பனிப் பந்துப் பூமி ஒரு தவறான கருத்து.
தற்பொழுது பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் அறிவியல் உலகில் பரவலாக ஒரு நிரூபிக்கப் படாத கருத்து நிலவுகிறது.இந்த நிலையில் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதே போன்ற நிகழ்வு நிகழ்ந்ததாக புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.சூரிய ஒளியில் குறைவு ஏற்பட்டதாலும் ,பூமியில் கரிய மில வாயு குறைவாக இருந்ததாலும் பூமி பனியால் மூடப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இந்தக் கருத்து பனிப் பந்துப் பூமி என்று அழைக்கப் படுகிறது.
பனியாறுகளால் கொண்டு செல்லப் படும் மணற்துகள்கள் படிவதால் உண்டாகும் படிவப் பாறைகள் மொரைன்ங்கள் என்று அழைக்கப் படுகின்றன.பொதுவாக இது போன்ற பாறைகள் குளிர்பிரதேசங்களில் காணப் படுகின்றன.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமீபியா பகுதியில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து இருக்கும் அடுக்குப் பாறைகள் காணப் படுவதற்கு அறுபது கோடி முதல் எழுபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாகவும் ,கடலும் கூட பனியால் மூடப் பட்டு இருந்ததாகவும் அறிவியல் உலகில் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தக் கருத்து பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது.
அதன் பிறகு பூமியில் பல இடங்களில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களால் வளி மண்டலத்தில் கரிய மில வாயு அதிகரித்ததால் பூமி வெப்ப மடைந்தாகவும் அதனால் பனி உருகி நீராகிக் கடலில் கலந்ததால் தற்பொழுது இருக்கும் நிலைக்கு பூமி வந்ததாக நம்பப் படுகிறது.
உண்மையில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து இருக்கும் அடுக்குப் பாறைகள் பூமியின் ஆழமான பகுதியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் உருவாகி இருக்கின்றன.தென் அமெரிக்காவில் காணப் படும் அடுக்குப் பாறைகளை நில அதிர்ச்சி அலைகள் மூலம் ஆய்வு செய்த பொழுது அந்தப் பாறைகளின் அடிபகுதியானது பூமிக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருப்பதை புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு இருந்த பனியாறுகள் பூமத்திய ரேகைப் பகுதி வரை நீண்டு இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடலில் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்திருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்தப் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும் சீனாவிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அதில் ட்ரைலோ பைட் என்று அழைக்கப் படும் கரப்பான் பூச்சி போன்ற உயிரினத்துக்கு ஒளியை உணரும் கண்களும் உண்டு.
எனவே பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்தால் எப்படி அந்த உயிரினங்கள் வாழ்ந்திருக்கும்? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அந்தக் காலத்தில் வட அமெரிக்கா,சீனா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் பின்னர் நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு பூமியில் பெருமளவு பனி உருவானதற்கு சூரிய ஒளி ஆறு சதவீதம் குறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என்றும் அதே போன்று பூமியிலும் கரிய மில வாயு மிகவும் குறைந்த நிலையில் இருந்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
எனவே டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஹைட் என்ற புவியியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் , சூரிய ஒளி ஆறு சதவீதம் குறைந்து இருக்கும் நிலையிலும் ,அதே போன்று கரிய மில வாயு குறைந்த நிலையில் இருக்கும் நிலையிலும் பூமி எப்படி இருந்திருக்கும் என்று கணிப் பொறி மூலம் பூமியின் மாதிரியை உருவாக்கினார்கள்.
அதில் பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்தாலும் கூட சில பகுதிகளில் பனி இல்லாத இடங்களும் இருந்தது.
அதன் அடிப்படையில் பூமியில் பனி இல்லாத பகுதிகளில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்கலாம் என்று விளக்கம் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன் அந்த பனி இல்லாத பகுதிகளில் எரிமலைகள் மூலம் கரிய மில வாயு வெளிப் பட்டதால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து பனிப் படலங்கள் உருகி பூமி தற்பொழுது உள்ள நிலையை அடைந்து இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
ஆனாலும் சில கேள்விகள் விடையளிக்கப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக கரிய மில வாயு கடலில் கலந்து விடும் என்பதால் பூமி எப்படி தற்பொழுது உள்ள நிலைக்கு வந்தது என்பது ஆராயப் பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்
இதே போன்று ஸ்காட் லாந்து நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூ பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களான டான் கான்டன்,டோனி பிரேவ்,மற்றும் டோக் பென் ஆகியோர் ஸ்காட்லாந்து ,அயர் லாந்து ,நமீபியா,மற்றும் கலி போர்னியா ஆகிய பகுதிகளில் காணப் பட்ட படிவப் பாறைகள் மிதக்கும் பனிப் பாறையால் மட்டுமே படிய வைக்கப் பட்டு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ,பூமியானது முழுவதும் பனியால் மூடப் பட்டு இருக்க வில்லை என்ற விளக்கத்தை முன்வைத்து இருக்கின்றனர்.
இதே போன்று கலிபோர்னியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிசன் ஆல்காட் பிரேசில் நாட்டில் கேம்பிரியன் என்று அல்லைக்கப் படும் காலத்திற்கு முன்பே உருவான ஷேல் என்று அழைக்கப் படும் படிவப் பாறையில் ஒளிச் சேர்க்கை செய்த தாவரங்களின் வேதியப் பண்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையில் அந்தக் காலத்தில் பூமியானது பனியால் மூடப் பட்டு இருக்க வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
Comments