இந்தியாவின் கிராண்ட் கன்யன் எப்படி உருவாகியது?

igc20.jpgigc20.jpg
igc6.pngigc6.png

வட  அமெரிக்காவில் கொலராடோ நதி பாயும் பீட பூமிப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் ஆழமுள்ள பிளவுப் பள்ளத் தாக்கில் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் அமைந்து இருப்பதைப் போலவே,இந்தியாவின் தக்காணப் பீட பூமிப் பகுதியிலும்,ஆறாயிரத்தி ஐநூறு அடி உயரத்திற்கு பாறைத் தட்டுகளால் ஆன மலைத் தொடர்  உருவாகி இருக்கிறது.

இந்த வினோத மலைப் பிரதேசம் டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படுகிறது.

ஸ்வீடன் மொழியில் ட்ராப்ஸ் என்றால் படிக் கட்டு என்று பொருள்.இந்த மலைத் தொடரில்,ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டது போல்,பாறைகள் பல்வேறு அடுக்குகளாக அமைந்து பார்பதற்கு படிக்கட்டுகளைப் போல் இருப்பதால் ,டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படுகிறது.

இந்தப் பாறைத் தட்டுப் பீட பூமி மற்றும் அடுக்குப் பாறை மலைத் தொடரின் தோற்றம் குறித்து புவியியலாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
igc9.gifigc9.gif

igc19igc19

அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது மடகாஸ்கர் தீவுக்கு அருகில் ,குறிப்பாக ரீ யூனியன் என்று அழைக்கப் படும் தீவுடன் இணைந்த நிலையில்,ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும்,அப்பொழுது பூமிக்கு அடியில் இருந்த எரிமலைப் பாறைக் குழம்புகள், மேல் நோக்கி உயர்ந்து இந்திய நிலப் பகுதியைத் துளைத்து, மேல் நோக்கி உயர்ந்ததால், தக்காணப் பீட பூமி, உருவானதாகவும்,அந்த எரிமலைக் குழம்பு வழிந்து ஓடியதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவானதாக புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அதன் பிறகு,இந்தியாவுக்கும் ரீ யூனியன் தீவுக்கும் இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததற்கு,இந்தியாவுக்கும் ரீ யூனியன் தீவுக்கும் இடையில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததே காரணம் என்றும்,அவ்வாறு இந்திய நிலப் பகுதியானது கடல் தளத்துடன் நகர்ந்த பொழுது,ரீ யூனியன் தீவுக்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்பால் இந்தியக் கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால்,இந்தியாவுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தீவுகளான லட்சத் தீவுகள் மற்றும் தீகோ கார்சிகாத் தீவுகள் வரிசையாக உருவானதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இதே போன்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கடல் தளமும் தொடர்ச்சியாக ஒரு எரிமலைப் பிளம்பால் துளைக்கப் பட்டதால்,இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியிலும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவானதாகப்  புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இந்த விளக்கம் உண்மையென்றால் இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் இரண்டு எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாமல் இந்தியாவுக்கு மேற்குப் புறம் உள்ள கடல் தளத்தில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளான லட்சத் தீவுகள் மற்றும் தீகோ கார்சிகாத் தீவுகள் வளைவான பாதையிலும் ,இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடரானது,நேர் கோட்டுப் பாதையிலும் உருவாகி இருக்கிறது.

இதன் மூலம் இந்திய நிலப் பகுதியும் கடல் தளமும்  நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

முக்கியமாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது மடகாஸ்கர் தீவுக்கு அருகில் ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்கள் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது,வட பகுதிக் கண்டதுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக, அந்த விலங்கின் புதை படிவங்களைக் கண்டு பிடித்த புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
indiamammalfossils.pngindiamammalfossils.png
இதே போன்று ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படும் கால கட்டத்தில் ,ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த ட்ரூடோன்ட் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் விலங்கியல் மற்றும் புவியியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
indiadino.pngindiadino.png
குறிப்பாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப் பரப்பாக இருந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடனும் இணைந்து இருந்ததாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டதைச் சுற்றிலும் பூமிக்கு அடியில் இருந்து எரிமலைப் பாறைக் குழம்பு மேல் நோக்கி உயர்ந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகியதால்,அண்டார்க்டிக் கண்டதைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நாக்ர்ந்ததாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டுப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில், அவ்வாறு  பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
vip45vip45
vip46vip46

இதன் அடிப்படையில் நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தளமும்  கண்டங்களும்  நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு வட பகுதியில் அமைந்து இருக்கும் இமய மலைப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது,

இதே போன்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபெத் பகுதியில் குறிப்பாக டிங்கிரி என்று அழைக்கப் படும் இடத்தில்இக்தியோசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் பள்ளியின் புதை பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று இந்தியாவின் மேற்குப் பகுதியில் குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள சுலைமான் மழைத் தொடர் பகுதியில்,திமிங்கிலத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவிலும் சிம்லா மலைப் பகுதியில் திமிங்கிலத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று இந்தியாவின் தென் பகுதியில், தமிழ் நாட்டில் குறிப்பாக அரியலூர் பகுதியிலும், கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் உள்பட கடல் ஆமைகளின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவின் நான்கு புறத்திலும், மத்தியப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில், இந்திய நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு இந்திய நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததற்கு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது தக்காணப் பீட பூமிப் பகுதியில் காணப் படும் அடுக்குப் பாறைகளால் ஆன மலைத் தொடர் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?