எனது கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக ஒரு கிரகம்.
தலைப்பைச் சேருங்கள் முன்னுரை தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில் நான் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் ஈர்க்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுக்களானது,ஈர்த்த நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின், மையத்தில்,அணுக் கரு வினையால் உருவாகி இருந்த, கனமான அணுக்களானது,கோளமாக உருவாகி, ஈர்த்த நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 00000000000000 கடந்த 2014 ஆம் ஆண்டு,அமெரிக்கா,நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு...