பனியாறுகள் வளர்வது ஏன் ?

கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் சாஸ்த்தா மலையில் உள்ள பனியாறுகள் வளர்ந்து கொண்டு இருப்பது புவியியல் வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக சாஸ்த்தா மலையில் உள்ள ஹாட்லம் என்ற பனியாறு கடந்த 1944 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு காலத்தில் 1800 அடி வளர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.


இதே போன்று நார்வே நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பனியாறும் ,நியூ சிலாந்து தீவின் தென் பகுதியில் உள்ள பனியாறும்,ஆசியாவில் உள்ள பனியாறுகளும்,தென் அமெரிக்கக் கண்டத்தின் உள்ள டியரா டெல் பூக்கோ ஆகிய பகுதிகளில் உள்ள பனியாறுகள் வளர்ந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அர்ஜென்டினாவில் உள்ள பிரிட்டோ மோரினோ என்ற பனியாறும்,சிலியில் உள்ள பியோ பதினொன்று என்ற பனியாறும் வளர்ந்து இருப்பதாக சிலியில் உள்ள வால்டிவியா ஆய்வகத்தைத் சேர்ந்த பனியாறு இயல் வல்லுநர் ஆண்டிரெஸ் ரிவேரா தெரிவித்து இருக்கிறார்.என்ன நடக்கிறது என்பது இன்னும் புரிந்து கொள்ளப் பட வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதே போன்று கடுங் குளிருடன் இருக்கும் அலாஸ்காவின் கோடைக் காலத்தில் வினோதமான நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக ப்ருஸ் மோன்லியா என்ற பனியாற்று இயல் வல்லுநர் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் .அவர் அலாஸ்காவின் பதிவு செய்யப் பட்ட வரலாற்றில் முதல் முறையாக சராசரிக்கும் கீழாக மூன்று டிகிரி வெப்ப நிலை குறைந்ததால் குளிர்காலத்தில் பனிப் பொழிவு அதிகரித்ததால் அந்தப் பகுதியில் உள்ள பனியாறு பெரிதாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கடந்த இருபது ஆண்டு காலத்தில் மிக மோசமான கோடை காலத்தை அனுபவித்ததாகவும் கூறினார்.946 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க நாட்டின் புவியியல் கழகம் அலாஸ்கா பனியாறுகளை கண்காணித்து வரும் நிலையில் இது வரை இல்லாத அளவுக்கு பனியாறுகள் பெரிதாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இது வரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ( 2008 ) கோடையில் பனி உருகாமல் இருக்கிறது என்றும் மோன்லியா தெரிவித்து உள்ளார்.


இதே போன்று இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பனிப் பொழிவு அதிகரித்ததால் இரண்டாயிரம் பனியாறுகள் புதுப்பிக்கப் பட்டதாக ஹிமாச்சல் பிரதேச சுற்றுச் சூழல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி.ஜெ.சி.குனியால்.தெரிவித்து உள்ளார்.

மேலும் லாகுல் -ஸ்பைட்டி பகுதியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினாறு நாளில் பனிப் பொழிவு 175 சென்டி மீட்டர் அதிகரித்ததாகவும் இதன் மூலம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட 148 சென்டி மீட்டர் பனிப் பொழிவு முறியடிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.


இதே போன்று கனடாவில் உள்ள மிக உயர்ந்த லோகன் மலைச் சிகரத்தை ஆய்வு செய்த பொழுது அது வளர்ந்து இருபது தெரிய வந்துள்ளது.

இதற்கு பனிப் பொழிவு அதிகரித்ததே காரணம் என்று அலாஸ்கா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ் லார்சென் என்ற விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

இதே போன்று கிரீன்லாந்து தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 1992 முதல் 2003 ஆண்டு வரை செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட பதிவுகள் மூலம் ,ஆண்டுக்கு ஆறு சென்டி மீட்டர் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இதே போன்று அலாஸ்காவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஹப்பர்ட் பனியாறு ஆண்டுக்கு எண்பது அடி வீதம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக நாசாவைச் சேர்ந்த அறிவியல் மையம் 2012 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று கனடா,கலிபோர்னியா,மற்றும் அலாஸ்கா பகுதியில் உள்ள சில பனியாறுகள் வளர்வதைப் போலவே நார்வே நாட்டில் உள்ள பனியாறும் வளர்ந்து இருப்பதாக அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த எட் ஜோஸ்பெர்க்கர் என்ற பனியாற்று இயல் வல்லுநர் கடந்த 2008 ஆம் ஆண்டு தெரிவித்து உள்ளார்.


இதே போன்று இமய மலைப் பகுதியில் உள்ள காரகோரம் பகுதியில் உள்ள சில பனியாறுகள் பத்து ஆண்டுகளில் ,கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் அதிகரித்து இருப்பது ,பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலி கார்டெல்லி என்ற விஞ்ஞானி மேற்கொண்ட முப்பரிமாணத் தொழில் நுட்ப செயற்கைக் கோள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.



Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?