அத்தியாயம் -மூன்று
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன், கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் தவறாக நம்புகின்றனர்.
எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
உதாரணமாக தெற்காசிய சுனாமி குறித்து 10.01.2005 அன்று,நாசாவின் இணைய தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது.
அந்த அறிக்கையில் ‘’இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து சென்றதால்தான், சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும்,சுனாமியும் ஏற்பட்டதாக டாக்டர் பெஞ்சமின் பாங் சோ மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர் விளக்கம் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பின்னர் 27.04.2005 அன்று நாசாவின் இணையதளத்தில் வெளியிடப் பட்ட அறிக்கையில் ’’ இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது எதோ தெரியாமல் நடந்த தவறு அல்ல.உண்மையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
குறிப்பாக இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் கடல் தளத்துடன் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில், தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடனும் மற்ற கண்டங்களுடனும் இணைந்து ‘’கோண்டுவாணா’’ என்று நம்பப் படுகிற ஒரு பெருங் கண்டமாக இருந்ததாக நம்புகின்றனர்.
பின்னர் அந்தப் பெருங் கண்டமானது பிளவு பட்டுப் பிரிந்ததால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகியதாகவும் நம்புகிறார்கள்.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் நம்புகிறார்கள்.
இவ்வாறு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகிக் கொண்டு இருப்பதால், அப்பகுதியில் கடல் தளமனது எதிரெதிர் திசைகளை நோக்கி, அதாவது வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும், கடல் தளமனது விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதனால் வடபகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.ஆனால் இந்தக் கோண்டுவாணாக் கருத்தின் படி பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இருந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.
குறிப்பாக பிளேட் டெக்டானிக் தியரியின் படி,கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இருந்த பிறகு தற்பொழுது இருப்பது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால்,இந்த இரண்டு கண்டங்களும் நிச்சயம் ஒரே கடல் தளத்தின் மேல் இருந்தபடி ஒன்றிலிருந்து ஒன்று விலகி நகர்ந்து இருக்க முடியாது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருந்தால்தான், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்ல முடியும்.
எனவே பிளேட் டெக்டானிக் தியரியின் படி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தென் பகுதியில் இருந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு நகர்ந்து வந்திருக்க வேண்டும் என்றால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாக கடல் தளங்களுடன் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியக் கடல் தளத்திற்கும், ஆஸ்திரேலியாக் கடல் தளத்திற்கும், இடையில் உரசல் ஏற்பட்டு, இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில், அவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியா விற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் ஒரே தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தளமும் இந்தியா ஆஸ்திரேலியாக் கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில இருப்பதற்கே ஆதாரம் இருக்கிறது.மற்ற படி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
இதன் அடிப்படையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டத்தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாக கூறப் படும் ஒரு வரை படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வரைபடத்தில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியை இரண்டாகப் பிரித்து, தனித் தனியாகக் காட்டாமல்,அப்பகுதியில் சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அப்பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
பின்னர் அந்த விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகவும், அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றியே, வெறும் யூகத்தில் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரணாக இன்னொரு விளக்கத்தையும் கூறி இருக்கின்றனர்.
இதன் மூலம் ,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களின் அறியாமை தெளிவாக வெளிப்பட்டு இருக்கிறது.
முக்கியமாக அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் முற்றலும் தவறான விளக்கம்.
எப்படியென்றால் அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் பிளேட் டெக்டானிக் தியரிப் படி ,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி அதாவது வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்து செல்ல சாத்தியம் இல்லை.
காரணம்,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால் வட பகுதியில் இருக்கும் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகி அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கியும் அதாவது குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கியும் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருந்தால் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.
எனவே அண்டார்க்டிக் கண்டதையும் நோக்கி கடல் தளம் நகர்ந்து செல்ல இயலாது.எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை.
பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பது தூரக் கணக்கீடு மூலமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது.
அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடபகுதியை நோக்கியும் தென் பகுதியை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதில் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்தின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
ஆனால், தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும், ஆப்பிரிக்காவின் கேப் டவுனும் 7024 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று கேப் டவுனுக்கும் ஆஸ்திரேலியாவின் தென்பகுதித் தீவான டாஸ்மேனியாவும் 10,122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று டாஸ்மேனியாவுக்கும் தென் அமெரிக்காவின் பன்டா ஏரினாவும் 8916 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
இந்த மூன்று தூரத்தையும் கூட்டுத் தொகையானது 20,066 கிலோமீட்டர்.
ஆனால்,அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் வளையத்திற்குள் இருக்கிறது.இந்த அட்ச ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவானது 17,662 கிலோ மீட்டர்.
எனவே 17,662 கிலோ மீட்டர் சுற்றளவில் உருவான புதிய கடல் தளத்தால் எப்படி வடபகுதியை நோக்கி நகர்ந்து 20,066 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது.
எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்கள் யாவும் தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் பின்னர் அப்பகுதியில் உருவான கடல் தளத்தின் மேல் இருந்தபடி, வடபகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப் படும் கருத்தானது தூரக் கணக்கீடு மூலமாக முற்றிலும் தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Comments