கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஏற்கத் தகுந்தல்ல.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
ஒரே வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற விளக்கத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் 1912 ஆம் ஆண்டு கூறினாலும் 1930 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அவரின் விளக்கம் பெரும்பாலான புவியியல் வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
ஆனாலும் விலங்கினங்கள் எவ்வாறு பெருங் கடல் பகுதியைக் கடந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவின என்பதற்கு உறுதியான விளக்கம் கூறப் படவில்லை.கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் விலங்கினங்கள் மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவியிருக்கலாம் என்று கருதப் பட்டது.
ஆனால் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது மலைகள் எப்படி உருவாகின்றன போன்ற கேள்விகள் விடை தெரியாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஹோம்ஸ் என்ற புவியியலாளர் 1919 ஆம் ஆண்டு ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிந்தார்.
அதாவது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு கதிரியக்கத்தால் வெப்பமடைந்து இலேசாகி மேல் நோக்கி உயர்ந்த பிறகு குளிர்ந்து கணமாகி மறுபடியும் பூமிக்கு அடியிலேயே செல்லலாம் என்றும் இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பு சுழன்று ஒரு சக்கரம் போல் செயல் படும் பொழுது மேற்பகுதியில் உள்ள கண்டங்கள் நகரலாம் என்று கூறினார்.ஆர்தர் ஹோம்ஸ் இவ்வாறு கூறினாலும் அவர் தன் கருத்துக்கு ஆதாரமாக எதையும் குறிப்பிடவில்லை.அத்துடன் இது முற்றிலும் யூகமே என்றும் எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில் 1960 ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடை பெற்ற பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் பணி புரிந்த பேராசிரியர் ஹாரி ஹாமண்ட் ஹெஸ் என்ற புவியியலாளர் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்தி அவைகள் திரும்ப வரும் நேரத்தைக் கணக்கிட்டு கடல் தரையின் மேடு பள்ளங்களை அறிந்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக நீண்ட கடலடி மலைத் தொடரும் அதில் எரிமலைகளும் பிளவுப் பள்ளத் தாக்குகளும் உருவாகி இருப்பது தெரிந்தது.
உடன் ஹாரி ஹெஸ்சுக்கு ஆர்தர் ஹோம்ஸ் கூறிய விளக்கத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
போர் முடிந்த பிறகும் ஹெஸ் தனது ஆராசியைத் தொடர்ந்து மேற்கொண்டதில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் மலைத் தொடரின் கிளைகள் இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் பசிபிக் பெருங் கடலுக்கு அடியிலும் நீண்டு செல்வதை அறிந்தார்.
அத்துடன் அந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது அந்தக் கடலடி மலைத் தொடருக்கு அடியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து மேற்பகுதிக்கு வரும் பொழுது குளிர்ந்து இறுகிப் புதிய கடல்தரையாக உருவாகுவதாகவும் தொடர்ந்து அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பானது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல் தரையை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தரையாக உருவாகுவதாகவும் விளக்கம் கூறினார்.
இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதால் கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தட்டு தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறினார்.
ஆனாலும் 1962 ஆம் ஆண்டு வரை ஹெஸ் தனது விளக்கத்தின் மேல் நம்பிக்கையின்றி இருந்தார்.மேலும் பல ஆதாரங்கள் வேண்டும் என்று கருதினார்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள பாறைகள் தொண்மை குறைவாகவும் ஆனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் கண்டங்களுக்கு அருகில் உள்ள பாறைகள் அதிக தொன்மையுடையதாக இருப்பதாகவும் கூறி இதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது.
ஹெஸ்சின் விளக்கம் கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் இன்று வரை கடல் தரைப் பாறையானது தொடர்ச்சியாக மாதிரி எடுக்கப் பட்டு அவற்றின் தொண்மை மதிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஆங்காங்கே எடுக்கப் பட்ட பாறை மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப் பட்டது என்றும் கருத்து தெரிவிக்கப் பட்டு இருக்கிறது
உதாரணமாக தற்பொழுது கடல் தரை புதிதாக உருவாகிக் கொண்டு இருப்பதாகக் கூறப் படும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியிலேயே பூமியின் தொண்மை என்று கருதப் படும் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான புனித பீட்டர் புனித பால் பாறைத் தீவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஏற்கத் தகுந்தல்ல.
Comments