://en.wikipedia.org/wiki/HD_96167_b முக்கியமாக அந்தக் கிரகக் குடும்பத்தில் ஒரே ஒரு நட்சத்திரமும்,ஒரே ஒரு கிரகம் மட்டுமே இருக்கிறது. எனவே, ஹெச் டி – 961678 நட்சத்திரத்தை, ஹெச் டி – 961678 –பி,கிரகமானது, நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கான காரணம் என்ன, என்ற கேள்வி எழுகிறது. எனது விளக்கம்- ஹெச் டி – 961678 –பி,கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு, ஹெச் டி – 961678 நட்சத்திரத்தின் நகர்ச்சியே காரணம். 000 விண்வெளியில் ஒரு காதல் ஜோடி. விண்வெளியில் ஒரு நட்சத்திரமும் கிரகமும் காதலித்துக் கொண்டு இருப்பதை,ஹார்வர்ட் ஸ்மித் சோனியன் விண்ணாய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். பூமியில் இருந்து நானூறு ஒளியாண்டு தொலைவில்,குறிப்பாக ஹெர்குலிஸ் நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும், HAT-1-P என்று அழைக்கப் படும் ஒரு நட்சத்திரத்தை,நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் வியாழன் கிரகத்தை விட சற்றே பெரிய கிரகம் ஒன்று ,மிக மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக அந்த நட்சத்திரமானது, நமது சூரியனை விட சற்றே பெரிய நட்சத்திரம் ஆகும். அதே போல, அந்தக் கிரகமானது,வியாழன் கிரகத்தை விட,1.18 , மடங்கு பெரியது,ஆனாலும்,அந்தக் கிரகமானது,வியாழன் கிரகத்தை விட எட்டு மடங்கு அதிக நிறையுடையது ஆகும்.அதாவது பூமியை விட இரண்டாயிரத்தி ஐநூறு மடங்கு அதிக நிறையுடையது ஆகும். குறிப்பாக, அந்தக் கிரகமானது இது வரை கண்டு பிடிக்கப் பட்ட கிரகங்களிலேயே அதிக நிறையுடையது ஆகும்.மேலும் அந்த கிரகமானது, இன்னும் ஐம்பது சதவீதம் அதிக நிறையுடன் இருந்தால்,அந்த கிரகத்தில், அணுக்கரு வினை தொடங்கி, ஒரு நட்சத்திரத்தைப் போன்று, ஒளிவீசத் தொடங்கி விடும். எனவே,முதலில் அது ஒரு கிரகமாக இருக்காது என்றே,அந்தக் கிரகத்தைக் கண்டு பிடித்த ஆராய்ச்சிக் குழுவினர்,நினைத்தனர். அதன் பின்னர், மற்ற சாத்தியக் கூறுகளை எல்லாம் நிராகரித்த பிறகே,இறுதியில் அந்தப் பொருளானது, ஒரு கிரகம் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த நிலையில்,அந்தக் கிரகமானது,அந்த நட்சத்திரத்தை,வால் நட்சத்திரத்தைப் போன்று, நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதையும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தை, நீள் வட்டப் பாதையில்,வலம் வரும் பொழுது,அதன் நட்சத்திரத்தை,ஐந்து மில்லியன் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நெருங்கி வந்த பிறகு,பதினைந்து மில்லியன் கிலோ மீட்டர் தொலைவுக்கு, விலகிச் செல்கிறது. இதே போன்ற நீள் வட்டப் பாதையில்,பூமி இருந்தால்,சூரியனைப் புதன் கிரகம் இருக்கும் தொலைவுக்கு நெருங்கிய பிறகு,சூரியனில் இருந்து செவ்வாய் கிரகம் இருக்கும்,தொலைவுக்கு விலகிச் செல்லும். இவ்வாறு அந்தக் கிரகமானது, அதன் நட்சத்திரத்தை, நீள் வட்டப் பாதையில், ஐந்தரை நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்தக் கிரகமானது, அதன் நட்சத்திரத்துக்கும், பூமிக்கும், இடையில், வந்த பொழுது,அதன் நட்சத்திரத்தில் ஏற்பட்ட பிரகாசக் குறைவை, அளந்ததன் மூலம் கண்டு பிடிக்கப் பட்டது. குறிப்பாகச் சூரியனானது,வியாழன் கிரகத்தை விட,ஆயிரம் மடங்கு அதிக நிறையுடன் இருக்கிறது. ஆனால், தற்பொழுது கண்டு பிடிக்கப் பட்ட, HAT-1-P-2B ,என்று அழைக்கப் படும் அந்தக் கிரகத்தை விட,அதன் நட்சத்திரமானது, நூறு மடங்கே அதிக நிறையை உடையதாக இருக்கிறது. இவ்வாறு மிக அதிக எடையுடன் இருக்கும் HAT-1-P-2B , கிரகமானது, HAT-1-P, நட்சத்திரத்தை,முத்தமிடுவதைப் போன்று,மிகவும் நெருக்கமாக வலம் வருவதால், அதன் நட்சத்திரத்தில், துடிப்புகளை ஏற்படுத்துகிறது என்று,அந்தக் கிரகத்தைக் கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கு முன்பு இது போன்ற துடிப்புகளானது,மிகவும் நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும்,இரட்டை நட்சத்திரங்களில்,அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது முதன் முதலாக ஒரு நட்சத்திரத்தில், துடிப்புகளை ஒரு கிரகத்தாலும் ஏற்படும் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,அந்த நட்சத்திரத்தில்,எண்பத்தி ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை பிரகாசம் அதிகரிக்கிறது. இதற்கு அந்த நட்சத்திரம் மற்றும் கிரகத்துக்கு இடையில் செயல் படும், ஈர்ப்பு விசையே காரணம் என்று,அந்தக் கிரகத்தை, ஆராய்ச்சி செய்த,ஆராய்ச்சியாளர்கள்,தெரிவித்து இருக்கின்றனர். முக்கியமாக,அந்தக் கிரகமானது அதன் நட்சத்திரத்தை,ஒரு வால் நட்சத்திரத்தைப் போன்று,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,வேறு ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கருதப் பட்டாலும்,இன்று வரை அப்படி ஒரு கிரகம் கண்டு பிடிக்கப் பட வில்லை. The most likely explanation is the presence of a second, outer world whose gravity pulls on HAT-P-2b and perturbs its orbit. Although existing data cannot confirm a second planet, they cannot rule it out either. https://www.cfa.harvard.edu/news/2007-11 எனவே,அந்தக் கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. எனது விளக்கம்- கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,அந்த நட்சத்திரங்களின் நகர்ச்சியே காரணம் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இந்த நட்சத்திரமும்,கிரகமும் விளங்குகிறது. 000 நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களும்,இடை நிலை நட்சத்திரங்களும். இரண்டு சந்திரோதயங்களை நான் இன்றுதான் கண்டேன்...நான் அவள் கண்களைச் சொல்லுகிறேன்...என்று மண்வாசனை படத்தில்,நிழல்கள் ரவி ,ரேவதியின் கண்களை வர்ணிப்பார். உண்மையிலேயே இரண்டு சந்திரோதயங்கள் நிகழும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். பூமியில் இருந்து இருநூறு ஒளியாண்டு தொலைவில், ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு இருக்கும் இரட்டை நட்சத்திரத்தை, கெப்ளர்-பி என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு கிரகம்,சூரியனில் இருந்து வெள்ளி கிரகம் இருக்கும் தொலைவில் இருந்தபடி, 229 நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்த இரட்டை நட்சத்திரங்களானது,41 நாளுக்கு ஒரு முறை ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்த கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும்,இரட்டை நட்சத்திரத்தில்,பெரிய நட்சத்திரமானது,சூரியனின் நிறையில்,0.68- சதவீத அளவிலும்,சிறிய நட்சத்திரமானது,சூரியனின் நிறையில்,0.20- சதவீத அளவிலும்,இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக, இந்த கிரக அமைப்பானது, கிரகங்களின் தோற்றம் குறித்த ,தூசித் தட்டுக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. எப்படிஎன்றால்,தூசித் தட்டுக் கொள்கையின் படி, கிரகங்கள் எல்லாம், விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால், கெப்ளர்-16 -பி கிரகமோ,இரண்டு நட்சத்திரங்களையும், ஒரே சேர வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கிரக அமைப்பு எப்படி உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்,பூமியில் இருந்து 36 ஒளியாண்டு தொலைவில் ,மீன ராசி நட்சத்திர மண்டலத்தில்,இருக்கும்,HD 3651 என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு நட்சத்திரத்தை,சூரியனில் இருந்து , புதன் கிரகம் இருக்கும் தொலைவில் இருந்தபடி, 62 நாளுக்கு ஒரு முறை,ஒரு கிரகம், வலம் வந்து கொண்டு இருப்பதை, ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருந்தனர். இந்த நிலையில்,அந்த நட்சத்திரத்தை,சூரியனில் இருந்து நெப்டியூன் கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,பதினாறு மடங்கு தொலைவில் இருந்தபடி,இடை நிலை நட்சத்திரம் என்று அழைக்கப் படும், ஒரு பழுப்பு நட்சத்திரம் ஒன்று,வலம் வந்து கொண்டு இருப்பதையும், விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக, அந்தப் பழுப்பு நட்சத்திரமானது,வியாழன் கிரகத்தை விட இருபது முதல் அறுபது மடங்கு வரை ,நிறையுடையதாக இருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.அத்துடன் அதன் வெப்ப நிலையானது,ஐநூறு முதல் அறுநூறு டிகிரி சென்டி கிரேட் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த பழுப்பு நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான மார்கஸ் மக்ராயர்,நூற்றி எழுபது நட்சத்திரங்களை கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்ட நிலையில்,அவற்றில் பல நட்சத்திரங்களை,இது போன்ற,ஒன்று அல்லது பல இடை நிலை நட்சத்திரங்களும், வலம் வந்து கொண்டு இருப்பதாகவும்,தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம், கிரகங்களானது,எளிய அமைப்பான, நமது சூரியன் போன்ற தனி நட்சத்திரத்திற்கு அருகில் மட்டுமின்றி, மிகவும் சிக்கலான இயக்கமுள்ள சூழலிலும் உருவாகக் கூடும், என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் டாக்டர் மார்கஸ் மக்ராயர், தெரிவித்து இருக்கிறார். முக்கியமாகக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் இரண்டு நட்சத்திரங்களை,ஒயிட் டார்ப் என்று அழைக்கப் படும்,வெண்குறு நட்சத்திரங்களும்,வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும்,மார்கஸ் மக்ராயர், தெரிவித்து இருக்கிறார். முக்கியமாக, நிலா அளவுள்ள ஒரு வைரக் கோளப் படிகம் ஒன்று, ஒரு வெண் குறு நட்சத்திரத்தின் மையத்தில் உருவாகி இருந்ததை, பிரிட்டிஸ் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,சூரியனை விடப் பல மடங்கு அதிக வெப்பமான, கதிர் வீச்சை ஒளி வீசும்,ஒரு துடிப்பு நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக,மூன்று சிறிய கிரகங்கள், வலம் வந்து கொண்டு இருப்பதையும்,அலக்சாண்டர் வோல்சான் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். அதி வெப்ப நட்சத்திரத்துக்கு அருகில், ஆவியாகாமல்,வலம் வந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,அந்தக் கிரகங்களானது, வைரக் கிரகங்களாக இருக்க வேண்டும் என்று டாக்டர்,மார்க் குச்சனர் என்ற விஞ்ஞானி விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்,ஒரு நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும், ஒரு கிரகத்தில் இருந்து,வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதையும், விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக, பூமியில் இருந்து 150 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 209458 என்ற நட்சத்திரத்தை ‘’ஆசிரிஸ்’’என்று அழைக்கப் படும் ஒரு கிரகம் ,ஒரு ராட்சத வால் நட்சத்திரம் போல வலம் வந்து கொண்டு இருக்கிறது. பூமியை விட 220 மடங்கு பெரியதாக உள்ள அந்த வாயுக் கோள கிரகம் அதன் நட்சத்திரத்தை வெறும் 40 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் மூன்றரை நாளுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது.சூரியனை பூமி பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் 365 நாளுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது. இதை விட ஐம்பது மடங்கு குறைவான தூரத்தில் அந்த வால் நட்சத்திரக் கிரகம் அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது.சூரியனில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வியாழன் கிரகம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி முடிக்கிறது. ஆசிரிஸ் கிரகம் அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருப்பதால் ,அந்த கிரகத்தின் வாயு மண்டலம் 1395 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கிறது.(பூமி 250 கெல்வின் ) . அந்த கிரகத்தின் வாயு மண்டலம் வெப்பத்தால் விரிவடைந்து அதிலிருந்து இரண்டு லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள வால் பகுதி உருவாகி இருக்கிறது. அதிலிருந்து, வினாடிக்கு பத்தாயிரம் டன் ஹைட்ரஜன் வாயுவும் சோடியம் போன்ற கனமான உலோக வாயுக்களும் விண்வெளியில் விசிறியடிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த வால் நட்சத்திரக் கிரகம் 10 பூமி எடையுள்ள பாறைக் குழம்புக் கோளமாக மாறி விடும் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது. ஆசிரிஸ் கிரகம், அளவுக்கு அதிகமாக விரிவடைந்து இருப்பதற்கு அது நட்சத்திரத்துக்கு மிக அருகில் வலம் வருவது மட்டும் காரணமல்ல என்றும் அதன் மையத்தில் வெப்பம் உருவாகும் நிகழ்வே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். நட்சத்திரத்தின் மையப் பகுதியில்தான் அணுக் கரு வினை மூலம் வெப்பம் உற்பத்தி செய்யப் படுகிறது. எனவே பெரிய நட்சத்திரங்களால் ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களானது, வாயுக்களை இழந்து ,இறுதியில் கிரகங்களாக உருவாகுகின்றன என்பது மேற்கண்ட கிரக அமைப்புகள் மூலம் தெளிவாகிறது. 000 நீள் வட்டப் பாதைக்கு ஆராய்ச்சியாளர்களின் விளக்கம் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் அதன் நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை அல்லது அருகில் இருக்கும் வேறு ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று தற்பொழுது அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. HD 156846 b is an extrasolar planet located approximately 160 light-years away in the constellation of Ophiuchus, orbiting the star HD 156846. It has one of the most eccentric planetary orbits known. The high eccentricity of this planet's orbit is probably attributable to the presence of a red dwarf companion star. The average distance of the planet from HD 156846 is 0.99 AU, nearly identical to the distance of Earth from the Sun. The distance ranges from 0.15 AU to 1.83 AU with a 360-day period. It is also very massive with at least 10.45 Jupiter masses 000 எனது விளக்கத்திற்கு ஆதாரங்கள். கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் அதன் நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை அல்லது அருகில் இருக்கும் வேறு ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று தற்பொழுது அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. இந்த நிலையில், பூமியில் இருந்து,240 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,ஹெச் டி 17156 - என்று பெயர் சூட்டப் பட்ட,நட்சத்திரத்தை, ஹெச் டி 17156 பி-என்று பெயர் சூட்டப் பட்ட,வியாழன் கிரகத்தின் அளவுள்ள,ஒரு கிரகம் , மூன்று வாரத்திற்கு ஒரு முறை ,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதை,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். https://en.wikipedia.org/wiki/HD_17156_b http://oklo.org/2007/11/20/got-the-606-kickin-the-436-written/ ஆனால், ஹெச் டி 17156 பி-கிரகமானது, ஹெச் டி 17156 நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒரே ஒரு கிரகமாக இருக்கிறது. எனவே, கிரகங்கள் அதன் நட்சத்திரத்தை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு,அதன் நட்சத்திரத்தின் நகர்ச்சியே காரணம் என்பதை, எடுத்துக் காட்டும் விதமாக,இந்தக் கிரக அமைப்பு விளங்குகிறது. http://oklo.org/2007/10/ மேலும் ஒரு ஆதாரம்- Gliese 436 b https://en.wikipedia.org/wiki/Gliese_436_b Orbital characteristics One orbit around the star takes only about 2 days, 15.5 hours. Gliese 436 b's orbit is likely misaligned with its star's rotation.[22] The eccentricity of Gliese 436 b's orbit is inconsistent with models of planetary system evolution. To have maintained its eccentricity over time requires that it be accompanied by another plane 000 நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால், இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு, ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச் சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று கணிக்கப் படுகிறது. ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்திய நட்சத்திரம். விண்வெளியில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகளானது,பழைய கருத்துக்களை புரட்டிப் போடக் கூடியது என்பதற்கு சான்றாக, ஒரு நட்சத்திரத்தில்,அதிக அணு எடையுள்ள தனிமங்களான புளூட்டோனியம், ஐன்ஸ்டீனியம்,அமெரிசியம் போன்ற தனிமங்கள் இருப்பது, விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நமது உடலில் இருக்கும் இரும்பு கால்சியம் துத்தநாகம் உள்பட பூமியில் காணப் படும் தனிமங்கள் எல்லாம்,நட்சத்திரத்தில்,அணுக்கரு வினை மூலம் உற்பத்தி செய்யப் படுபவைகள் என்று விஞ்ஞானிகள் அறிந்து இருந்தனர். குறிப்பாக, நட்சத்திரங்களில் நடக்கும் அணுக் கரு வினை மூலம்,அணு எண் 86 கொண்ட, இரும்பு வரை உற்பத்தி ஆகும்,என்றும்,அதன் பிறகு நட்சத்திரத்தின் அணுக் கரு வினையானது நின்று விடும் என்றும் நம்பப் படுகிறது. அணு எண் 86-க்கும், அதிகமான எண்ணை உடைய அணுக்கள் எல்லாம்,சூப்பர் நோவா என்று அழைக்கப் படும்,பெரு நட்சத்திர வெடிப்பின் பொழுது உருவாகும், அதீத வெப்ப நிகழ்வின் பொழுது உற்பத்தி ஆகும், என்று நம்பப் பட்டது. இந்த நிலையில்,பூமியில் இருந்து 370 ஒளியாண்டு தொலைவில் இருக்கும், ஒரு நட்சத்திரத்தில் இருந்து வந்த ஒளிக் கதிர்களை, நிறமாலை நோக்கி மூலம் ஆய்வு செய்தபொழுது,அந்த நட்சத்திரத்தில்,அதிக அணு எண்ணை உடைய,ஐன்ஸ்டீனியம்,அமெரிசியம் போன்ற, கதிர் வீச்சுத் தன்மையை உடைய, நிலையற்ற தனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டு பிடிக்கப் பட்ட நட்சத்திரங்களிலேயே,ஜெளிபிஸ்கி நட்சத்திரத்தில் மட்டுமே,அணு எண் 89 முதல் 103 வரை அணு எண்ணை உடைய ,புளூட்டோனியம், ஐன்ஸ்டீனியம்,அமெரிசியம் போன்ற தனிமங்கள் உள்ள நட்சத்திரம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,இந்த நட்சத்திரமானது மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிக அடுக்குகளுடனும்,காந்தத் தன்மையுடனும் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நட்சத்திரமானது, அந்த நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானியான ஜெபிளிஸ்கி பெயரால், ஜெபிளிஸ்கி நட்சத்திரம் என்று அழைக்கப் படுகிறது. https://en.wikipedia.org/wiki/Przybylski%27s_Star (HD 101065) (Przybylski's star) https://www.newscientist.com/article/2125615-oddball-star-could-be-home-to-long-sought-superheavy-elements/ http://edfromohio.com/actinides-in-hd-101065-przybylskis-star/ http://www.meta-synthesis.com/webbook/32_n-synth/nucleosynthesis.html முக்கியமாக, இந்தக் கண்டு பிடிப்பு மூலம்,நட்சத்திரங்களில் நடை பெறுவதாகக் கூறப் படும், அணுக் கரு வினை பற்றிய விளக்கமானது கேள்விக் குறியாகி இருக்கிறது. இந்த நிலையில்,அதிக அணு எடையுள்ள தனிமங்கள், ஜெபிளிஸ்கி நட்சத்திரத்தில் இருப்பதற்கு,ஒரு வேளை ஜெபிளிஸ்கி நட்சத்திரத்துக்கு அருகில், ஒரு நியூட்ரான் நட்சத்திரம் இருந்து, அதன் மூலம், ஜெபிளிஸ்கி நட்சத்திரத்துக்கு நியூட்ரான்கள் வழங்கப் பட்டு, அதன் மூலம், ஜெபிளிஸ்கி நட்சத்திரத்தில் அதிக அணு எடையுள்ள,தனிமங்கள் உற்பத்தி ஆகியிருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஆனால், ஜெபிளிஸ்கி நட்சத்திரத்துக்கு அருகில், நியூட்ரான் நட்சத்திரங்கள் எதுவும் காணப் பட வில்லை. எனவே, ஜெபிளிஸ்கி நட்சத்திரத்தில்,அதிக அணு எடையை உடைய தனிமங்கள் காணப் படுவது,விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 000 ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு. அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல, மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு. அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்குச் சூரியனின் ஈர்ப்பு விசையானது, நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. மாறாகச் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். அதாவது,கெப்ளர் மற்றும் நியூட்டனின் விளக்கங்களின் படி,புதன் கிரகமானது ,புறப்பட்ட இடத்துக்கே வர வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல்,புதன் உள்பட எல்லாக் கிரகங்களும்,புறப்பட்ட இடத்துக்கு வராமல் சிறிது இடம் மாறி வருகிறது. இதற்குக் காரணம்,சூரியனின் நகர்ச்சி. இந்த முக்கியமான அம்சத்தை நியூட்டனோ,ஐன்ஸ்டீனோ கவனத்தில் கொள்ள வில்லை. ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது. பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது. உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால், சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இதே போன்று,புளூட்டோவின் ஈர்ப்பு விசையால்,அதன் நிலவான சரண்,புளூட்டோவை வலம் வரும் பொழுது,சரணின் ஈர்ப்பு விசையால்,புளூட்டோவும்,சிறிய அளவில்,வட்டமடிக்கிறது. அத்துடன், தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று,முழு நிலவு அன்று,கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று,ஸ்ருதினி 3753 என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையானது,பூமியைச் சுற்றிலும் குதிரை லாடம் போன்ற சுற்றுப் பாதையில், சுற்றிக் கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இரண்டாவது நிலா என்று அழைக்கப் படும் அந்த விண் பாறையானது,குதிரை லாட வடிவில் ,பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதற்கு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். எனவே, ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே,புதன் கிரகமானது,ஏன் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியானது விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே போன்று, மற்ற கிரகங்களும்,ஏன் சூரியனைச் சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியும் விடை கூறப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. 000 நீள் வட்டப் பாதைக்கு காரணம் தெரியாத நியூட்டன். விடை தெரிந்தவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டால் உடனே அவன் ஒரே வரியில் பதிலைக் கூறிவிடுவான்.அதற்கு மேல் மேலும் ஒரு பதிலைக் கூற வேண்டிய தேவை இருக்காது. எதற்கு சொல்கிறேன் என்றால் நியூட்டனிடம் அவரின் நண்பரான எட்மண்ட் ஹாலி ஒரு கேள்வியைக் கேட்கிறார். கிரகங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் சூரியனை வலம் வருகின்றன? இந்தக் கேள்விக்கு,நியூட்டன் ‘ கிரகங்கள் தலை கீழ் விதியைப் பின்பற்றுவதால்,கிரகங்களானது, சூரியனை, நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன ‘ என்று பதில் கூறினார். தலை கீழ் விதி என்னவென்றால்,இரு பொருள்களுக்கு இடையில் செயல் படும் ஈர்ப்பு விசையானது,அந்தப் பொருள்களுக்கு இடையில் இருக்கும் தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். அதாவது தொலைவு அதிகரிக்கும் பொழுது ஈர்ப்பு விசை குறையும்.தொலைவு குறைந்தால் ஈர்ப்பு விசை அதிகரிக்கும். நியூட்டன் கூறிய பதிலானது உண்மையில்,கேட்கப் பட்ட கேள்விக்குக் கூறப் பட்ட சரியான பதில் அல்ல. ஏனென்றால்,பாரா போலா,ஹைப்பர் போலா போன்ற சுற்றுப் பாதையில் பயணம் செய்யும் வால் நட்சத்திரங்களும்,நியூட்டன் கூறிய தலை கீழ் விதியையே பின்பற்றுகிறது. அது மட்டுமல்ல,உண்மையில் கிரகங்கள் இந்த விதியின் படி இயங்குவதில்லை.என்பது புதன் கிரகத்தின் சுற்றுப் பாதை மூலம் தெரிய வந்துள்ளது. நியூட்டனின் கண்டு பிடிப்பு என்பது,கிரகங்கள் சூரியனை வலம் வருவதற்கு காரணம் ஈர்ப்பு விசை என்பது மட்டுமே, மற்ற படி ,கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு சூரியனின் நகர்ச்சியே காரணம் என்பது எனது கண்டு பிடிப்பு. ம்ம்ம்... எதுக்கு சொல்ல வந்தேன்... ம்ம்ம்... ஹாலி கேட்ட கேள்விக்கு உண்மையில் நியூட்டன் பதில் கூற வில்லை என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை எழுதப் பட்டு இருக்கிறது. 000 ஐன்ஸ்டீன் விளக்கத்தை பொய்யாக்கிய நட்சத்திரங்களின் அசைவு. ஈர்ப்பு விசை என்பது ஒரு விசை அல்ல என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,விண்வெளியில் வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்களில்,அந்த வேற்று கிரகங்களின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் நட்சத்திரங்களின் அசைவு மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,நீண்ட வட்டப் பாதையாக இருப்பதற்கும்,அந்த நீண்ட வட்டப் பாதையும் மெதுவாக சூரியனை சுற்றுவதற்கும் காரணம் என்ன என்ற கேள்விக்கு ,சர் ஐசக் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக ஈர்ப்பு என்பது பொருள்களின் நிறையால் விண்வெளியானது வளைக்கப் படுவதால்,உருவாகும் ஒரு விளைவு என்று விளக்கம் கூறினார். குறிப்பாக,சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுவதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே,புதன் கிரகமானது பயணம் செய்வதால்,புதன் கிரகத்தின் பாதையானது வளைக்கப் பட்டு நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது,சூரியன் உள்பட,மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களால் ஏற்படும் அசைவு மூலம், ஈர்ப்பு என்பது ஒரு விசை என்பதும்,ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல் படும் விசை என்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக,சூரியனானது,வியாழன் கிரகத்தை ஈர்ப்பது போலவே,வியாழன் கிரகமும் சூரியனை ஈர்க்கிறது. அதாவது நியூட்டன் கூறியதைப் போன்று ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையிலான விசை என்பதற்கு ஆதாரமாக ,சூரியனும் வியாழனும் செயல் படுகிறது. இதானால் சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையம் ஏற்படுகிறது. இந்தப் பொது ஈர்ப்பு மையமானது, பாரி சென்டர் என்றும் அழைக்கப் படுகிறது. ஆனால்,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையமானது ,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் நடுவே ஏற்படாமல்,சூரியனுக்கு மிக அருகில் ஏற்படுகிறது. ஏனென்றால் சூரியனின் எடையானது, வியாழன் கிரகத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம். உதாரணமாக,ஒரு பூங்காவில்,இரண்டு சம எடையுள்ள சிறுவர்கள் சீசா பலகையில் விளையாடும் பொழுது,அவர்களுக்கு இடையில் உருவாகும் பொது ஈர்ப்பு மையமானது,அவர்களுக்கு இடையில் சம தூரத்தில் ஏற்படும். ஆனால் அந்த இருவரில் ஒருவன், அதிக எடையுடன் இருந்தால்,அப்பொழுது அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது,அதிக எடையுள்ள சிறுவனின் அருகில் ஏற்படும். இதே போன்று, சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது, சூரியனுக்கு அருகில் ஏற்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை வியாழன் கிரகம் வலம் வரும் பொழுது ,அதன் சுற்றுப் பாதையானது பெரிதாக இருக்கிறது. ஆனால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பொது மையத்தை, சூரியன் வலம் வருவதால் சூரியன் சிறிய அசைவையே ஏற்படுத்துகிறது. இவ்வாறு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பால் சூரியன் ஏற்படுத்தும் அசைவானது, நடுக்கம் என்றும் வாப்ளிங் (wobbling) என்றும் அழைக்கப் படுகிறது. இதே போன்று விண்வெளியில் மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களும்,அதன் நட்சத்திரங்களில் அசைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு வேற்று கிரகங்களால் நட்சத்திரங்களில் ஏற்படும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை ஒரு வேற்று கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பது அறியப் படுகிறது. இவ்வாறு ஒரு வேற்று கிரகமானது அதன் நட்சத்திரத்தில் ஏற்படுத்தும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களைக் கண்டு பிடிக்கும் முறைக்கு வாப்ளிங் டெக்னிக் என்றும்,டாப்ளர் முறை என்றும், ரேடியல் வெலாசிட்டி முறை ( radial velocity )என்றும் அழைக்கப் படுகிறது. டாப்ளர் முறையில் நட்சத்திரங்களின் அசைவை அறிதல். சைரனை ஒலித்தபடி நம்மை ஒரு ஆம்புலன்ஸ் நெருங்கும் பொழுது,ஒலி அலைகளின் நெருக்கத்தால் ஒலியானது உச்சமாகிறது. இதே போன்று அந்த ஆம்புலன்சானது நம்மை விட்டு விலகும் பொழுது அந்த ஆம்புலன்சில் இருந்து வெளிப் படும் ஒலி அலைகளின் நெருக்கமானது மறுபடியும் விரிவடைவதால் ஒலியானது மறுபடியும் இறங்குகிறது. இதே போன்று, ஒளி அலைகளும் நம்மை நோக்கி நகரும் பொழுது, அதன் அலை நீளம் சுருங்குவதால், குறைவதாலும் குறைவான அலை நீளமுள்ள நீல நிறமாக மாறுகிறது. இதே போன்று,ஒளி அலைகளானது,நம்மை விட்டு விலகிச் செல்லும் பொழுது,அதன் அலைகளுக்கு இடையில் இருக்கும் தொலைவானது அதிகரிப்பதால்,அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறமாக மாறுகிறது. இவ்வாறு ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலையை,நிறமாலைக் கருவி மூலம் பார்க்கும் பொழுது அந்த நட்சத்திரமானது நம்மை விட்டு விலகிச் செல்கிறதா அல்லது நெருங்குகிறதா என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன? உதாரணமாக,தொலை தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒரு கிரகமானது வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அந்த நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் வரும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணாமாக, அந்த நட்சத்திரமானது,பூமியை நோக்கி சில கிலோ மீட்டர் நகரும். அப்பொழுது அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை நிறமாலைக் கருவியில் பார்க்கும் பொழுது,அதன் அலை நீளம் குறைந்து,நிறமாலைக் கருவியில் நீல நிறத்தை நோக்கி நகரும். இதே போன்று அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது,பூமியை விட்டு விலகி மறுபடியும் அந்த நட்சத்திரத்துக்கு பின் புறம் செல்லும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணமாக,அந்த நட்சத்திரமும் சில கிலோ மீட்டர்,பூமியை விட்டு விலகிச் செல்லும். இதனால் அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியின் அலை நீளமானது குறைந்து,நிறமாலைக் கருவியில் சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. இந்த முறையில் பல நூறு வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு,நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,ஈர்ப்பின் காரணமாக அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவு மூலம்,ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் ஈர்ப்பு என்பது ஒரு விசை அல்ல என்று டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 ஐன்ஸ்டீன் கொள்கையை நிராகரிக்க,இந்த ஒரு ஆதாரம் போதுங்க. விண்வெளியில் இருக்கும் எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கிறது. அதனால் பொருள்களுக்கு இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையம் உருவாகுகிறது. அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை, அந்த இரண்டு பொருள்களும் வலம் வருகின்றன. அதே அடிப்படையில்தால் சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது, சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையிலான பொது ஈர்ப்பு மையமானது,சூரியனுக்கு அருகிலேயே உருவாகுகிறது. ஏனென்றால் சூரியன் அதிக நிறையுடன் இருக்கிறது. உதாரணமாக ஒரு பூங்காவில் சம எடையுள்ள இரண்டு சிறுவர்கள்,சீசா பலகையில் அமர்ந்தால்,அவர்களுக்கு இடையிலான பொது ஈர்ப்பு மையமானது.அவர்களுக்கு இடையில் சம அளவு தூரத்தில் இருக்கும். அதே நேரத்தில்,அந்த இருவரில் ஒருவர் ,அதிக எடையுடன் இருந்தால்,அந்த பொது ஈர்ப்பு மையமானது,அதிக எடையுடன் இருக்கும் பையனுக்கு அருகில் இருக்கும். எனவே குறைந்த எடையுடன் இருக்கும் பையன் ,சம நிலையை அடைய ,அதிக எடையுடன் இருக்கும் பையனுக்கு அருகில் வர வேண்டும். இவ்வாறு, சூரியனுக்கு அருகில் உருவாகும் பொது ஈர்ப்பு மையத்தை வலம் வர, சூரியன் சிறிய அளவில் வட்டமடித்தாலே,அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை வலம் வந்து விட முடியும். அதே நேரத்தில்,குறைந்த எடையுள்ள கிரகமோ,அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை வலம் வர, சூரியனை நோக்கி நகர வேண்டியுள்ளது. இவ்வாறு,சூரியனுக்கும் கிரகத்துக்கும் இடையில் உருவாகும் பொது ஈர்ப்பு மையமானது ‘பேரி சென்டர்’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால்,கிரகங்களின் சுற்றுப் பாதை குறித்த ஐன்ஸ்டீனின் விளக்கத்தில்,இந்த ‘பேரி சென்டர்’ பற்றி குறிப்பிடப் பட வில்லை என்று ஆர் கூப்பர் என்ற ஆராய்ச்சியாளர் தனது வலைத் தளத்தில் தெரிவித்து இருக்கிறார். http://www.sunorbit.net/sun.htm இதன் மூலம்,கிரகங்களின் சுற்றப் பாதைக்கும்,ஈர்ப்பு விசைக்கும்,ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 000 தூசித் தட்டுக் கொள்கைக்கு எதிராக ஒரு புதிய ஆதாரம். நமது பூமி உள்பட ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகங்கள் எல்லாம் முன் ஒரு காலத்தில்,விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத மேகமானது திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சூழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும்,வாயுக்களும்,ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக,நம்பப் படுகிறது. ஆனால், இந்த விளக்கமானது சாத்தியமற்ற விளக்கம் என்பது, பல ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவித்து இருந்தேன். இந்த நிலையில்,தற்பொழுது,தூசித் தட்டு முறையானது,ஒரு சாத்தியமற்ற முறை என்பதை எடுத்துக் காட்டும் ஒரு புதிய ஆதாரம் கிடைத்து இருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,ஹப்பிள் தொலை நோக்கி மூலம்,ஒரு புதிய வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்து இருக்கின்றனர். C /2017 –K2 என்று பெயர் சூட்டப் பட்ட அந்த வால் நட்சத்திரமானது,முதல் முறையாக சூரிய மண்டலத்துக்கு உள்ளே நுழையும் ஒரு புதிய வால் நட்சத்திரம் ஆகும். தற்பொழுது,அந்த வால் நட்சத்திரமானது,சனி கிரகத்துக்கு அப்பால் இருந்த படி,சூரியனை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அதாவது,தற்பொழுது அந்த வால் நட்சத்திரமானது,சூரியனிலிருந்து 1.5 பில்லியன் மைல் (about 2.4 billion kilometers) தொலைவில்,இருக்கிறது. அதாவது,இது வரை காணப் பட்ட, வால் நட்சத்திரங்களிலேயே, இந்த வால் நட்சத்திரம்தான்,அதிக தொலைவில் காணப் பட்ட வால் நட்சத்திரம் ஆகும். ( இந்தப் பகுதியில்,வெப்ப நிலையானது,மைனஸ் இருநூற்றி இருபது டிகிரி ஆகும்.) அவ்வளவு தொலைவில் இருந்தாலும் கூட, சூரியனின் வெப்பத்தால்,அந்த வால் நட்சத்திரத்தின் மேற்பகுதியில் இருந்து,ஆக்சிஜன்,நைட்ரஜன்,கார்பன் டை ஆக்சைட்,கார்பன் மோனோ ஆக்சைட்,போன்ற எளிதில் ஆவியாகும் வாயுக்கள் எல்லாம்,விரிவடைந்து,அந்த வால் நட்சத்திரத்தை சுற்றிலும் பரவி இருக்கிறது. இதனால் அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியானது,தற்பொழுது,80,000 மைல் அகலத்துடன் இருக்கிறது.(1,30,000 km ) அதாவது பனிரெண்டு மைல் நீளத்தில் இருக்கும் அந்த வால் நட்சத்திரத்தின் ,தலைப் பகுதியானது பூமியின் குறுக்களவை விட பத்து மடங்கு பெரிதாக இருப்பது தெரிய வந்துள்ளது. http://www.ibtimes.com/nasas-hubble-photographs-farthest-active-inbound-comet-oort-cloud-2595451 இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட படங்களில்,அந்த வால் நட்சத்திரமானது,மிகவும் மங்கலாகப் பதிவாகி இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில்,அந்த வால் நட்சத்திரமானது,கடந்த நான்கு ஆண்டு காலமாக,இயக்கத்தில் இருந்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் ஆராய்ச்சியாளர்கள்,சூரியனில் இருந்து இரண்டு பில்லியன் மைல் தொலைவில் இருக்கும் பொழுதே,அதற்கு தலைப் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,அந்த வால் நட்சத்திரமானது,யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களுக்கு இடைப் பட்ட தொலைவில் இருக்கும் பொழுதே,அந்த வால் நட்சத்திரத்துக்கு,தலைப் பகுதி உருவாகி இருக்கிறது என்று, அந்த ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்து இருக்கின்றனர். சூரியனில் இருந்து ஒன்றரை பில்லியன் மைல் தொலைவில் இருக்கும் வால் நட்சத்திரத்தில் இருக்கும், ஆக்சிஜன்,நைட்ரஜன்,கார்பன் டை ஆக்சைட்,கார்பன் மோனோ ஆக்சைட்,போன்ற எளிதில் ஆவியாகும் அதாவது பதங்கமாகும் (sublimation) வாயுக்கள் எல்லாம், சூரியனின் வெப்பத்தால்,ஆவியாகும் நிலையில்,அந்த வாயுக்களானது நிச்சயம் சூரியனுக்கு அருகில் இருந்திருக்க சாத்தியம் இல்லை. முக்கியமாகச் சூரியனில் இருந்து,பூமியை விட அதிக தொலைவில் இருக்கும்,செவ்வாய் கிரகத்துக்கு அருகில் வரும் பொழுதே,அந்த வால் நட்சத்திரங்களில் இருந்து, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களானது.சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக,வெளியேற்றப் படுவதும்,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே,அந்த வாயுக்களுடன்,பூமியானது,சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்கவும் சாத்தியம் இல்லை. பெரும்பாலான வால் நட்சத்திரங்கள்,வியாழன் கிரகம் இருக்கும் தொலைவிலேயே கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.அப்பொழுதே அந்த வால் நட்சத்திரத்தில் இருக்கும்,கார்பன் ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் ஆவியாகத் தொடங்கி விடும். Based on the Hubble observations of K2’s coma, the astronomers suggest that sunlight is heating frozen volatile gases — such as oxygen, nitrogen, carbon dioxide, and carbon monoxide — that coat the comet’s frigid surface. These icy volatiles lift off from the comet and release dust, forming the coma. http://www.sci-news.com/astronomy/comet-c2017-k2-hubble-oort-cloud-05272.html https://www.sciencedaily.com/releases/2017/09/170928152340.htm எனவே,கிரகங்களின் தோற்றம் குறித்து விளக்கும் தூசித் தட்டுக் கருத்தானது, ஒரு சாத்தியமற்ற கருத்து என்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த வால் நட்சத்திரமானது பூமிக்கு அருகில் வருவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம்,இந்த வால் நட்சத்திரமானது,பூமியில் இருந்து நூறு மில்லியன் மைல் தொலைவில் வரும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. https\://www.sciencedaily.com/releases/2017/09/170928152340.htm https\://www.nasa.gov/feature/goddard/2017/hubble-observes-the-farthest-active-inbound-comet-yet-seen வால் நட்சத்திரங்கள், சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு என்ன காரணமோ! அதே காரணம்தான்,கிரகங்கள் அதன் நட்சத்திரங்களை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கும். 000 வெப்ப வியாழன்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன? கிரகங்கள் எல்லாம் அதன் நட்சத்திரங்களை, நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கான காரணம் என்ன என்பது, இன்று வரை புரிந்து கொள்ளப் படாத மர்மமாகவே இருக்கிறது. கிரகங்களின் சுற்றுப் பாதையின் நீட்சியைக் குறிப்பிட ,0 முதல் 1 வரையிலான எண்கள் பயன் படுத்தப் படுகிறது. தற்பொழுது, மூவாயிரத்துக்கும் அதிகமான வேற்றுக் கிரகங்கள் கண்டுஅழும், பிடிக்கப் பட்டு இருக்கின்றன. அதில் பெரும்பாலான நட்சத்திரங்களை, நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் பெரிய வாயுக் கோள கிரகமான, வியாழன் போன்ற கிரகம்,மிகவும் நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, வாயுக் கோள கிரகங்களானது, அதன் நட்சத்திரங்களை,சூரியனில் இருந்து புதன் கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும், மிகக் குறைந்த தொலைவில் இருந்தபடி,வலம் வந்து கொண்டு இருப்பதால்,அதிக வெப்பத்துடனும் இருக்கின்றன. எனவே,இது போன்ற கிரகங்கள் வெப்ப வியாழன்கள் என்று அழைக்கப் படுகின்றன. முக்கியமாக, இந்த வெப்ப வியாழன்கள்,அதன் நட்சத்திரங்களை,மிகவும் நீண்ட வட்டப் பாதையில், வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு,அந்த வெப்ப வியாழன்கள்,அதன் நட்சத்திரங்களை,மிகவும் நீண்ட வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது. அதாவது,முதலில் அந்த ராட்சத வாயுக் கோள கிரகங்களானது,அதன் நட்சத்திரங்களை வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு,அருகில் இருந்த மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பால்,கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால்,அந்த கிரகங்கள் வெளித் தள்ளப் பட்டதாகவும்,அந்த மோதலின் காரணமாக, எஞ்சிய ஒரு ராச்சத வாயுக் கோள கிரகம் மட்டும்,அதன் நட்சத்திரத்தை நெருங்கி வந்து ,நீள் வட்டப் பாதையில்,வலம் வரத் தொடங்கியதாகவும்,நம்பப் படுகிறது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால்,தற்பொழுது கண்டு பிடிக்கப் பட்ட, வெப்ப வியாழன்களில்,எழுபத்தி எட்டு சதவீத வெப்ப வியாழன்களானது ,அதன் நட்சத்திரங்களை,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருக்கின்றன. Interactions with other planets could also change how they travel around their stars. Of the highly eccentric planets discovered, 78 percent of those with eccentricities greater than 0.5 have only one planet in the system, Hulsebus said. While the other planets could have been kicked out over the course of their evolution, Hulsebus and his team looked for a third option — the presence of a distant brown dwarf that could wreak havoc on the orbit of planets. https://www.astrobio.net/news-exclusive/brown-dwarfs-may-wreak-havoc-orbits-nearby-planets-causing-desolation/ குறிப்பாகத் தற்பொழுது, நமது பூமி உள்பட ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகங்கள் எல்லாம் முன் ஒரு காலத்தில், விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத மேகமானது, திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சூழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும்,வாயுக்களும்,ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக,நம்பப் படுகிறது. இவ்வாறு, கிரகங்கள்,அதன் நட்சத்திரங்களைச் சுற்றி உருவாகும் பொழுது, வட்டப் பாதையில்,வலம் வருவதாக நம்பப் படுகிறது. தூசித் தட்டுக் கொள்கை என்று அழைக்கப் படும்,இந்த முறையானது ,அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பது, நான் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன்,கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே உருவாகி இருப்பதையும், நான் ஆதாரப் பூர்வமாகக் கண்டு பிடித்து இருக்கிறேன். அதாவது,நட்சத்திரங்களுக்கு உள்ளே நடக்கும் அணுக் கரு வினையால்,நட்சத்திரங்களுக்கு உள்ளே,கார்பன்,ஆக்சிஜன்,சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு,போன்ற அணுக்கள் பிரமாண்ட அளவில் உற்பத்தி ஆகின்றன. இந்த நிலையில்,இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,அருகில் இருக்கும் ஒரு நட்சத்திரம்,கவர்ந்து இழுக்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வெளிப் பகுதியில் இருக்கும் இலேசான வாயுக்கள் ஆவியான பிறகு,மையத்தில் எஞ்சிய கனமான அணுக்கள் திரண்டு ,கோளமாக உருவாகி,ஒரு புதிய கிரகமாக,அந்த நட்சத்திரத்தை வலம் வரத் தொடங்கு கின்றன. இவ்வாறு உருவான ஒரு புதிய கிரகம் அதன் நட்சத்திரத்தை வலம் வரும் நிலையில்,அதன் நட்சத்திரமானது விண்வெளியில்,தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதால்,அந்த நட்சத்திரத்தை,வலம் வருவதற்காக,அந்த கிரகமும்,அந்த நட்சத்திரத்தைத் தொடர்ந்து செல்வதால், நட்சத்திரத்தைச் சுற்றும் கிரகத்தின் பாதையானது,நீட்சியடைகிறது. 000 புதன் மற்றும் நிலவின் சுற்றுப் பாதை சுழற்சிக்கு ஒரே காரணம்தான். புதன் மற்றும் நிலவின் சுற்றுப் பாதை சுழற்சிக்கு ஒரே காரணம்தான். நியூட்டன் , ஐன்ஸ்டீன் உள்பட,தற்பொழுது உள்ள விஞ்ஞானிகள் யாருக்கும்,கிரகங்கள் எப்படி உருவாகின என்பது குறித்தோ,அவைகள் அதன் நட்சத்திரங்களை, நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருப்பதற்கான காரணம் குறித்தோ எதுவும் தெரியாது. இந்த நிலையில்தான் , சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது மிகவும் நீண்டு இருப்பது ஏன் என்று புரியாமல் குழம்பினார்கள்.அதே போன்று,சூரியனைக் கிரகங்கள் வலம் வரும் பொழுது,ஒவ்வொரு சுற்றுக்கும்,சூரியனை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் பெயர்வதற்கும் காரணம் தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தனர். இந்த குழப்பமான சூழ் நிலையில்தான்,ஐன்ஸ்டீன்,ஈர்ப்பு என்பது ,நியூட்டன் கூறியது போன்று ஒரு விசை அல்ல என்றும் மாறாக அது விண்வெளியில் ஏற்படும் ஒரு விளைவு என்று ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறினார். ஆனால்,தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களின் ஏற்படுத்தும் அசைவை அளந்ததன் அடிப்படையில்,ஆயிரத்துக்கும் அதிகமான கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது, ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதையே உறுதிப் படுத்துகிறது. இந்த நிலையில்,நான்,சூரியனைக் கிரகங்களின் நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் நகர்ச்சியே காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். அதே போன்று,சூரியனைக் கிரகங்கள் வலம் வரும் பொழுது,சூரியனைக் கிரகங்கள் நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் பெயர்வதற்கு,சூரியனின் வளைவான நகர்ச்சியே காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது புரிதலுக்கு நிலவின் சுற்றுப் பாதை குறித்த விபரங்களே உதவியது. குறிப்பாக ,நிலவானது,பூமியை நீள் வட்டப் பாதையில் வலம் வருவதுடன்,நிலவானது,பூமியை நெருங்கும் புள்ளியானது ,ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் பெயற்கிறது. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ இணையத்தில் படித்தது- https\://en.wikipedia.org/wiki/Orbit_of_the_Moon தற்பொழுது நிலவின் சுற்றுப் பாதையானது,பூமியை சுற்றுவதற்குக் கூறப் படும் காரணம்- நிலா வலம் வந்து கொண்டு இருக்கும்,பூமியானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,அதன் வேகமானது மாறுபடுகிறது. குறிப்பாக,நிலவானது சூரியனை வலம் வரும் பொழுது,பூமியானது சூரியனுக்கு அருகில் வரும் பொழுது,வேகமாகவும்,அதே போன்று,சூரியனில் இருந்து தொலைவில் செல்லும் பொழுது,மெதுவாகவும் நகர்கிறது. இந்த வேக மாறுபாடானது,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ எனவே,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதை சுழற்சிக்கு,ஐன்ஸ்டீனின் விண்வெளி வளைவு விளக்கமானது தேவையில்லை. 000 ஈர்ப்பு என்பது...விசையா அல்லது விண்வெளியில் ஏற்படும் ஒரு விளைவா அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,நிலா சூரியன் மற்றும் கிரகங்கள் எல்லாம் ,பூமியை மையமாகக் கொண்டே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று நம்பப் பட்டு வந்தது. ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில்,கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாகக் கணிக்க முடிய வில்லை. இந்த நிலையில்,போலந்து நாட்டைச் சேர்ந்த ஆராயய்சியாளர் 00000000000000000000000 புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குக் காரணம் என்ன? இதே போன்று,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும், தளத்தில் இருந்து,புதன் கிரகமானது ஏழு டிகிரி கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருப்பது புதிராக இருந்தது. அத்துடன்,புதன் கிரகமானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கு திரும்ப வராமல்,ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் மாறி, புதிய இடத்துக்கு வந்ததும் புதிராக இருந்தது. Based on the Newton explanation , இந்தப் புதிருக்கு விளக்கம் கூற இயலவில்லை. நூற்றி தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்விக்கு யாராலும் விளக்கம் கூற இயலவில்லை. அப்பொழுது ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல, மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு. அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்குச் சூரியனின் ஈர்ப்பு விசையானது, நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. மாறாகச் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார். ஆனால், ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது. பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது. உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால், சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இதே போன்று,புளூட்டோவின் ஈர்ப்பு விசையால்,அதன் நிலவான சரண்,புளூட்டோவை வலம் வரும் பொழுது,சரணின் ஈர்ப்பு விசையால்,புளூட்டோவும்,சிறிய அளவில்,வட்டமடிக்கிறது. அத்துடன், தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று,முழு நிலவு அன்று,கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று,ஸ்ருதினி 3753 என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையானது,பூமியைச் சுற்றிலும் குதிரை லாடம் போன்ற சுற்றுப் பாதையில், சுற்றிக் கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இரண்டாவது நிலா என்று அழைக்கப் படும் அந்த விண் பாறையானது,குதிரை லாட வடிவில் ,பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதற்கு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். எனவே, ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே,புதன் கிரகமானது,ஏன் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியானது விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதே போன்று, மற்ற கிரகங்களும்,ஏன் சூரியனைச் சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியும் விடை கூறப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. 00000000000000000 அரிஸ்ட்டாட்டில் காலத்தில் கிரகங்கள் எல்லாம் பூமியை வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. அதன் பின்னர், போலந்து நாட்டைச் சேர்ந்த, வானியலாளர் நிகோலஸ் கோபர் நிகஸ் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். அதன் பின்னர்,ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, சேர்ந்த வானியலாளர், ஜோகனஸ் கெப்ளர் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று கூறினார். அதன் பின்னர்,இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன்,கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என்று கூறினார். இந்த நிலையில்,புதன் கிரகமானது ஒவ்வொரு சுற்றுக்கும் சூரியனை நெருங்கும் புள்ளியானது இடம் மாறியது. புதன் கிரகத்தின் இந்த வினோத இயக்கத்துக்கு based on the newton theory விளக்கம் கூற இயல வில்லை. நியூட்டனுக்குப் பிறகு,இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன், புதன் கிரகத்தின் இயக்கத்துக்கு ஒரு விளக்கத்தைக் கூறினார்.அதாவது ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல ,மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு,அதாவது சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுகிறது,அதனால் சூரியனைச் சுற்றி ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்லும் கிரகங்களின் பாதை வளைக்கப் படுவதால்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறினார். ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மேலும், ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது. இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இந்த நிலையில்,தற்பொழுது, நிலவானது,ஏன் ,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதே போன்று,புளூட்டோவானது,ஏன்,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. எனது விளக்கம். விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் இடுப்புப் பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,நீள் வட்டமாக மாறுகிறது. இதே போன்று,விண்வெளியில், சூரியனை சாய்வான தளத்தில்,நீள் வட்டப் பாதையில்,பாதையில் வலம் வந்து கொண்டே ,கிடை மட்டமாகவும், நகர்ந்து கொண்டு இருக்கும் பூமியை,நிலவும்,வலம் வரும் பொழுது,சூரியனுடனான பூமியின் நகர்ச்சியால்,பூமியைச் சுற்றும்,நிலவின் பாதையும்,நீள் வட்டமாகவும்,சாய்வான தளத்திலும் அமைகிறது. இதே போன்று,புளூட்டோவும்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,இருந்த படி,வலம் வந்து கொண்டு இருப்பதால்,அதன் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன்,அதன் சுற்றுத் தளமும் ,மற்ற கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து அதிகம் விலகி இருக்கிறது. இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும். அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாறிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும். இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும். இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது. 000

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?