ஹைத்தி சுனாமிக்கு புவியியல் வல்லுனர்கள் கூறிய விளக்கம் தவறு.


 கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆர்கொனஸ் மலையில் '''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.



இந்தக் கண்டு பிடிப்பு மூலம் கியூபா தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அடர்ந்த காடுகளுடன் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.அதனால் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து கியூபாவிற்கு டைனோசர்கள் சென்று வாழ்ந்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.

தற்பொழுது பரவலாக நம்பப் படும் பிளேட் டெக்டானிக் கருத்துப்படி கியூபா தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் ''ஒன்பது கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் செயல்பாட்டால் உருவாகி தனிப் பாறைத் தட்டாக கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்ததாக நம்பப் படும் இடைவெளியில் நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கூட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.



இந்தத் தவறான கருத்தின் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் இரண்டரை லட்சம் உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக USGS என்று அழைக்கப் படும் அமெரிக்க அரசின் புவியியல் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

இந்தக் கண்டு பிடிப்பு மூலம் அமெரிக்க அரசின் புவியியல் வல்லுனர்கள் ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூறிய விளக்கம் முற்றிலும் தவறு என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.


-விஞ்ஞானி.க.பொன்முடி.


Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?