டைனோசர்கள் காலத்துப் பூமி.
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,தற்பொழுது கண்டங்களைச் சுற்றிலும்.கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர்களானது,கடல் மட்டத்துக்கு மேலாகத் தொடர்ச்சியாக இருந்ததால்,அதன் வழியாக டைனோசர்கள் உள்பட ஏனைய விலங்கினங்களும்,பயணம் செய்து, ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன.அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப்
புதிய பாறைத் தட்டுகளாக உருவாகிய பொழுது,அதிலிருந்து பிரிந்த நீரானது,கடலில் கலந்ததால்,கடல் மட்டம் உயர்ந்ததால்,அந்தக் கண்டங்களுக்கு இடையிலான, விலங்கினங்களின் போக்குவரத்து தடை பட்டது.அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததாலும்,கடலின் பரப்பளவானது அதிகரித்ததாலும்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள் உருவாகியது.இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் டைனோசர்கள் உள்பட பனி யானைகளும் முற்றாக அழிந்தன.
(படம்-இணையம்)
Comments