டைனோசர்கள் காலத்தில் நம் பூமி எப்படி இருந்தது?
டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன. அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்பம் இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரம். ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது. எனவே ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருப்பதுடன்,பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே அதிக வெப்பம் இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில், பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே அதிக வெப்பம் நிலவியதற்குக் காரணம், கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.அதனால் பூமி...