கண்டங்கள் தீவுகள் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து உயர்ந்திருக்கின்றன

napple.jpg
ஐசக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் புவிஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பதை அப்பொழுது நான் நம்ப வில்லை. ஆனால் இப்பொழுது நம்புகிறேன்.
ஏனென்றால் எனக்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.

ngpage.jpg
ஒரு நாள் ஒரு பழைய புத்தகக் கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த பழைய நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது பளிச் என்று ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.
குறிப்பாக அவர்கள் இருவரும் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக கனடா நாட்டுப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாகவும் அவர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அத்துடன் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் பின்னர் அந்த மலைப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து தற்பொழுது உள்ள உயரத்தை அடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

fossils formation
குறிப்பாக கடல் உயிரினங்களானது திடீரென்று ஏற்படும் நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட பிறகு காலப் போக்கில் காற்றில் உலர்ந்து வெய்யிலில் காய்ந்து பாறைகளாக மாறும் பொழுது அதன் நடுவில் புதைபடிவங்களாக உருவாகின்றன. ஒரு புறத்தில் நிலம் உயரும் பொழுதே மறு பகுதியில் நிலச் சரிவு ஏற்படுகிறது.

mydis.jpg
எனவே சட்டென்று எனக்கு அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் தண்ணீருக்குள் இருந்து உயரும் பந்தைப் போன்று கடலுக்கு அடியில் இருந்து அப்படியே மேல் நோக்கி உயர்ந்திருப்பதாகத் தோன்றியது.
அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன்.சந்தோஷத்தில் என் கட்டுப்பாடு எதுவும் இன்றியே மெலிதான சிரிப்பு என் உதட்டில் அரும்பியது.
இருப்பினும் என் கண்டு பிடிப்பை உறுதி செய்து கொள்ள இணையதளங்கள் மூலம் மேலும் பல தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்தேன்.
அப்பொழுது தீவுகள் மற்றும் கண்டங்கள் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து கடல்மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரியவந்தது.
ஆதாரம்
குறிப்பாக கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணை பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதன் மூலம் கண்டங்களும் தீவுகளும் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மத்திய தரைக் கடல் பகுதியில் சைப்பிரஸ் தீவு அமைந்து இருக்கிறது.அந்தத் தீவின் மத்தியப் பகுதியில் ட்ரூடோஸ் என்ற மலை உள்ளது.அந்த மலைப் பகுதியைச் சுற்றிலும் தலையணைப் பாறைகள் (pillow lava ) என்று அழைக்கப் படும் பாறைகள் காணப் படுகின்றன.

cypil ( சைப்ரஸ் தீவில் காணப் படும் தலையனைப் பாறைகள் )
குறிப்பாக இந்தப் பாறைகளானது பசால்ட் என்று அழைக்கப் படும் கடல்தளப் பாறையால் அதாவது கடப்பாக் கல்லால் ஆனது.

pill.jpg ( கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள் )
கடல் தளத்திற்கு அடியில் இருக்கும் எரிமலையின் வாயில் இருந்து பாறைக் குழம்பு வெளிவரும் பொழுது கடல் நீரால் உடனடியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது பானை வடிவில் உருவாகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து அந்த எரிமலையில் இருந்து வரும் பாறைக் குழம்பானது அந்தப் பானை போன்ற பாறைப் பகுதிக்குள் நுழைந்து அதைப் பெருக்கமடையச் செய்கிறது.
அதாவது ஒரு தலையணை உறைக்குள் பஞ்சைத் திணிப்பது போன்று பானை வடிவப் பாறைப் பகுதிக்குள் புதிய பாறைக் குழம்பு திணிக்கப் பட்டு உருவாகுவதால் இவ்வகைப் பாறைகள் தலையணைப் பாறைகள் என்று அழைக்கப் படுகின்றன.

cyplocation.jpg
இவ்வாறு கடலடி எரிமலையால் கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள், மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் சைப்ரஸ் தீவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் ட்ரூடோஸ் மலைப் பகுதியில் காணப் படுவதன் மூலம், அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள சைப்ரஸ் தீவு நிலப் பகுதியும், கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

cyp.jpg

pil4.gif (சைப்ரஸ் தீவில் தலையணைப் பாறைகள் காணப் படும் இடங்கள். )

cyprusrocks.jpg
பாம்புப் பாறைகள் இதே போன்று கடல்தளத்தின் மேல் பாறைக் குழம்பு பீய்ச்சியடிக்கும் பொழுது உடனடியாகக் குளிர்ந்து உருவாகும் பாறைகள் பாம்பு போன்ற வடிவில் இருப்பதால் பாம்புப் பாறைகள் என்று அழைக்கப் படுகின்றன.பாம்புப் பாறைகள் மற்ற கடல் தளப் பாறைகளுடன் கலந்து காணப் படுவதால் ஒபியோலைட் காம்ப்ளக்ஸ் என்றும் அழைக்கப் படுகிறது.கிரேக்க மொழியில் ஒபியோ என்றால் பாம்பு என்று பொருள்.எனவே இவ்வகைப் பாறைகள் ஒபியோலைட் என்றும் அழைக்கப் படுகின்றன சமீபத்தில் சீனாவில் சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் பாம்புப் பாறைகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

chinasnake.png (சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் கண்டு பிடிக்கப் பட்ட பாம்புப் பறை )
இவ்வகைப் பறைகள் சைப்ரஸ் தீவிலும் குறிப்பாக தலையணைப் பாறைகள் காணப் படும் பகுதிக்கு மத்தியில் உள்ள உயர்ந்த மலைப் பகுதியில் காணப் படுகிறது.
இந்தியாவிலும் கடல்தளப் பாறைகளான பாம்புப் பாறைகள் டெல்லிக்குத் தெற்கில் உள்ள உலகிலேயே பழமையான மலையான ஆரவல்லி மலைத் தொடரிலும்,நாகலாந்து மலைப் பகுதியிலும் காணப் படுகின்றன.
இதே போன்று பாம்புப் பாறைகள் எரிமலைத் தீவுகளான அந்தமான் தீவுகளிலும் காணப் படுகின்றன.

orisapillow.jpg ( ஓடிசாவில் தலையணைப் பாறைகள் ) )

karnarock.jpg ( கர்நாடாகவில்தலையணைப் பாறைகள் )
இந்தியாவில் தலையணைப் பாறைகள் ஒடிசாவில் ஜோடா நகருக்கு தெற்கில் 18 கி.மீ .தொலைவிலும்,கர்நாடாகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐயமங்களா கிராமத்திலும் காணப் படுகின்றன. கர்நாடாகாவில் கண்டு பிடிக்கப் பட்ட தலையணைப் பாறைகள் முன்னூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

vindifo.jpg (விந்தியமலையில் கண்டு பிடிக்கப் பட்ட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்)
இது மட்டுமின்றி இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள விந்திய மலைப் பகுதியில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு சைப்ரஸ் தீவிலும் இந்தியாவிலும் கடல்தளப் பாறைகள் காணப் படுவதன் அடிப்படையில் தீவுகளும் கண்டங்களும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
தவறான கருத்து
தற்பொழுது கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடல்தளப் பாறைகள் காணப் படுவதற்கு தவறான விளக்கம் கூறப் படுகிறது.அதாவது கண்டங்களானது கடல்தளதுடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கடல் தளமானது சறுக்கிக் கொண்டு( ophiolite emplacement) கண்டங்களின் மேல் வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தைச் சேர்ந்த ஒரு விலங்கின் புதை படிவங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் இருந்து தொல்விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருப்பது அதாவது தற்பொழுது இருப்பதைப் போன்றே இருந்திருப்பது புதைபடிவ ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்துடன் மோதியதால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருந்த தரையானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததால் இமைய மலை உருவானதாக கற்பனையாக ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக இமய மலைப் பகுதியில் கடல் உயிரினங்கள் காணப் படுவதற்கு இவ்வாறு இந்தியாவிற்கு வட பகுதியில் கடல் இருந்ததே காரணம் என்றும் நம்பப் படுகிறது.
ஆனால் இமய மலையின் அடிவாரப் பகுதியான சிம்லா மலைக் குகையில் ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக இருந்திருக்கவில்லை என்பது ,ஆந்திராவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான ஆசிய வகைப் பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே இமய மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள சிம்லா மலைப் பகுதியில் ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, அந்த மலைப் பகுதியானது முன்பு கடலுக்கு அடியில் இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக நேராக உயர்ந்திருப்பதே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே உள்நாட்டு மலைப் பகுதிகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக புதை படிவங்கள் பெரும்பாலும் படிவப் பாறைகளிலேயே காணப் படுகின்றான.இதற்கு காரணம் அடிக்கடி நிலச் சரிவு ஏற்படும் பகுதிகளில் மண்ணுக்கு அடியில் திடீரென்று உயிருடன் சிக்கிப் புதையுண்ட விலங்கினங்கள் காலப் போக்கில் புதைபடிவங்களாக மாறுகின்றன.
எனவே புதை படிவங்கள் உருவாகுவதற்கு நிலச் சரிவு ஏற்படவேண்டும்.ஒரு புறம் நிலம் சரிய வேண்டும் என்றால் அதற்கு மறுபுறம் நிலம் உயரவேண்டும்.
உதாரணமாக தமிழகத்தில் அரியலூரில் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது படிவப் பாறைகளில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.தற்பொழுது அந்தப் புதைபடிவங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுக்காக்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே அரியலூரில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் படிவப் பாறைகளில் காணப் படுவதன் மூலம் அரியலூர் உள்ளிட்ட தமிழக நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது.

crb.jpg ( (வாசிங்டன் பகுதியில் உள்ள தலையணைப் பாறை)

vantage.jpg (வாண்டேஜ் நகரப் பகுதியில் உள்ள தலையணைப் பாறை)
ராக்கி மலைத் தொடர் அமைந்து இருக்கும் வாசிங்டனில் ஒலிம்பியா தீபகர்ப்பப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.அத்துடன் வாசிங்டன் பகுதியில் ஒரு லட்சத்தி அறுபத்தி நாலாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடல்தளப் பாறையான பசால்ட் பாறைப் படிவுகள் பரந்து விரிந்து கிடக்கிறது.அத்துடன் வாசிங்டனில் உள்ள வாண்டேஜ் நகரில் தலையணைப் பாறைகளும் காணப் படுகிறது.
எனவே இந்திய நிலப் பகுதியைப் போலவே வட அமெரிக்கக் கண்டமும் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்தே தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
Comments