கடலடிக் குகையில் கற்கால ஓவியங்கள்.
http://www.iter.org/newsline/105/1449
ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்திய தரைக் கடலின் வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது.
ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்தியபடியே நுழைந்தார்.
ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்த குகைப் பாதையின் இறுதியில், நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
http://realhistoryww.com/world_history/ancient/Misc/Prehistoric_Art/Children_of_Grimaldi.htm
http://www.visual-arts-cork.com/prehistoric/cosquer-cave-paintings.htm
அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார்.கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில் ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் இருப்பதைக் கண்டார்.
அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குதிரை,மான்,காட்டெருமை, போன்ற விலங்கினங்களின் ஓவியங்கள் வரையப் பட்டு இருப்பதைக் கண்டார்.உடன் தொல் பொருள் துறை யினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பிறகு அந்தக் குகையைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ் தலைமயிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.(மேலே இருக்கும் படம் )
அந்தக் கடலடிக் குகையில் சில கற்கருவிகளும் கரித் துண்டுகளும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அத்துடன் அந்தக் குகையில் சுவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மனிதக் கை அச்சுக்களும் பதிக்கப் பட்டு இருந்தது.
அந்தக் கை அச்சுக்கள், சுவற்றின் மேல் கையை வைத்த நிலையில், செஞ்சாந்து போன்ற களிமண் குழம்பை வாயிலிருந்து ஊதுவதால் உருவாக்கப் பட்டு இருந்தது.
குகைச் சுவரில் இருந்த அந்த கை அச்சு வடிவங்கள், இருபத்தி ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டைக் கலாச்சார மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது கார்பன் காலக் கணிப்பு ஆய்வில் தெரிய வந்தது.
http://www.bertrandchazaly.com/galerie.htm
http://www.bradshawfoundation.com/cosquer/
குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த, குதிரை காட்டெருமை மான்களின் ஓவியங்கள் பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களால் வரையப் பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதன் மூலம் அந்தக் குகையில் இரண்டு வெவ்வேறு கால கட்டத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது.
அந்தக் குகையானது மிகவும் ஈரப் பதமாக இருந்தது அதனால் அந்தக் குகையில் இருந்த ஒரு கரித்துண்டு பஞ்சு போன்று மென்மையாகி இருந்தது.
ஈரப் பதத்தால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த ஓவியங்களின் மேல் கையை வைத்தாலே அழிந்து விடும் நிலையில் இருந்தது.எனவே தற்பொழுது அந்தக் குகைக்குள் பொது மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
அத்துடன் குகையின் வாசல் கடற்படையினரால் பாதுக்காப்பாக மூடப் பட்டு பாதுக்காக்கப் படுகிறது.கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் குகை ஓவியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உண்மையில் இந்தக் குகையானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பகுதியில் மேல் இருந்த குகையாக இருந்திருக்கிறது.
பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நானூறு அடிவரை தாழ்வாக இருந்ததால் கடற்கரையானது அந்தக் குகையில் வாசலில் இருந்து பல் கிலோ மீட்டர் தொலைவில் இருந்திருக்கும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார்.
http://www.bradshawfoundation.com/books/the_cave_beneath_the_sea.php
கடல் மட்டம் ஏன் உயர்ந்தது ?
அதன் பிறகு பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ,துருவப் பகுதியில் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததாகவும், அதனால் கடல் மட்டம் உயர்ந்து, குகை மூழ்கடிக்கப் பட்டதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார்.
http://earthsky.org/earth/what-killed-the-woolly-mammoth-new-clues
ஆனால் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும், அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்ததால், 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பதினைந்தாயிரம் ஆண்டு வரையிலான காலத்தில் , வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக ,கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர், மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவித்து உள்ளனர்.
அதன் பிறகும் பனிப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்கள் அழிந்தால் ,வட துருவப் பகுதியில் வாழ்ந்த, பனி யானை மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிந்ததாகவும், டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் இருந்த பனி உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்ததாகவும் அதனால் ,கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை மூழ்கியதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார்.
எனவே 12,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் உயர்ந்து கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை மூழ்கடித்து இருக்கிறது.
அதே போன்று 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு அதிகரித்ததால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்களும் முற்றாக அழிந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே எப்படி 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், கடல் மட்டமும் உயர்ந்து, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை மூழ்கடித்தது ? என்ற கேள்வி எழுகிறது.
எனவே கடல் மட்டம் உயர்ந்ததற்கு துருவப் பகுதியில் இருந்த பனி உருகி நீராகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் ஏற்கத் தக்கதல்ல.
உண்மையில் கடல் மட்டம் உயர்ந்ததாலேயே கடலின் பரப்பளவு அதிகரித்து அதன் காரணமாக பூமியின் வெப்ப நிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.
இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டதுக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் 400 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டோகர் லேண்ட் என்று அழைக்கப் படும் 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஒரு நிலத்தின் பெரும்பகுதியானது, 18,000 ஆண்டுகளுக்கு மூழ்கத் தொடங்கியதாகவும்,இறுதியாக 5500 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக மூழ்கி விட்டதாகவும், வேல்ஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவித் தொல் பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
http://www.onenewspage.us/video/20140505/1787487/Ancient-Sunken-Island-in-North-Sea-Might-Have.htm
http://education.nationalgeographic.com/media/photos/000/318/31836.jpg
http://thestonehengeenigma.files.wordpress.com/2013/06/674a1-s9wik.jpg
http://thestonehengeenigma.wordpress.com/category/doggerland/
Comments