அத்தியாயம் -மூன்று
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன், கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் தவறாக நம்புகின்றனர். எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள். indiavsburma.png உதாரணமாக தெற்காசிய சுனாமி குறித்து 10.01.2005 அன்று,நாசாவின் இணைய தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையில் ‘’இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து சென்றதால்தான், சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும்,சுனாமியும் ஏற்பட்டதாக டாக்டர் பெஞ்சமின் பாங் சோ மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர் விளக்கம் தெரிவித்து இருந்தனர். australiavsindonesia.png ஆனால் மூன்று மாதத்திற்குப் பின்னர் 27.04.2005 அன்று நாசாவின் இணையதளத்தில் வெளியிடப் பட்ட அறிக்கையில் ’’ இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து ச...