அத்தியாயம் இரண்டு
( இந்தியா ஆசிய கண்டங்களின் மோதியதால் அந்தக் கண்டங்களுக்கு இடையில் இருந்த கடலடித் தரையானது புடைத்துக் கொண்டு மலைகளாக உயர்ந்ததால்தான் தற்பொழுது மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன என்று நம்பப் பட்ட நிலையில்,அந்தக் கண்டங்கள் தீவுக் கண்டங்களாக இருந்ததாக நம்பப் பட்ட காலத்தில் வாழ்ந்த திமிங்கிலத்தின் புதை படிவங்கள், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது இதன் அடிப்படையில்,நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் பொருத்தமற்றது என்று தெரிய வந்தது.)
இதே போன்று கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்களும் கடல் தளமும் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்பட்டுவதாக புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும், அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து என்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்கள் எல்லாம் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
ஆதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் யூரேசியக் கண்டமானது, அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள், கிழக்கு திசையை நோக்கியும் நாகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் பெருங் இருபுறமும் உள்ள கண்டங்கள் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் , அதனால் அந்தக் கடல் தளத்,துடன் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகிக் கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள் அதற்கு ஒரு விளக்கமும் கூறுகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வடதுருவப் பகுதியில் இருந்து தெற்கே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதி வரை ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றமும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுகிறது.
அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக் குழம்பானது வருவதாகவும், அப்பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த கடல் தளப் பாறைகளை மத்தியப் பகுதியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி பக்க வாட்டாக நகர்த்தி விட்டு, மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
இதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதி நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
குறிப்பாக வட அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வடகோளப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் உரேசியாக் கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் அட்லாண்டிக் கடலின் தென் பகுதியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி முறையே வடமேற்கு மற்றும் வடகிழக்கு என இரு வேறு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தானது மிகவும் தவறான கருத்து.
எப்படியென்றால் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடபகுதியானது வடகோளப் பகுதியிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது பூமியின் தென்கோளப் பகுதியிலும் அமைந்து இருக்கிறது.
எனவே ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி, அதாவது கிழக்கு திசையை நோக்கியும், வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
புவியியல் வல்லுனர்களின் கருத்து தவறு என்பதற்கு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும் உறுதியாகியுள்ளது.
குறிப்பாக கடல் தளமும் கண்டங்களும் பத்து முதல் நாற்பது கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் பாறைகளால் ஆனது.இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால் துளைக்கப் பட்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருந்தால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து ஆப்பிரிக்கக் கண்டப் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கானரி எரிமலைத் தொடரும், கேமரூன் எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
புவியியல் வல்லுனர்களின் கருத்துப் படி, ஆப்பிரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் வடபகுதியில், ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டி அமைந்து இருக்கும் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல், கானரித் தீவுகள் என்று அழைக்கப் படும் எரிமலைத் தீவுகளானது, கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
அத்துடன் கானரி எரிமலைத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளானது, அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும், கிழக்கு கோடியில் உள்ள எரிமலைத் தீவுகளானது, ஆப்பிரிக்கக் கண்டத் திட்டின் மேலும் உருவாகி இருக்கிறது.
எனவே கானரி எரிமலைத் தீவு அமைப்பின் படி, அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும், மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
ஆனால் தென் கோளப் பகுதியில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி, முறையே வடமேற்கு மற்றும் வடகிழக்கு என இருவேறு திசைகளை நோக்கி கடல்தளமனது விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் தென் கோளப் பகுதியில், ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டியுள்ள அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரானது தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
எனவே, தென் கோளப் பகுதியில் கேமரூன் எரிமலைத் தீவின் அமைப்புப் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
இதன் படி தென் கோளப் பகுதியில் அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும், தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.
எனவே எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியானது அட்லாண்டிக் கடல் தளத்துடன் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அட்லாண்டிக் கடல் தளத்துடன் தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருக்க முடியும் ? என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் ஒரு கண்டத்தின் வட பகுதியானது கிழக்கு திசையை நோக்கியும் அதே கண்டத்தின் தென் பகுதியானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
இதே போன்று வடஅமெரிக்கக் கண்டமானது ,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
உண்மையில் வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறில்லாமல் வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்று கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக ஓரிடத்தில இருப்பது நிரூபணமாகியுள்ளது.
எனவே அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கண்டங்கள் எல்லாம் கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும் கூட, அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து, என்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடந்த 1963 ஆம் ஆண்டில் இருந்து 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும், இடையில் உள்ள கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை உரசல் ஏற்பட்டு அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு வட அட்லாண்டிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் அட்லாண்டிக் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில் இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் என்பது, உலக அளவில்லான நில அதிர்ச்சி வரைபடம் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறு கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும்,அதே போன்று கண்டங்களுக்கு இடையில் உள்ள, கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், ஏற்படாததன் அடிப்படையிலும், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளமும் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் நிலையாக இருக்கும் நிலையில், அமெரிக்கக் கண்டங்களானது கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக தவறான கருத்தை நம்புவதால்,வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் எரிமலைத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில், கடந்த 12.01.2010 அன்று கடுமையான நில அதிர்ச்சியும், சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டதற்கு, உண்மையான விளக்கத்தைக் கூற இயலாமல்,அமெரிக்க அரசின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு அரைகுறையான அறிக்கையை வெளியிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஹைத்தி தீவு நில அதிர்ச்சி குறித்த, அமெரிக்க அரசின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் ‘’ஹைத்தி தீவானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டுக்கும் கரீபியன் தீவு பாறைத் தட்டுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் ’’ தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
முக்கியமாக அந்த அறிக்கையில் ஹைத்தி தீவானது நகர்ந்து கொண்டு இருக்கிறதா?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று தெரிவிக்கப் படவே இல்லை.
ஏனென்றால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று அமெரிக்க நாட்டின் புவியியல் கழக வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
ஏனென்றால் அமெரிக்க நாட்டின் புவியியல் கழக வல்லுனர்கள்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கரீபியன் எரிமலைத் தீவுக் கூட்டம் எப்படி உருவாகியது?நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு அமெரிக்க அரசின் கழக வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவாகியதாகவும்,பின்னர் அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி வளைவான பாதையில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது எதிர் திசையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தற்பொழுது இருக்கும் பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, போன்ற நாடுகள் அமைந்து இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதிகள் உருவாகி இருக்க வில்லை என்றும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இடைவெளி இருந்ததாகவும், அந்த இடை வெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும் பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாக நம்புவதற்கு ஆதாரம் இல்லை.
அதே போன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
எனவே கியூபா தீவானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து கியூபாவுக்கு டைனோசர்கள் வந்து இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இது போன்ற கண்டு பிடிப்புகளால், பல புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து விட்டதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்கத் தயங்குகின்றனர்.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே எங்காவது உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம், என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம், என்றும் நம்புகின்றனர்.
இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?ஏன் நகர வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்தக் கருத்தில் பதில் கூற இயலவில்லை.
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி வளைவான பாதையில் எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இதற்கு கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த நிலையில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும், அட்லாண்டிக் கடல் தளமானது கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக்கி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல்தரைக்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும் புவியியல் வல்லுனர்களால்,அந்த எரிமலைகள் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு விளக்கம் கூற இயல வில்லை.
எனவே கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எந்த ஒரு புவியியல் வல்லுராலும் உறுதியாகக் கூற இயலவில்லை.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, கிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் கருத்தின் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால், அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் அமெரிக்க அரசின் புவியியல் வல்லுனர்கள் இருப்பதால்,நேரடியாக கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று உண்மையில் விடை தெரியாத நிலையிலேலே ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கு அமெரிக்க அரசின் புவியியல் கழக வல்லுனர்கள் இப்படி ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே உண்மையில் அமெரிக்கக் அரசின் புவியியல் வல்லுனர்களுக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை என்பதையே அவர்களின் அறிக்கை மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இதே போன்று கடந்த 26.12.2004 அன்று இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட நாசா வெளியிட்ட அறிக்கையிலும் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து தங்களின் அறியாமையை வெளிப்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
Comments