கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?
கடந்த 2012 ஆம் ஆண்டு லூயிசியான பல்கலைக் கலகத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டின் டே லாங் தலைமையிலான ஆராய்ச்சிக்கு குழுவினர் மெக்சிகோ வலை குடாப் பகுதியில் அலபாமா கடற்கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் அறுபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சைப்ரஸ் காடுகளின் பாகங்கணள இருப்பதைக் கண்டு ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையியல், அந்த மரங்களானது அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருப்பதகத் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து கடற் கரைப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த காட்டு மரங்களின் பாகங்களை கடல் ஆராய்ச்சியாளர்கள் டான் வாட்சன் மற்றும் ராப் ஸ்ப்ரே ஆகியோர் கண்டு பிடித்தனர்.அந்தக் காட்டுப் பகுதியானது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்தக் காட்டுப் பகுதியானது இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் எட்டாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டோகர் லேண்ட் என்ற நிலப் பகுதியியைச் சேர்ந்தது என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தற்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டோகர் லேண்ட் பகுதியில் இருந்து ஏற்கனவே கற்கால மனிதர்கள் பயன் படுத்திய வேட்டைக் கருவிகள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அந்த டோகர் லேண்ட் நிலப் பகுதியானது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவுக்கும் பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் பாலமாக இருந்து இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த டோகர் லேண்ட் நிலப் பகுதியானது மூழ்கத் தொடங்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,கடந்த 2019 ஆம் ஆண்டு ஹன்னா புயல் வீசிய பொழுது, இங்கிலாந்து கடற்கரைப் பகுதியில் நாலாயிரத்து ஐநூறு முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய மரங்களின் பகுதியில் வெளிப் பட்டது.
இதே போன்று தற்பொழுது சூப்பர் கம்யூட்டர் மூலம் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது நானூறு அடிக்கும் குறைவாக இருந்தபொழுது,பழங்குடி மனிதர்கள் பாப்புவா நியூ கினியா தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் இருந்த நிலத் தொடர்பு வழியாக ஆஸ்திரேலிவை அடைந்திருப்பதாக புவி மற்றும் தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,ஹவாய் தீவை ஒட்டி இருக்கும் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 490அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் பவளப் பாறைத்த திட்டுகள் எப்பொழுது மூழ்கியது என்று ஆய்வு செய்த பொழுது அந்த பவள உயிரினங்களானது 14,700 ஆண்டுகளுக்கு மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் கடந்த பதத்தாயிரம் ஆண்டு காலமாகவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்தது கொண்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
இந்த நிலையில்,கோபம் ஹேகன் பல் க்ளிக் கலகத்தைச் சேர்ந்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ்லேவ் தலைமையிலான குழுவினர் பனி யானைகள் ஏன் அழிந்தன என்பதை அறிவதற்காக ஆர்க்டிக் பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட விலங்கின் கழிவுகள்,தாவரங்கலின் பாகங்கள்,விலங்கின் உடலில் செரிக்கப் படாத உணவு ஆகியவற்றை சேகரித்து ஆய்வு மேற்க்கண்டனர்.
அதன் அடிப்படையில்,ஆர்க்டிக் பகுதியில்,50,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும் அதன் பிறகு 25,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி அதிகரித்ததாகவும் அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் பனி யானைகள் சத்து குறைந்த புற்களை உண்டு வாழ்ந்ததாவகவும், அதன் பிறகு மேலும் பனி அதிகரித்ததால் பூக்கும் தாவரங்கள் அழிந்ததாகவும் அதனால் பனி யானை இனமும் அழிந்ததாகவும் தெரிதவித்து இருக்கின்றனர்.
இதே போன்று வரலாற்றுக்கு காலத்திலும் ஐரோப்பாவில் அதிக பனிப் பொழிவால் தேம்ஸ் நதி உறைந்து இருக்கிறது.
இதன் மூலம்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ச்சியாக கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்தது இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
எனவே கடல் மட்டம் உயர்ந்தது கொண்டு இருப்பதற்கு பனிப் படலங்கள் உருகுவதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
Comments