அண்டார்க்டிக் கண்டத்தின் ரகசியங்கள்
தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தின் பெரும்பகுதி இரண்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு பனியால் மூடப் பட்டு இருக்கிறது.
ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தில் உள்ள மலைப் பகுதியில் பத்தொன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த க்ரையோ லோபோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் அண்டார்க்டிக் கண்டத்தில் அடர்ந்த காடுகள் இருந்திருப்பதும் அதில் டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்திருப்பதும் தெரியவருகிறது.
அப்படியென்றால் அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் பனி உருவானது ? என்ற கேள்வி எழுகிறது.
முக்கியமாக அண்டார்க்டிக் கண்டமானது பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியாலும் சூழப் பட்டு இருக்கிறது.
எனவே டைனோசர்கள் எப்படி இந்தக் கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்திற்கு சென்றது? என்ற கேள்வியும் எழுகிறது.
அத்துடன் பூமியானது தற்பொழுது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து ஆறு மாதம் பகலும், தொடர்ந்து ஆறு மாதம் இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு ஆறுமாதம் தொடர்ந்து இரவு நீடித்தால் தாவரங்களால் சூரிய ஓளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது.
எனவே டைனோசர்கள் காலத்தில் பூமியானது தன் அச்சில் சாயாமல் இருந்திருப்பதும் தெரியவருகிறது.
அத்துடன் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவம் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும், அதன் வழியாக டைனோசர்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் தெரிய வருகிறது.
அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததால் பூமியின் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு துருவப் பகுதிகளில் பனி உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளிவரும் நீராவி குளிர்வதால் உருவாகும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குருங்கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்.
Comments