கிரகங்களின் இயக்கத்திற்கு எனது விளக்கம் -விஞ்ஞானி.க.பொன்முடி.
கிரகங்களின் இயக்கத்திற்கு அரிஸ்டாட்டில் கூறிய விளக்கம்.
கிரகங்களின் சாய்வான மற்றும் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதைகளுக்கு காரணம் என்ன?
-விஞ்ஞானி.க.பொன்முடி.
தற்பொழுது கிரகங்களின் இயக்கத்திற்கு தவறான விளக்கங்கள் கூறப் படுவது ஆதார பூர்வமாகத் தெரிய வந்த்துள்ளது.
இந்த நிலையில்,கிரகங்களின் சாய்வான மற்றும் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதைகளுக்கு விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
பல்லாயிரம் ஆண்டு காலமாகவே,பல ஆராய்ச்சியாளர்கள் சூரியன் ,நிலா,மற்றும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையிலான கிரகங்களின் நகர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்து பல்வேறு வகையான விளக்கங்களை கூறி இருக்கிறார்கள்.
கிரகங்களின் இயக்கத்திற்கு அரிஸ்டாட்டில் கூறிய விளக்கம்.
குறிப்பாக அரிஸ்டாட்டில் காலத்தில் பூமி ஒரு கோளம் என்பது கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நிலையில் காலையில் சூரியன் கிழக்கு திசையில் எழுந்து மேல் நோக்கி நகர்ந்து பின்னர் மாலையில் மேற்கு திசையில் மறைவதன் அடிப்படையில், பூமியானது நிலையாக இருப்பதாகவும் சூரியனே பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது.
அதே போன்று நிலவும் நட்சத்திரக் கூட்டங்களும் அதனிடையே கிரகங்களும் கிழக்கில் எழுந்து மேற்கில் மறைவதன் அடிப்படையில், நிலவும் நட்சத்திரக் கூட்டங்களும் அதனிடையே நகரும் கிரகங்களும் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது.
இதன் அடிப்படையில், பூமியானது பிரபஞ்சத்தின் மையமாக இருப்பதாகவும் அதனால்தான் பொருள்கள் எல்லாம் பூமியை நோக்கி விழுவதாகவும் அரிஸ்டாட்டில் கூறினார்.
அத்துடன்,பூமியை சுற்றி எட்டு கண்ணாடிக் கோளங்கள் சுழன்று கொண்டு இருப்பதாகவும்,அந்த கண்ணாடிக் கோளங்கள் ஒவ்வொன்றிலும் புதன்,வெள்ளி,நிலா,சூரியன் செவ்வாய்,வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும்,கடைசி கோளத்தில் நட்சத்திரங்கள் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் அரிஸ்டாட்டில் கூறினார்.
ஆனாலும் ஒவ்வொரு மாத இடைவெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கிரகங்களானது மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.
கிரகங்கள் பயணம் செய்து கொண்டு இருக்கும் பாதையில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை சிங்கம்,ஆடு,மீன்,நண்டு போன்ற உருவங்களாக கற்பனை செய்தனர்.அதனால் இந்தப் பாதையை விலங்குப் பாதை என்று அழைத்தனர்.
அத்துடன் சில சமயம் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் கிரகங்களானது,குறிப்பாக செவ்வாய் கிரகமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் வேகம் குறைந்து தயங்கி நின்ற பிறகு மேற்கு நோக்கி நகர்வதும் பின்னர் மறுபடியும் கிழக்கு திசை நோக்கி நகர்வதும் தெரிய வந்தது.
இது குறித்து அரிஸ்டாட்டில் விளக்கம் எதுவும் கூற வில்லை.
கிரகங்களின் இயக்கம் குறித்த அரிஸ்டாட்டில் விளக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தன.எனவே தாலமி என்பவர் அரிஸ்டாட்டிலின் விளக்கத்தில் சிறிய மாற்றத்தை செய்தார்.
அதாவது பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கண்ணாடிக் கோளங்களில் கிரகங்கள் சிறிய வட்டமடித்துக் கொண்டே பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாக தாலமி கூறினார்.
இந்த விளக்கமானது கிரகங்கள் ஏன் சில சமயம் முன்னும் பின்னும் நகர்கிறது என்ற கேள்விக்கு விடையளிப்பதாக இருந்தது.
ஆனாலும் சில சமயம் கிரகங்கள் ஏன் வேகமாகவும் சில சமயம் கிரகங்கள் மெதுவாகவும் நகர்வது குறித்து தாலமி எதுவும் கூற வில்லை.
இந்த நிலையில்,போலந்து நாட்டைச் சேர்ந்த கோபர் நிக்கஸ் என்ற ஆராய்ச்சியாளர்,பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டு வெவ்வேறு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாகாக் கூறினார்.
குறிப்பாக பூமியானது உள் வட்டப் பாதையில் செவ்வாய் கிரகத்திற்கு பின்னால் இருந்தபடி நகரும் பொழுது செவ்வாய் கிரகத்திற்கு பின்னால் இருக்கும் நட்சத்திரங்களானது,செவ்வாயை பொறுத்தமட்டில் பின் நோக்கி நகர்வதாகத் தோன்றுவதாகவும்,அதன் பிறகு பூமியானது செவ்வாய்க்கு இணையாக பயணம் செய்யும் பொழுது செவ்வாய் கிரகமானது நகராமல் இருப்பது போன்று தோன்றுவதாகவும் பின்னர் பூமியானது செவ்வாயை முந்திச் சென்ற பிறகு மறுபடியும் செவ்வாய்க்கு பின்னால் இருக்கும் நட்சத்திரங்களானது செவ்வாயை பொறுத்தமட்டில் பின் நோக்கி நகர்வதாகத் தோன்றுவதாகவும் விளக்கம் கூறினார்.
இந்த விளக்கமானது புவி மையக் கோட்பாடு என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தானது மதக் கோட்பாடுகளுக்கு முரணாக இருந்ததசல் பலரும் இது குறித்து வெளிப் படையாக பேசவோ ஆதரிக்கவோ பலரும் தயங்கினார்கள் ஆனாலும் சோதிடம் கூறுபவர்களுக்கு சூரிய மையக் கோட்பாட்டின் படி கிரகங்களின் நிலைகளை முன் கூட்டியே கணிப்பது ஓரளவு எளிதாக இருந்தது.
இந்த நிலையில்,டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டைக்கோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர் சூரியன் மியாயமா பூமி மையமா என்பதை அறிய உறுதியான ஆதாரங்கள் தேவை என்று கருதினார்.
அதன் அடிப்படையில் அரசரிடம் உதவி பெற்று ஒரு தீவில் உள்ள ஒரு மாதா கோவிலின் மேல் இருந்தபடி ஒவ்வொரு இரவிலும் வானத்தை பார்த்து நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கிரகங்களின் நகர்ச்சியை பதிவு செய்து ஆவணங்கள் தயார் செய்தார்.
இருப்பது ஆண்டு காலம் அவர் இவ்வாறு கூட்டங்களுக்கு இடையில் கிரகங்களின் நகர்ச்சியை பதிவு செய்தார்.
ஆனால் திடீரென்று அவர் இறந்து விடவே அந்த ஆவணங்கள் யாவும் அவரின் உதவியாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜொகானஸ் கெப்ளர் என்ற ஆராய்ச்சியாளர் வசம் கிடைத்தது.
டைக்கோ பிராகே இறந்த பிறகு அவர் தயாரித்த ஆவணங்கள் யாவும் அவரின் உதவியாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜொகானஸ் கெப்ளர் என்ற ஆராய்ச்சியாளர் வசம் கிடைத்தது.
அந்த ஆவணங்களை கவனமுடன் ஆய்வு செய்த கெப்ளருக்கு குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் நகர்ச்சிக்கு வட்ட வடிவ சுற்றுப் பாதை பொருந்தாமல் இருப்பதைக் கவனித்து குழம்பினார்.பின்னர் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையை முயற்சி செய்து பாத்த பொழுது கட்சிதமாகப் பொருந்தியது.
அதன் அடிப்படையில் அவர் கிரகங்களின் நகர்ச்சி குறித்து மூன்று விதிகளை வெளியிட்டார்.
முதல் விதி.
கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
இரண்டாவது விதி.
சூரியனுக்கு அருகில் கிரகங்கள் வேகமாகவும் சூரியனுக்கு தொலைவில் கிரகங்கள் வேகமாகவும் நகர்கின்றன.அதனால் சூரியனையும் கிரகங்களையும் இணைக்கும் நேர்கோடானது சம கால அளவில் சம அளவிலான பரப்புகளைக் கடக்கிறது.
மூன்றாவது விதி.
கிரகங்களின் சுற்றுக்கு காலத்தின் இருமடியானது கிரகங்களின் தொலைவுக்கு மும்மடி விகிதத்தில் நேர்த்தகவில் இருக்கிறது.
ஆனாலும் கிரகங்கள் இவ்வாறு சூரியனை சுற்றுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு கெப்ளர் விளக்கம் கூற வில்லை.
இந்த நிலையில்,கெப்ளரின் விதிகள் குறித்து ஆய்வு செய்த,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரான ஐசக் நியூட்டன்,சூரியனுக்கு பின்னால் ஒரு வால் நட்சத்திரம் மறைந்த பிறகு மறுபடியும் எழுவதைக் கண்டார்.
அதன் அடிப்படையில் அவர்,சூரியனுக்கு எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியானது சூரியனுக்கு அருகில் நேராகச் சென்ற வால் நட்சத்திரத்தை தொடந்து இழுத்ததால்,வால் நட்சத்திரத்தின் பாதையானது வளைக்கப் பட்டு விட்டதாகவும் நியூட்டன் கருதினார்.
பின்னர் ,ஆப்பிளை பூமி இழுக்கும் அதே சக்திதான் சூரியனுக்கும் இருக்கிறது என்று கண்டு பிடித்தார்.
அதன் அடிப்படையில் விண்வெளியில் இருக்கும் எல்லா பொருள்களும் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு ஈர்க்கும் பொழுது அவற்றுக்கு இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையம் உருவாகுவதாகவும் கிரகங்கள் மற்றும் சூரியன் ஆகிய யாவும் அந்த பொது ஈர்ப்பு மையத்தையே வலம் வந்து கொண்டு இருப்பதாகவும் நியூட்டன் விளக்கம் கூறினார்.
குறிப்பாக,சூரியன் பெரிதாக இருப்பதால் அந்த பொது ஈர்ப்பு மையமானது சூரியனுக்கு உள்ளே இருப்பதாகவும் அதனால் சூரியன் அந்த பொது ஈர்ப்பு மையத்தை வலம் வர, சிறிய அளவில் சுற்றினால் போதும். ஆனால் அந்த பொது ஈர்ப்பு மையமானது கிரகங்களில் இருந்து அதிக தொலைவில் இருப்பதால் அந்த பொது ஈர்ப்பு மையத்தை வலம் வர, கிரகங்கள் பெரிய அளவில் சுற்ற வேண்டி இருப்பதால் சூரியனையும் சேர்த்து சுற்றுகிறது என்று நியூட்டன் கூறினார்.
நியூட்டனின் இந்த விளக்கத்தால் அவரின் புகழ் அகிலம் முழுவதும் பரவியது.
அந்த காலத்தில் ஒளி மற்றும் ஒலியின் வீரியமானது அதன் மூலத்தின் இரு மடி தொலைவில் மும்மடங்கு குறைவது அறியப் பட்டு இருந்தது.
இந்த விதியானது தலை கீழ் பெருக்க விதி ( inverse square law ) என்று அழைக்கப் படுகிறது.
இதே போன்று ஈர்ப்பு விசையும் தலை கீழ் பெருக்க விதியின் படி செயல் படுவதை நியூட்டன் அறிந்தார்.
அதாவது சூரியனுக்கும் கிரகத்திற்கும் இடையில் இருக்கும் தொலைவானது இரு மடங்கு அதிகரித்தால் ஈர்ப்பு விசையானது நான்கு மடங்கு குறையும் .அதே போன்று சூரியனுக்கும் கிரகத்திற்கும் இடையில் இருக்கும் தொலைவானது மூன்று மடங்கு அதிகரித்தால் ஈர்ப்பு விசையானது ஒன்பது மடங்கு குறையும்.
இந்த நிலையில்,நியூட்டனின் நண்பரான எட்மண்ட் ஹாலி ,வால் நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு செய்தார்.அந்த காலத்தில் வால் நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு முறை வந்த பிறகு மறுபடியும் வருவது இல்லை என்றே நம்பப் பட்டு வந்தது.
ஆனால் சில வால் நட்சத்திரங்கள் வருகை புரிந்த ஆண்டு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்த ஹாலி ,சில வால் நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபடியும் மறுபடியும் வருவதை அறிந்தார்.
குறிப்பாக ஒரு வால் நட்சத்திரம் எழுபத்தி ஐந்து ஆண்டு கால இடை வெளியில் மறுபடியும் வருவதை ஹாலி அறிந்தார்.
இது குறித்து அவர் நியூட்டனிடம் பேசினார்.
வால் நட்சத்திரங்கள் தலை கீழ் பெருக்க விதியின் படி இயங்கினால்,அதன் சுற்றுப் பாதை எப்படி இருக்கும் என்று நியூட்டனிடம் கேட்க அதற்கு நியூட்டன் அதன் சுற்றுப் பாதையானது நீள் முட்டை வடிவத்தில் இருக்கும் என்று கூறினார்.
எப்படி தெரியும் என்று ஹாலி கேட்க அதற்கு நியூட்டன் நான் கணக்கீடு மூலம் அறிந்தேன் என்பர் கூறினார்.
உடனே ஹாலி அந்த கணக்கீட்டு தாளை காட்டுமாறு கேட்க அதற்கு நியூட்டன் அதைத் தேடியும் கிடைக்காததால் பின்னர் தருவதாகக் கூறினார்.
பின்னர் கிரகங்கள் தலை கீழ் பெருக்க விதியின் படி இயங்குவதால் அதன் சுற்றுப் பாதையானது நீள் முட்டை வடிவத்தில் இருக்கிறது என்று அவரை பிரின்சிபியா நூலில் தெரிவித்தார்.
அதாவது,சூரியனைக் கிரகங்கள் வலம் வருவதற்கு சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என்றும் சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருவதற்கு கிரகங்கள் தலை கீழ் பெருக்க விதியின் படி இயங்குவதே காரணம் என்பதே நியூட்டனின் விளக்கம்.
நியூட்டனின் விதிகளை பயன் படுத்தி ஹாலி மறுபடியும் வரும் என்று முன் கூட்டியே கணித்துக் கூறியபடி வால் நட்சத்திரம் வந்தது.அதன் பெயர் ஹாலி என்றே அழைக்கப் படுகிறது இந்த நிகழ்வானது நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டுக்கு சிறந்த ஆதாரமாகக் கருதப் பட்டது.
அதே போன்று,யரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் சிறிய தடுமாற்றங்கள் இருப்பதை அர்பான் லே வெறியர் என்ற ஆராய்ச்சியாளர் கண்டார்.
யுரேனஸ் கிரகத்தின் தடுமாற்றத்திற்கு அப்பகுதியில் இன்னும் கண்டு பிடிக்கப் படாத ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று அர்பன் லே வெறியர் கூறினார்.அவர் கூறிய படியே அப்பகுதியில் நெப்டியூன் கிரகம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நிகழ்வும் நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டுக்கு சிறந்த ஆதாரமாகக் கருதப் பட்டது.
நியூட்டன் இறந்த பிறகும் அவரின் புகழ் மங்க வில்லை.
நியூட்டனுக்கு பிறகு மேம்பட்ட தொலை நோக்கிகள் உருவாக்கப் பட்டு கிரகங்கள் கவனிக்கப் பட்டது.
அப்பொழுது,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது எதிர் பார்த்ததை விட அதிக நீளமாக இருந்தது.
அத்துடன் புதன் கிரகாமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்ந்தது.
அதாவது சூரியனுக்கு அருகில் ''A'' என்ற புள்ளியில் இருந்து புறப்பட்ட புதன் கிரகமானது மறுபடியும் அதே இடத்திற்கு வருவதற்கு பதிலாக சிறிது முன்னால் இருக்கும் இடத்திற்கு வருவது தெரிய வந்தது.
இதனால் புதன் கிரகத்தின் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையே சூரியனை ஒரு பூவின் இதழ் போன்று சுற்றிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு புதன் கிரகத்தின் நீள் முட்டை வடிவப் பாதையானது மிகவும் நீளமாக இருப்பதற்கும்,புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்வதும் ஏன் என்ற கேள்வி எழுந்தது.
தற்பொழுது புதன் கிரகத்தைப் போலவே எல்லா கிரகங்களும் நசூரியனை நெருங்கும் புள்ளியானது சிறிது இடம் பெயர்வது தெரிய வந்துள்ளது.
எனது விளக்கம்.
பூமிக்கு வட துருவம் தென் துருவம் மற்றும் சிறிது பருத்த நில நடுக் கோட்டுப் பகுதி இருப்பதை போன்றே,சூரியனுக்கும் வட துருவம் தென் துருவம் மற்றும் சிறிது பருத்த சூரிய நடுக் கோட்டுப் பகுதி இருக்கிறது.
இந்த நிலையில்,சூரியனின் வட துருவப் பகுதி இருக்கும் திசையில் உள்ள வேகா என்ற நட்சத்திரம் இருக்கும் திசையை நோக்கி விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் பருத்த நடுக் கோட்டுப் பகுதியை நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அத்துடன் சூரிய நடுக் கோட்டுப் பகுதியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வராமல் சற்றும் சாய்வாக அதாவது சூரியன் பயணம் செய்யும் திசைக்கு அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு,கிரகங்கள் சூரியனின் நடுக்க கோட்டுப் பகுதியை அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில், நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதே காரணம் என்பதே எனது விளக்கம்.
அதே போன்று சூரியனை கிரகங்கள் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது சூரியனானது சூரியனுக்கு அருகில் இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை மையமாகக் கொண்டு சுற்றுவதால் கிரகங்களானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது என்பதே எனது விளக்கம்.
உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனை சூரியனாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில பழக்கப் படுத்திய புறாக்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, வேகமாக முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த புறாக்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்.
அதனால் அந்த புறாக்களின் சுற்று வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாறி விடுவதுடன்,சிறிது நீள் வட்டமாகவும் மாறி விடும்.
இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனின் இடுப்புப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.
இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும்.
இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும். அதே நேரத்தில்,பூமியை வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது.
அதாவது,விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் வேகா என்ற நட்சத்திரம் இருக்கும் திசையை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கிரகங்கள் எல்லாம் சூரியனின் நடுக் கோட்டுப் பகுதியை நோக்கி வலம் வந்து கொண்டு இருப்பதால்,சூரியனின் நகர்ச்சியால் கிரகங்களின் சுற்றுப் பாதையானது அறுபத்தி இரண்டு டிகிரி சாய்ந்து விடுகிறது.
அதே போன்று,விண்வெளியில் சூரியன் வேகா நட்சத்திரம் இருக்கும் திசையை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் நிலையில்,சூரிய மண்டலத்தில் இருக்கும் பெரிய வாயுக் கோள கிரகங்களான வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சூரியனுக்கு அருகே உருவாகும் பொது ஈர்ப்பு மையத்தை சுற்றியபடி சூரியன் விண் வெளியில் பயணம் செய்வதால், ஒவ்வொரு சுற்றுக்கும் கிரகங்கள் சூரியனை நெருங்கும் புள்ளியானது சிறிது இடம் பெயர்கிறது.
கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு நியூட்டன் கோட்பாட்டின் படி கூறிய விளக்கம் தவறு.
புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது எதிர்பார்த்ததை விட மிக நீளமாக இருப்பதற்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று விளக்கம் கூறப் பட்டது.
எனவே புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் மிக நீளமாக இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு நியூட்டன் கோட்பாட்டின் படி விளக்கம் கூறப் பட்டது.
புதன் கிரகத்தை சூரியனும் இழுக்கிறது,அதே போன்று மற்ற கிரகங்களும் இழுக்கிறது அதனால் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீளமாக இருக்கிறது என்று விளக்கம் கூறப் பட்டது. அதாவது ஒரு ரப்பர் வளையலை இரண்டு பக்கமும் இழுத்தால் அதன் வடிவமானது நீள் வட்டமாக மாறுமே, அதை போன்று புதன் கிரகத்தை சூரியனும் வெள்ளி பூமி போன்ற கிரகங்களும் இழுப்பதால் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது மிகவும் நீள்வட்டப் பாதையாக மாறி விடுகிறது என்று நியூட்டன் கொள்கையின் அடிப்படையில் ஒரு விளக்கம் கூறப் பட்டது.
இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையானது காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு மாற வேண்டும்.
ஏனென்றால் கிரகங்களின் நிலையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறுகிறது. இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதை வடிவம் மாறினால் கிரகங்கள் சூரியனை சுற்றிவரும் காலமும் மாற வேண்டும்.
உதாரணமாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது. எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு, ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச் சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம்,கிரகங்களின் ''நீள் வட்டப் பாதைக்கு'',மற்ற கிரகங்களின் ''ஈர்ப்பு விசை பாதிப்பு'' என்று சர் ஐசக் நியூட்டன் ககொள்கையின் அடிப்படையில் கூறப் பட்ட விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அதே போன்று புதன் உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை நெருங்கும் புள்ளியானது ஏன் ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது என்பதை நியூட்டன் கொள்கையின் அடிப்படையில் சரியான விளக்கத்தைத் தர இயல வில்லை.அதே போன்று இந்த நிகழ்வை நியூட்டன் கொள்கை முன்னறிவிக்கவும் இல்லை.
கிரகங்களின் சுற்றுப் பாதைக்கும் ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்ட்டின் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
புதன் உள்பட ஏனைய கிரகங்களின் சுற்றுப் பாதை மாறுபாடுகளை நியூட்டனின் கோட்பாட்டின் படி,மற்ற கிரகங்கள் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.ஆனால் அவர்களின் கணக்கீடு அவ்வளவு துல்லியம் இல்லை என்றும் நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாடே தவறு என்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்பிரட் ஐன்ஸ்ட்டின் கூறினார்.
குறிப்பாக அவர் ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல,மாறாக,ஈர்ப்பு என்பது விண்வெளியில் ஏற்படும் ஒரு விளைவு .என்று ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது சூரியன் போன்ற பொருள்களின் நிறையால், விண்வெளியானது வளைக்கப் படுகிறது. அதனால்,சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகிறது. இந்த நிலையில் சூரியனுக்கு அருகில் செல்லும் கோள்களானது அந்தப் பள்ளத்தின் வழியாகச் செல்லும் பொழுது அந்த கிரகங்களின் பாதையானது வளைக்கப் படுவதால் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன என்று கூறினார்.
அதாவது நேராக செல்லும் ஒரு பாதையில் இருக்கும் பள்ளத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் பாதையானது வளைக்கப் படுவதை போன்று சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்களின் பாதையானது வளைக்கப் படுகிறது.மற்றபடி சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இல்லை என்பதே ஐன்ஸ்டீனின் விளக்கம். உதாரணமாக ஒரு பெரிய ரப்பர் மெத்தையின் மேல் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அந்த ரப்பர் மெத்தையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகும். இந்த நிலையில் அந்த பள்ளத்தில், சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்தக் கோலிக் குண்டுகளானது, அந்தப் பெரிய இரும்புக் குண்டை வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வராமல், சிறிது இடம் மாறி வருவதைப் போன்று, கிரகங்களும் இயங்குகின்றன, என்று ஐன்ஸ்டீனின் கருத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது.
இதே போன்று ஒரு பெரிய வடை சட்டியில் சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்த குண்டுகளானது ஒவ்வொரு சுற்றுக்கு சிறிது இடம் பெயர்ந்தது சுற்றும் அல்லவா அதை போன்று சூரியனுக்கு அருகில் இருக்கும் பள்ளத்தில் கிரகங்கள் சுற்றிக் கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று உண்மையில்,சூரியனுக்கு அருகில் விண்வெளியானது வளைக்கப் பட்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி எழுந்தது.
உண்மையில் ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் பட்டு,சூரியனைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருந்தால்,சூரியனுக்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியானது,அந்தப் பள்ளத்தைக் கடந்து வரும் பொழுது வளைந்து வரும்,எனவே சூரியனுக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்று விளக்கம் கூறப் பட்டது. பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது.
ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று, சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது. உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு ''விசை'' என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ஈர்ப்பு என்பது ஒரு ''விசை'' என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம்.
வியாழன் கிரகத்தை நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும் ''இயோ'' துணைக்கு கோளின் மேற்பரப்பில் நானூறுக்கும் அதிகமான எரிமலைகள் இருப்பதால் அதன் மேற்பரப்பானது இளகிய நிலையில் இருக்கிறது.இந்த நிலையில் அந்த துணைக்கு கோளானது வியாழன் கிரகத்தை நெருங்கும் பொழுது அந்த துணைக்கு கோளின் வடிவமே ''நீள் முட்டை'' வடிவமாக மாறுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு வியாழன் கிரகத்தின் துணைக்கு கோளின் வடிவமானது மாறுவதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது ஒரு ''விசை'' என்பது ஆனித்தரமாக நிரூபணம் ஆகிறது. எனவே ஈர்ப்பு என்பது ஒரு ''விசை'' அல்ல என்றும், அது விண்வெளியில் ஏற்படும் ஒரு ''விளைவு'' என்று ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறான விளக்கம் என்பதும் நிரூபணம் ஆகிறது.
இதே போன்று புளுட்டோ வை சரண் என்று அழைக்கப் படும் அதன் துணை கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் சரணின் ஈர்ப்பு விசையால் புளுட்டோவும் அதன் அருகே இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை மையமாகக் கொண்டு சிறிய அளவில் வட்டமடிக்கிறது
இவ்வாறு புளுட்டோ வட்டமடிப்பதன் மூலம் ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதை போன்று ஒரு விசை என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
தற்பொழுது ஐயாயிரத்துக்கும் அதிகமான வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதில் பல கிரகங்கள் கண்ணுக்கு தெரிய விட்டாலும் கூட அந்த கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அதன் நட்சத்திரங்களில் ஏற்படும் அசைவை அறிவதன் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கிரகங்கள் அதன் நட்சத்திரத்தில் ஏற்படுத்தும் அசைவு மூலமாகவும் ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதை போன்று ஒரு விசை என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
Comments