என்னுடைய ஆய்வுத் தலைப்பு -

என்னுடைய ஆய்வுத் தலைப்பு -
விலங்கினங்கள் எப்படி பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன?
என்னுடைய ஆய்வு முடிவு-
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததன் காரணமாகவே,விலங்கினங்களானது, பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன.

எனது ஆய்வில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம், என்று கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகளாக உருவாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதே போன்று,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும்,காணப் படுவதற்குக் கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் சேர்ந்து,கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன்,நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்,கண்டத் தட்டுகளின் நகர்வதாலேயே ஏற்படுகிறது, என்று கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,நில அதிர்ச்சிகளும்,சுனாமிகளும்,உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

விஞ்ஞானிகள் கூறிய தவறான விளக்கங்களும், அதற்கான உண்மை காரணங்களும்.