டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவதையும் கண்டபிறகு பூமி ஒரு கோளம் என்று ஆரியப் பட்டது. இந்த நிலையில் மெகல்லன் என்ற ஐரோப்பிய மாலுமி,கப்பலில் உலகை வலம் வந்த பிறகே, பூமி ஒரு கோளம் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. அதன் பிறகு ஐரோப்பியர்கள் பசிபிக் பெருங்கடலில் கடலில் பயணம் செய்து பல புதிய தீவுகளை கண்டுபிடித்து தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடிய பொழுது, பல தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுகுறித்து ஐரோப்பாவிற்கு திரும்ப வந்து கூறியதும் மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதேபோன்று பசிபிக் பெருங்கடலில் பல ஆராய்ச்சியாளர்கள் பயணம் செய்து அங்கிருந்த தீவுகளில் இருந்த தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி தெரிவித்த விஷயங்களைக் குறித்து ஐரோப்பியர்கள் குழப்பமான ஆச்சரியத்தை அடைந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியவில் கங்காரு விலங்கு பற்றி கூறியதைக் கேட்ட மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதே போன்று பிளாட்டிபஸ் என்ற விலங்கு ஊர்வன வகை விலங்குகளை போல முட்டையிட்டு குஞ்சு பொறித்த பிறகு அதன் குஞ்சுகளுக்கு பாலூட்டி வகை விலங்கினங்களை போல் பாலூட்டுவதை பற்றி கூறியதையும் ஐரோப்பியர்கள் நம்ப மறுத்தனர். இந்த நிலையில் சில குடிகார மாலுமிகள் கடற்கன்னி கடல் அரக்கன் பற்றிய கதைகளும் உலா வந்தன. ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ஆராய்ச்சி ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக்;கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது. அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின. அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார். அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார். குறிப்பாக, ஆசியக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் குரங்கு,புலி,காண்டா மிருகம் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,அவர் விலங்கினங்களானது, ஓரிடத்தில் தோன்றி மற்ற பகுதிகளுக்குப் பரவி இருப்பதைப் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில் ,இந்தோனேசியாப் பகுதியில், முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் அந்தத் தீவுகளுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையும்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதையும், வாலஸ் யூகித்து அறிந்தார். ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,கோடிக் கணக்கான ஆண்டுகளாக,அந்தத் தீவுகள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதையும், வாலஸ் புரிந்து கொண்டார். வாலஸ் கவனித்த ,வெவ்வேறு வகை விலங்கினங்கள் காணப் படும் கடல் பகுதியானது ''வாலஸ் கோடு'' என்று அழைக்கப் படுகிறது.ஆனாலும்,இந்தத் தீவுகள் எல்லாம், அதிக பட்சம் நூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு தென் அமெரிக்கக் கண்டத்தின் கடற் கரையோரப் பகுதியை வரை படமாகத் தயாரிக்க பீகிள் என்ற கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தது.அத்துடன் அதில் இயற்கை புதிர்கள் பற்றி அறிய இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின் என்ற இருபத்தி இரண்டு வயது இளைஞரையும் அனுப்பியது. அப்பொழுது அந்தத் தீவுகளில் நகரும் ஆட்டாங் கல்லைப் போல ராட்சத ஆமைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன அவற்றைக் கண்ட டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்த தனிமை தீவிற்கு வந்திருக்கக் கூடும் என்று வியந்தார் . அப்பொழுது டார்வினை வரவேற்ற காலமாக தீவு கவர்னர் இந்த தீவுகளில் காணப்படும் ஆமைகளின் ஓடுகள் தீவிற்கு தீவு வேறுபட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார். அத்துடன் ஒரு ஆமையின் ஓட்டை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஆமை எந்த தீவை சேர்ந்தது என்று கூறி விட முடியும் என்றும் தெரிவித்தார். அப்பொழுது டார்வின் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தார் பச்சை பசேல் என்று இருக்கும் தீவுகளில் தரையில் இருந்து சில அடி உயரத்திலேயே தாவரங்கள் இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் குட்டையாக இருப்பதை கவனித்தார். அதேபோன்று வறண்ட தீவுகளில் அதாவது இலை தழைகள் சற்று உயரமாக இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் நீளமாக இருப்பதை கவனித்தார். அத்துடன் அந்த ஆமைகள் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதையும் புரிந்து கொண்டார். பின்னர் அந்த ஆமைகள் வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைப்புகளை பெற்றதாக டார்வின் புரிந்து கொண்டார். இகுவானா புதிர் அதே போன்று காலபாகஸ் தீவுகளில் இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள் இருப்பதையும் கவனித்தார். குறிப்பாக அந்தப் பேரோந்திகளில் சில கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழ்வதையும் கவனித்தார். அவ்வாறு கடலுக்குள் செல்லும் இகுவானாக்களின் கால் விரல் நகங்கள் நீளமாக பாறைகளை பற்றி கொள்ளும்படி இருந்தது. ஆனால் தரையில் இருக்கும் தாவரங்களை உண்டு வாழ்ந்த இகுவானாக்களின் கால் மற்றும் அவைகளின் விரல்கள் குட்டையாக இருந்தன . அதன் அடிப்படையில் அந்த இகுவானாக்களும் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்வின் புரிந்து கொண்டார் அதே போன்று அந்த தீவுகளில் பலவகை சிட்டுக்கள் இருப்பதை கவனித்தார் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் அலகுகள் வேறுபட்டு இருப்பதை டார்வின் கவனித்தார். குறிப்பாக மரப்பட்டைகளுக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை உண்ணும் சிட்டுகளின் அலகு நீளமாகவும் கூர்மையாகவும் இருப்பதை கவனித்தார். அதேபோன்று தானியங்களை உண்ணும் சிட்டுக்களின் அலகு குட்டையாக இருப்பதை கவனித்தார். அத்துடன் பழம் மற்றும் கொட்டைகளை உண்ணும் சிட்டுகளின் அலகு கிளிகளுக்கு இருப்பதைப் போன்று பருத்து இருப்பதை கவனித்தார்.அதன் பிறகு அந்த சிட்டுகள் எல்லாம் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்லிங் புரிந்து கொண்டார். இவ்வாறு ஒரு இனத்திலிருந்து பல வேறுபட்ட இன வகைகள் தோன்றுவது அடாப்டிவ் ரேடியேசன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக காலபாகஸ் எரிமலை தீவுக் கூட்டத்தில் தரையில் வாழக்கூடிய ராட்சத ஆமைகள், இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள், இருப்பதைக் கண்டு எப்படி இந்த விலங்குகள் ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியை கடந்து இந்த தனிமை தீவிற்கு வந்திருக்க முடியும் என்று வியப்பு அடைந்தார். அதேபோன்று தீவுகளில் தரையில் வாழும் நத்தைகள் இருப்பதைக் கண்டும் வியந்தார்.ஏனென்றால் தரையில் வாழும் நத்தைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது. எனவே டார்வின் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக்கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதினார் . இந்த விளக்கமானது தற்செயல் பரவல் முறை என்று அழைக்கப்படுகிறது . அதே போன்று எரிமலைத் தீவுகளில் தவளைகள் இருக்காது என்று நம்பினார் ஏனென்றால் பொதுவாகக் கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தீவுகளில் காணப்படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் விலங்கினங்கள் தத்தளித்தபடி தற்செயலாக அந்த தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கக் கூடியது. எனவே தவளைகளின் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே பல நாட்கள் கடலில் மிதக்கும் தாவரங்களின் மேல் இருந்தால் காற்றில் தவளைகளின் தோல் உலர்ந்து விடும். அது மட்டுமல்லாது தவளைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது. மெல்லிய தோலைக் கொண்டிருக்கும் தவளையின் உடலில் இருந்து நீர் எளிதில் ஆவியாகி விடும். இதனால் தவளை இறந்து விடும். இதனைத் தவிர்க்க தவளையின் உடல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்கும்.ஆனாலும் தவளை மலைக் காலத்திலேயே வெளிவரும்.அதிக வெயிலையும் காற்று வீசும் இடத்தையும் தவிர்த்து ஈரப்பாங்கான நிழல் பகுதியிலேயே வசிக்கும்.குறிப்பாக தவளை நீர் நிலைகளை விட்டு அதிக தொலைவிற்கு செல்லாது. எனவே தான் டார்வின் செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். இந்நிலையில் கரீபியன் தீவுகளில் காணப்படும் தவளைகளில் மேற்கொண்ட மரபணு சோதனையில் அந்தத் தவளைகளின் மூதாதை தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருப்பதை பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் கண்டு பிடித்திருக்கிறார்.ஆனால் அந்த மூதாதை எப்படி தென் அமெரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு வந்திருக்கும் என்பதற்கு அவர் கூறும் விளக்கம் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதாவது தென் அமெரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அடித்து வரப் பட்ட கடலில் மிதக்கும் தாவரங்கள் மேல் அமர்ந்து வந்த தவளைகளுக்கு அந்தத் தாவரத்திலேயே உண்பதற்குப் பூச்சிகளும்,குடிப்பதற்குத் தூய நீரும் இருந்திருக்கலாம் என்று ஹெட்ஜெஸ் கூறுகிறார். ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தனிமைத் தீவுகளில் காணப்படுவதற்கு தற்செயல் பரவல் முறை சரியான விளக்கம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. கலாபாகஸ் தீவில்,காணப் படும் ,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளில், இரண்டு இனவகைகள் காணப் படுகிறது. குறிப்பாக,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,கலாபாகஸ் தீவை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில், கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழும் உடும்பானது,தரையில் வாழும் உடும்பினத்தில் இருந்து,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் உருவாகி இருப்பது,மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால்,கலாபாகஸ் தீவோ,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக உருவாகியது. அதாவது,கலாபாகஸ் தீவை விட அந்தத் தீவில் வாழும் உடும்புகளானது,அதிக தொன்மையானது. எனவே,தற்பொழுது,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில்,இருந்து,கலாபாகஸ் தீவை அடைவதற்கு முன்பே, வேறு சில தீவுகளில் வந்து வாழ்ந்து இருப்பதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட பரிணாம மாற்றத்தில், இரண்டு இனவகையாக உருவான பிறகு,அந்தத் தீவுகளானது கடலுக்குள் மூழ்கிய தாகவும்,அப்பொழுது, கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த, கலாபாகஸ் தீவுகளுக்கு,உடும்புகள் வந்ததாகவும், தற்பொழுது புதிய விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கலாபாகஸ் தீவுகளுக்கு ராட்சத ஆமைகளானது,கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்ததாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால்,அதே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,இகுவானாக்களானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,தென் அமெரிக்கக் கண்டதுக்கும்,காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக வந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ரின் ஹார்ட் வெர்னெர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் காலபாகஸ் தீவுக்கு அடியில் உருவாகி இருக்கும் கடலடித் திட்டுகள் மற்றும் கடலாடி மலைகளின் மேல் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைகளின் வேதியியல் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது மூவாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த எரிமலைத் திட்டுகளும் மலைகளும் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்து இருக்கின்றன என்று கண்டு பிடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்தக் கண்டு பிடிப்பானது காலபாகஸ் தீவில் வாழும் இகுவானாக்கள் சில மூழ்கிய தீவுகளில் பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார்டிப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேவிட் எம் பக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் கடலடிப் பீட பூமி பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட எரிமலைப் படிவுகளின் வேதித் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்ததாக தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அவ்வாறு கடல் மட்டத்துக்கு மேலே அந்தக் கடலடி பீட பூமி இருந்த பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்துக்கும் பயன் பட்டு இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இந்தக் கண்டு பிடிப்பானது இதற்கு முன்பு பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒண்டாங் ஜாவா கடலடிப் பீட பூமி மற்றும் சாக்ஸ்டி கடலடிப் பீடப் பூமியம் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து எரிமலைக் குழம்பைக் கக்கியதற்கு ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த ஆதாரங்களுடன் ஒத்துப் போவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். காலபாகஸ் தீவு புதிர் காலபாகஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது. கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும். குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது. தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை. கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது. இன்னொன்று கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது. கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு விசேஷ சுரப்பிகள் மூக்குக்கு அருகில் இருக்கின்றன. கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும். கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன. அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன. சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன. அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும்,இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும். குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாக செயல் பட இயலாது. இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. இகுவானா மழை. கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன. அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின. அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின.இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது. இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்? இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது,அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவின் தரை வாழ் இகுவனாக்களில் இருந்து பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர். அத்துடன், அந்த சமதளப் பரப்பின்மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் வழியாகவே வந்திருக்கின்றன என்று,தற்பொழுது தெரிய வந்துள்ளது. எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது. முக்கியமாக ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது. இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும் பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார். ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது. பவளத் திட்டு புதிர் பவளத் திட்டுகளின் தோற்றத்திற்கு டார்வின் கூறிய ''மூழ்கும் எரிமலை'' விளக்கம் ஒரு தவறான விளக்கம் . குறிப்பாக டார்வின் பீகிள் கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயம் குறித்து அவர் மிகவும் யோசித்துக் கொண்டிருந்தார். அதாவது பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் பவளத் திட்டுகளால் ஆன தீவுகள் இருப்பது குறித்து ஐரோப்பிய மாலுமிகள் தெரிவித்து இருந்தனர். பொதுவாக பவளத் திட்டுகள் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலேயே காணப்படும்.பவளங்களுக்கு எதோ ஒரு வகையில் சூரிய ஒளி தேவைப் படுகிறது என்று புரிந்து கொள்ளப் பட்டாலும் சரியான காரணம் அறியப் படாமல் இருந்தது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பவளங்கள் ஆல்கா எனப்படும் நுண் தாவரங்களை சார்ந்து வாழ்வது தெரியவந்துள்ளது. அந்த தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் சர்க்கரைச் சத்தை உற்பத்தி செய்கிறது. அதனை பவளங்கள் பயன்படுத்திக் கொள்கிறது. பதிலுக்கு பவளங்கள் அந்த தாவரங்கள் வாழ்வதற்கு தங்களின் உடலில் இடம் கொடுக்கிறது. இவ்வாறு பவளங்களும் ஆல்காக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் பவளங்கள் சூரிய ஒளி புகக் கூடிய 15 முதல் 30 அடி ஆழத்திலேயே பவளங்கள் உயிர் வாழும். முக்கியமாக பவளங்கள் கடலில் உள்ள கால்சியம்,கார்பன் டாய் ஆக்சைட் ஆகியவற்றை கிரகித்துக் கொண்டு கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் கடினமான சுண்ணாம்பால் ஆன ஓட்டை சுரந்து தங்களின் மெல்லுடலை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு கடல் தரையில் அல்லது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பாறைகளின் மேல் வாழும் ஒரு தலைமுறை பவளங்கள் இறந்தவுடன் அவற்றின் உடலில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கடல் தரையிலோ அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகளிலோ படிகின்றன. அதன் மேலே புதிய தலைமுறை பவளங்கள் வாழ்கின்றன. இவ்வாறு பல முறை நடைபெறுவதால் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்கின்றன. இவ்வாறு வளரும் பவளத் திட்டுகள் பல பத்தாண்டுகளுக்கு சில சென்டிமீட்டர் அளவுக்கு வளர்கிறது. இந்த நிலையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தால் கடல் மட்டம் உயரும் வேகத்திற்கு இணையாக பவள திட்டுகள் வளரவில்லை என்றால் கடலில் மூழ்கி இறந்து விடும். இது போன்ற விவரங்கள் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. முக்கியமாகக் கடல் மட்ட உயர்வு குறித்தும் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. இந்த நிலையில் டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் கடலில் பயணம் செய்த பொழுது பயங்கரமான நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கண்டத்தின் கரையோரப் பகுதியில் நிலமானது பல கிலோமீட்டர் தொலைவிற்கு பல பத்து அடிகள் உயர்ந்து இருந்தது. அதில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்கள், பாசிகள், சிப்பிகள்,மற்றும் இறந்த தாவரங்கள் இருந்தன. அதன் பிறகு அப்பகுதியில் இருந்த மலையின் மேல் ஏறி டார்வின் ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் குறிப்பாக கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் இருப்பதை கண்டார் அதன் பிறகு டார்வின் கப்பலுக்குள் சென்று அங்கு அவர் வைத்திருந்த குறிப்பேடுகளை புத்தகங்களை படித்தார். அதில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப் பட்ட பவளத் திட்டு தீவுகள் குறித்த வரைபடங்களையும் கவனித்தார். அதன் அடிப்படையில் அவர் நிலப்பகுதிகள் உயரும் பொழுது, கடல் தரையானது சில இடங்களில் தாழ்வடைவதாகவும் நம்பினார். அதாவது கடலுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஒரு எரிமலை ஆனது கடல் தரையுடன் கீழே இறங்குவதாகவும், அப்பொழுது அந்த எரிமலையின் வாயைச் சுற்றிலும் ,எரிமலையின் சரிவுப் பகுதிகளிலும் பவள திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் யூகம் செய்தார்.இந்த நிலையில் எரிமலை கீழ் நோக்கி இறங்கும் பொழுது கடல் மட்ட உயர்வுக்கு ஏற்ப பவளத் திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் கருதினார். குறிப்பாக அவர் பசிபிக் கடல் பகுதிக்கு பயணம் செல்வதற்கு முன்பே தென்னமெரிக்கக் கண்டப் பகுதியில் கடல் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதே இந்த விளக்கத்தைத் தனது குறிப்பேட்டில் எழுதினார். அப்பொழுது அவர் பவளத் திட்டுகளை நேரில் காணாமலேயே இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் விளக்கத்தை தனது நண்பரான லயல் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் சஞ்சலம் அடைந்தார் அதன் பிறகு டார்வின் பசிபிக் கடலில் பயணம் செய்து பல வளைய வடிவ பவளத் திட்டுத் தீவுகளைக் கண்டார். அதன் அடிப்படையில் அவர் தனது விளக்கம் சரிதான் என்று திருப்தி அடைந்தார். அதன் பிறகு ஐரோப்பா திரும்பியதும் டார்வின் கூறிய விளக்கத்தைக் கேட்ட டார்வின் நண்பரான லயல் டார்வினின் ''மூழ்கும் எரிமலை'' விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு இந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் வாசிக்கவும் டார்வினுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் டார்வின் வாசித்ததும் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் எல்லா ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. குறிப்பாக பசிபிக் கடலில் பல பவளத் திட்டுத் தீவுகள் நீள் மூட்டை வடிவிலும், விமான ஓடுதளம் போன்ற நேர்கோட்டு பாதை வடிவிலும், முக்கோண வடிவிலும் உருவாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.எனவே டார்வினின் மூழ்கும் எரிமலை விளக்கம் சரியல்ல. இந்த நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கடலுக்கு அடியிலும் பல்லாயிரம் அடி ஆழத்தில் பல பவளத் திட்டு தீவுகள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது .இதன் மூலம் பவளத் திட்டுத் தீவுகள் உருவானதற்கு கடல் மட்டம் உயர்வே காரணம் என்பது தெரிய வந்துள்ளது 000000000 பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). ரிசல்யூசன் குயாட், பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது. இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அதன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள்களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. . அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு ஆழம் குறைந்த பகுதியில் வளரக் கூடிய பவளங்கள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதுடன்,பவளத் திட்டுகள் கண்டங்களின் மேலும் பரவலாக்க காணப் படுவதன் மூலம் கண்டம் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன்மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . நகரும் எரிமலைகள். தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் அதாவது ஆழமற்ற கடல் பகுதியில் உருவான எரிமலைகள் பின்னர் கடல் தரையானது ஆழமான பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதனால் எரிமலைகளின் உயரம் குறைவதாகவும் அதற்கு ஏற்ப எரிமலையை சுற்றி பவளங்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர் ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கல்நகரும்பொழுது கடல்தளப்பாறைகளுக்கு இடையில் உ ரசல் ஏ ற்படுவதாகவும் அதனால் கடல் தரையின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் கூறப்படும் நகரும் எரிமலைகள் விளக்கமும் ஒரு தவறான விளக்கம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவே பசிபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் பவளத் திட்டுகள் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும். அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன. மழைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கம் மண்புழுக்களை பொருந்தாது.எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்ற விளக்கத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவத்திற்கு ஒட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது. பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது. தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது. கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும். எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் அரிய வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன. உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து உருவான கதை. கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வர பட்ட மறக்க கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் மாதங்கள் கடலில் தத்தளித்தபடி விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளுக்கு தற்செயலாக வந்திருக்கலாம் என்று தவறாந விளக்கத்தைக் கூறுவதை போன்றே தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா அண்டார்க்டிகா போன்ற கண்டங்களில் காணப் படுவதற்கும் ஒரு தவறான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. மேட்சிங் கோஸ்ட் லைனும் ஐடென்டிக்கள் பாசில்ஸ்களும் . ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு திருத்தமான உலக வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அதில் ஒரு வினோதமான விஷயம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்ற வடிவில் அமைந்து இருந்தது புதிராக இருந்தது. குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஒர பகுதிக்கு இணையான வடிவில் இருந்தது.இது மேட்சிங் கோஸ்ட் லைன் என்று அழைக்கப் படுகிறது.இந்த நிலையில் அந்த வரை படத்தை தயாரித்த ஆபிரகாம் ஆர்டெல்லியஸ் அந்தக் கண்டங்களானது இடம் பெயர்ந்து நகர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப்பு படியாக பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும் அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக டார்வின் பீகிள் கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுது கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகு அந்தக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் பல பத்தடிகள் உயர்ந்து இருப்பதுடன் அதன் மேல் கடல் பாசிகள் தாவரங்கள் இருப்பதைக் கண்டார்.அதன் அடிப்படையில் கண்டங்கலின் பகுதிகள் உயர்ந்து இருப்பது குறித்து சிந்தித்தார். பின்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்த ஆண்டிஸ் மலையின் மேல் கடல் சிப்பிகள் புதை படிவங்களையும் கண்டார். அந்த மலையும் உயர்ந்து இருப்பது குறித்து யோசனையாக இருந்தார்.அதன் பிறகு கண்டங்களின் சில பகுதிகள் உயரும் பொழுது கடல் தரையானது தாழ்வடைவதாகவும் அதனால் எரிமலைகள் மூழ்குவதாகவும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.இவ்வாறு கடல் தளம் தாழ்வடைவதால் அதில் இருக்கும் எரிமலைகள் மூழ்குவதாகவும் அப்பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் பவளங்கள் வளர்வதால் பசிபிக் கடலில் வளையவடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதாகவும் டார்வின் நம்பினார். இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயரை சூட்டினார். அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார். ஐடென்டிக்கள் பாசில்ஸ். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார். மாறாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் காட்சிதமாகப் பொருந்த வில்லை.ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒர பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்து பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருது குறித்து ஆராய்ச்சி செய்தபொழுது விரிவடையும் பூமி கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டது தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அளிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார்.அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார். இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர் ,நில அதிர்ச்சி அலைகள் பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக்கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக்க கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பனி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார் அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன் அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரைபடத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது. குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. புதை படிவங்கள் எப்படி உருவாகுகின்றன. பெரும்பாலும் புதை படிவங்கள் மலைச் சரிவுகளிலேயே காணப் படுகின்றன.அத்துடன் பல புதை படிவங்களானது லைவாக காணப் படுகிறது அதாவது உயிரோட்டமுடையதாக இருக்கிறது.உதாரணமாக மீன்கள் இணைப் பெருக்கம் செய்யும் நிலையில் புதை படிவங்களாகி இருக்கின்றன.அதே போன்று ஒரு மீன் இன்னொரு மீனை விழுங்கி கொண்டு இருக்கும் நிலையில் புதை படிவங்களாகி இருக்கின்றன.இரண்டு டைனோசர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் புதை படிவங்களாகி இருக்கின்றன.குறிப்பாக கடல் தரையில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அதிலும் குறிப்பாக ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் கடல் தரையில் வாழ்ந்த கடல் உயிரினமான ட்ரைலோபைட் என்று அழைக்கப் படும் கடல் உயிரினங்களின் புகுத்தி படிவங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அவைகள் திடீரென்று ஏற்பட்ட கடல் சேறு சரிவில் மூடப் பட்டதால் உயிரோட்டத்துடன் வாழ்க்கை செயல் பாட்டுடன் புதைப்படிவங்களாகி இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கு நிலப் பகுதிகள் மற்றும் மலைகள் உயரும் பொழுது ஏற்படும் ஏற்படும் நிலைச் சரிவில் சிக்கிய உயிரினங்களே பின்னர் காலப் போக்கில் வெய்யிலில் காய்ந்து எலும்புக்கு கூடாகிய பிறகு மலை நீரானது மண்ணுக்குள் இறங்கும் பொழுது மண்ணைக் கரைத்து நீராக அந்த எலும்புகளுக்குள் இறங்குகிறது இதனால் காலப் போக்கில் அந்த எலும்புக்கு கூடுகளானது கல்லாக மாறி புதை படிவங்களாக உருவாகுகின்றன.கல் மரங்களும் இவ்வாறே உருவாகின்றன. இவ்வாறு உருவாக்கு புதை படிவங்கள் கடலுக்கு அடியிலும் பனிப் பிரதேசத்திலும் காணப் படுவது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.இதன் மூலம் கடலும் பனியும் புதை படிவங்கள் உருவான பிறகு புதிதாக உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. டைனோசர் புதிர் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக டைனோசர்களின் காலத்தில் பூமியானது சிறியதாக இருந்ததால் துருவப் பகுதிகளில் அதிக அளவில் சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது. தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது . எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் கூட ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. தற்பொழுது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது '' வரையறுக்கப் படாத எல்லை '' என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. இமுக்கியமாக கரீபியன் தீவுக்கு கூட்டமானது கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று தொடர்ச்சியாக இருந்து இருப்பதுடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும் கரீபியன் நிலத்தொடர்பு வழியாக டைனோசர் உள்பட பல விலங்கினங்கள் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடப பெயர்ச்சி செய்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது பின்னர் பூமி விரிவடைந்ததால் கரீபியன் நிலைத்த தொடர்பானது துண்டிக்கப் பட்டு தனித்த தனித் தனி தீவுகளாக உருவாகி இருப்பதும் உறுதியாகிறது. எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும். ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது. இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது . எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும். அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம். கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது. இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது. கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு, உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம். வரிப் பட்டை இரும்பு படிவப் புதிர் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி? வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது. இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன. பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. 00000000 மத்திய தரைக் கடல் புதிர்கள். ராட்சத உப்புப் படிவப் புதிர். கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் மத்திய தரைக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ராட்சத உப்புப் படிவுகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி? இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு ராச்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது. சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும். ஒரு மீட்டர் உயரமுள்ள கடல் நீர் வற்றினால் ஒரு மில்லி மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாகும். அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். தற்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் பத்து லட்சம் கண கிலோ மீட்டர் உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த அளவானது தற்பொழுது மத்திய தரைக் கடலில் இருக்கும் உப்பின் அளவை விட ஐம்பது மடங்கு அதிகம் ஆகும். தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேற் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி மூன்று லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த ராட்சத உப்புப் படிவங்களானது ஏழு லட்சம் ஆண்டு கால கட்டத்தில் உருவாகி இருக்கின்றன. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக் கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும். அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத வெப்ப உயர்வு நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உண்மையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் நில மட்டமும் கடல் மட்டமும் மாறி மாறி உயர்ந்து இருப்பதுமே மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவுகள் உருவாகி இருப்பதற்கு காரணம் . இதே போன்ற ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பாக தென்னமெரிக்க கடற்கரை பகுதியிலும் அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியிலும் 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய ராட்சத உப்பு படிவங்கள் உருவாகிஇருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது . கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்பநிலையும் அதிகமாக இருந்திருக்கிறது அதன்பிறகு கடல் மட்டம் உயர உயர கடலின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வளிமண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்து இருக்கிறது அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அத்துடன் கடலில் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்து இருக்கிறது. அத்துடன் கடலின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது. இதனால் உப்பு படிவங்கள் உருவாகுவதும் நின்று விட்டது. ஆனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உப்பு படிவங்கள் மூழ்கி இருக்கின்றன. குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவப் புதிர் இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. நீர் யானையின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் அவைகளால் நீரின் மேற்பரப்பில் நீந்த இயலாது. குறிப்பாக அவைகளின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது. ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று nநம்பப் படுகிறது. குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி லெமூர் குரங்காவது தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.லெமூர் குரங்குகளின் புதை படிவங்கள் மூலம் சில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் குரங்கினம் இரண்டு முறை தற்செயளாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில் குள்ள வகை நீர் யானைகள் மூன்று முறை அல்லது குறைந்த பட்சம் இரண்டு முறை கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர் ஆகும்.கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது தெரிய வந்துள்ளது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் இரண்டு மற்றும் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உருவாகி இருக்கும் ராட்சத உப்புப் படிவுகள் மூலமாகவும் கடல் மட்டமானது பல கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சிசிலி,மால்டா,கிரிட்டி, மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கடல் மட்டமானது பல கிலோ மீட்டர் தாழ்வாக இருந்தகாரந்தால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்கள் தீவுகளுக்கும் தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித்த தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படும் இரண்டு முக்கிய ஆதாரங்கள் . ஒன்று - ராட்சத உப்புப் படிவுகள் இரண்டு - தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள். தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரல் என்று அழைக்கப் படும் பனை மாற உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் கரைந்தது துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேலும்,குறிப்பாக மலைகளின் மேலும் பாலைவனங்களிலும் பரவலாக்க கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு தரையில் வாலா கூடிய டைனோசர்களின் புதை படிவங்கள் காண்டலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும் அதே போன்று கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. 000000 ஆர்க்டிக் புதிர்கள். ஆர்க்டிக் அஜோலா புதிர் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளும் அதில் ராட்சத ஆமைகள்,முதலைகள்,பாம்புகள்,குரங்குகள் என வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய விலங்கினங்கள்,குறிப்பாக சதுப்பு நிலக் காடுகளில் வாழக் கூடிய விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அலாஸ்கா பகுதியிலும் அண்டார்க்டிக்காக் கண்டத்திலும் வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய பனை மரங்கள் வளர்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதற்கும் முன்பு துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகளும் அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதன் அடிப்படையில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை நிலவி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இவ்வாறு வெப்பக் காடாக இருந்த பூமி எப்படி நாம் காணும் பனிப் படலங்கள் மூடிய துருவங்களுடன் குளிர் பூமியாக மாறியது எப்படி அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த மாற்றத்துக்கு அஜோலா என்ற நன்னீரில் வாழக் கூடிய பெரணி வகை மிதவைத் தாவரம்தான் காரணம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்த பொழுது அதில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான அஜோலா என்ற தாவரத்தின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பு பல நாட்டு ஆராய்ச்சியாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.காரணம்,அஜோலா என்பது வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் உள்ள நன்னீர் நிலைகளான குளம் குட்டை மற்றும் ஏரிகளில் மேற்பரப்பில் வளரக் கூடிய சிறிய மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகள் அரிசியின் அளவே இருக்கும் அதில் இருந்து தூவிகள் போன்ற வேர்ப் பகுதியின் உதவியால் நீர்ப் பரப்பின் மேல் மிதந்தபடி வாழக் கூடிய ஒரு மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகளில் உள்ள குழிகளில் அனபீனா என்று அழைக்கப் படும் நீலப் பசும் பாசி வகையை சேர்ந்த சயனோ பாக்டீரியா வாழ்கிறது.இந்த பாக்டீரியா காற்றில் இருக்கும் நைட்ரஜனை சிதைத்து தாவரங்கள் பயன் படுத்தக் கூடிய நைட்ரஜனாக மாற்றுகிறது அதனை அஜோலா பயன் படுத்திக் கொள்கிறது அதே நேரத்தில் அஜோலா பாக்டீரியாவுக்கு வாழ இடமும் பாது காப்பும் அளிக்கிறது.அஜோலாவின் இந்த பண்பால் அஜோலா சிறந்த தழை உரமாக சீனாவில் அரிசி வயல்களில் பதினோராம் நூற்றாண்டு முதல் பயன் படுத்தப் பட்டு வருகிறது கால் நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தப் படுகிறது.முக்கியமாக அஜோலா ஓரிரு நாட்களிலேயே இரு மடங்கு பெருக்க கூடியது.ஆனால் அஜோலாவுக்கு உப்பு நீரும் ஒத்துக் கொள்ளாது பனியும் ஒத்துக் கொள்ளாது. எனவே அஜோலா எப்படி ஆர்க்டிக் கடலின் மத்திய பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஏற்கனவே ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் ஒம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்த பொழுதும் இதே கேள்வி எழுந்தது. அதற்கு ஒண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பம் இருந்திருக்கிறது என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் பாய்ந்து இருக்கிறது என்றும் அதனால் அந்த நீரோட்டத்துடன் ஆசிய வகை நன்னீர் ஆமைகள் ஆசியப் பகுதியில் இருந்து ஆர்க்டிக் கடல் வழியாக வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருந்தார்.குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு மேலே பல இடங்களில் நன்னீர் பரப்பு இருந்திருக்கலாம் என்றும் அல்லது ஆர்க்டிக் கடலில் பல எரிமலைத் தீவுகள் வரிசையாக இருந்து அதன் வழியாகவும் ஆமைகள் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம் தெரிவித்து இருந்தார். அதே போன்று தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் கடலானது கண்டத் தட்டுகளின் நகர்ச்சியால் மற்ற கடல் பகுதியில் இருந்து பிரிக்கப் பட்டு மத்திய தரைக் கடலைப் போன்று முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டு இருக்கலாம் என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலில் மேற்பரப்பில் உப்புத் தன்மை குறைந்த நீர்ப் பரப்பும் அதற்கு அடுத்து உப்புத் தன்மை அதிகமான நீரால் ஆன அடுக்குகளும் உருவாகி இருக்கலாம் என்றும் இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் வேகமாக பாய்ந்து இருக்கலாம் என்றும் அதன் வழியாக அஜோலா ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கு வந்த பிறகு இறந்து மூழ்கி லாமனோவ் கடலடி மேடு மேல் படிவுகளாக உருவாகி இருக்கிறது என்று தற்பொழுது அராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.உதாரணமாக அட்லாண்டிக் கடலுக்குள் பாயும் அமேசான் ஆறானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நன்னீர் பரப்பைக் கொண்டுள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.குறிப்பாக மற்ற தாவரங்களை விட அஜோலா பத்து மடங்கு அதிக அளவு கரிய மில வாயுக்களை உரிஞ்ஜக் கூடியது. குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட அஜோலா படிவுகளானது இருபது மீட்டருக்கும் அதிக தடிமனுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்தப் படிவுகள் உருவாக 800,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது.இவ்வாறு நீண்ட காலம் ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்த அஜோலா தாவரமானது வளி மண்டலத்தில் இருந்து பெரும் பகுதி கரிய மில வாயுவை கிரகித்த பிறகு இறந்து ஆர்க்டிக் கடலுக்கு அடியில் வீழ்ந்து படிவுகளாக மாறியதால் வளி மண்டலத்தில் இருந்த கரிய மில வாயுவின் அளவு குறைந்ததால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் பனிப் படலங்கள் உருவாகியதால் டைனோசர்கள் காலம் முதல் வெப்பக் காடாக இருந்த வெப்ப பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் சூழ்ந்த குளிர் பூமியாக மாறி விட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.ஆனாலும் இந்த விளக்கத்தை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. இருப்பினும் எதிர் காலத்தில் அஜோலாவைப் பயன் படுத்தி புவி வெப்ப மயமாதலை மட்டுப் படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனது விளக்கம். இந்திய பெருங் கடலின் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி 5000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது,இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக இருப்பதால், இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படுகிறது.இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 4000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.இந்த நிலையில் இந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தப் படிவுகளில் ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் பாகங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.குறிப்பாக 15 வகையான பூக்கும் தாவரங்கள்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் அரிகேசியே,குளோரான்தேசியே, ,லாரேசியே,குன்னேரா,கில்பீயா,ஆகிய தாவரக் குடும்பங்களை சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது சில காலம் கடல் மட்டத்துக்கு மேலே எரிமலைத் தீவுகளாக இருந்து இருக்கின்றன என்று ரெய்மண்ட் கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஆர்க்டிக் கடலுக்கு அடியில் லாமனோவ் கடலடி மேட்டுத் தொடருக்கு அருகில் இருக்கும் மெண்டலீவ் கடலடி மேட்டுத் தொடரில் துளையிட்டு சேகரித்த பாறைப் படிவுகளை ஆய்வு செய்த ரஷ்ய அகடெமியை சேர்ந்த செர்ஜி ஸ்கோலோட்னோவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் அதில் ஆழமற்ற வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவுகள் உள்பட தாவரங்களின் மகரந்தத் துகள்கள் மற்றும் பாகங்களின் புதை படிவங்களை கண்டதன் அடிப்படையில் அந்த புதை படிவங்களானது ஆழம் குறைந்த கடல் பகுதியில் படிந்தது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலுக்கு அடியில் தற்பொழுது மூழ்கிக் கிடைக்கும் பல கடலரி எரிமலைத் தொடர்கள் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக இருந்த பொழுது அதில் நன்னீர் நிலைகளும் அதில் தாவரங்களும் வளர்ந்து இருக்கின்றன.கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகி பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ஆர்க்டிக் முதலைகள். இதே போன்று கிரீன்லாந்து தீவை ஒட்டி அமையானது இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் காலத்தில் 'சாம்சோ சாரஸ்' என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதே போன்று டைனோசர்கள் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த பிலிசியோசாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புத் புதை படிவங்களும் ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் வாழ் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். எப்படி இந்த ஆசிய வகை நன்னீர் ஆமை ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து ஆக்சல் ஹைபெர்க் தீவை வந்தடைந்து இருக்கும் என்று டாக்டர் ஜான் டார்டுனோ வியப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அந்த புதை படிவமானது பஸால்ட் என்று அழைக்கப் படும் கடல் தள பாறை இருக்கும் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது அதன் அடிப்படையில் அவர் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றங்கள் அதிகமாக இருந்து இருக்கும் அப்பொழுது அதிக வெப்பத்தில் பனிப் படலங்கள் உருகி ஆர்க்டிக் கடலின் கலந்து இருக்கும். ஆனால் அந்த நன்னீரானது உப்பு நீரில் கலக்காமல் மேல் பகுதியில் இருந்து இருக்கும் அதன் வழியாக ஆசிய வகை நன்னீர் ஆமையானது ஒரு தீவில் இருந்து அடுத்த தீவை அடைந்து இருக்கும் இவ்வாறு பல தீவுகளை கடந்து கடைசியாக ஆக்சல் ஹைபெர்க் தீவை அடைந்து இருக்கும் என்று கொஞ்சம் அசாதாரணமான விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருக்கிறார். ஆனால் டைனோசர்கள் காலத்தில் அக்கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. எனவே கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்தபொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்த காலத்தில் விலங்கினங்களு ஆர்க்டிக் பகுதியில் இருந்து அதிக வெப்ப நிலையில் சதுப்பு நில காட்டில் வசித்து இருப்பதுடன் அதன் வழியாக இடப் பெயர்ச்சியும் செய்து இருக்கின்றன. இந்த நிலையில் ஹைபெர்க் தீவில் டஜன் கணக்கில் மரங்களின் அடித்த தண்டுகள் மண்ணில் பாதி அளவு புதைந்தடிக நிலையில் இருப்பதை டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்த மரங்களானது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட நிலையில் இருந்தது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்கள் என்றாலும் சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மை போன்று புதிதாக இருந்தது.அந்த மறக்க கிளைகளை சிலவற்றை எரித்து தேநீர் தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் அருந்தினர். அவ்வாறு எரிக்கக் கூடிய நிலையிலேயே அந்த மரங்கள் இருந்தன. ஆக ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதலை மற்றும் ஆமைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலமாகவும் அந்த தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நில காடுகள் இருந்து இருப்பது தெளிவாகிறது. இந்த நிலையில் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜெலின் எபெர்லி தலைமையிலான குழுவினர் ஆர்டிக் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணத்தில் ஆர்டிக் பகுதியில் அமைந்திருக்கும் எல்லிஸ் மெர் பனித் தீவில் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ராட்சத ஆமைகளின் புதை படிவங்களை கண்டுபிடித்தனர். அதே பகுதியில் நீர்யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர். அதேபோன்று அப்பகுதியில் காண்டாமிருகம் போன்ற பிராண்டோ தீரி என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர். மேலும் முதலைகள் பாம்புகள் மீன்கள் ஆகியவற்றின் புதை படிவங்களையும் கண்டுபிடித்தனர்.அதன் அடிப்படையில் அந்தப் பகுதியானது சதுப்பு நிலக் காடாக இருந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 6 மாத காலம் தொடர்ந்து பகல் பொழுது நீடிக்கும் பகுதியில் அதேபோன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆர்டிக் பகுதியில் குளிர்காலத்தில் மைனஸ் எண்பது டிகிரி வெப்பநிலைக்கும் கீழே செல்கிறது. இது போன்ற சூழலில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் முதலைகள் பாம்புகள் எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது . பனிப் பிரதேசத்தில் குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் பாம்புகள் முதலைகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவே 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் அதிக வெப்பநிலை இருந்திருப்பது ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகள் முதலைகள் மற்றும் பாம்புகளின் புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதே போன்று கிரீன்லாந்து தீவிலும் பணிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கிரீன்லாந்து தீவானது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு பனியால் மூடப் பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்து தீவின் பனிப் படலத்தில் ஒரு கிலோ மீட்ட அளவுக்கு துளைத்து ஆய்வு செய்தது.அதாவது பனிப் படலங்களுக்கு அடியில் ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை புதைத்து வைக்க ஒரு திட்டத்தை தீட்டியது.அப்பொழுது எடுக்கப் பட்டு ஆய்வகத்தில் வைக்கப் பட்டு இருந்த பனி குழாய்களை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் பதினைந்து அடி அளவுக்கு தாவரங்களின் இலைகள், கொடிகள் போன்ற பாகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனை ஆய்வு செய்த வெர்மாண்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரீவ் கிறிஸ்து கிரீன்லாந்து தீவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்காவின் கடலோர பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த நெதர் லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆப்பி செலூசிஸ் அதில் பல வகையான மரங்கள் தாவரங்கள் இருப்பதுடன் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதை கண்டு வியப்பு தெரிவித்து இருக்கிறார். பனி மிக விரைவில் பனை மரத்தை கருக்கி விடும் எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்டு கடல் தரைக்கு அடியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த பொழுதும் அதில் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தற்பொழுது பனியால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தின் கடலோர பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதில் பனைக் காடுகள் இருந்திருப்பதாகவும் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதை போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததாகவும் அதனை ஆய்வு செய்த கோதி பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்க் பெரோஸ் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு கொதிக்க கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளிலேயே அதிக அளவு வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரெகப் பகுதியில் இன்னும் அதிக அளவில் வெப்பம் நிலை இருக்க வேண்டுமே என்றும் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் யோசித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் சீனாவின் வுகாண் மற்றும் ஜெர்மனியின் நுர்ன்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை உயிரினஙகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைப் பகுதியில் வெப்ப நிலையானது மிகவும் கொடுமையாக இருந்ததாகவும் அதாவது ஐம்பது முதல் அறுபது டிகிரி வரை இருந்ததாகவும் அதேபோன்று கடல் பரப்பின் வெப்ப நிலையானது நாற்பது டிகிரி வரை றிந்ததாகவும் அதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் விலங்கினங்கள் வாழாத பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியை ''இறந்த பகுதி'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த பகுதியில் சிலவகை சிறிய வகி புள் பூண்டு புதர் செடிகலே வளர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துருவப் பகுதிகளானது தாவர மற்றும் விலங்கினங்களுக்கு தஞ்சமடையும் பகுதிகளாக இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வாய் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வலீத் தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் இடப பெயர்ச்சி நடை பெற்று இருப்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது. கடல் மட்டமானது பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலையுடன் சதுப்பு நில காடுகளும் அதில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் உடல் வெப்பத்தை பாது காக்கக் கூடிய தகவமைப்பு இல்லாத தவளை மற்றும் முதலை பாம்பு போன்ற ஊர்வன வகை விலங்கினங்களும் டைனோசர் போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் பூமியெங்கும் சதுப்பு நில காடுகளே இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு சரியான விளக்கதைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கின்றனர்.உதாரணமாக வட துருவப் பகுதியில் அமையானது இருக்கும் கிரீன்லாந்து தீவில் இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவானது அத்தியாகி வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் விளக்கம் கூறுகிறார்கள். இதே போன்று தற்பொழுது மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல் மரகே காடுகள் காணப் படுவதற்கும் அதில் சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்கும் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது தென் பகுதியில் இருந்த பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும் அதன் பிறகு வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது தற்பொழுது இருக்கும் கீதா வெப்ப மண்டலப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் இந்த விளக்கத்தின் படி ஆர்க்டிக் பகுதிக்குள் அமையானது இருக்கும் நிலப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது இருபது கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக ஆர்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அட்லாண்டிக் புதிர்கள். தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி? ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது. இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது. இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார். ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும். எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது. பேலியோ டிக்டைன் புதிர் கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர். அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது. எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள். அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார். ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார். எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார். அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார். பேலியோ டிக்டைன் என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது முதன் முதலில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று கலா பாகாஸ் தீவுக்கு அருகில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. காலபாகஸ் தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் கடலடி மேட்டுப் பகுதியில் பேலியோடிக்டின் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம் ஆகிறது.அத்துடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த காரணத்தாலேயே கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் இருந்த நீலோத் தொடர்பு வழியாகவே ராட்சத ஆமைகள் மற்றும் இக்குவானாக்கள் போன்ற விலங்கினங்களும் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார். டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார். ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் படிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை. குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது. ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும் கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும். அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும். குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு.சூரிய ஒளியில் காய்ந்து,காலப் போக்கில், இறு எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து திடீரென்று உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. அதன் பிறகு, வெய்யில் காய்ந்து சேறும் சகதியும் பாறையாக உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும் பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. முக்கியமாக ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து பூமிக்கு அடியில் இருந்து இளகிய பாறைக் குழம்பானது வெளிப் பட்டுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் அந்தக் கடல் தளங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறினாலும் கூட,தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. இதே போன்று, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொண்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பதும்,அதே போன்று கடல் தளங்களுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது. 000000000000 அட்லாண்டிக் கடலை கடல் பசுக்கள் எப்படிக் கடல் கடந்தது ? கடல் பசு என்று அழைக்கப் படும் விலங்கினம்,கண்டங்கள் மற்றும் தீவுகளை ஒட்டி இருக்கும் ஆழமற்ற கடல் பகுதியில் வசிக்கின்றன.பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த விலங்கு ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. தரையில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஆறு குளம் மற்றும் ஏ ரி க்கு அடியில் வளர்ந்து இருக்கும் தாவரங்களை உண்ணத் தொடங்கியது.பின்னர் தண்ணீரிலேயே அதிக நேரம் வசிக்க ஆரம்பித்தது.அதனால் கால்களை நடப்பதற்கு பயன் படுத்துவதற்கு பதிலாக,நீருக்கு அடியில் உள்ள தரையில் ஊன்றி உந்தி உந்தி நீந்தவும்,தண்ணீருக்கு அடியில் இருந்து எம்பி மேற்பகுதிக்கு வந்து காற்றை சுவாசிக்கவும் பயன் படுத்தியதில் காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகளைப் பெற்றது. தண்ணீருக்கு அடியில் வாழும் பொழுது இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து மூக்கை திறந்து காற்றை சுவாசிக்கும்.அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் மூச்சை அடக்கி தண்ணீருக்கு அடியில் இருக்கும் தாவரங்களை உண்ணும். காலப் போக்கில் ஆறும் கடலும் சந்திக்கும் முகத் துவாரப் பகுதியில் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரிலும் வசிக்க ஆரம்பித்த பிறகு பின்னர் கடல் நீரிலும் வசிக்க ஆரம்பித்தது.ஆனாலும் கடற் பசுக்கள் நல்ல நீரையே குடிக்கும்.சாதாரணமாக ஏழு அடி ஆழத்தில் வசிக்கும்.அரிதாக இருபது அடி ஆழத்திலும் கடற் பசுக்கள் காணப் படும். இந்த விலங்கின் உடற் செயலில் மந்தமாக நடை பெறுவதால் முதுவாகவே இயங்கும்.ஆனாலும் மணிக்கு ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இருபது சென்டி கிரேட் வெப்ப நிலையில் வசிக்கும் கடற் பசுக்கள் அதற்கும் கீழே வெப்ப நிலை குறைந்தால் வெப்பமான பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும். தற்பொழுது கடற் பசுக்கள் வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதியிலேயே வசிக்கின்றன. கடற் பசுக்களில் தற்பொழுது இரண்டு வகைகள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் பெருங் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டூகாங் என்று அழைக்கப் படுகின்றன.இதன் துடுப்பு போன்ற வால் பகுதியானது திமிங்கிலம் மற்றும் டால்பின்னுக்கு இருப்பதைப் போன்று பிளவு பட்டு இருக்கும். மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் காணப் படுகின்றன. துடுப்பு போன்ற இதன் வால் பகுதியானது பிளவு படாமல் முறம் போன்று வளைந்து இருக்கும். டூகாங் வகைக் கடற் பசுக்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் டூகாங் வகையைச் சேர்ந்த கடற் பசுக்கள், பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன.தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது. அதே போன்று ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் டூகாங் வகைக கடற் பசுக்களின் மூதாதைக ளின் புதை படிவங்கள்,ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகின்றன. உதாரணமாக பெல்ஜியம்,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஹாலி தீரியம் வகைக கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று டூகாங் வகையின் மூதாதை எனக் கருதப் படும் மெட்டாக்சி தீரியம் என்று அழைக்கப் படும் அழிந்து போன இனத்தைச் சேர்ந்த கடற் பசுக்களின் புதை படிவங்கள், அட்லாண்டிக் கடல் பகுதியிலும் தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டைனா பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் மானட்டி என்று அழைக்கப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகிடே என்ற இனத்தைச் சேர்ந்தது.இதில் தற்பொழுது மூன்று இன வகைகள் உள்ளன. கரீபியன் தீவுப் பகுதியில் காணப் படும் மேற்கு இந்தியக் கடற் பசுக்களும் ,மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப் படும் ஆண்டிலியன் கடற் பசுக்களும் , ட்ரைகேகஸ் மானட்டஸ் மானட்டஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது. புளோரிடா பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் ட்ரைகேகஸ் லாட்டிராஸ்ட்ரிஸ் என்ற இன வகையைச் சேர்ந்தது.அமேசான் ஆற்றுப் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானட்டி இனுங்குயிஸ் என்று அழைக்க படுகிறது. ட்ரைகேகஸ் செனகலிஸ் என்று அழைக்கப் படும் மூன்றாவது இனம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியுள்ள கடற் பகுதியில் காணப் படுகின்றன. கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றிய விலங்கினம். கடற் பசுவும், யானை, நீர் யானை,மற்றும் ஹைராக்ஸ் என்று அழைக்கப் படும் கொறித்துண்ணி ஆகிய விலகினங்களும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. இதன் அடிப்படையில் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று விலங்கியல் வல்லுனர்கள் கருதினார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான கடற் பசுக்களுக்கு, சிறிய அளவிலான தொடை எலும்புகளுடன் இருந்தன. கடற் பசுக்களின் மூததையானது தரையில் நடந்த விலங்கு என்பதால், தரையில் நடக்கக் கூடிய அளவுக்கு நான்கு கால்களும் உடைய தொன்மையான புதை படிவங்கள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதியில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் 1855 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், கடற் பசுக்களின் மூததையின் தலைப் பகுதியை,ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார். இதே போன்று ,2001 ஆம் ஆண்டு,வாசிங்டன் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் , டாக்டர் டாரில் டொம்னிங்,ஜமைக்கா தீவில் நான்கு கோடியே எண்பது லட்சம் தொன்மையுள்ள, கடற் பசுவின் மூதாதையின் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார். அந்த விலங்கானது தரையில் நடப்பதற்கு ஏற்ற படி நான்கு கால்களுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்த விலங்கானது நீர் யானையைப் போன்று, நீரிலும் நிலத்திலும் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜமைக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவ விலங்கானது ,கடற் பசுவின் மூததையான நடக்கும் விலங்குக்கும் தற்பொழுது உள்ள நீர் வாழ் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்று தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் டாக்டர் டாரில் டொம்னிங், கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் குறிப்பாக தென் அமெரிக்கப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கி பயணம் செய்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று 2005 ஆம் ஆண்டு ,விளக்கம் தெரிவித்து இருந்தார். அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தில் பாயும் அமேசான் ஆறானது அட்லாண்டிக் கடலில் பாய்ந்ததாகவும், அதனால் அந்த நீரோட்டத்துடன் கடற் பசுக்களும் நல்ல நீரைக் குடித்த படி,ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்ததாகவும் விளக்கம் தெரிவித்து இருந்தார். மூததையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில், நடக்கக் கூடிய கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனவே கடற் பசுக்கள் எங்கே பரிணாம வளர்ச்சி அடைந்து, எப்படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் பரவியது ? என்ற கேள்வி எழுந்தது. தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும் அதனால் கண்டங்களுக்கு இடையில் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதன் அடிப்படையில் கண்டங்கள் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்த பொழுது கடற் பசுக்களும் இரண்டு பிரிவாகப் பிரிந்து விட்டதாக நம்பப் பட்டது. தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானது என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் கடற் பசுக்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு, ஜார்ஜ் கேய்லார்ட் சிம்சன் என்ற ஆராய்ச்சியாளர் மானட்டி இனக் கடற் பசுக்கள், அட்லாண்டிக் கடலின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு திசையை நோக்கி இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று விளக்கம் தெரிவித்து இருந்தார். ஆனால் மெதுவாக இயங்கக் கூடிய, காற்றை சுவாசித்து வாழக் கூடிய,எட்டு மணி நேரம் உணவை உண்டு வாழக் கூடிய கடற் பசுக்களால்,உன்ன உணவின்றி பல நாட்கள் தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலை நீந்திக் கடக்க இயலாது . இந்த நிலையில்,2008 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ,டாக்டர் ஜுலியன் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள டுனிசியாவில் உள்ள சாம்பி தேசியப் பூங்காப் பகுதியில் ,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் காதுப் பகுதியில் இருக்கும் எலும்புப் பகுதியையும் கண்டு பிடித்தார். கடற் பசுவின் காதுப் பகுதி எலும்பில் காணப் படும் தனித் தன்மைகளின் அடிப்படையில் அந்த எலும்பானது, ஒரு கடற் பசுவின் புதை படிவம் என்றும்,அந்த எலும்பானது இது வரை கண்டு பிடிக்கப் பட்டதிலேயே மிகவும் தொன்மையான அமைப்புடன் இருப்பதாகவும் டாக்டர் ஜுலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார். அந்த எலும்புப் புதை படிவமானது நான்கு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும்,கடற் பசுக்களின் மூதாதைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தற்பொழுது கடற் பசுவினம் எந்தத் திசையில் பயணம் செய்து அட்லாண்டிக் கடலைக் கடந்தது ? என்ற கேள்வி எழுகிறது. 00000000000 அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் நடக்கும் திமிங்கிலத்தின் புதைப்படிவங்கள் பாகிஸ்தான் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பன்றி போன்ற விலங்கின் எலும்புப் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.அந்த எலும்பு அமைப்பை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த விலங்கானது திமிங்கிலத்தின் மூதாதை என்பதைக் கண்டு பிடித்தனர். ஆனால் அந்த விலங்குக்கு நான்கு கால்களும் அதில் நகங்களும் இருந்தன.அதன் அடிப்படையில் அந்த விலங்கானது நீர் மற்றும் தரையின் வாழும் வாழ்க்கை முறையை மேற்கொண்டு இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு இதே போன்ற நடக்கும் வகை திமிங்கிலத்தின் மூதாதை விலங்கின் புதை படிவங்களானது இந்தியாவில் இமய மலைப் பகுதியிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் குறிப்பாக எகிப்து பாலைவனப் பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டது.இந்த நிலையில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நடக்கும் திமிங்கிலத்தின் மூதாதை விலங்கின் எலும்புப்புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்த்த இருக்கும் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் மூலம் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ரிப்சாலிஸ் புதிர், ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் கள்ளித் தாவரமானது எப்படி அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு பரவியது என்பது, அறிவியல் உலகில் இன்று வரை விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது. கள்ளித் தாவரத்தின் தாயகம் அமெரிக்கா. கள்ளித் தாவரக் குடும்பத்தின் இன வகைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகிறது அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் வட பகுதியில் இருக்கும் கனடாவின் தென் பகுதி வரை பரவி இருக்கிறது. கள்ளித் தாவரமானது, பூக்களின் மகரந்தங்கள் மூலம், காற்றின் மூலமாகப் பரவினாலும்கூட, பெரும் பாலும் பூச்சிகள்,விலங்குகள் மற்றும் பறவைகள் மூலமாகவே பரவுகிறது. அதன் காரணமாகவே கள்ளியின் இனவகைகளானது, அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே பரவி இருக்கிறது. ஆனால் கள்ளிக் குடும்பத்தில், மரங்களின் மேல் படர்ந்து வாழும், ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் ,ஒரு இனம் மட்டும், விநோதமாக,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும், இலங்கைத் தீவிலும் காணப் படுகிறது. எப்படி இந்தக் கள்ளித் தாவரமானது,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும், மடகாஸ்கர் தீவுக்கும், இலங்கைத் தீவுக்கும், பரவியது? என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொருந்தாமல் போன கோண்டுவாணா விளக்கம். இது போன்று ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் பகுதிக் கண்டங்களில் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்கள்,எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில், மரபணு வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில்,கள்ளிக் குடும்பமானது,மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் கள்ளிக் குடும்பத் தாவரங்கள் காணப் படுவதற்கு கோண்டுவானா விளக்கம் பொருந்தாது. முக்கியமாக கள்ளித் தாவரத்தின் புதை படிவங்களும் ஐந்து கோடி ஆண்டுகளக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,காணப் படவில்லை,ஏனென்றால் கள்ளிக் குடும்பமானது புவியியல் காலகட்டத்தில்,மிகவும் சமீபத்தில் தோன்றிய தாவரமாகும். இந்த நிலையில்,நீண்ட தொலைவு பறந்து செல்லும்,பறவைகள் மூலம், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ரிப்சாலிஸ் கள்ளியானது,ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப பரவிய பிறகு,மற்ற பறவைகள் மூலம்,மடகாஸ்கர் மற்றும் இலங்கைத் தீவுகளுக்குப் பரவி இருக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,அந்தக் கண்டத்தில் எச்சமிட்டதால், ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படுகிறது. ஆனால் அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்கும் வரை எச்சமிடாமல்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வந்து எச்சமிட்டது என்று கூறப் படும் விளக்கமானது இயற்கைக்கு முரணான விளக்கம். இதே போன்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால்,கப்பல்களின் சரக்குகள் மூலம் , ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படும் ரிப்சாலிஸ் கள்ளிகளானது வெவ்வேறு இனவகைகளைச் சேர்ந்தது. இது போன்று ஒரு இனத்தில் இருந்து புதிய இனவகைகள் தோன்ற லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே ஐரோப்பியர்களின் கடல் பயணங்கள் மூலமாக, ரிப்சாலிஸ் கள்ளிகள், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படும் விளக்கமும் இயற்கைக்கு முரணான விளக்கம். தென்கோளப் புதிர். பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன? ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது. அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்து உண்கிறது. பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும். குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேயே, புதிதாக ஒரு குழியைப் பொறி கதவுடன் உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் அந்தக் குழியின் சுவரைப் பட்டிழை மூலம் பின்னி சொகுசு பண்ணிக் கொண்டு ,தனது பூச்சி பிடிக்கும் வாழ்க்கையைத் தொடங்குகிறது. அதாவது,இந்தப் பூச்சியின் வாழ்க்கை முழுவதும், ஒரு சில அடி தூர எல்லைக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது. இந்த நிலையில்,கங்காரு தீவில் பொறி கதவு சிலந்தியின்,இன வகைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுகிறது. குறிப்பாக,பொறி கதவு சிலந்திகளின் முப்பத்தி இரண்டு வகைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது. எனவே,பொறி கதவு சிலந்திகள் பூச்சிகளானது,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முதலில் கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. அதாவது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் துருவப் பகுதியில்,கோண்டுவாணா என்ற கண்டம் இருந்ததாகவும்,அப்பொழுது அந்தக் கோண்டுவாணாக் கண்டத்தில்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளானது, பரவி வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தக் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது, பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்ததால்,பிரிந்து நகர்ந்த கண்டங்களுடன்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளும்,பயணம் செய்து இருக்கிறது, என்று நம்பப் பட்டது. இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஆஸ்டின் மற்றும் டாக்டரேட் மாணவியான,சோபி ஹாரிசன் ஆகியோர், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியி இனத்தில் இருந்து, எப்பொழுது பிரிந்தது, என்று அறிவதற்காக அந்த சிலந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியின் இன வகையில் இருந்து,ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளில், பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகள் காணப் படுவதற்கு,கோண்டுவாணா பிரிவு காரணம் அல்ல என்ற முடிவுக்கு , ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். மாறாக, ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்குத் தற்செயலாக மிதந்து வந்த,நிலப் பகுதியுடன் வந்த மிதக்கும் தாவரங்கள் மூலம், கங்காரு தீவின் பொறி கதவுச் சிலந்திகளின் முன்னோர்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் இருந்து, பத்தாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து,கங்காரு தீவில் கரையொதுங்கி இருக்கின்றன, என்று சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். மேலும், இது வினோதமாக இருந்தாலும்,இவ்வாறு சிலந்திகள் கடல் பகுதியைக் கடப்பது முதல் முறை அல்ல என்றும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கொமரோஸ் தீவில் காணப் படுவதற்கும்,சிலந்திகளின் கடல் பயணமே காரணம் என்று, சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற சிலந்திகளின் கடல் பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றும், அமரோபயாய்டெஸ் என்று அழைக்கப் படும் சிலந்தியின் இனவகைகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பின்னர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும், தாவரங்கள் மற்றும் மரங்கள் மூலம் கடல் பயணங்கள் மூலம்,இடம் பெயர்ந்து இருப்பதற்கு,ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர், என்றும் சோபி ஹாரிசன் மேற்கோள் காட்டுகிறார். இந்த நிலையில்,நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்தததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில்,இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,விலங்கினங்கள்,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும், இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்றுஏற்கனவே தெரிவித்து இருந்தேன். நியூ சிலாந்து தீவுக்கு, நடக்கும் வவ்வால் எப்படிச் சென்றது? நியூ சிலாந்து தீவானது பறவைகளின் நிலம் என்று அழைக்கப் படுகிறது. ஏனென்றால் நியூ சிலாந்து தீவில் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய, பாலூட்டி வகை விலங்கினங்கள் இல்லை. இவ்வாறு நியூ சிலாந்து தீவில் ,பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படாததற்கு ஒரு விளக்கம் கூறப் டுகிறது. அந்தாவது, நாம் தற்பொழுது காணும் பாலூட்டி வகை விலங்கினங்கள் எல்லாம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர் இனம் அழிந்ததற்குப் பிறகே,பரிணாம மாற்றத்தில்,ஒரு பூச்சித் திண்ணி விலங்கினத்தில் இருந்து தோன்றிப் பல்கிப் பெருகியது. குறிப்பாகப் பாலூட்டி வகை விலங்கினமானது,வட பகுதிக் கண்டத்தில் தோன்றியதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில்,நியூ சிலாந்து தீவானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் பகுதியில் இருந்ததாக நம்பப் படும்,கோண்டு வாணா என்று அழைக்கப் படும்,ஒரு கண்டத்தில் இருந்து,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தனியாகப் பிரிந்து நகர்ந்து சென்றதாக நம்பப் படுகிறது. ஆனாலும், நியூ சிலாந்து தீவானது இரண்டு வகைப் பாலூட்டிகளுக்குத் தாயகமாக இருக்கிறது. குறிப்பாக,(Chalinolobus tuberculatus) காலினோ 'லோபஸ் டுபர் குலேடஸ்' என்று அழைக்கப் படும்,பூச்சித் திண்ணி வவ்வால் மற்றும் 'மிஸ்டா சினா டுபர் குலேடஸ்' (Mystacina tuberculata) என்று அழைக்கப் படும்,அனைத்துண்ணி வவ்வால்களே அந்தப் பாலூட்டிகள் ஆகும். இதில் காலினோ 'லோபஸ் டுபர்குலேடஸ்' என்று அழைக்கப் படும், வவ்வாலானது,வெஸ்பெர்ட்டிலியானிடே என்று அழைக்கப் படும் வவ்வால் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த வகை வவ்வால்களானது,ஆஸ்திரேலியா உள்பட பல தென் பசிபிக் தீவுகளில் காணப் படுகிறது. அதே போன்று, 'மிஸ்டாசினா டுபர் குலேடஸ்' (Mystacina tuberculata) என்று அழைக்கப் படும்,வவ்வாலானது,நாக்டிலியோநாய்ட்ஸ் என்று அழைக்கப் படும் பேரினக் குடும்பத்தைச் சேர்ந்தது. குறிப்பாக,நியூ சிலாந்து தீவில் காணப் படும் மிஸ்டாசினா குடும்பத்தைச் சேர்ந்த ''மிஸ்டாசினா டுபர் குலேடஸ்' வவ்வாலானது,மற்ற வவ்வால்களைப் போன்று அல்லாமல்,தரையில் வேகமாக நடக்கக் கூடியதாகவும்,இரைகளைத் துரத்திச் சென்று பிடிதுண்ணக் கூடியதாகவும் இருக்கிறது.எனவே இந்த வவ்வாலானது நடக்கும் வவ்வால் என்றும் அழைக்கப் படுகிறது.குறிப்பாக ஒரு நாளின் முப்பது சதவீத நேரத்தை இந்த வவ்வாலானது தரையில் கழிக்கிறது. அதற்கேற்ப இந்த வவ்வாலானது தனது ,தொல் இறக்கையை மடித்து வைத்துக் கொள்கிறது. அதே போன்று இந்த வவ்வாலின் கால் எலும்பு இணைப்புகளும் நடக்கும் வாழ்க்கைக்கு ஏற்றதாக மாறி இருக்கிறது.மேலும் இந்த வவ்வாலின் கரங்களில் வளை நகமும் இருக்கிறது.அதன் மூலம், இந்த வவ்வாலானது மரங்களில் ஏறுகிறது.தரையிலும் வளையைப் பறிக்கிறது. இந்த வகை வவ்வால்களானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது.எனவே,நாக்டிலியோநாய்ட்ஸ் குடும்ப வவ்வால்களானது,முதலில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,அண்டார்க்டிக் கண்டம் வழியாக,ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு,ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவை அடைந்து இருப்பதாக கருதப் படுகிறது. குறிப்பாக மிஸ்டா சினா குடும்ப வவ்வால்களானது,ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாகவும் அதிர்ஷ்டவசமாகவும் நியூசிலாந்து தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஏனென்றால் மிஸ்டா சினா குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பாலூட்டிகளைப் போன்று அல்லாமல்,வவ்வால்களால் பறக்க இயலும் என்றாலும் கூட,வவ்வால்களானது ,பாலூட்டி வகை இனத்தைச் சேர்ந்தது,எனவே பறவைகளைப் போன்று ,அதிக தொலைவு பறக்க இயலாதது. இந்த நிலையில், வவ்வால் இனமானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டத்தில், பரிணாம மாற்றத்தில் தோன்றி, மற்ற கண்டங்களுக்குப் பரவி இருப்பது,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால்,ஆப்பிரிக்கக் கண்டமானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே ,வவ்வால்கள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவியது என்ற கேள்வி எழுகிறது. புதைப் படிவங்கள் காட்டும் பூமி. டைனோசர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் வரைக்கும்,பாலூட்டி வகை விலங்கினங்களால் வெளியில் தலை காட்ட முடியாமல் இருந்தது. தற்பொழுது, ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான, பாலூட்டி இனங்கள் காணப் படுகின்றன. ஆனால், டைனோசர்களின் காலத்தில்,மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பாலூட்டி இனங்கள் இருந்தன. அவைகளும் ,மரங்களிலும்,தரைக்கு அடியில் வளை பறித்து வாழும் இனங்களாகவே, அதிகம் இருந்தன. ஆனாலும் , சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட புதைப் படிவம் மூலம் ஒரு விலங்கு பன்றியின் அளவு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்களின் இனம் அழிந்த பிறகு.பூமியில் மயான அமைதி நிலவியது. உடனே பாலூட்டி விலங்கினங்கள் வெளியில் தலை காட்டத் தொடங்கின. இந்தக் காலத்தில், காலியாக இருந்த வயல் வெளியில், பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழத் தொடங்கின. மேய்ச்சல் விலங்குகளைக் கொன்று தின்னும் விலங்கினங்கள், பரிணாம வளர்ச்சியில் தோன்றின. அவைகளிடம் இருந்து தப்பிக்கும் வண்ணம் ,வயல் வெளியில் வேகமாக ஓடக் கூடிய ,குளம்புக் கால் விலங்கினங்களும் இந்தக் காலத்திலேயே ,பரிணாம வளர்ச்சியில் தோன்றின. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தக் காலமானது 'இயோசீன் காலம்' என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய,பாலூட்டி வகை விலங்கினங்களான,பனிக் கரடிகள்,ஓநாய்கள்,ஆர்க்டிக் நரி மற்றும் முயல்கள் காணப் படுகின்றன. ஆனால், இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத, முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய, ஊர்வன வகை விலங்கினங்களான,முதலைகள்,பாம்புகள்,ராட்சத ஆமைகள்,நன்னீர் ஆமைகள்,வாழ்ந்து இருப்பது, ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும்,எல்லிஸ்மர் மற்றும் ஆக்சல் ஹைபெர்க் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன், பன்றியைப் போன்ற, டபீர் ,காண்டா மிருகத்தைப் போன்ற பிராண்டோ சாரஸ்,நீர் யானையைப் போன்ற கோரி போடான்,மற்றும் குரங்குகள்,ஆகிய விலங்குகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. ராட்சசப் பறவை உள்பட,வேறு சில பறவைகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சதுப்பு நிலக் காடுகள் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,இந்தக் காலத்தில்,வட துருவப் பகுதியில்,தற்பொழுது இருக்கும் பனிப் படலங்கள் இருந்திருக்க வில்லை,அல்லது அவ்வப் பொழுது, மிகவும் இலேசான பனிப் படர்வு இருந்திருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள்,நம்புகின்றனர். குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், தற்பொழுது இருப்பதை விட,பத்து டிகிரி சென்டி கிரேட் அதிக வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,0- 30, சென்டி கிரேட் வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன்,அந்த விலங்கினங்களானது,பனிக் கரடிகளைப் போன்று, அரி துயிலும் மேற்கொள்ள வில்லை,பனி மான்களைப் போன்று,குளிர் கால இடப் பெயர்ச்சியையும் மேற்கொள்ள வில்லை,என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும்,இவ்வளவு குறைந்த வெப்ப நிலையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,ராட்சத ஆமைகள் எப்படி வாழ்ந்தன, என்பது, புதிராக இருக்கிறது,என்று,கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார். மேலும்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அடர்த்தியாக, செம்மரக் காடுகள் இருந்திருப்பதும், புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. முக்கியமாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று, மாதக் கணக்கில் நீளும், பகல் மற்றும் இரவுக் காலச் சூழலில், எப்படி,செம்மரக் காடுகள் எப்படி வளர்ந்தன,என்பது புரியாத புதிராக இருக்கிறது, என்று, கிரிகர் ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்ட் சயின்ஸ்சைச் சேர்ந்த,உதவிப் பேராசிரியரான, ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். இது போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து,பகல் நீடிக்கும், சூழலில் மரங்களின் புதைப் படிவங்களைக் காண்பதென்பது,நான்கு மாத காலம் தொடர்ந்து தூங்காமல் இருப்பது போன்றது, என்று ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும்,நீருக்கடியில்,மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் காண்பது போல் இருக்கிறது, என்றும் ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். இயோசீன் காலத்தில் ஏன் வட துருவப் பகுதியில்,அதிக அளவில் வெப்ப நிலை இருந்தது ,என்ற கேள்விக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், கருத்து வேறு பாடு நிலவுகிறது. இந்தக் காலத்தில்,பூமியில் பல இடங்களில்,எரிமலைகளின் சீற்றம் அதிகம் இருந்ததாகவும் அதனால்,அவைகளில் இருந்து அதிக அளவில் கரிய மில வாயு வெளிப் பட்டதால்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதாவது ‘குளோபல் வார்மிங்’ காரணம் என்று கூறப் படுகிறது. குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் இரண்டாயிரம் பங்கு என்ற அளவில் கரிய மில வாயு கலந்து இருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்ததாக, சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்,வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ,பத்து லட்சத்தில் ஆயிரம் பங்கு, என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பது, ஐசோ டோப் ஆய்வில், தெரிய வந்ததாகத் தெரிவித்து இருந்தனர். தற்பொழுது,வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் நானூறு பங்கு என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது ஆபத்தான அளவு, என்று அலறுபவர்களும் உண்டு,அதனை மறுப்பவர்களும் உண்டு. குறிப்பாக, எரிமலைகள் மூலம் வெளிப் படும் கரிய மில வாயுவால், ஒரு சில ஆயிரம் ஆண்டுகள், அதிக வெப்ப நிலை நீடித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,வாழ்ந்த ,டபீரின் புதைப் படிவமானது,மற்ற பகுதிகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,டபீரின் புதைப் படிவங்களில் இருந்து, வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,விலங்கினங்கள்,பரிணாம வளர்ச்சி அடைந்து மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பது, தெரிய வந்துள்ளது. ஆனால்,இந்தக் காலத்தில் ,தென்பகுதிக் கண்டங்களானது, தனித் தனியாக இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே அது குறித்து , மறுபடியும் சிந்திக்க வேண்டும், என்று டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார். ஆனால்,இந்தக் காலத்தில் பரிணாம வளர்ச்சியில் உருவான சில விலங்குகள் மற்றும் பறவைகளின் புதைப் படிவங்களானது, மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு,அந்த விலங்கினங்களானது,கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி, கூட்டமாக மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால், பரிணாம மாற்றம் என்பது, லட்சக் கணக்கான ஆண்டு காலத்தில் ஏற்படும் மாற்றமாகும். எனவே,தற்பொழுது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்ததற்கான காரணம்,ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இயோசீன் காலத்தில் வட துருவப் பகுதியிலேயே, அதிக வெப்ப நிலை நிலவியிருந்தால்,பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும். அப்படி என்றால்,அது பூமத்திய ரேகைப் பகுதியில் வாழும், பல உயிரினங்களுக்கு, பாதகமான அம்சம் ஆகும். எனவே,தற்பொழுது,பூமத்திய ரேகைப் பகுதியைத் தவிர்த்து, வட துருவப் பகுதிகளில் மட்டும், அதிக வெப்ப நிலை நிலவிஇருப்பதற்கான,காரணம் குறித்து , பல்வேறு விளக்கங்களை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். டைனோசர் காலத்தில்... ராட்சதக் கடல் பல்லிகள் ஏன் அழிந்தன? அறிமுக உரை. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனங்கள் அழிந்த பிறகு,மூஞ்சூறு போன்ற ஒரு மூதாதைப் பாலூட்டி விலங்கினத்தில் இருந்து ,ஒரு கோடி ஆண்டுகளில்,தற்பொழுது நாம் காணும்,ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் தோன்றின.இந்தக் கால கட்டமானது 'பாலூட்டிகளின் காலம் என்று அழைக்கப் படுகிறது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமானது,மெசோ சொயிக் காலம் என்றும் நடு உயிர் காலம் என்றும்,ஊர்வன விலங்குகளின் காலம் என்றும் அழைக்கப் படுகிறது. தற்பொழுது நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழக் கூடிய விளங்கினமாகப் பாலூட்டி வகை விலங்கினங்கள் இருக்கின்றன. ஆனால்,மெசோ சொயிக் காலத்தில்,நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழ்ந்த விலங்கினமாக ஊர்வன வகை விலங்கினங்களே இருந்தது. பிறகு ஏன் இந்த மற்றம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊர்வன வகை விலங்கினங்களால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது,எனவே அவைகளின் உடல் வெப்ப நிலையானது,சூழ் நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். ஆனால்,பாலூட்டிகளால் சுயமாக உடல் வெப்பத்தை,உணவைச் செரிப்பதன் மூலம் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.அத்துடன் உற்பத்தி செய்த வெப்பத்தைக் காக்க ரோமத்துடன் கூடிய தோலும் பாலூட்டிகளுக்கு உண்டு. எனவே பாலூடிகளால் இரவிலும்,குளிர்ப் பிரதேசத்திலும் சுறு சுறுப்பாக இயங்க முடியும்.அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.ஆனால் பாலூடிகளோ முழு வளர்ச்சி அடைந்த குட்டிகளை ஈனுவதன் மூலம்,இனப் பெருக்கம் செய்கின்றன. கட்டுரை. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் எப்படி அழிந்தன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதே போன்று,வட துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த நிலையில்,டைனோசர்கள் காலத்தில்,கடலில் வாழ்ந்த ராட்சதப் பல்லி இனங்கள் ஏன் அழிந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக, டைனோசர்கள் காலத்தில்,இக்தியோ சாரஸ்,பிலெசியோ சாரஸ்,மோசா சாரஸ்.என மூன்று முக்கிய ஊர்வன வகைக் கடல் பல்லி இனங்கள், மற்ற விலங்கினங்களை வேட்டையாடின. இதில், இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,டால்பின் போன்ற உருவமுடைய கடல் பல்லியானது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து கடல் வாழ்க்கைக்கு ஏற்ப பரிணாம மாற்றமடைந்த விலங்கினம் ஆகும். இந்த இனத்தில் தொண்ணூறுக்கும் அதிக இனவகைகள் வாழ்ந்திருப்பது புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் புதைப் படிவங்களானது,ஆர்க்டிக் பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அம்மோனிட்டி என்று அழைக்கப் படும்,ஓட்டுடலி உள்பட ,ஆமைகள்,மற்ற மீன்களை இக்தியோசாரஸ் உண்டு வாழ்ந்தது,அதன் பின்னர்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இக்தியோ சாரஸ் இனம் முற்றாக அழிந்தது. குறிப்பாக,இக்தியோ சாரஸ் இனமானது,டைனோசர் இனத்தின் அழிவுக்கு மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதால்,டைனோசர்களின் அழிவுக்குக் கூறப் படும்,விண் கல் மோதல் மற்றும் எரிமலைச் சீற்றங்களின் விளைவு ,இக்தியோ சாரசின் அழிவுக்குப் பொருந்தாது. இந்த நிலையில்,இக்தியோ சாரசின் அழிவுக்கு கால நிலை மாற்றம் காரணமாகக் கூறப் படுகிறது. குறிப்பாக,பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ,லீஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் வேலண்டின் பிஷர் ,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததாகவும்,அதனால் கடலின் வெப்ப நிலையும் உயர்ந்ததாகவும், அவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு ஏற்ப வேகமாக,இக்தியோ சாரசால் ,தகவமைப்பு செய்து கொள்ள இயலாததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகப் பிஷர் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று,ஜெர்மன் நாட்டின் அருங் காட்சியகத்தைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான டேனியல் டிக் என்பவர்,இக்தியோ சாரஸ் தனது வாழிடங்களை இழந்ததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று,டைனோசர்களின் காலத்தில்,கடலில், பாம்பு போன்ற நீண்ட கழுத்துடனும், யானையைப் போன்ற உடலுடனும் வாழ்ந்த, பிலெசியோ சாரஸ் என்று அழைக்கப் படும் ராட்சதக் கடல் பல்லியானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. பிலெசியோ சாரசைப் போன்றே ஆனால் குட்டையான கழுத்தை உடைய,பிளியோ சாரஸ் என்று அழைக்கப் படும், ராட்சதக் கடல் பல்லியும் ,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. பிலெசியோ சாரஸ் இனமானது, இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து, கடல் வாழ்க்கைக்கு ஏற்ப, பரிணாம மாற்றமடைந்த ஒரு விலங்கினம் ஆகும். இதன் புதைப் படிவங்களானது வட துருவப் பகுதியிலும்,தென் துருவப் பகுதியிலும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று,இக்தியோ சாரஸ் இனம் அழிந்த பிறகு,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரிணாம மாற்றமடைந்த,முதலை போன்ற தலையை உடைய, மோசா சாரஸ் என்று அழைக்கப் படும் ,கடல் வால் ஊர்வன வகை விலங்கினமும்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. இந்த விலங்கினங்கள் யாவும்,ஆமைகள்,மீன்கள் மற்றும் அம்மானைட்டிஸ் என்று அழைக்கப் படும் ஓட்டுடலியை, உண்டு வாழ்ந்த விலங்கினங்கள் ஆகும். அத்துடன்,இந்த விலங்கினங்கள் யாவும்,கடல் வாழ் வாழ்க்கைக்கு ஏற்ப ,பாலூட்டிகளைப் போன்று,குட்டிகளை ஈன்று இனப் பெருக்கம் செய்யக் கூடியவைகளாகவும் இருந்தன. எனவே,ஆமைகளைப் போன்று, முட்டைகளை இட நிலத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால்,நெடுங் கடல் பகுதியைக் கடந்து உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தன. ஓட்டுடலியான அம்மானைட்டைஸ் ,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதே காலத்தில்,பல மிதவை உயிரினங்களும்,சிப்பி மீனினங்களும் அழிந்தன. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,அமெரிக்காவின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த நீல் லான்ட் மேன்,அம்மொனைட்டுகள் ,பிளாங்டான் என்று அழைக்கப் படும்,கடல் மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்ந்ததாகவும்,இந்த நிலையில்,அந்தப் பிளாங்டான்கள் அழிந்ததால்,அம்மனைட்டுகளும் அழிந்திருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். முக்கியமாக அந்த ஆராய்ச்சியாளர்கள்,அந்த அம்மொனைட்டுகளை,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில்,டகோட்டா மாகானத்து சமவெளிப் பகுதியில் இருந்து எடுத்திருக்கின்றனர். இதே போன்று,டைனோசர்கள் காலத்தில் ,கடலில் வாழ்ந்த ராட்சதக் கடல் பல்லிகளின் புதைப் படிவங்களும்,உள் நாட்டுப் பகுதிகளிலேயே கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. உதாரணமாக,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள,நெவேடா பாலைவனப் பகுதியில்,இக்தியோ சாரசின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனவே,டைனோசர்கள் காலத்தில்,கண்டங்கள் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு மேலே,ஆழமற்ற உள் நாட்டுக் கடல் பகுதிகள் இருந்திருக்கின்றன.அதில் ஆழமற்ற ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழத்தில்,மிதவை உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றன.அவற்றை அம்மனைட்டுகள் உண்டு வாழ்ந்து இருக்கின்றன,அவைகளை மற்ற ராட்சதக் கடல் வாழ் பல்லி இனங்களும் உண்டு வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு,கண்டங்களானது உயர்ந்த பொழுது,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்கள் மண்ணில் ,புதையுண்டுப் புதைப் படிவங்களாகின. கண்டங்கள் உயர்ந்ததுடன்,கடலின் மட்டமும் உயர்ந்ததால்,கடலின் ஆழம் அதிகரித்து இருக்கிறது.எனவே,ஆழமற்ற பகுதியில் வாழ்ந்த மிதவை நுண்ணுயிரிகளும்,அவற்றை உண்டு வாழ்ந்த ,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்களும் அழிந்து இருப்பது புலனாகிறது. எனவே,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் ராட்சதக் கடல் பல்லி இனங்கள் அழிந்ததாகக் கூறுவது தவறு. மாறாகக் கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்ததால்,ஏற்பட்ட, கால நிலை மாற்றத்தின் காரணமாகவே,மிதவை நுண்ணுயிரிகளும்,உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத,ஊர்வன வகை, ராட்சதக் கடல் பல்லி இனங்களும் அழிந்திருக்கின்றன. பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம், தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதே போன்று, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள், இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதன் மூலம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது,நிதர்சனமான உண்மை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. ஆனாலும்,தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கமானது, தவறு என்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது, என்று தற்பொழுது, நம்பப் படுகிறது. இந்த நிலையில், பனிப் பொழிவு ஏற்பட்ட கால கட்டத்திலேயே, கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது, புதைப் படிவ ஆதாரங்கள் மூலம், தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்ட உயர்வுக்குப் பனி உருகுவதே காரணம் என்ற விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது. குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளங்களானது, இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும். இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு உருவாகி வளரும். குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது, ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. இந்த நிலையில், கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால், அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும். இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டின் மேல் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும். இந்த நிலையில், கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிய டோகர் லேண்ட். இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் 400 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டோகர் லேண்ட் என்று அழைக்கப் படும் 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, நிலத்தின் பெரும்பகுதியானது, 18,000 ஆண்டுகளுக்கு மூழ்கத் தொடங்கியதாகவும், இறுதியாக 5500 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக மூழ்கி விட்டதாகவும், அந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தொல் பொருட்களின் தொண்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,வேல்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவித் தொல் பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார். பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய குகை. ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்தியத் தரைக் கடலின், வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார். அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது. ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்திய படியே நுழைந்தார். ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்தக் குகைப் பாதையின் இறுதியில் வெளிச்சம் தெரிந்தது. நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில், ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் பதிக்கப் பட்டு இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குதிரை,மான்,காட்டெருமை, போன்ற விலங்கினங்களின் ஓவியங்கள் வரையப் பட்டு இருப்பதைக் கண்டார்.உடன் தொல் பொருள் துறை யினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு அந்தக் குகையைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ் தலைமயிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அந்தக் கடலடிக் குகையில் சில கற்கருவிகளும், கரித் துண்டுகளும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன் அந்தக் குகையின் சுவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மனிதக் கை அச்சுக்களும் பதிக்கப் பட்டு இருந்தது. அந்தக் கை அச்சுக்கள், சுவற்றின் மேல் கையை வைத்த நிலையில், செஞ்சாந்து போன்ற களிமண் குழம்பை வாயிலிருந்து ஊதுவதால் உருவாக்கப் பட்டு இருந்தது. குகைச் சுவரில் இருந்த அந்த கை அச்சு வடிவங்கள், இருபத்தி ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, வேட்டைக் கலாச்சார மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது கார்பன் காலக் கணிப்பு ஆய்வில் தெரிய வந்தது. ஆனால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த, குதிரை காட்டெருமை மான்களின் ஓவியங்கள், பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கற்கால மனிதர்களால் வரையப் பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அந்தக் குகையில், இரண்டு வெவ்வேறு கால கட்டத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது. அந்தக் குகையானது மிகவும் ஈரப் பதமாக இருந்தது. அதனால் அந்தக் குகையில் இருந்த ஒரு கரித்துண்டு பஞ்சு போன்று மென்மையாகி இருந்தது. ஈரப் பதத்தால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த ஓவியங்களின் மேல் கையை வைத்தாலே அழிந்து விடும் நிலையில் இருந்தது. எனவே தற்பொழுது அந்தக் குகைக்குள் பொது மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அத்துடன் குகையின் வாசல் கடற்படையினரால் பாதுக்காப்பாக மூடப் பட்டு பாதுக்காக்கப் படுகிறது.கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் குகை ஓவியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்தக் குகையானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பகுதியில் மேல் இருந்த குகையாக இருந்திருக்கிறது. பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நானூறு அடிவரை தாழ்வாக இருந்ததால், கடற்கரையானது அந்தக் குகையில் வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்திருக்கும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார். ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நிலம். இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடா மாகாணத்தின் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கும், பவள உயிரினங்களின் புதை படிவங்கள் மூலமாகவும், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும், ஒரே கால கட்டத்தில், நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால், சூரிய ஒளியின்றி இறந்து விடும். இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களைக் கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதை அறிய இயலும். அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும். இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில்,ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால் இறந்த, பவள உயிரிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில்,புளோரிடா பகுதியில் கடந்த ஐம்பதாயிரம் முதல் முன்பு தொடங்கி,பத்தாயிரம் ஆண்டு காலதுக்கு முன்பு வரையில், கடல் மட்டம் நூற்றி இருபது மீட்டர் வரை, தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. உண்மையில் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்து கொண்டு இருக்கும் நீர், கடலில் கலந்ததாலேயே கடல் உருவாகி இருக்கின்றன. அத்துடன் சுடு நீர் ஊற்று நீர், இன்றும் கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருப்பதால், கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் பூமியின் வெப்ப நிலை குறைந்து துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அதன் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன. இதே போன்று பூமியின் உயிரின வரலாற்றில் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டு இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்தப் பேரழிவுகளுக்கும் கடல் மட்ட உயர்வும் கால நிலை மாற்றமுமே காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகிறது. ''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்'' வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்' என்று அழைக்கப் படுகிறது. இந்த பெர்மா புரோஸ்ட் நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை, விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாகக் கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது. இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது. அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது. அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. மாறாக சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக ,பூமிக்குள் சுரக்கும் நீரானது ,புவியின் மேற் பரப்புக்கு தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைகிறது.அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன், அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஒரே காலத்தில் நடை பெற்று இருப்பதன் மூலம், பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு என்பது, ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார். இதே போன்று, கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது. எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது. கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் பாறையில் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு அடியில், நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும், தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது. எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின? சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது. இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது. நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது. இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது. இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால், கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது. அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின. இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது. இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும். எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும். உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும். அனால், உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம். பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும். பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. தற்பொழுது, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அந்த அதிகப் படியான பனியானது கடலில் இருந்து வந்த நீரால் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது. இவ்வாறு கடல் மட்டமானது, அதிக ஆழத்துடன் இருந்ததற்கு,அதிகப் படியான கடல் நீர் ஆவியானதே காரணம் என்றும், அதற்குப் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றமே காரணம், என்றும் டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். அதாவது,முன் ஒரு காலத்தில்,பூமியானது,சூரியனை சற்று நெருக்கமாக வலம் வந்ததாகவும்,அப்பொழுது பூமியின் வெப்ப நிலையானது அதிகரித்ததாகவும்,அதனால் கடல் நீரானது அதிக அளவில் ஆவியானதாகவும்,அதனால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வானதாகவும், டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு,பழைய படி,பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்ததாகவும்,அதனால் நிலத்தின் மேல் இருந்த பனியானது உருகி நீராகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை உயர்ந்ததாகவும்,ட்ராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால்,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு. ஏனென்றால்,பூமியானது,சூரியனை நெருங்கிச் சென்று சிறிய சுற்றுப் பாதையில் வலம் வந்தால்,கடலில் இருக்கும் நீரானது, ஆவியாகத் தொடங்கும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் பனியும், உருகி நீராகிக் கடலில் கலக்கும்.எனவே கடல் மட்டமானது அப்படியேதான் இருக்கும். அதே போன்று, பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் நீரானது பனியாகப் படியும் பொழுது,கடல் நீரும் ஆவியாகுவது நின்று விடும். எனவே, கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது. எனவே,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு. பனிப் பந்து பூமி. கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பூமி முழுவதும் 1 முதல் 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு,பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர். அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பனிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும், அதனால் கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர். மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மில, வாயு கடலில் கலந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது, ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை. ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளையும் முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை . பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை. எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. வண்ணத்துப் பூச்சிகள் பறந்த கிரீன்லாந்து தீவு. இதே போன்று கிரீன்லாந்து தீவிலும் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கிரீன்லாந்து தீவானது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு பனியால் மூடப் பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்து தீவின் பனிப் படலத்தில் ஒரு கிலோ மீட்ட அளவுக்கு துளைத்து ஆய்வு செய்தது.அதாவது பனிப் படலங்களுக்கு அடியில் ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை புதைத்து வைக்க ஒரு திட்டத்தை தீட்டியது. அப்பொழுது எடுக்கப் பட்டு ஆய்வகத்தில் வைக்கப் பட்டு இருந்த பனி குழாய்களை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் பதினைந்து அடி அளவுக்கு தாவரங்களின் இலைகள், கொடிகள் போன்ற பாகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனை ஆய்வு செய்த வெர்மாண்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரீவ் கிறிஸ்து கிரீன்லாந்து தீவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்காவின் கடலோர பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த நெதர் லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆப்பி செலூசிஸ் அதில் பல வகையான மரங்கள் தாவரங்கள் இருப்பதுடன் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதை கண்டு வியப்பு தெரிவித்து இருக்கிறார். பனி மிக விரைவில் பனை மரத்தை கருக்கி விடும் எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்டு கடல் தரைக்கு அடியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த பொழுதும் அதில் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்பொழுது பனியால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தின் கடலோர பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதில் பனைக் காடுகள் இருந்திருப்பதாகவும் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதை போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததாகவும் அதனை ஆய்வு செய்த கோதி பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்க் பெரோஸ் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளிலேயே அதிக அளவு வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரெகப் பகுதியில் இன்னும் அதிக அளவில் வெப்பம் நிலை இருக்க வேண்டுமே என்றும் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் யோசித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் சீனாவின் வுகாண் மற்றும் ஜெர்மனியின் நுர்ன்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை உயிரினஙகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைப் பகுதியில் வெப்ப நிலையானது மிகவும் கொடுமையாக இருந்ததாகவும் அதாவது ஐம்பது முதல் அறுபது டிகிரி வரை இருந்ததாகவும் அதேபோன்று கடல் பரப்பின் வெப்ப நிலையானது நாற்பது டிகிரி வரை றிந்ததாகவும் அதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் விலங்கினங்கள் வாழாத பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியை ''இறந்த பகுதி'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த பகுதியில் சிலவகை சிறிய வகி புள் பூண்டு புதர் செடிகளே வளர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துருவப் பகுதிகளானது தாவர மற்றும் விலங்கினங்களுக்கு தஞ்சமடையும் பகுதிகளாக இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வலீத் தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் இடப பெயர்ச்சி நடை பெற்று இருப்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலையுடன் சதுப்பு நில காடுகளும் அதில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் உடல் வெப்பத்தை பாது காக்கக் கூடிய தகவமைப்பு இல்லாத தவளை மற்றும் முதலை பாம்பு போன்ற ஊர்வன வகை விலங்கினங்களும் டைனோசர் போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் பூமியெங்கும் சதுப்பு நில காடுகளே இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு சரியான விளக்கதைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கின்றனர். உதாரணமாக வட துருவப் பகுதியில் அமையானது இருக்கும் கிரீன்லாந்து தீவில் இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவானது அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் விளக்கம் கூறுகிறார்கள். இதே போன்று தற்பொழுது மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல் மரக் காடுகள் காணப் படுவதற்கும் அதில் சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்கும் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது தென் பகுதியில் இருந்த பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும் அதன் பிறகு வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது தற்பொழுது இருக்கும் மித வெப்ப மண்டலப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் இந்த விளக்கத்தின் படி ஆர்க்டிக் பகுதிக்குள் அமையானது இருக்கும் நிலப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது இருபது கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக ஆர்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. கிரீன்லாந்து தீவை ஒட்டி அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவகே கூடிய அதி வெப்ப நிலையில் சூழலில் வாழக் கூடிய, சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய அலிகேட்டர் முதலை,கலாபாகஸ் தீவில் காணப் படுவதை போன்ற ராட்சத ஆமைகள் ,காண்டா மிருகம் போன்ற பிராண்டோ தீரி ,நீர் யானை போன்ற கோரி போடான்,பறக்கும் லீமர் வகை குரங்குகள்,மலைப் பாம்பு போன்ற பாம்புகள்,பன்றியின் இனவகையை சேர்ந்த டபீர் ஆகிய விலங்குகளின் புதை படிவங்களை கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன் இரண்டு இணவகை குரங்குகள் மற்றும் ஆறடி உயரமுள்ள தாவர உண்ணி ராட்சத பறவையின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் கொலராடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜேலின் எபர்லி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியானது சதுப்பு நிலக் காடாக இருந்ததாக விளக்கம் தெரிவித்து இருக்கிறார். மேலும் ராட்சத ஆமைகள் போன்ற விலங்குகள் எப்படி இந்த பனித் தீவில் வாழ்ந்தது என்று தனது வியப்பையும் தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் கடந்த ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லிஸ்மெர் தீவானது கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,கடுங் குளிர் நிலவக் கூடிய ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு உள்ளேயே இருக்கிறது. ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் அதே போன்று ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும் நீடிக்கிறது. தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து இருக்க இயலாது. எனவே எல்லிஸ்மெர் தீவில் காடுகளோ அதில் விலக்கினங்களோ வாழ்ந்து இருக்க இயலாது.இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவில் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத ஒட்டகத்தின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.குறிப்பாக அந்த ஒட்டகமானது தற்பொழுது காணப் படும் ஒட்டகத்தை விட முப்பது சதவீதம் பெரிய அளவில் இருந்ததாக அதன் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவை ஒட்டி அமைந்து இருக்கக் கூடிய ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் பல மரங்களின் அடிப் பகுதிகள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில் அந்த இடமானது முன்பு ஒரு காடாக இருந்ததாக ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அந்த மரங்கள் நேற்றுதான் விழுந்தது போன்று புதிதாக இருப்பதாகவும் அதனை விறகு போல பிளக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் அந்த ஆராய்ச்சி குழுவினர் அந்த மரங்களை எரித்து தேநீரும் தயாரித்தனர். இதன் மூலம் பூமி குளிர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமும் உயர்ந்து நிலத்தை மூழ்கடித்து இருக்கிறது.இருக்கிறது. அதே போன்று, துருவப் பகுதிகளில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவும் ஏற்பட்டு பனி யானைகளை அழித்து இருக்கிறது. எனவே, கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பதால், வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் உருவானதற்குக் கடல் மட்டம் உயர்ந்ததால், கடலின் பரப்பளவு அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து, குளிர்ச்சி ஏற்பட்டதே காரணம் என்பதும் நிரூபணமாகிறது. எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருகிக் கடலில் கலந்ததாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் தவறு. எப்படி உருவானது கல் மரப் பூங்கா? அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.அதே போன்று இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வு. எப்படி உருவானது கல் மரப் பூங்கா? டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர். அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது. தென் பகுதிக் கண்டங்களில் காணப் படும் மூதாதை பாலூட்டி ''புரோட்டோ அங்குலேட்டம் டோனா'' டைனோசர்கள் காலத்தில் கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருக்கின்றன. தமிழகத்தில் ஆசிய வகை டைனோசர் ட்ரூடோண்ட் லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில் இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே லேட் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதன் அடிப்படையிலும் கூட டைனோசர்கள் காலத்தில் இருந்தே கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே நிலையாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. பிளேட் டெக்டானிக் தியரியின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா, இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்களானது ,வட பகுதிக் கண்டங்களுடன், நிலத் தொடர்பு இன்றி இருந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் வட அமெரிக்காவில் பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அப்குதிக் கண்டங்களான தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களி காணப் படுவதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில், கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி ''பாந்த லாசா'' என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் நம்பப் படுகிறது. அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும்,இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது. தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே, ஆப்பிரிக்கக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று, இந்தியக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது,டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில்,தென் அமெரிக்கா,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய நிலப் பகுதிகளானது, வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் ஸ்டோனி புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுனரான டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒப்பாய்வில்,வட அமெரிக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்ற விலங்கே தற்போதுள்ள எல்லா பாலூட்டி வகை விலங்கினங்களின் பொது மூதாதை என்று தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அந்த விலங்கானது நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும் டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது, வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு ,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி அவார்கள்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர் பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த, பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் பகுதிக் கண்டங்களான, தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. 000000000000000 காஸ்பியன் கடல் எப்படி உருவானது ? ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை. காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது. குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மாட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது. எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், கஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.அத்துடன்காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது. எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு. அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது. இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போன்று,கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது? கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கசின் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை. 00000000000000 நன்னீர் நண்டுகள் நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன. நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது. நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன. கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும், கடலில் மிதவை உயிரியாக வாழும் பொழுது கடல் நீரோட்டத்தால் மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் அடித்துச் செல்வதால் கடல் நண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்கின்றன. ஆனால் நன்னீர் நண்டுகளின் வாழ்க்கை முழுவதும் நன்னீர் நிலைகளிலேயே கழிவதால், நன்னீர் நண்டுகளின் பரவல் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே வரையறைப் படுத்தப் படுகிறது.இருந்தாலும் நன்னீர் நண்டினங்களும் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அத்துடன் நன்னீரில் வாழும் நண்டு தவளை போன்ற பிராணிகள் அதிக உப்புள்ள கடல் நீரில் இருந்தால் நண்டு மற்றும் தவளையின் உடலில் இருந்து நீர் வெளியேறி நண்டும் தவளையும் இறந்து விடும். எனவே நன்னீர் நண்டு மற்றும் தவளைகளால் அதிக உப்புள்ள கடல் நீரில் வாழ இயலாது. இந்த நிலையில் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர்,செஷல்ஸ் போன்ற தீவுகளில் நன்னீர் நண்டுகள் மற்றும் தவளைகள் காணப் படுகின்றன. எப்படி இந்த நன்னீர் நண்டுகள் கடல் நடுவே இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகிறது. கோண்டுவானா நண்டு பொட்டாமானாட்டிடே என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகிறது. நன்னீர் நண்டுகளால் கடல் பகுதியைக் கடக்க இயலாது என்பதால் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதிகள் ஒன்றாக இணைந்து கோண்டுவானா என்ற பெருங் கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நீல் கும்பர்லிட்ஜ், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளிலும் காணப் படும் நன்னீர் நண்டுகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டார். அந்த மரபணு ஒப்பாய்வில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே என்ற நன்னீர் நண்டினத்தில் இருந்து ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவில் காணப் படும் செஷல்ஸ் அல்லுராடி என்ற நன்னீர் நண்டினம் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நன்னீர் நண்டுகள் எப்படி கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்குச் சென்றன? என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது. நன்னீர் நண்டுகள் கடல் நீரில் வைத்து சோதனை செய்யப் பட்டது.அப்பொழுது நன்னீர் நண்டுகள் இரண்டு வார காலம் கடல் நீரில் தாக்குப் பிடிப்பது தெரிய வந்தது. எனவே நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரத் தண்டில் உள்ள பொந்துகளில் இருந்த படி இரண்டு வார காலம் மிதந்த படி ஐநூறு கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சூறாவளி மற்றும் புயல் மழையால் காற்றில் ஈரப் பதமான சூழலில் உடலின் ஈரம் காயாமல், காற்றையும் சுவாசித்த படி தீவுகளை அடைந்து பிறகு நன்னீர் நண்டுகள் குளம் குட்டை போன்ற நன்னெற நிலைகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் செஷல்ஸ் தீவு நன்னீர் நன்னீர் நண்டினமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே நண்டினத்தில் இருந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால் மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டாதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். எனவே செஷல்ஸ் தீவுக்கு நன்னீர் நண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது. ஆனால் செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது. அதே போன்று செஷல்ஸ் தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்தும் வட மேற்கு திசையில் ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. ஆனால் அதிக பட்சம் நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே செஷல்ஸ் தீவில் காணப் படும் நன்னீர் நண்டினம் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து செஷல்ஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்து தற்பொழுது உறுதியான விளக்கங்கள் இல்லை. குருட்டுப் பாம்புகள் பல தீவுகளுக்குப் பாம்பினங்கள் எப்படிச் சென்றன என்பதும் இன்று வரை புரியாத புதிராக இருக்கின்றன. மிகவும் தொன்மையான பாம்பின் புதை படிவம் மத்தியக் கிழக்கு நாடான ஜெருசலேம் நாட்டில் யூதேயா மலைப் பகுதியில், பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையான சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. பாகிராகிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்பிற்கு சிறிய அளவிலான இரண்டு பின்னங் கால்களும் இடுப்பு மற்றும் கணுக் கால் எலும்புகளும் இருந்தன. அந்தப் புதை படிவம் பல்லி போலவும் பாம்பு போலவும் இருந்தது. ஆனால் அந்தப் புதை படிவமானது சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் இருந்ததால், பாம்பினங்கள் மொசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப் பட்டது. அதன் பிறகு அதே மலைப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாம்பின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டது.ஹாசி ஒப்பிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்புக்கும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்தன. பின்னர் மத்தியக் கிழக்கு நாடான லெபனான் தேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான யூபோடாபிஸ் என்ற பாம்பின் புதை படிவத்திலும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்ததால் பாம்புகள் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் படகோனியா நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான நாஜெஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பாம்பின் புதை படிவத்தில் சிறிய கால்கள் இருந்ததுடன் அந்தப் பாம்பானது தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற எலும்பு அமைப்புடன் இருந்தது. இதன் அடிப்படையில் பாம்பினங்கள் தரை வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து இருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்றுள்ளது. பாம்பினங்களில் மூவாயிரத்தி நானூறுக்கும் அதிக இனவகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மானையே விழுங்கக் கூடிய மலைப் பாம்புகளுக்கும், மண் புழு போன்று பூந்தொட்டிகளில் காணப் படும் குருட்டுப் பாம்புகளுக்கும், சிறிய அளவிலான பின்னங்கால் எலும்புகள் இருப்பதன் அடிப்படையில், இந்தப் பாம்பினங்கள் மிகவும் தொன்மையான பாம்பினம் என்பது தெரிய வந்துள்ளது. மலைப் பாம்புகளில் பைத்தானிடே என்று அழைக்கப் படும் முட்டையிடும் மலைப் பாம்புகள் தொன்மையன இனமாகக் கருதப் படுகிறது. இதில் இருபத்தி ஆறு இனங்கள் உள்ளன. இவ்வகைப் பாம்புகள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும்,இந்தோனேசியா ,பிலிப் பைன்ஸ் மற்றும் பாப்புவா நியூ கினியா தீவுகலிலும் காணப் படுகின்றன. இதே போன்று போய்டே என்று அழைக்கப் படும் குட்டிகளை ஈனும் மலைப் பாம்புகள் சற்று பரிணாமத்தில் மேம்பட்ட இனமாகக் கருதப் படுகிறது. இவ்வாகைப் பாம்புகள் புதிய உலகம் என்று அழைக்கப் படும் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஆப்பிரிக்கா,இந்தியா, ஆகிய கண்டங்களிலும் மடகாஸ்கர் தீவு,சலமன் தீவு, பிஜி போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது. இதே போன்று ஸ்கோலிக்கோ பிடியா என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்புகளும் சிறிய அளவிலான கால் எலும்புகளைக் கொண்டிருக்கும் தொன்மையான பாம்பினம் ஆகும். இந்தப் பாம்புகள் மண் புழுக்களைப் போன்று தோற்றமளிப்பதால் புழுப் பாம்புகள் என்றும் பூந்தொட்டிகளில் காணப் படுவதால் பூந்தொட்டிப் பாம்புகள் என்றும் அழைக்கப் படுகின்றன. குருட்டுப் பாம்புகள் ஸ்கோலெக்கோ பிடியன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.இதில் மூன்று இனவகைகள் இருக்கின்றன.டைப்லோபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன. இதில் இருநூற்றி ஐம்பது இன வகைகள் உள்ளன. லெப்ட்டோடைப்லோப்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் காணப் படுகின்றன. அனாமாலெபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்காவில் மட்டும் காணப் படுகின்றன. இந்தப் பாம்புகள் வாழ்வின் பெரும் பகுதியை தரைக்கு அடியிலேயே கழிப்பதால் காலப் போக்கில் பார்வைத் திறனை இழந்து விட்டது. ஆனாலும் ஒளியை உணரக் கூடிய அளவுக்கு பார்வைத் திறன் உண்டு, எனவே இந்தப் பாம்புகள் குருட்டுப் பாம்புகள் என்று அழைக்கப் படுகின்றன.இதன் பிராதான உணவு எறும்பும் கறையானும் அதன் முட்டைகளுமே. குருட்டுப் பாம்புகளில் அறுநூற்றி நாற்பது இன வகைகள் கண்டறியப் பட்டுள்ளது.இந்தப் பாம்புகள் மண் புழுவைப் போன்று இருந்தாலும் இதற்கு முதுகெலும்பும், கபாலமும், தாடையும் அதில் கூரிய பற்களும் உண்டு குருட்டுப் பாம்புகள் மெலிதான எலும்புகளைக் கொண்டு இருப்பதால் இதன் புதை படிவங்கள் இல்லையென்றே கூறலாம்.எனவே இந்தப் பாம்புகள் எப்பொழுது தோன்றியது என்று அறிவதற்காக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் மற்றும் நிகோல் விடல் ஆகியோர் ,உலகெங்கும் உள்ள தொண்ணூற்றி ஆறு இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், குருட்டுப் பாம்புகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் ஒரே நிலப் பகுதியாக இணைந்து இண்டிகாஸ்கர் என்ற நிலப் பகுதியாக இருந்ததாகவும், அப்பொழுது அதில் குருட்டுப் பாம்புகள் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. பின்னர் மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதிய பொழுது, இந்தியாவில் இருந்த குருட்டுப் பாம்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவியதாகவும் நம்பப் படுகிறது. அல்லது, குருட்டுப் பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு பரவி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குருட்டுப் பாம்புகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. முக்கியமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் குருட்டுப் பாம்புகள், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து இருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார். அதாவது இந்த இரண்டு கண்டங்களும் பிரிந்த பிறகு நான்கு கோடி ஆண்டுகள் கழித்தே இந்த இரண்டு கண்டங்களில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் தோன்றி இருப்பதாகவும், எனவே தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் பெருங் கடலில் ஆறு மாத காலம் கடலில் மிதந்த படி தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் தரைக்கு அடியில் வாழும் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடல் வழியாக பரவ இயலாது என்று மற்ற அறிவியலாளர்கள் கூறினாலும் கூட மரபணு ஆய்வு முடிவுகள் கடல் வெளிப பயணம் நடை பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் ஆறு மாத காலம் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் இருந்த பொழுது, அவைகள் உண்பதற்கு அந்த மிதவைத் தாவரங்களில் பூச்சிகளும் இருந்திருக்கும், என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் குருட்டுப் பாம்பினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக அந்தத் தீவுகளை அடைந்து இருக்கும் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் எதிர் பாராத வண்ணம் பல தொலை தூரத் தனிமைத் தீவுகளுக்கும் குருட்டுப் பாம்புகள் சென்று புதிய இனவகைகளாகப் பரிணாம மாற்றம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. உதாரணமாக டைப்ளோலெபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா,ஆகிய கண்டங்களிலும் கரீபியன் ,பிலிப்பைன்ஸ் சாலமன் மற்றும் பிஜி குவாம்,மற்றும் பாலவ் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன. இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடிசன் வைன் என்ற உயிரியல் வல்லுநர் குவாம் மற்றும் பாலவ் தீவுக்கு கிழக்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாசா என்ற தீவிலும் ஏன்ட் தீவிலும் இரண்டு புதிய இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளைத் தற்செயலாகக் கண்டு பிடித்தனர். இவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு குருட்டுப் பாம்புகள் பரவி இருக்கும் என்பதை அவர்கள் முதலில் நம்பவே இல்லை. ஒரு மரத்தின் உட்பகுதியில் இருந்த அந்தக் குருட்டுப் பாம்பு ,ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்பு இனமாக இருக்கும் என்றும் தற்செயலாக மனிதர்கள் மூலமாக அந்தத் தீவுகளுக்கு வந்திருகக் கூடும் என்றும் முதலில் நம்பினார்கள். அதன் பிறகு அந்தப் பாம்பின் செதில் அமைப்புகளை ஆய்வு செய்ததில் அந்தக் குருட்டுப் பாம்புகள் இது வரை கண்டு பிடிக்கப் படாத புதிய இன வகை என்பது தெரிய வந்தது. தற்பொழுது கரோலின் தீவுக் கூட்டத்தில் உள்ள பாசா தீவிலும் ஏன்ட் தீவிலும் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் அடோ சீட்டஸ் என்றும், அதே போன்று ஜிலாப்,உழுதி ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் ஹாட்மாலியெப் என்றும் புதிதாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதே தீவுகளில் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனத்தைச் சேர்ந்த ஜிக்கோ என்று அழைக்கப் படும் பல்லி இனங்களும் காணப் படுகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது. 2007 ஆம் ஆண்டு வரையில் குருட்டுப் பாம்பினத்தில் ஆக்டோ டைப்லோப்ஸ் என்ற குடும்பத்தில் நான்கு இனவகைகள் ,நியூ கினியாத் தீவு,பிஸ்மார்க் தீவுகள்,போகைன் வில்லா மற்றும் சாலமன் தீவுகளில் இருப்பது அறியப் பட்டது. இந்த நிலையில் அதே ஆக்டோ டைப் லோப்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோ டைப் லோப்ஸ் பானோரம் என்ற ஐனதாவது இனம் எதிர்பாராத வண்ணம் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லுசான் தீவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே தீவுகளில் பிளாட்டி மாண்டிஸ் என்று அழைக்கப் படும் தவளைகளும் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது. ஒரு தவளை கூட்டிய பஞ்சாயத்து புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம். 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில் அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது. ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது. அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதி அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன் அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது.அதன் அடிவயிற்றுப் பகுதியில் ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது. மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர். தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது. தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது. ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு எப்படி சாத்தான் தவளைகள் வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது. ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில் உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது. இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த பென்சில் வேனியாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார். அத்துடன் கரீபியன் தீவுக்கு தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது அந்த மிதவைத் தாவரங்களில் தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும் குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார். அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் டாக்டர் சூசம் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார். ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது கோண்டுவானாக் கண்டமானது லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார். பேபாப் மரங்கள் மடகாஸ்கர் தீவில் மழை நீரைச் சேகரிக்கும் பாட்டில் வடிவ மரங்கள் காணப் படுகின்றன.பேபாப் மரங்கள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் அடன்சோனியா இந்த மரத்தின் உயரத்தை விட மரத்தண்டின் சுற்றளவு அதிகமாக இருப்பததுடன் கிளைகள் மரத்தின் உச்சிப் பகுதியில் மட்டும் இருப்பதால், இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு பாட்டில் வடிவத்தில் இருக்கிறது. பெரும்பாலும் வறண்ட சூழ் நிலையில் வளரக் கூடிய இந்த மரத்தில் கிளைகளில் உள்ள பிளவுகள் மூலம் மழை நீர் சேகரிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு போபாப் மரத்தில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைக்கப் படுகிறது. வறண்ட காலத்தில் இந்த நீரை மனிதர்களும் விலங்கினங்களும் பயன் படுத்தி உயிர் வாழ பயன் படுவதால் இந்த மரம் உயிர் மரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த இனமரங்கள் விதை மூலம் பரவுகின்றன. இந்த மரத்தின் விதைகள் தேங்காய் போன்ற நார்ப்போருளால் ஆன ஒரு பழத்திற்குள் இருக்கிறது.இந்தப் பழத்தைக் குரங்குகள் விரும்பி உண்பதால் இந்தப் பழம் குரங்குப் பழம் என்றும் அழைக்கப் படுகிறது.இந்தப் பழத்தைத் தின்ற குரங்குகள் வவ்வால்கள் மற்றும் ஆமைகளின் கழிவுகளில் இருக்கும் விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் முளைக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மரத்தின் பரவலுக்கு விலங்கினங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. பேபாப் என்று அழைக்கப் படும் அடன்சோனி மரத்தில் எட்டு இனவகைகள் உள்ளன.இதில் ஆறு இனவகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.அட்டன் சோனியா டிஜிடேட்டா என்று அழைக்கப் படும் இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அரேபியா பீட பூமிப் பகுதியிலும் காணப் படுகிறது. இந்த நிலையில் அடன் சோனியா கிரிகரி என்று அழைக்கப் படும் எட்டாவது இனம் மடகாஸ்கர் தீவில் இருந்து எழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் காணப் படுகிறது. ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பேபாப் மரத்தின் பழத்தின் ஓடு மிகவும் மெலிதாக இருப்பதால் விரைவில் நீரில் ஊறி விடக் கூடியதாக இருப்பதால் மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்த படி ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு மரமாக முளைத்து இருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்களால் நிராகரித்து விட்டனர். மாறாக ஆஸ்திரேலியாக் கண்டத்த்தின் பூர்வீகப் பழங்குடிகளால் அடன் சோனியா கிரிகரி மரத்தின் விதைகள் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் அபோரிஜின்ஸ் என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் அந்தக் கண்டத்துக்கு எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சென்று இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் மரபணு ஆய்வில் ஆஸ்திரேலியாக் கண்டத்திள் காணப் படும் அடன் சோனியா கிரிகரி மரங்கள், மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பேபாப் இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பே பிரிந்திருப்பது தெரிய வந்தள்ளது. எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்கள் எப்படி ஏழாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி விடை கூறப் படாத கேள்வியாகவே இருக்கிறது. எழாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பறவைகளால் கழிவை வெளியேற்றாமல் கடக்கவும் இயலாது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்களின் இடப் பெயர்ச்சி கடல் வழியாக சென்று இருந்தால் கூட ஆஸ்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலேயே பேபாப் மரங்கள் காணப் பட வேண்டும். ஆனால் விநோதமாக பேபாப் மரங்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வட மேற்குப் பகுதியில் அதாவது பசிபிக் கடல் பகுதியில் இருகிறது. எனவே போபாப் மரத்தின் பரவல் கடல் வழியாக நடை பெற்று இருக்க வில்லை என்பதும் உறுதியாகிறதுஅத்துடன் போபாப் மரத்தின் பரவல் ஆசியக் கண்டம் வழியாக நடை பெற்று இருப்பதையே புலப் படுத்துகிறது. ஆனால் ஆசியக் கண்டத்தில் போபாப் பரத்தின் இனவகைகளோ அல்லது புதை படிவங்களோ காணப் படவில்லை. இவ்வாறு தொடர்ச்சியற்ற இனப் பரவல் மூலம் இடைப் பட்ட நிலப் பகுதிகள் கடல் மட்ட உயர்வையும் மூழ்கிய நிலத்தையும் புலப் படுத்துகிறது. உதாரணமாக இந்தோனேசியக் கடல் பகுதியில் சாகுல் என்று அழைக்கப் படும் கடலடி நிலம் காணப் படுகிறது.இதே போன்று கற்கால மனிதர்களும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதன் மூலமாகவும் ஆசியக் கண்டதுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையே புலப் படுத்துகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் கடல் பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. குருட்டு மீன்கள் இதே போன்று மடகாஸ்கர் தீவு மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உள்ள குகைகளில் காணப் படும் குருட்டு மீன்கள் ஒரே பொது மூததையில் இருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் லூசியான பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரசன்னா சக்கரவர்த்தி குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப் படையில் அவர் எழாயிரம் கிலோ மீட்டர் அந்தக் குருட்டு மீன்கள் கடல் வழியாக இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் பரவி இருக்க முடியாது என்றும் நிலத் தொடர்பு வழியாகவே குருட்டு மீன்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்று இருக்க வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். மடகாஸ்கர் தீவுக் குகைகளிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குகைகளிலும் காணப் படும் குருட்டு மீன்கள் பன்னெடுங் காலமாக சூரிய ஒளி புகாத இருட்டான குகைச் சூழலில் வாழ்ந்ததால் காலப் போக்கில் பார்க்கும் தன்மையை இழந்து விட்டு இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் காணாப் பட்ட குருட்டு மீன்கள் கோபி மீனினத்தைச் சேர்ந்தது என்பதுடன் சீக்கோ கோபியஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பிலிப் பைன்ஸ் தீவுக் குகைகளிலும்,ஆக்சி லியோட்ரிஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பாப்புவா நியூ கினியா தீவுக் குகைகளிலும் காணப் படுகிறது. எனவே முன்னொரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாஸ்கர் தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் ஆசியக் கண்டத்தின் வழியாக நிலத் தொடர்பு இருந்திருப்பதற்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. கிரே பிஷ் மேலை நாடுகளில் கிரே பிஷ்கள் சுவையான உணவாக பரிமாறப் படுகிறது.பல மில்லியன் டாலர் வியாபாரம் கிரே பிஷ்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. கிரே பிஷ்கள் என்பது உண்மையில் கடலில் காணப் படும் லாப்ஸ்டர்களே. கடலில் வாழ்ந்த நண்டுகள் ஆறு குளம் ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்வதற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்று நன்னீர் உயிரினங்களாக மாறியது. அதைப் போன்றே கடலில் வாழ்ந்த லாப்ஸ்டர்களும் நன்னீர் நிலைகளில் குடியேறி நன்னீர் உயிரினங்களாக மாறியது.நன்னீரில் வாழும் லாப்ஸ்டர்கள் கிரே பிஷ் என்று அழைக்கப் படுகின்றன.நன்னீர் நண்டுகளைப் போலவே கிரே பிஷ் களாலும் கடல் நீரில் உயிர் வாழ இயலாது. கடல் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்கள் கடலில் வசிப்பதால் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன. ஆனால் கிரே பிஷ்கள் கண்டங்களிலும் கண்டங்களை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.இதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கிரே பிஷ்கள் இடம் பெயர்ந்து இருப்பது புலனாகிறது. இன்று கிரே பிஷ்கள் ஆப்பிரிக்கா மற்றும் பனிக் கண்டமான அண்டார்க்டிக்கா தவிர மற்ற ஐந்து கண்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள மடகாஸ்கர் தீவு,ஆஸ்திரேலியா கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் டாஸ்மேனியா , நியூ கினியா, நியூ சிலாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது. கிரே பிஷ்களின் உறுப்புகளில் அமைப்புப் படி கிரே பிஷ்கள் அஷ்டாகாய்டியே மற்றும் பாரா அஷ்டாகாய்டியே இரண்டு பெரும் குடும்பங்களாகப் பிரிக்கப் படுகின்றன.அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் வட கோளப்பகுதியிலும், பாரா அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் தென் கோளப்பகுதியிலும் காணப் படுகின்றன. கிரே பிஷ்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஐந்து ஜோடி நீந்தும் கால்கள் இருக்கும். ஆனால் தென் கோளப் பகுதிகளில் காணப் படும் பாரா அஷ்டாகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்களில் முன் இரண்டு நீந்தும் கால்கள் இருக்காது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பர் சர் தாமஸ் ஹக்ஸ்லி ,நன்னீரில் வாழக் கூடிய கிரே பிஷ்கள் எப்படி உலகம் முழுவதும் பரவியது? என்று வினா எழுப்பினார். அந்தக் கேள்விக்கு விடை காண இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் கைத் கிராண்டல் தலைமயிலான குழுவினர் மரபணு ஆய்வின் அடிப்படையில், எல்லா கிரே பிஷ்களும் ஒரே பொது மூதாதையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்று இருக்கின்றன என்று அறிவித்து உள்ளனர். அத்துடன் கிரே பிஷ்களும் லாப்ஸ்டர்களும் சகோதர இனங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர். பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்காக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும்,ஆஸ் திரேலியாக் கண்டத்திலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் நியூ சிலாந்து,நியூ கினியா போன்ற தீவுகளிலும், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டு வாணா என்ற கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்ததாக நம்பப் படுகிறது.எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் கிரே பிஷ்கள் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவானது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுவதால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு, ஓரளவு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து முதலில் ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் விநோதமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிரே பிஷ்கள் காணப் படவில்லை. இறுதியாக தென் அமெரிக்காக் கண்டமும் ஆஸ்திரேலியாக் கண்டமும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டார்க்டிக் கண்டம் வழியாக நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக நம்பப் படுவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் கிரே பிஷ்கள் நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் மைக்கேல் ஜோனதன் கார்ல்சன் மற்றும் டாக்டர்,கைத் கிராண்டல் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் நெருங்கிய சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வு முடிவானது கோண்டுவானாக் கண்டப் பிரிவுக் கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். உண்மையில் புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று தென்கோள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து இருந்தால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். இதற்கு முற்றிலும் மாறாக, இந்த இரண்டு நிலப் பகுதிகளிலும் காணப் படும் கிரே பிஷ்கள், மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ் களை விட, நெருங்கிய சொந்தமாக இருப்பதன் அடிப்படையில் ,தென் கோளத்தின் நிலப் பகுதிகளில், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?