பூமி பற்றிய மூன்றாவது முக்கிய கண்டு பிடிப்பு.

பூமி பற்றிய மூன்றாவது முக்கிய கண்டு பிடிப்பு. முதல் கண்டு பிடிப்பு. பூமி தாட்டையானது. இல்லை, பூமி ஒரு கோளம் - அரிஸ்டாட்டில். இரண்டாவது முக்கிய கண்டு பிடிப்பு. சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்கள் எல்லாம் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இல்லை,பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனையே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.- கோபர் நிக்கஸ் . பூமியின் மேற்பரப்பனாது பல சில்லுகளாக உடைந்து இருக்கிறது- புவியியல் வல்லுநர்கள். இல்லை, பூமியின் மேற்பரப்பானது ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது. விஞ்ஞானி.க .பொன்முடி. கண்டங்களானது ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பு குளிர்ந்து இறுக்ப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைக்களை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்ததால் பூமியின் மேல் இருந்த பெருங் கண்டமானது பல்வேறு பகுதிகளாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கிறது. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு இவ்வாறு கண்டங்கள் ஒன்றாக இருந்த பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம். இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் ''கண்டத் தட்டுகளாக'' நகர்ந்து செல்லும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத் தட்டானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதால் சுனாமி உருவாகுகிறது. இல்லை தவறான கருத்து- விஞ்ஞானி.க.பொன்முடி. கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள்,நிகழ்ந்த 3,58,214 இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்தனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்''தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. அதே போன்று,தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியிலும் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் சுமத்ரா மற்றும் ஹைத்தி ஆகிய தீவுகளில் ஏற்பட்ட நிலா அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளும் அமெரிக்க நாட்டு புவியியல் வல்லுநர்களால் அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. இந்த நிலையில் குமுறும் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களை பதிவாகி இருக்கிறது. அதே போன்ற மேடு பள்ள வளையங்களானது சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்ட்டராக இருக்கிறது. இவ்வாறு கடல் மட்டமானது கோடி கணக்கான ஆண்டு காலமாக உயர்ந்து இருப்பதால் கடல் நீரானது பூமிக்கு அடியில் இருந்தே பூமிக்கு மேல் வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதியில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதும் அதனால் துருவப் பகுதிகளில் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணும் டைனோசர் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூ டிய அடர்ந்த பசுமைக் காடுகள் இருந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பணிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியில் உருவான குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களானது இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் மடகாஸ்கர் தீவு உள்பட மத்திய தரைக் கடலில் உள்ள சிசிலி,மால்ட்டா ,கிரிட்டி,சைப்ரஸ் ஆகிய தீவுகளிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது கண்டங்களானது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருப்பதால், இதே வேகத்தில் கடல் மட்டம் உயரும் பொழுது நிலப் பகுதிகள் எல்லாம் கடலால் மூழ்கடிக்கப் படும் எனபதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. அத்துடன் கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையிலும் கடல் தரையில் உருவாக்க கூடிய தலையணை வடிவ பாறைகள் மற்றும் பாம்பு பாறைகள் ,மற்றும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் அடிப்படையிலும், ஒரு காலத்தில் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?