சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உயிரிழப்பை ஏற்படுத்திய சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.
கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறிக் கொண்டு இருக்கும் நிலையில்,
முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்...
தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததை எடுத்துக் காட்டி அதன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதை நிரூபித்து இருக்கிறேன்.
அதே போன்று, கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டி இருக்கிறேன்.
அதே போன்று,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகாமல் இருப்பதன் அடிப்படையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கும் நிலையில்...
அதே நாசாவின் வலைப் பக்கத்தில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டம் நகர்ந்ததால்தான் தெற்காசிய சுனாமி உருவானது என்று ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கும் நிலையில் அதே நாசாவின் வலைப் பக்கத்தில், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியாக் கண்டம் நகர்ந்ததால்தான் தெற்காசிய சுனாமி உருவானது என்று முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதைப் பற்றி அம்பலப் படுத்தி இருக்கிறேன்.
அதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூடமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்பிக் கொண்டு இருக்கும் நிலையில்,குறிப்பாக அந்தப் பாறைத் தட்டானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்று புவியியல் வல்லுனர்களுக்கு தெரியாத நிலையில்....
குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டு எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவிக்காமல்,வெறுமனே கரீபியன் பாறைத் தட்டானது நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் உரசியதால் கரீபியன் தீவுப் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஒரு மோசடி விளக்கத்தை என்று அழைக்கப் படும் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பதையும் அம்பலப் படுத்தி இருக்கிறேன்.
எரிமலைகள் குமுறும் பொழுது அந்த எரிமலைகளைச் சுற்றி இருக்கும் தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் அந்த எரிமலையைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் குறிப்பிட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி...
அதே போன்று,சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பொழுது,அந்த நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதை சுட்டிக் காட்டி,அதன் அடிப்படையில்,சுமத்ரா,ஹைத்தி,மற்றும் ஹோன்சு தீவுகளில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து இருக்கிறேன்.
Comments