ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன?


தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள்.

ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன?

தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள்.

தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், எரிமலைத் தீவுக் கூட்டமான கலாபாகஸ் தீவுகளில்,ராட்சத ஆமைகள் காணப் படுகின்றன.அந்த ஆமையினமானது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்,சிலியென்சிஸ் என்ற ஆமையின் நெருங்கிய இனவகை என்பது மரபணு ஆய்வில் தெரிய வந்தது.

அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து சிறிய அளவுள்ள ஆமைகளானது,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,இரண்டு வார காலம்,கடலில் தத்தளித்தபடி,தற்செயலாகக் கலாபாகஸ் தீவை அடைந்திருக்கலாம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருந்தனர்.

அதன் பிறகு,அந்தத் தீவுகளில்,கொன்றுண்ணி விலங்குகள் இல்லாத காரணத்தாலும்,தாவரங்கள் அதிகமாகவும்,உணவுக்குப் போட்டியாக வேறு விலங்கினங்கள் இல்லாத காரணத்தாலும்,தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகளானது காலப் போக்கில்,பெரிய அளவுள்ள ஆமையினமாக உருவாகி விட்டது என்று, ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருந்தனர்.

அதன் பிறகு,மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுகளில், காணப் படும் ராட்சத ஆமையினமானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்,சிலியென்சிஸ் ஆமையினத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரிந்து புதிய இனவகையாக உருவாகி இருப்பது தெரியவந்தது.

ஆனால்,கலாபாகஸ் தீவானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உருவாகி இருப்பது தெரியவந்தது.

எனவே,கலாபாகஸ் தீவுகளில், காணப் படும் ராட்சத ஆமையினத்தின் பரிணாம மாற்றமானது தென் அமெரிக்கக் கண்டத்தில் நடை பெற்று இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

அதன் அடிப்படையில், தற்பொழுது,கலாபாகஸ் தீவுகளுக்குத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து பெரிய அளவுள்ள ஆமைகளானது,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,இரண்டு வார காலம்,கடலில் தத்தளித்தபடி,தற்செயலாகக் கலாபாகஸ் தீவை அடைந்திருக்கலாம் என்று,ஆராய்ச்சியாளர்கள் புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

௦௦௦௦௦௦௦
இதே போன்று,கலாபாகஸ் தீவுகளில்,இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகள் காணப் படுவதற்கும் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

குறிப்பாக,கலாபாகஸ் தீவில்,காணப் படும் ,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளில், இரண்டு இனவகைகள் காணப் படுகிறது.

குறிப்பாக,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,கலாபாகஸ் தீவை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

இந்த நிலையில், கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழும் உடும்பானது,தரையில் வாழும் உடும்பினத்தில் இருந்து,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் உருவாகி இருப்பது,மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால்,கலாபாகஸ் தீவோ,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக உருவாகியது.

அதாவது,கலாபாகஸ் தீவை விட அந்தத் தீவில் வாழும் உடும்புகளானது,அதிக தொன்மையானது.

எனவே,தற்பொழுது,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில்,இருந்து,கலாபாகஸ் தீவை அடைவதற்கு முன்பே, வேறு சில தீவுகளில் வந்து வாழ்ந்து இருப்பதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட பரிணாம மாற்றத்தில், இரண்டு இனவகையாக உருவான பிறகு,அந்தத் தீவுகளானது கடலுக்குள் மூழ்கிய தாகவும்,அப்பொழுது, கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த, கலாபாகஸ் தீவுகளுக்கு,உடும்புகள் வந்ததாகவும், தற்பொழுது புதிய விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது,கலாபாகஸ் தீவுகளுக்கு ராட்சத ஆமைகளானது,கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்ததாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால்,அதே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,இகுவானாக்களானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,தென் அமெரிக்கக் கண்டதுக்கும்,காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக வந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
௦௦௦௦௦௦௦௦
இதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியில்,குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில்,ராட்சத ஆமையின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,ராட்சத ஆமைகளானது, மடகாஸ்கர் தீவை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

அதே போன்று,மடகாஸ்கர் தீவில் இருந்து அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,செஷல்ஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள அல்டாப்ரா தீவில்,ராட்சத ஆமைகள் காணப் படுவதற்கும், அதே கடல் பகுதியில் அமைந்து இருக்கும் மஸ்கரீனா தீவுகளான,ரோட் ரிக்ஸ்,ரீ யூனியன்,மற்றும் மொரீசியஸ் தீவுகளில்,ராட்சத ஆமைகளின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,ராட்சத ஆமைகளானது,மடகாஸ்கர் தீவில் இருந்து,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,ராட்சத ஆமைகளானது, மஸ்கரீனா தீவுகளை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

அதிலும் குறிப்பாக,செஷல்ஸ் தீவுக்கு மட்டும்,மூன்று முறை,ராட்சத ஆமைகளானது,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம்,அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

முக்கியமாக,கலாபாகஸ் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் காணப் படும் ராட்சத ஆமைகளானது,நானூறு கிலோ எடையுள்ள விலங்கினங்கள் ஆகும்.மேலும் அந்த விலங்கினங்களானது மெதுவாக இயங்கக் கூடியது.

இந்த நிலையில்,ஜெர்மன் நாட்டின்,ஜியார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் வல்லுனரான ஸ்வென் பிராட்லர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,உலக அளவில் காணப் படும் ,நூற்றி இருபது வகையான குச்சிப் பூச்சிகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது,மாஸ்கரீனா தீவுகளில் காணப் படும்,குச்சிப் பூச்சிகள் மற்றும் இலை வடிவப் பூச்சிகளானது,அந்தத் தீவுகளுக்கு அருகில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப் படும்,குச்சிப் பூச்சிகளின் இன வகைகளைச் சேர்ந்ததல்ல என்பதுடன்,அந்தப் பூச்சிகளானது,ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய வகைக் குச்சிப் பூச்சிகளின் வம்சாவளி என்பதும் தெரிய வந்தது.

குறிப்பாக அந்தப் பூச்சிகளானது ,ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த குச்சிப் பூச்சி இனத்தில் இருந்து ,இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து வந்த மிதவைத் தாவரங்கள் மூலம் மாஸ்கரீனா தீவுக்கு வந்த பிறகு,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொது மூதாதையில் இருந்து , பரிணாம மாற்றமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாகக் குச்சிப் பூச்சிகளுக்கு ,இறக்கைகள் இருந்தாலும் அதனால் உயர்ந்த மரங்களில் இருந்து பறந்தபடி இறங்குவதற்கே பயன் படுத்தும்.ஆனாலும்,குச்சிப் பூச்சிகளானது,மரக் கிளைகளில் ஓட்டும் முட்டைகளை இடக் கூடியது,எனவே,குச்சிப் பூச்சிகளானது,மாஸ்கரீனா தீவுகளுக்கு,கடலில் மிதந்து வந்த மிதவைத் தாவரங்கள் மூலமாகவே வந்திருக்க வேண்டும் என்று,ஸ்வென் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு சிக்கல்.

குறிப்பாக மாஸ்கரீனா தீவுகளில் காணப் படும் குச்சிப் பூச்சிகளானது,மாஸ்கரீனா தீவில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனத்தில் இருந்து பரிணமித்து இருக்கிறது.

ஆனால், மாஸ்கரீனா தீவுகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடல் மட்டத்துக்கு மேலாக எரிமலைத் தீவுகளாக உயர்ந்து இருக்கின்றன.

எனவே,மாஸ்கரீனா தீவுக் குச்சிப் பூச்சிகளானது,எங்கே பரிணாம மாற்றமடைந்தது என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு,ஸ்வென் குழுவினர் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.

குறிப்பாக மாஸ்கரீனா தீவுக்கு அருகில் ,கடலுக்கு அடியில் சில தீவுகள் மூழ்கிய நிலையில்,இருக்கின்றன.

அதன் அடிப்படையில்,குச்சிப் பூச்சிகளானது முதலில் அந்தத் தீவுகளுக்கு வந்து வாழ்ந்த பொழுது, பரிணாம மாற்றமடைந்த பிறகு,அந்தத் தீவுகள் மூழ்கிய பிறகு,புதிதாகக் கடலுக்குள் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த தீவுகளுக்கு வந்திருப்பதாக, ஸ்வென் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்று,ராட்சத ஆமைகளானது, மடகாஸ்கர் தீவில் இருந்து,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,ராட்சத ஆமைகளானது, மஸ்கரீனா தீவுகளை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.

இந்த நிலையில்,அதே மாஸ்கரீனா தீவுகளுக்குக் குச்சிப் பூச்சிகளானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததன் காரணமாகக் கடள் மட்டத்துக்கு மேலாக இருந்த திட்டுகளின் வழியாக,ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

அட்லாண்டிக் பெருங் கடலை விலங்கினங்கள் எப்படிக் கடந்தன?

இந்த நிலையில்,தென் அமெரிக்கா மற்றும் கலாபாகஸ் தீவுகளில் காணப் படும் ராட்சத ஆமை இனத்தின் பூர்வீகத்தைப் பற்றிய ஆய்வில்,அந்த ஆமை இனமானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், ஹிங்கி பேக் ஆமையினம் என்பது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கா மற்றும் கலாபாகஸ் தீவுகளில் காணப் படும் ராட்சத ஆமை இனத்தின் மூதாதைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்தபடி ,அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்ததாக,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில்,ஜோன் கார்த்தியா லோகோ ஸ்டோமோ என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவான, அசென்சன் எரிமலைத் தீவில் காணப் படுகிறது.

இதன் நெருங்கிய இனவகையான, '' ஜோன் கார்த்தியா பிளேனேட்டா''(J. malpilensis and J. planata) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது, பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்து இருக்கும் கிளிப் பெர்டன் (Clipperton Island) தீவில் காணப் படுகிறது.

இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகம்.

இதன் நெருங்கிய இனவகையான ''ஜோன் கார்த்தியா வெய்லேறி'' (J. weileri) என்ற அறிவியல் பெயரால் அழைக்கப் படும் நன்னீர் நண்டானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின், கினியா வளை குடாப் பகுதியில் காணப் படுகிறது.

இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகம்.

ஆனால்,நன்னீர் நண்டுகளுக்கும்,அதன் இளரிகளுக்கும்,கடல் நீர் ஒத்துக் கொள்ளாது.

எனவே,மற்ற நிலப் பகுதிகளில் இருந்து அதிக தொலைவில் அமைந்து இருக்கும்,அசென்சன் எரிமலைத் தீவில் காணப் படும், இந்த நன்னீர் வாழ் நண்டானது,அந்தத் தீவை அடைந்ததற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக, அந்த நன்னீர் நண்டானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும்,தீவுக்கு சென்று இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே போன்று,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,செஷல்ஸ் தீவில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும்,இனவகையைச் சேர்ந்த,
செசல்லம் அல்டிலுயாடி என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டு (Seychellum alluaudi) காணப் படுவதற்கும்,அந்தத் தீவுக்கு எப்படி,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நன்னீர் நண்டுகள் பரவி இருக்கும் என்று , உயிரியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயல வில்லை.

1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.

அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.

அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.

ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.

சின்ன ராட்சத ஆமைகள் கடலைக் கடந்தது எப்படி?

குறிப்பாக கலாபாகஸ் மற்றும் மாஸ்கரீனா தீவுகளில் காணப் படும் ராட்சத ஆமைகளானது 'டெஸ்டுடினிடே' என்று அழைக்கப் படும் ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்த நிலையில்,'டெஸ்டுடினிடே' குடும்பத்தைச் சேர்ந்த 'மியோலானியா' என்று அழைக்கப் படும் ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்த ,'மெகாக்கிளிஸ் அட்லாஸ்' என்று அழைக்கப் படும்,ராட்சத ஆமையின் எலும்புப் புதைப் படிவங்களானது,ஐரோப்பாவிலும்,இந்தியா,பாகிஸ்தான்,மற்றும் இந்தோனேசியத் தீவுகளான திமொர் மற்றும் சுலாவெசி தீவுகளிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்,'மியோலானியா' குடும்பத்தைச் சேர்ந்த, ஆமைகளின் இனவகை,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கக் கண்டத்தில்,வாழ்ந்து இருப்பது, புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே போன்று,'மியோலானியா' குடும்பத்தின் இனவகையானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆஸ்திரேலியாக் கண்டத்தில்,வாழ்ந்து இருப்பது, புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன்,'மியோலானியா' குடும்பத்தைச் சேர்ந்த, ஆமைகளின் இனவகைகளானது,ஆஸ்திரேலியக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும்,நியூ கலோடோனியா,பிஜி,வானட்டு மற்றும் லார்ட் ஹோவி தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது, புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்,மீகோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,மரங்களில் ஏறக் கூடிய ,தரை வாழ் முதலைகளானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாக் கண்டம்த்தி உள்பட,ஆஸ்திரேலியக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும்,நியூ கலோடோனியா,பிஜி, வானட்டு ஆகிய தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது,புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால்,எப்படி இந்த தரை வாழ் முதலைகலானது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து உறுதியான விளக்கம் கூறப் படவில்லை.

இந்த நிலையில்,ஆஸ்திரேலியக் கண்டத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் நியூ சிலாந்து தீவிலும் தரை வாழ் முதலைகள் வாழ்ந்து இருப்பது,புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?