பூமி ஒரு நீர்க் கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.





பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரானது ,சுடு நீர் ஊற்று வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு பெரும் பகுதியாக இருப்பதுடன்,அந்தப் பாறைக் குழம்பானது,குளிருந்து கொண்டு இருப்பதால், பூமிக்கு அடியில் நீர் சுரப்பதும் தொடரும்.எனவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து,நிலப் பகுதிகள் யாவும் கடலுக்குள் மூழ்கும். தனால் தரையில் வாழக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்கள் முழுவதும் முற்றாக அழியும்.
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,டைனோசர்கள் உள்பட ஏனைய விலங்கினங்களும் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.அதன் காரணமாகவே,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,கண்டங்களிலும் தீவுகளிலும்,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுகின்றன.
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளிள் ,பனிப் படலத்துக்குப் பதில் பசுமைக் காடுகளும்,அதில் டைனோசர்களும் வாழ்ந்தன.
அதன் பிறகு,கடல் மட்டமானது உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகின.அதனால் காடுகளும் டைனோசர்களும் அழிந்தன.
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுகின்றன.
கிரகங்களானது,சூரியனை சாய்வான மற்றும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் முன் நோக்கிய நகரவே காரணம்.

எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் வெளிப் பகுதியில் இருக்கும் இலேசான வாயுக்கள் ஆவியாக்கப் படும் பொழுதும்,விண்வெளியில் இறைக்கப் படும் பொழுதும், எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மையப் பகுதியில் இருக்கும் கனமான கோளமானது கிரகங்களாக வெளியில் வருகின்றன.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?