என் விளக்கம் சரியான விளக்கம் .
Image source-http://en.wikipedia.org/wiki/Colville_River_(Alaska)
''டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.அதனால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.''
பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே காரணம் என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
என் விளக்கத்துக்கு ஆதாரமாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது பற்றியும் தெரிவித்து இருந்தேன்.
அதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் தொண்மையை அறிவதற்காக அந்தக் கடலடி பீட பூமியின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலைப் பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்த பொழுது அந்தப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பது தெரியவந்ததுடன் அதில் மரங்களின் கருகிய பாகங்கள் , விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது பற்றியும் தெரிவித்து இருந்தேன்.
இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது பற்றியும் தெரிவித்து இருந்தேன்.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததாலேயே டைனோசர்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
ஆனால் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டங்களில் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் பின்னர் அந்தப் பெருங் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக தற்பொழுது நம்பப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி, அலாஸ்கா பகுதியானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் வளையப் பகுதியிலேயே இருந்ததாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் அலாஸ்கா பகுதியில் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசத்தில் எப்படி அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் வாழ முடிந்தது ?என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்கு இன்று வரை கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை. பனிப் பிரதேசத்தில் வெப்ப மண்டலக் காடுகளும் டைனோசர்களும் வாழ்ந்திருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் வளி மண்டலத்தில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வெப்ப நிலை குளிர்ந்து துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருக்கிறது.
இதே போன்று அலாஸ்கா வளை குடாப் பகுதியில் உள்ள கிராவினா தீவில் இருபது கோடி ஆணடுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்ந்த கடல் வாழ் ஊர்வன விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.
இதற்கு அந்தத் தீவானது இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும், பின்னர் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் விளக்கம் கூறப் பட்டது.
ஆனால் அதே போன்று இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்ந்த கடல் வாழ் ஊர்வன வகை விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் கனடாவின் வட பகுதியில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக இருபது கோடி ஆணடுகளுக்கு முன்பு கனடாவின் வட பகுதியானது கடுங் குளிர்ப் பகுதியிலேயே இருந்ததாக நம்பப் படுகிறது.
எனவே கனடாவின் வட பகுதியில் வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் இது வரை விளக்கம் கூற இயலவில்லை.
தற்பொழுது கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் காணப் படுவதற்கு கண்டங்கள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் நகர்ந்து செல்லும் பொழுது ஆற்றில் மிதந்து செல்லும் பலகையைப் போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் செல்வதாகவும் அதனால் கடல் நீர் கண்டங்களின் உள்பகுதிக்கு வந்து செல்லவதே காரணம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.எனவே கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே காரணம்.
இவ்வாறு கண்டங்களிலும் ,தீவுக் கண்டங்களிலும், தீவுகளிலும் தொல் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கடல் தரையுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பொருத்தாமல் இருப்பதால், அந்த விளக்கம் ஒரு தவறான யூகம் என்பது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததால் பூமியின் வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்வாக இருந்ததால் துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருப்பதையே துருவப் பகுதிகளில் காணப் படும் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம் புலனாகிறது. எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததாலேயே டைனோசர்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதற்கு காரணம் என்ற விளக்கமே ஆதாரங்களுடன் பொருந்தக் கூடிய சரியான விளக்கம் என்பது புதை படிவ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
Comments