பனிப் பொழிவு ஏற்பட்ட காலத்தில் ... கடல் மட்டம் உயர்ந்தது ஏன் ?

http://chiefio.wordpress.com/2010/12/07/florida-rising/


http://water.usgs.gov/ogw/karst/kigconference/abt_karstfeatures.htm

ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால்,
சூரிய ஒளியின்றி இறந்து விடும்.
இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களை, கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதைக் அறிய இயலும்.
அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும்.


http://www.researchgate.net/publication/239568104_Quaternary_sea-level_history_of_the_United_States
இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில்,ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால் இறந்த பவள உயிரிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில்,புளோரிடா பகுதியில் கடந்த ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டு கால அளவில் கடல் மட்டம் நூற்றி இருபது மீட்டர் வரை, தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.


http://earthsky.org/earth/what-killed-the-woolly-mammoth-new-clues
இதே கால கட்டத்தில் வட துருவப் பகுதியில், பனிப் பொழிவின் காரணமாகப் பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் அழிந்து இருப்பதும் ,கோபன் ஹேகன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ்லெவ் தலைமயிலான குழுவினர் சேகரித்த, தாவர மற்றும் விலங்கினங்களின் புதைபடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக 50,000 ,ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும், அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்ததால், 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பதினைந்தாயிரம் ஆண்டு வரையிலான காலத்தில் , வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக ,கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தலைமயிலான ஆராய்ச்சிக் குழுவினர், மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவித்து உள்ளனர்.
அதன் பிறகும் பனிப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட துருவப் பகுதியில், பூக்கும் தாவரங்கள் அழிந்தால் ,வட துருவப் பகுதியில் வாழ்ந்த, பனி யானை மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்கள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிந்ததாகவும், டாக்டர் எஸ்கி வில்லெர்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
எனவே பூமியில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே கடல் மட்ட உயர்வுக்குப் பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு.
Comments