டைனோசர்கள் காலத்தில் நம் பூமி எப்படி இருந்தது?



டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.

அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்பம் இருந்திருக்கிறது.

இதற்கு ஆதாரம்.
ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது.

எனவே ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருப்பதுடன்,பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே  அதிக வெப்பம் இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில், பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே அதிக வெப்பம் நிலவியதற்குக் காரணம், கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.அதனால் பூமியில் கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததும் காரணம்.

இதற்கு ஆதாரம்.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் புதை படிவங்கள்.

இதே போன்று டைனோசர்கள் காலத்தில் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருக்கிறது.

தற்பொழுது கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக் நம்பப் படுகிறது.அவ்வாறு நகரும்பொழுது கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுவதாக நம்பப் படுகிறது.


ஆனால் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல்,ஒரே தொடச்சியாக இருக்கிறது.அத்துடன் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.

இதற்கு ஆதாரம்.
உலக அளவில ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட வரை படத்தில்,இந்தியா,ஆஸ்திரேலியா,மற்றும் வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியானது,தொடர்ச்சியாக நில அதிர்சிகளால் பிரிக்கப் படாமல், கடல் தளமானது தொடர்ச்சியாக இருகிறது.


இதன் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அண்டார்க்டிக் ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களிலும் கியூபா,மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்ட தாழ்வாக இருந்ததும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம்.

இதற்கு ஆதாரம்.

இந்தியப் பெருங் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட மரங்களின் புதை படிவங்கள்.


பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகளும் கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் சுனாமிகளும் ஏற்படுகின்றன.

இதற்கு ஆதாரம்.


இயங்கும் எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,உருவான ,வளைய வடிவ வரப்பு மேடுகளைப் போன்று ஏற்பட்ட  தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள்.

அதே போன்று நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்ட பகுதிகளில்,நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் உருவான உருவான ,வளைய வடிவ வரப்பு மேடுகளைப் போன்று ஏற்பட்ட,  தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள்.
(ஜப்பானில் சுனாமியின் பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி உருவான மேடுபள்ள வளையங்களைப்  பதிவு செய்த செயற்கைக் கோள் படம்   )(ஜப்பானில் சுனாமியின் பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி உருவான மேடுபள்ள வளையங்களைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் )
டைனோசர்கள் காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு ஆதாரம்.

துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர உண்ணி டைனோசர்களின் புதை படிவங்கள்.

தற்போழுது பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ச்சியாக பகலும், அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாதம் காலம் தொடச்சியாக இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால்,தாவரங்களால் சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயலாது.

அத்துடன் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் முப்பது டிகிரி முதல் மைனஸ் ஐம்பது டிகிரி வரை இறங்குகிறது.

இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீரும் உறைந்து விடும்.எனவே தாவரங்களால் உயிருடன் இருந்திருக்க இயலாது.குறிப்பாக தாவார உண்ணி டைனோசர்களானது கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.அத்துடன் டைனோசர்கள் ,யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை  உண்ணக் கூடியது.

எனவே பனிப் பிரதேசத்தில் அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.எனவே டைனோசர்கள் காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்.

சுடு நீர் ஊற்ற நீரால் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.

இதற்கு ஆதாரம்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் யோசிதா என்ற நிபுணர்,ஜப்பானில் உள்ள மாச்சு கிரோ நகரில்,இருந்த சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளிவந்த நீரைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ததில் ,அந்த நீரானது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.

இதே போன்று கடலுக்கு அடியிலும் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.எனவே சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு அடியில் இருந்து வந்த நீர் கடலில் கலந்ததாலேயே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது.

பூமிக்கு அடியில் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதாலும்,பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதாலும்,பூமிக்கு அடியில் இருந்து நீர் வெளிவருவதும் தொடரும்.எனவே கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கண்டங்கள் எல்லாம் கடலால் மூடப் படும்.

அதனால் தரையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

( டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்ததைக் காட்டும்  விளக்கப் படம் )( டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்ததைக் காட்டும் விளக்கப் படம் )

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?