கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்.



கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கின் விளிம்புப் பகுதியில் முன்னூறு அடி தடிமன் உடைய மேலடுக்கு சுண்ணாம்புப் படிவப் பாறையால் ஆனது.இந்தப் பாறை அடுக்கானது கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படுகிறது.
இந்தச் சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில், ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
குறிப்பாக.பிராக்கி போட், கிரினாய்ட்,கடல் அல்லி, கடல் பஞ்சு,பிரய்யோ ஜோன் ,ட்ரைலோபைட், மற்றும் பவளப் பாறை போன்ற கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
இதன் மூலம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கானது ஆழமற்ற கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

கைபாப் அடுக்கில் கண்டு பிடிக்கப் பட்ட பிராக்கிபோட் என்று அழைக்கப் படும் கடல் சிப்பியின் புதை படிவம்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் உள்ள ரெட்வெல் சுண்ணாம்புக் கல் பாறை அடுக்கில் கண்டு பிடிக்கப் பட்ட, பிரய்யோ ஜோன் என்று அழைக்கப் படும் கடல் உயிரியின் புதை படிவம்.

கடலுக்கு அடியில் வாழும், சயனோ பாக்டீரியா என்று அழைக்கப் படும் கடல் நுண்ணுயிரிகள் இறக்கும் பொழுது அதன் உடலால் சுரக்கப் பட்ட சிலிக்கா போன்ற பொருட்கள் படிந்து ஸ்ட்ரமாட்டோலைட் என்று அழைக்கப் படும் படிவங்கள் உருவாகின்றன.அவ்வாறு உருவான ஸ்ட்ரமாட்டோலைட் படிவங்கள் கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் காணப் படுகின்றன

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் கண்டு பிடிக்கப் பட்ட ,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் தரையில் வாழ்ந்த ட்ரைலோ பைட் என்று அழைக்கப் படும் கடல் பூச்சியின் புதை படிவங்கள்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கின் மேலடுக்கான கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படும்,சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில்,கண்டு பிடிக்கப் பட்ட, கிரினாய்ட் என்று அழைக்கப் படும், கடல் அல்லி யின் புதை படிவம்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் கண்டு பிடிக்கப் பட்ட,கடல் சிப்பியின் புதை படிவங்கள் .

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கின் மேலடுக்கான கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படும்,சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில்,கண்டு பிடிக்கப் பட்ட, பிரய்யோ ஜோன் என்று அழைக்கப் படும்,கடல் உயிரியின் புதை படிவம்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில்,கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படும் , சுண்ணாம்புக் கல் பாறை அடுக்கில் கண்டு பிடிக்கப் பட்ட,கோரல் என்று அழைக்கப் படும் பவளப் பாறை உயிரினத்தின் புதை படிவம்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில்,கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படும் , சுண்ணாம்புக் கல் பாறை அடுக்கில் கண்டு பிடிக்கப் பட்ட, கடல் பஞ்சின் புதை படிவம்.

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில்,கடல் உயரினங்களின் புதை படிவங்கள் காணப் படும் ,கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படும் , சுண்ணாம்புக் கல் பாறை அடுக்கு.
Comments