5000 ஆண்டுகளுக்கு முன்பு பனியும் பொழிந்திருக்கிறது,கடல் மட்டமும் உயர்ந்திருக்கிறது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகங்கனங்கள் வெளியிடும் கரிய மில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்து தவறு என்று எடுத்துக் காட்டும் விதமாக, ஒரே நேரத்தில் கடல் மட்ட உயர்வும் ,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து, கடலின் பரப்பளவு அதிகரித்ததால், பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் உருவாகி இருப்பது நிரூபணமாகியுள்ளது.

froni.jpgfroni.jpg
froni1.jpgfroni1.jpg

http://www.bbc.com/news/magazine-25862141

கடந்த 2013 டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு தொடக்கம் வரையிலும் அமெரிக்காவில் குறிப்பாக வட பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.அதனால் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப் பட்டது,3600 விமானங்கள் நிறுத்தப் பட்டது.பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

 பூமி வெப்பமடைந்து வருவதாகக் கூறப் படும் நிலையில் ஏற்பட்ட இந்த அசாதாரண நிகழ்வுக்கும் துருவப் பகுதியில் பனி வேகமாக உருகியதால் கடலில் அதிகமாகச் சேர்ந்தத பனி துருவப் பகுதியில் வீசிய சூறாவளியை சிறைப் படுத்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக விளக்கம் கூறப் பட்டது.  

அப்பொழுது உலக அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர் வீழ்ச்சியே உறைந்து ஒரு ராட்சத சிலை போல நின்றது. அப்பொழுது ஏற்கனவே ஒரு முறை அமெரிக்காவில் நயாகரா நீர் வீழ்ச்சி உறைந்து இருக்கும் ஒரு புகைப் படமும் வெளியானது குறிப்பிடத் தக்கது.

இதே போன்று ஐரோப்பாவிலும் கடுங் குளிர் ஏற்பட்டு அதன் விளைவாக லண்டனில் ஓடும தேம்ஸ் நதியே உறைந்து நின்றதால் அதில் லண்டன் வாசிகள் பனிச் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.அதன் பிறகு அது போன்று பல முறை ஏற்பட்டது.அதனால் விவசாயம் பாதிக்கப் பட்டது.நோய்கள் பரவியது.சமூகத்தில் அமைதி குலைந்தது.குறித்து வரலாற்றுக் குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்தக் காலம் சின்னப் பனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது.

இதற்கு பூமியின் அச்சுச் சாய்வில் ஏற்பட்ட மாற்றத்தால், பூமியில் படும் சூரிய ஒளி குறைந்ததாலும்  பிறகு அதிகமானதாலும், பூமியில் பனி உருவாகிப் பின்னர்  உருகியதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இதே போன்று சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வட்டப் பாதை பெரிதாகிய பிறகு சிறியாகியதால், இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு  பூமியில் பனிப் படலங்கள் உருவாகிக் கண்டங்களில் மேலும் பரவியதாகவும் பின்னர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி வெப்பமடையத் தொடங்கியதாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிந்து ஹோலோசீன் என்று அழைக்கப் படும் காலம் அதாவது தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் காலம் பிறந்ததாகக் கூறப் படுகிறது.இந்த காலத்தில் ஒன்பதாயிரம் ஆண்டு முதல் ஐயாயிரம் ஆண்டு காலம் வரைக்கும் பூமியில் வெப்ப நிலை உயர்ந்து இருந்ததாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.இதனை ஹோலோசீன் வெப்ப உயர்வு என்று அழைக்கின்றனர்.

ஆனால் இந்தக் கால கட்டத்தில் பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

holo.pngholo.png

http://en.wikipedia.org/wiki/Holocene_climatic_optimum
holo1.gifholo1.gif
http://www.geocraft.com/WVFossils/ice_ages.html
holo2.jpgholo2.jpg
http://www.co2science.org/subject/other/clim_hist_tenthousand.php
iat30.jpgiat30.jpg
http://beyondpenguins.ehe.osu.edu/issue/weather-and-climate-from-home-to-the-poles/serendipitous-science-an-unexpected-discovery

உதாரணமாக ஒகியோ மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பனியாற்று இயல் வல்லுநர் டாக்டர் லோனி தாம்சன் தனது குழுவினருடன் தென் அமெரிக்கக் கண்டத்தில் பெரு நாட்டில் உள்ள ஆண்டிஸ் மலைப் பகுதியில் உள்ள குயல் காயா என்று அழைக்கப் படும் பனியாற்றுப் பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர்.

அப்பொழுது அந்தப் பகுதியில் பனி உருகியதால் வெளியில் தெரிந்த டிஸ்டிக்கியா என்ற தாவரத்தைக் கண்டு பிடித்தனர்.அந்தத் தாவரம் எப்பொழுது பனியில் புதைந்தது என்று அறிவதற்காக, அந்தத் தாவரத்தை கார்பன் காலக் கணிப்பு சோதனை செய்த பொழுது, அந்தத் தாவரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்து இருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஐயாயிரம் ஆண்டு காலமாக அந்தப் பகுதியில் வெப்ப நிலை உயராமல் இருந்து இருப்பதும், அதனால் அந்தத் தாவரம் பனியில் புதைந்த நிலையிலேயே இருந்திருப்பதும் தெரிய வந்தது.

இதே போன்று உலகில் பல பகுதியில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன மாற்றம் நிகழ்ந்தது என்று அறிவதற்காக பனியாறுகள் பற்றி ஆய்வை மேற்கொண்டதில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் திடீர் என்று வெப்ப நிலை குறைந்து இருப்பதும் அதனால் சில கலாச்சாரங்கள் அழிந்து இருப்பதும் தெரிய வந்ததாக டாக்டர் லோனி தாம்சன் தெரிவித்து உள்ளார்.
iat34.pngiat34.png
http://researchnews.osu.edu/archive/lonniepnas.htm
iat35.pngiat35.png
iat36.pngiat36.png
http://researchnews.osu.edu/archive/quelcoro.htm

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்த பனி மனிதன்
iceman1.jpgiceman1.jpg
http://www.crystalinks.com/otzi.html
http://news.nationalgeographic.com/news/2011/06/110623-iceman-mummy-otzi-meal-goat-stomach-science/

ஐயாயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ,இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில்  பனியில் புதைந்த ஒரு புதிய கற்கால மனிதனின் உடலை ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி தற்செயலாகக் கண்டு பிடித்தார்.

அந்த மனிதனின் உடல்,அழுகாமல் கெடாமல் ரப்பர் போன்ற நிலையில், ஆல்ப்ஸ் மலைப் பகுதியில், பத்தாயிரத்தி ஐநூறு அடி உயரத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அந்த மனிதனுக்கு ஒட்சி என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.ஐந்து அடி உயரமுள்ள அந்த மனிதனின் எடை நாற்பத்தி ஐந்து கிலோ இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

நாற்பது வயது மதிக்கத் தக்க அந்த மனிதன் இறப்பதற்கு இரண்டு  மணி நேரங்களுக்கு முன்பு  மான் இறைச்சி,கோதுமை மற்றும் பழங்களை உணவாக உண்டிருப்பது அவனது வயிற்றுப் பகுதியில் ஆய்வு செய்த பொழுது  தெரிய வந்துள்ளது.

ஒட்சி பயன் படுத்திய மரக் கைப் பிடி மற்றும் செம்பால் ஆன கோடரி,நெருப்பை உருவாக்க உதவும் சிக்கி முக்கி கற்கள்,உலர்ந்த தாவரங்கள் அனைத்தும் உடல் இருந்த பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஒட்சியின் உடலுக்குள் ஈட்டிகளுக்கு முன்பு இணைக்கப் படும் கல்லால் ஆன கூர் முனை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் ஒட்சியின் உடல் கண்டு பிடிக்கப் பட்ட இடம் நிச்சயம் அவனின் வாழிடம் அல்ல என்பதும்,அவன் மத சடங்கு மூலம் பலி கொடுக்கப் பட்டு இருக்கலாம் என்று மானிடவியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

ஒட்சியின் உடல் கெடாமல் இருந்ததற்கு அவன் இறந்ததும் அவனது உடல் உடனே பனியால் மூடப் பட்டதே காரணம் என்பதுடன் கடந்த ஐயாயிரம் ஆண்டு காலமாக ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மிகவும் குறைந்த வெப்ப நிலையே  நிலவி இருந்திருப்பதற்கும் சிறந்த ஆதாரமாக ஒட்சியின் உடல் விளங்குகிறது.

இந்த நிலையில் சுவிஸ் நாட்டு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனியாறுகளால் உருவாக்கப் பட்ட  படிவுகளில் நாலாயிரம் ஆண்டுகள் தொன்மையான மரங்களின் பாகங்களை டாக்டர் கிறிஸ்டியன் ஸ்கல்ட்சர் கண்டு பிடித்துள்ளார்.

அந்த மரங்கள் ஆல்ப்ஸ் மலையின் மேல் வளர்ந்த மரங்கள் என்றும் இதன் மூலம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ப்ஸ் மலையின் மேல் பனி இருந்திருக்க வில்லை என்றும் மாறாக பசுமையான மலையாக ஆல்ப்ஸ் இருந்திருக்கிறது என்றும் அவர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பல மரங்களின் பாகங்களை சேகரித்த ஸ்கல்சர் அவற்றை கார்பன் காலக் கணிப்பு மூலம் தொண்மையை அறிந்த பொழுது அந்த மரங்கள் ஆயிரம் ஆண்டுகள் வித்தியாசங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் ஸ் கல் சர் ,ஆல்ப்ஸ் மலையில் மரங்கள் கடந்த பத்தாயிரம் ஆண்டு காலத்தில் பனிரெண்டு முறை பனியாறுகளால் அளிக்கப் பட்டு இருகின்றனர் என்று தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் ஆல்ப்ஸ் மலையில் பனிஆறுகள் உருவாகுவதும் உருகுவதும் பல முறை நிகழ்ந்து இருக்கிறது என்றும் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்கல்ட்சர் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக அவர் ரோமானியமாவீரன் கானிபால் ஆல்ப்ஸ் மலைப் பகுதி வழியாக யானைப் படையுடன் போருக்குச் சென்றது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் ஆல்ப்ஸ் மலையில் பனி இருந்ததைப் பற்றி குறிப்பிட வில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

டாக்டர் ஸ்கல்ட்சரின் அறிவிப்பால் பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகக் கூறும் புவியியலாளர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து இருக்கின்றனர்.

தற்பொழுது பரவலாக நம்பப் படும் கருத்தின் படி ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனியானது இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக நம்பப் படும் பனியுகத்தின் பொழுது உருவான பனியின் மிச்சம் என்று நம்பப் படுகிறது.

பனியுகக் கருத்தின் படி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவடைந்ததாக நம்பப் படுவதால் ,பத்தொன்பதான் நூற்றாண்டின் மத்தியில்தான் ஆல்ப்ஸ் மலைப் பனியாறுகள் உருகத் தொடங்கியதாகவும் நம்பப் படுகிறது.

எனவே டாக்டர் கிறிஸ்டியன் ஸ்கல்ட்சர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ப்ஸ் மலையானது பனியின்றி பசுமையாக இருந்ததாகக் கூறுவதை ஏற்க மறுக்கின்றனர்.
iat31.pngiat31.png
http://www.iceman.it/en/oetzi-intact

அதன் அடிப்படையில் ஆல்ப்ஸ் மலையில் அடிக்கடி பனியாறுகள் உருவாகி மரங்களை அழித்திருந்தால் எப்படி ஆல்ப்ஸ் மலிப் பகுதியில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில்  புதைந்த  மனிதன் மட்டும் மலையின் மேற்பகுதியிலேயே  இருந்திருக்க முடியும் என்று வினா எழுப்பியுள்ளனர்.
iat32.pngiat32.png
iat33.pngiat33.png
http://sciblogs.co.nz/digging-the-dirt/tag/otzi/

இதே போன்று டாக்டர் கிறிஸ்டியன் ஸ்கல்ட்சர் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள ரோனே என்று அழைக்கப் படும் பனியாற்றுப் பகுதியில் உள்ள பாறைகள் ஐயாயிரத்தி எண்ணூற்று ஆண்டுகளுக்கு முன்பு பனியால் மூடப் படாமல் இருந்ததாகவும் ஆய்வின் அடிப்படையில் தெரிவித்து இருக்கிறார்.

http://www.newsmax.com/LarryBell/warming-global-climate/2014/06/17/id/577481/#ixzz355f6L5y2
http://wattsupwiththat.com/2014/08/08/receding-swiss-glaciers-incoveniently-reveal-4000-year-old-forests-and-make-it-clear-that-glacier-retreat-is-nothing-new/

ஐயாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்த பனியாறு . 
iat61.jpgiat61.jpg
http://www.polar-remotesensing.alaska.edu/case_glacier/about.html

அலாஸ்கா பகுதியில் உள்ள மெண்டன் ஹால் என்று அழைக்கப் படும் பனியாறு உருகிப் பின்னோக்கிச் சென்றதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பனியாறால் புதைக்கப் பட்ட மரம் வெளிப்பட்டது.

அலாஸ்காவில் மூவாயிரத்தி ஐநூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெரிய பனிப் படலம் உள்ளது.

இந்தப் பனிப் பிரதேசம் ஜூனே பனிவயல் என்று அழைக்கப் படுகிறது.இந்தப் பனி வயலில் இருந்து நாற்பது பெரிய பனியாறுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பனியாறுகளும் புறப்பட்டு செல்கின்றன.

இதில் மென்டன்ஹால் என்று அழைக்கப் படும் பனியாறு பிரபலமானது.கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பனி உருகியதால் பின்னோக்கிச் சென்றது.

அதன் விளைவாக அந்தப் பனியாற்றுக்குள் புதைந்து கிடந்த மரங்கள் வெளியில் தெரிந்தன.அந்த மரங்களின் அடிப்பகுதியானது மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது.

அந்த மரங்கள் எப்பொழுது பனியில் புதைந்தன ? என்று அறிவதற்காக அலாஸ்கா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் காத்தி கானர் ,அந்த மரங்களில் கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்தார்.

அப்பொழுது அதில் சில மரங்கள் 1200 மற்றும் 1400 ஆண்டுகளாக இருப்பதுடன் சில மரங்கள் 2350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருப்பதும் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் அந்தப் பனியாறு பல முறை வளர்ந்து தேய்ந்து இருப்பதாக பேராசிரியர் காத்தி கானர் தெரிவிக்கிறார்.
iat57iat57
http://www.climatedepot.com/2013/10/14/melting-glacier-in-alaska-reveals-ancient-remains-of-forest-evidence-of-warm-periods/

அத்துடன் அந்தப் பனியாறு கடந்த ஐயாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

http://www.theepochtimes.com/n3/295037-alaska-glacier-thaws-ancient-forests-uncovered-as-mendenhall-glacier-retreats/

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனியாறுகள் சிறியதாக இருந்தன.
iat40.pngiat40.png
http://www.redorbit.com/news/science/1113011781/greenland-glacier-was-smaller-in-the-past-112313/

ஆறுகளைப் போல் அல்லாது பனியாறுகள் நத்தை வேகத்தில் நகரக் கூடியது.அவ்வாறு நகரும் பொழுது அதன்பாதையில் உள்ள பொருட்களையும் புல்டோசர்களைப் போல் தள்ளிக் கொண்டு கடலில் படிய வைக்கின்றன.

இந்த நிலையில் ,பபலோ பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாக்டர் ஜேசன் பிரினர் ,கிரீன்லாந்து தீவில் உள்ள பனியாறுகளால் கொண்டுவரப் பட்டு படிய வைக்கப் பட்ட படிவங்களில் உள்ள கிளிஞ்சல் மட்டிகள் சங்கு மற்றும் சிப்பி போன்ற உயிரினங்களின் ஓடுகளைச் சேகரித்து அவற்றின் தொன்மையை மதிப்பிட்டார்.

அப்பொழுது அந்த ஓடுகளின் தொன்மையானது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மையாக இருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவுப் பனியாறுகள் மிகவும் சிறியதாக  இருந்ததாகவும் கடலின் வெப்ப நிலை அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
http://www.redorbit.com/news/science/1113011781/greenland-glacier-was-smaller-in-the-past-112313/

கனடாவில் எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்த மரம்.

iat51.pngiat51.png
http://www.sciencedaily.com/releases/2007/10/071030092705.htm
http://www.geosociety.org/news/pr/07-61.htm
வூஸ்டர் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோஹன்னஸ் காக் என்ற புவியியல் வல்லுநர் ,கனடா நாட்டில் உள்ள கரிபால்டி தேசியப் பூங்காப் பகுதியில் உள்ள ஒரு பனியாற்றுக்கு அருகில் ஒரு மரத்தின் பகுதியைக் கண்டார்.

பூமியில் வேருடன் புதைந்த நிலையில் இருந்த அந்த மரமானது தூசி மற்றும் அழுக்குகள் இன்றி புத்தம் புதியதாக அந்த மரம் மரப் பட்டையுடன் இருந்தது.

எனவே அந்த மரம் ,மிகச் சமீபத்தில் அந்த பனியாறு உருகியதால் வெளிப் பட்டு இருக்க வேண்டும், என்று ஜோஹன்னஸ் கருதினார்.

அத்துடன் அந்த மரம் எவ்வளவு காலம் பனிக்குள் புதைந்து கிடந்தது என்பதை அறிவதற்காக கார்பன் காலக் கணிப்பு சோதனை மேற்கொண்டதில் ,அந்த மரம் எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்து இருப்பது தெரிய வந்தது.

இதே கால கட்டத்தில் இறந்த மரங்கள் ராக்கி மலை,யுக்கான்,ஐரோப்பிய ஆல்ப்ஸ்,தென் அமெரிக்கா,மற்றும் நியூ சிலாந்து ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட காலம் குறித்தும் ஜோஹன்னஸ் ஆய்வு செய்தார்.

இதே போன்று ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனியில் புதனித புதிய கற்கால மனிதனின் உடல் கண்டு பிடிக்கப் பட்டது,,ஸ்காண்டி நேவியாப் பகுதி பணியாற்றுப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட மரங்கள், ஆகியவற்றின் காலம் குறித்தும் ஜோஹன்னஸ் ஆராய்ந்தார்.

அதன் அடிப்படையில் எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியாறுகள் பெறிதாகியும் சிறிதாகியும் இருக்கின்றன.ஆனால் இது போன்று ஒரு மலையில் மேற்பகுதிக்கு செல்லும் அளவுக்கு பனியாறு சுருங்கியதில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
http://www.geosociety.org/news/pr/07-61.htm
http://www.sciencedaily.com/releases/2007/10/071030092705.htm
பிரிட்டிஷ் தீவுப் பகுதியில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு  கடலுக்கு அடியில் மூழ்கிய காடு 
iat48.pngiat48.png
http://www.theguardian.com/uk-news/2014/feb/20/prehistoric-forest-borth-cardigan-bay-wales
iat49.jpgiat49.jpg
http://news.nationalgeographic.com/news/2014/02/140226-wales-borth-bronze-age-forest-legend/

கடலுக்கு அடியில் ஒரு காடு பிரிட்டிஷ் தீவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் பெர்ன்சான்ஸ் மற்றும் கார்ன்வால் பகுதியில் ,கடந்த பிப்ரவரி மாதம் புயல் வீசிய பொழுது கடல் நீர் பின்னோக்கிச் சென்றபொழுது அப்பகுதியில் இருந்த மணலையும் அள்ளிக் கொண்டு சென்றது.

அப்பொழுது கடற் கரையில் மண்ணுக்கு அடியில் புதைந்த நிலையில் மரங்களின் அடிபகுதிகள் வெளியில் தெரிந்தன.அந்த மரங்கள் நாலாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த மரங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் இரும்புக் கால மனிதர்கள் பயன் படுத்திய பொருட்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.

அத்துடன் மூங்கிலால் வேயப் பட்ட நடை பாதை ஒன்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் நாலாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததால் நிலத்தின் மேல் இருந்த காடுகள் மூழ்கி இருப்பது தெரிகிறது.

http://www.bbc.com/news/uk-england-devon-26263856

http://climatestate.com/2014/02/21/ancient-5000-year-old-forest-unearthed-by-uk-storms/
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கிய காடு 
iat58iat58
iat64iat64
http://www.irishcentral.com/news/Storms-uncover-7500-year-old-drowned-forest-on-Irelands-west-coast.html

பிரிட்டிஷ் தீவுகளுக்கு மேற்குப் பகுதியில் அயர்லாந்து தீவு உள்ளது.கடந்த ஜூலை மாதம் அயர்லாந்து அருகே வீசிய சூறாவளிக் காற்றுக்குப் பிறகு, கடற் கரையில் பல மீட்டர் தூரத்துக்கு ஏராளமான மரங்களின் அடிபகுதிகள் தென்பட்டன.

அதைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடியது.

அந்த மரங்களை ஆய்வு செய்த புவியியல் வல்லுநர் பேராசிரியர் மைக்கேல் வில்லியம்ஸ் அந்த மரங்கள் ஐயாயிரம் ஆண்டுகள் முதல் எழாயிராம் ஆண்டுகள் வரை தொமையான மரங்கள் என்பதை கார்பன் காலக் கணிப்பு முறையில் அறிந்தார்.

அதில் சில மரங்கள் நூறு ஆண்டுகள் தொன்மை உடையதாகவும் இருந்ததாகப் பேராசிரியர் வில்லியம்ஸ் கூறினார்.

அந்த மரங்கள் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வினால் அந்த மரங்கள் கடலுக்குள் புதைந்ததாக அவர் தெரிவித்தார்.

http://www.irishcentral.com/news/Storms-uncover-7500-year-old-drowned-forest-on-Irelands-west-coast.html

iat38.pngiat38.png
http://www.foxnews.com/scitech/2012/05/29/4000-years-ago-climate-change-caused-massive-civilization-collapse/
http://www.sci-news.com/archaeology/article00350.html
http://www.jagranjosh.com/current-affairs/indus-valley-civilisation-collapsed-due-to-climate-change-1393845275-1
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப நிலை குறைந்ததால் பருவ மழை பொய்த்ததாலேயே ஹரப்பா மற்றும் மொஹஞ்சாரதரோ நகரங்கள் அழிந்ததாகவும் விஞ்ஞானிகள் தெயவித்து உள்ளனர்.ஆனால் இந்தக் காலத்தில் வெப்ப நிலை குறைந்ததால் இமய மலைப் பகுதியில் இருந்த பனி உருகாமல் போனதாலேயே அந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கப் பட்டதால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு குடி பெயர்ந்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

சின்னப் பனிக் காலம்
lia41.pnglia41.png
http://www.dailymail.co.uk/sciencetech/article-2543278/Britain-glaciers-18th-century-Study-reveals-ice-masses-existed-11-THOUSAND-years-later-thought.html#ixzz39uAplG1P
lia42lia42
http://en.wikipedia.org/wiki/Little_Ice_Age

சின்னப் பனிக் காலம் என்பது கடந்த1300 முதல் 1870 ஆண்டு வரையிலான காலம் என்று குறிப்பிடப் படுகிறது.இந்தக் காலத்தில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் வெப்ப நிலை மிகவும் குறைந்து இருந்ததாகக் கூறப் படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆயிரத்தி 1300 முதல் 1400 ஆம் ஆண்டு வரை குளிர் ஓரளவு மிதமாக இருந்ததாகக் கூறப் படுகிறது.அதன் பிறகு 1500 ஆம் ஆண்டில் குளிர் ஓரளவு அதிகரித்ததாகக் கூறப் படுகிறது.அதன் பின்னர் குளிர் மிகவும் குறைந்ததாகக் கூறப் படுகிறது.

சின்னப் பனிக் காலம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு சூரிய ஒளிக் குறைவு,சூரியக் கரும்புள்ளிகள் மற்றும் எரிமலைச் செயல் பாடு பல்வேறு விளக்கங்கள் கூறப் படுகின்றன.

http://www.eh-resources.org/timeline/timeline_lia.html
http://www.bbc.co.uk/news/science-environment-16797075

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைக்கப் பட்ட  ஜுனைதா
iat59.jpgiat59.jpg
http://blog.mailasail.com/beezneez/702

தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா நாட்ட்டுப் பகுதியில் உள்ள ஆண்டிஸ் மலைப் பகுதியில் இருபத்தி இரண்டாயிரம் அடி உயரத்தில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்த,பதினைந்து வயதுள்ள ஒரு பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப் பட்டது.

ஜுனைதா என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பென் அமர்ந்த நிலையில் இருந்தால்,உடல் துணியால் சுற்றப் பட்டு இருந்தது.உடல் கெடாமல் இருந்தது.

இதே போன்று ஆண்டிஸ் மலைப் பகுதியில் ஒரு சிறிய பையன் மற்றும் பெண்ணின் உடல்களும் கண்டு பிடிக்கப் பட்டது.இவர்கள் பலி கொடுக்கப் பட்டவர்கள் என்று மானிடவியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த ஐநூறு ஆண்டு காலமாக குளிர்ந்த கால நிலை நிலவி இருப்பது உறுதியாகிறது.
நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்த தாவரம் மீண்டும் வளர்ந்தது 

iat20.pngiat20.png
iat21.pngiat21.png
http://phys.org/news/2013-05-year-arctic-anew-glaciers-retreat.html

அல்பெர்ட்டா பல் கலைக் கழகத்த்தின்  உயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் காத்தரின் லா பார்ஜி, கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும், எல்லிஸ்மெர் தீவில் தனது  குழுவினருடன் ஆராய்ச்சிப பயணம் மேற்கொண்டார்.

அப்பொழுது அந்தத் தீவில் உருகிக் கொண்டு இருந்த ஒரு பனியாறுக்கு அருகில், கருமையான நிறத்தில் சுருங்கிப் போன, பிரை யோபைட்டா என்று அழைக்கப் படும் தாவரங்கள் இருப்பதைக் கண்டனர்.

அந்தப் பனியாறுகள் மிகவும் தொன்மையானது.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அந்தப் பனியாறுகள் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு மீட்டர் வரை சுருங்கிக் கொண்டு இருப்பது அறியப் பட்டுள்ளது.

அந்தத் தாவரங்களைக் கூர்ந்து பார்த்தபொழுது, அதில் சில பகுதிகள் மீண்டும் துளிர்த்து இருப்பதன் அறிகுறியாக சில இடங்கள் பச்சை நிறத்தில் இருந்தது.

எனவே அந்தத் தாவரங்களை பாதுகாப்பாக பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு வந்த பிறகு  அந்தத் தாவரத்தின் தொண்மையை அறிவதற்காக கார்பன் காலக் கணிப்பு சோதனை மேற்கொள்ளப் பட்டது.

அப்பொழுது அந்தத் தாவரங்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பனியில் புதைந்து இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்தத் தாவரங்கள் நன்கு வளரக்  கூடிய சூழ் நிலை உருவாக்கப் பட்டத்தில் அந்தத் தாவரங்கள் மீண்டும் வளரத் தொடங்கியது.

http://uofa.ualberta.ca/news-and-events/newsarticles/2013/may/400-year-old-plants-reawaken-as-glaciers-recede
http://www.bbc.com/news/science-environment-22656239

கால நிலை மாற்றம் உலகம் முழுவதும் ஒரே மாதிரி ஏற்படுவதில்லை.
iat25.pngiat25.png
http://www.nsf.gov/news/news_summ.jsp?cntn_id=114696

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவடைந்ததாகவும் பூமி வெப்பமடையத் தொடங்கியதாகவும் நம்பப் படுகிறது.

அந்தக் காலத்தில் வட கோளப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகத் தொடங்கியதாகவும் அதே போன்று தென் கோளப் பகுதியிலும் பனியாறுகள் உருகத் தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேமி ஸ்குல்மெய்ஸ்டர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், அவ்வாறு ஏற்படவில்லை என்றும் நியூ சிலாந்து தீவில் உள்ள பனியாறுகள் நீண்ட காலம் நிலைத்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

.மேலும் வட கோளப் பகுதியில் பனியாறுகள் உருகிய பிறகும் பல்லாயிரம் ஆண்டு காலமாக நியூ சிலாந்து தீவில் உள்ள பனியாறுகள் பாதிக்கப் படாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று வட கோளப் பகுதியில் பனிப் படலப் பெருக்கக் காலத்தின் பொழுது வட கோளப் பகுதியில் இருந்த பனியாறுகள் பெருக்கமடையத் தொடங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நியூ சிலாந்து நாட்டில் பனியாறுகள் பெருக்கமடையத் தொடங்கி விட்டதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் நியூ சிலாந்து தீவின் பனியாறுகள் பசிபிக் கடலால் பாதிக்கப் படுவதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று தென் கோளப் பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பனியாறுகளும் வட கோளப் பகுதிப் பனியாறுகளின் கால வட்டத்துக்கு முரணாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
http://www.nzine.co.nz/features/waiholoop.html
"This study highlights the need to understand regional climate rather than a global one-size-fits-all."

Read more at: http://phys.org/news/2014-08-climate-global.html#jCp

இந்த ஆய்வானது எல்லா பகுதிக்கும் பொருந்தக் கூடிய ,உலக அளவிலான கால நிலை மாற்றத்திற்குப் பதிலாக ,பிராந்திய கால நிலை பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக இருப்பதாகவும் டாக்டர் ஜேமி ஸ்குல்மெய்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் கால நிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி மேலும் சரியாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்றும் தெரிவித்து இருக்கிறார்

தென் கோளப் பகுதியில் உள்ள பனியாறுகள் வட கோளப் பகுதி பனியாறுகளின் வளர்ச்சி காலத்துடன் ஒத்துப் போகவில்லை.

பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதால் உலகெங்கும் உள்ள பனியாறுகள் உருகிக் கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள், பல பனியாறுகள் உருகிக் கொண்டு இருப்பதன் அடிப்படையில் விளக்கம் தெரிவித்தனர்.

ஆனால் இந்தக் கருத்துக்கு முற்றிலும் முரணாக நியூ சிலாந்து நாட்டில் உள்ள பனியாறுகளின் அளவு அதிகரித்துக் கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.

 குறிப்பாக அவர்கள் பெரிலியம் 10 ஐசோடோப்பு கணிப்பு முறையில் நியூ சிலாந்து பனியாறுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இது தெரிய வந்ததாகக் கூறியுள்ளனர்.

பொதுவாக கிரானைட் பாறையின் மேல் விண்வெளியில் இருக்கும் கதிர்கள் விழும் பொழுது கிரானைட் பாறையில் உள்ள பெரிலியம் 10 ஐசோ டோப்புகள் அதிகரிக்கும்.இந்த நிலையில் ஒரு பாறை எவ்வளவு காலம் பனியால் மூடப் பட்டு இருந்தது என்று அரிய இயலும்.

இந்த முறையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் நியூ சிலாந்து நாட்டில் உள்ள பனியாறுகள் கடந்த எழாயிரம் ஆண்டு காலமாக பெறிதாகிச் சிறிதாகி இருந்ததாகவும் ,பனியாறுகளின் பெருக்கம் சிறிய அளவில் இருந்ததாகவும்,கொலம்பியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயர்க் ஸ்காபர் என்ற புவி வேதியியல் வல்லுநர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் இந்த செயல் பாடு அந்த காலத்தில் வட கோ ளப் பகுதியில் அறியப் பட்ட பனியாறுகளின் செயல் பாட்டுக்கு முரணாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நியூ சிலாந்து நாட்டின் உயர்ந்த சிகரமான குக் மலையில் உள்ள பனியாறு ஆறாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும அளவில் இருந்ததாகவும் ஆனால் அந்தக் காலத்தில் ஸ்வீடன் நாட்டுப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மற்றும் ஸ்காண்டி நேவியாவிலும் வெப்பமாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று கடந்த 1860 ஆம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் பனியாறுகள் உருகிக் கொண்டு இருந்ததாகவும் ஆனால் இதற்கு மாறாக ஸ்விட்சர் லாந்த்தில் 1980 ஆம் ஆண்டிலும் ,நியூ சிலாந்த்தில் 1970 ஆம் ஆண்டிலும் பனியாறுகள் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

http://www.nzine.co.nz/features/waiholoop.html
http://www.uq.edu.au/news/article/2014/08/climate-change-not-so-global

http://www.nsf.gov/news/news_summ.jsp?cntn_id=114696
http://phys.org/news/2014-08-climate-global.html

சீனாவில் இருபது ஆண்டுகளில் இருபத்தி எட்டாயிரம் ஆறுகள் காணவில்லை !?

iat60.pngiat60.png

http://www.theatlantic.com/china/archive/2013/04/28-000-rivers-disappeared-in-china-what-happened/275365/

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாப் பகுதியில் ஏற்பட்ட பனிப் பொழிவால்  பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் முற்றாக அழிந்தன.ஆனால் அதே சைபீரியாப் பகுதியில் டைனோசர்கள் காலத்தில் அதிக வெப்ப நிலை நிலவியிருந்தது அந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
zud6.jpgzud6.jpg
http://www.edgeofexistence.org/edgeblog/?p=836

ஆனால் கடல் மட்ட உயர்வால்  பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதன் விளைவாக இன்று சைபீரியாவுக்குத் தென் பகுதியில் உள்ள மங்கோலியா பகுதியிலேயே ஒவ்வொரு ஆண்டும் ஜுட் என்று அழைக்கப் படும் கடுங் குளிரால் லட்சக் கணக்கில் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் உயிரிழக்கின்றன.

பூமியின் வெப்ப நிலைக் குறைவின் பாதிப்பு  தற்பொழுது சீனாவிலும் தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு சீனாவில் வறண்டு போன ஆறுகளைக் கணக்கெடுக்கும் பனியில் எட்டு லட்சம் சர்வேயர்கள் மேற்கொண்ட அறிக்கையைத் தொகுத்துப் பார்த்த பொழுது சீனாவில் இருபத்தி எட்டாயிரம் ஆறுகள் மறைந்து விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் ஐம்பதாயிரம் ஆறுகள் இருக்கும் நிலையில் பதிக்கும் மேற்பட்ட ஆறுகள் காணமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
iat63iat63
http://news.nationalgeographic.com/news/2006/09/060911-growing-glaciers.html

இதற்குக் காரணம் இமய மலை போன்ற மலைகளில் உள்ள பனியாறுகள் உருகாமல் போனதே காரணம்.

பூமி வெப்பமடைந்து கொண்டு இருந்தால் மலைகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி ஆறுகளாகப் பாயவேண்டும். மாறாக வறண்டு போனதற்கு காரணம் என்ன ?

பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து குறைந்து கொண்டுதான்  இருக்கும், எனவே சரஸ்வதி ஆற்றுக்கு ஏற்பட்ட கதிதான் மற்ற ஆறுகளுக்கும் ஏற்படும்.

http://www.dailymail.co.uk/news/article-2300943/The-disappearing-rivers-China-More-28-000-waterways-vanish-nations-maps-sparking-fears-environmental-cost-nations-economic-progress.html
http://www.washingtonpost.com/world/chinas-vanishing-rivers/2013/09/23/b02acd2e-2470-11e3-ad0d-b7c8d2a594b9_gallery.html#item0
http://www.theverge.com/2013/4/3/4175514/china-rivers-disappear-from-the-map-water-supply-crisis
iat62.jpgiat62.jpg
http://foreignpolicyblogs.com/2010/05/10/the-himalayas-india-and-china/

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?