சுனாமிக்கு எந்த விளக்கம் ஏற்கத் தக்கது?
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,கடல் தளங்கள் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகப் புவியியலாளர்கள் விளக்கம் கூறியதால்,புவியியலாளர்கள் கூறும் விளக்கம் ஏற்கத் தக்கதல்ல.



இந்த நிலையில்,எரிமலைகளைச் சுற்றி உருவாகி இருப்பதைப் போன்றே நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதால்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமே ஏற்கத் தக்கது.

Comments