கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததற்கு ஆதாரம்.



ஜெர்மன் நாட்டின் கிரிஸ் வால்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான மார்டின் மிஸ்கிடே,தலைமையிலான குழுவினர்,கரீபியன் தீவுப் பகுதியில்,ஒலி அலைகள் மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களை அறிந்து, அவற்றை கடல் தரை குறித்த வரை படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

அப்பொழுது,கடல் தரையில் பல இடங்களில் மலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பகுதிகள், சம தளமாக இருப்பதை அறிந்தனர்.

அதே போன்று ,அந்த வரை படத்தில் சம தளம் என்று குறிப்பிடப் பட்டு இருந்த இடங்களில்,ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) உயரமுள்ள, மலைகள் இருப்பதையும் அறிந்தனர்.

அதே போன்று,அந்தப் பகுதியில், கடல் தரையில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் காணப் படக் கூடிய கூழாங் கற்கள் இருப்பதைக் கண்டனர்.

அத்துடன் ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், நத்தைகள்,மற்றும் பாசிகள் இருப்பதைக் கண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.

அதன் அடிப்படையில்,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த மலைகளானது,நான்கு முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக இருந்திருக்கின்றன, என்று அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

அத்துடன்,அந்த மலைகளானது, ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் பவளப் பாறைத் திட்டாக இருந்திருக்கலாம் என்றும், நில அதிர்ச்சி காரணமாக கடல் தரைக்கு அடியில் சென்று இருக்கலாம், என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் கருதுகின்றனர்.

The Greifswald group hypothesises that they were part of a reef that grew on a basalt platform and sank during a seismic event in the ocean’s crust.

https://www.thelocal.de/20100510/27097

ஆனால்,நில அதிர்ச்சியால் ஒன்பதாயிரம் அடி வரை மலைகளோ பீட பூமிகளோ பூமிக்குள் இறங்குவதற்கு வாய்ப்பில்லை.

ஏனென்றால்,பூமிக்கு அடியில் செல்ல செல்ல அடர்த்தி அதிகரிப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து பாறைகளும் பாறைக் குழம்புகளும் மேலே வருவதற்கே சாத்தியம் இருக்கிறது.அப்படி உயர்ந்ததால்தான் மலைகளும் பீட பூமிகளும் உருவாகி இருக்கின்றன.

எனவே, கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி ஆழத்தில் ஆழமற்ற
கடல் பகுதியில் காணப் படக் கூடிய கடல் உயிரினங்களின் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் ,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதையும்,அதன் பிறகு உயர்ந்து இருப்பதையுமே இந்தப் புதைப் படிவங்கள் புலப் படுத்துகிறது.

மேலும்,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து எட்டாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,நைன்ட்டி ஈஸ்ட் ரிட்ஜ் என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆtறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைப் பதிவுகளை,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஆர் ஜெ கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், ,துளையிடும் கருவிகள் மூலம் பெறப் பட்ட படிவுகளை, ஆய்வு செய்ததன் மூலம் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2699.2010.02279.x/abstract
https://www.cabdirect.org/cabdirect/abstract/20103218113

அதன் அடிப்படையில்,அந்தக் கடலடி எரி மலைத் தொடர் பகுதியானது,ஒரு காலத்தில் தீவுகளாக இருந்ததாகவும்,தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் போக்கு வரதுக்கும் இடப் பெயர்ச்சிக்கும் பயன் பட்டு இருக்கும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று, இந்தியப் பெருங்கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு,கிலோ மீட்டர் ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,கெர்கூலியன் கடலடிப் பீட பூமியின்,மத்தியப் பகுதில்,இருந்து எடுக்கப் பட்ட,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான, எரிமலைப் பாறைப் படிவுகளில்,மரங்களின் புதை படிவங்கள் இருப்பதைப் பிரிட்டிஷ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம், கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

தற்பொழுது, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் புகையில் இருக்கும் கரியமில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம்,என்று நம்பப் படுகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?